ஸ்ரீ சௌந்திர முனி சுவாமிகளின் ஆன்மீக விளக்கங்கள்

அண்டவெளியின் இறைவன் படைப்பு ;
பூமியை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் அண்டவெளியில் சுழலும் உலகங்கள் அனேக கோடி.  உயிர் இனங்கள் வாழக்கூடிய உலகங்கள் முப்பத்தி ஏழாயிரம் கோடி. உலகங்கள் பூமி தோன்றி முப்பத்தி ஏழாயிரம் கோடி வருடம் முடிந்தது.
கலியுகம் தோன்றி நான்கு லட்சத்தி இருபதாயிரம் வருடம் முடிந்தது. அண்டவெளியை ஆராய்ந்து பார்த்ததில் மேல்பகுதி சிவமாகவும் கீழ்பகுதி சக்தியாகவும் இருக்கிறது.

இறைவனின் பாதுகாப்பு வளையம்
அண்டவெளியின் முடிவில் பாதுகாப்பு வளையம் இருக்கிறது. இந்த வளையம் கருப்பு நிறமாக அமைந்து இருக்கிறது இந்த பாதுகாப்பு வளையத்தை மீறி எந்த கோள்கள் சென்றாலும் எரிந்து சாம்பலாகி விடும். இந்த பாதுகாப்பு வளையத்திற்கு அந்த பக்கம் நெருப்பு குழம்பு இருக்கிறது அந்த குழம்பு பாதுகாப்பு வளையத்தை மீறி வந்தால் அண்டவெளியில் உள்ள கோள்கள் அணைத்தும் அழிந்து விடும்.

உலகஇயக்கம்.
ஏழுஅடுக்கு பூமியிலே என்தேகம் கொண்டவளே !
நாழிகிணற்றினிலே நன்மை பல புரிபவளே !
கங்கையாக வந்து கர்ம வினை தீர்ப்பவளே !
கடலாக வந்து அமிர்த மழை பொழிபவளே !
‘தேவி மகா சத்தி’ .

அணைத்து உலகங்களையும் இயக்க கூடிய சக்திகள் – பராபரனும் பராபரையாலும் சதாசிவமூர்த்தி – ஈஸ்வரம் – மகேஸ்வரம் – வித்திஸ்;வரர் – உருத்திரர் – மந்ரேசுவரர் பி;ரபஞ்ச காரியங்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. பராசக்தி தோன்றி ஞானகிரியை என்னும் வித்தைகள் திருமேனியாகிய சதாசிவமூர்த்தி – மகேஸ்வரத்துவம் – சத்திய உலகங்களுக்கு மனோன்மணி – சத்தி சர்வபூதமனிதன் படைக்க, பெலப்பிரம்மம் மதனியை படைக்க, பெலவி காரணியை இயக்க, காளியை இயக்க, இராவத்ரியை இயக்க, சேட்டையை இயக்க – வலிமையை இயக்க இப்படி இந்த பிரபஞ்ச காரியங்கள் இயங்குகிறது சுத்த மாயையின் கட்டுப்பாடு – பிரபஞ்ச காரியங்கள் இயங்குகிறது.

தேவதைகளின் உலகங்கள் இயங்கும் காலங்கள் ஆறு மாதம் – ஒரு பகல், ஆறு மாதம் – ஒரு இரவு மனிதர்களின் காலத்தின் படி ஒரு வருடம் அங்கு ஒரு நாள்.

விஷ்ணு – நவசக்திகளின் கட்டுபாட்டில் இவ்வுலகம் இயங்குகிறது.

ஆண் பெண் இவை இரண்டாக பிரிந்து இவ் உலக இயக்கம் இயங்கி வருகிறது அதுவே ஐந்து பூதங்களாக மாறி இயக்கத்தை இயக்கி வருகிறது.

வானில் சுழலும் கோள்கள் கோடிக்கணக்கி;ல் இருந்தாலும் எல்லா கோள்களிலும் உயிர்கள் வாழவில்லை எதனால் ஒரு சில கோள்களில் உயிர் இனங்கள் வாழவில்லை? நம் பூமியை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கிறது அதனால் இங்கு அணைத்து உயிரினங்களுக்கும் தேவையான தட்பவெப்ப சூழ்நிலை சுவாசிக்க காற்று, நீர், உணவு தாணிய உற்பத்தி இருக்கிறது இதை தெரிந்து மனிதன் நடக்க வேண்டும். நம் அன்றாட வாழ்க்கைக்காக உழைப்பின் மீது கவனம் செலுத்தாமல் அணைவரும் சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள். மனிதன் உழைப்பு குறைகிறது கருவிகளின் உழைப்பு அதிகரிக்கிறது இதனால் அணுகதிர்வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பூமியை ஆள அணுகுண்டு சோதனை என்ற பெயரில் பூமியை அதிர்வு அடைய செய்கிறார்கள். இதன் காரணமாக பூமிக்கு பாதிப்பு வர வாய்ப்புள்ளது – பூமி தானாக எப்படி சுழல்கிறது பூமிக்கு மத்தியில் ஆண்மா என்று அழைக்கப்படும் கணல் இருக்கிறது அந்த கணலின் காரணமாகவே சுழல்கிறது.

இறைவன்
நான் இறைவன் !
எங்கும் நிறைந்த ஈசன் !
பாலைவன தேசன் !
பனிமழை வாசன் !
எம்மை தொழுதால் உம்மை காப்பேன்.

பாரத கண்டத்தில் கோடிகணக்கில் சித்தர்கள், முனிவர்கள் அவதரித்து இருக்கிறார்கள். இவர்களால் தீர்க்க முடியாத வினையே கிடையாது இதே மாதிரியாக பிரச்சனை இருந்தால் மருத்துவத்திற்காகா எவ்வளவு தான் செலவு செய்தாலும் தீராதது தெய்வ சக்தியால் தான் தீர்க்கமுடியும்.

ஆதி இறைவன் ஒன்று அதனால் அனைத்தும் தோன்றியது நன்று
மீதி இறைவன் எங்கே மின்னலும் இடியும் பாரே !
காற்று நிழலும் கனலும் பாரே !
விண்;ணும், மண்ணும் பாரே !
நான் உணர்ந்து சொல்றேன் நீயும் உணர்ந்து பாரே !
நீரும் நிழலும் ஒன்றோ ஆதியே அணைத்தும்.
ஆதிக்குள் விண்ணும் ஆனது விண்ணுக்குள் ஆதியும் ஆனது
விரித்து உரைத்தேன் பாரே !
தெளிந்த நீருக்குள் தெளிந்து பாரே !
கருவறையும் உருவறை ஆனது, உருவறையும் கருவறையில் ஆனது.
மறைதிரையும் மறைப்பு ஆனது.
கருவறையில் தோன்றிய மனிதன்
கருவறைக்குள் அடங்கா வண்ணம் கடவுள் ஆவான்.
குருவறையை உணர்ந்தவன் குருவும் ஆவான்.
மறைவுக்குள் மாயை தோன்றி உம்மை மறைக்கவும் மறைய செய்யும் பாரே !
தெளிந்தவன் கரை காண்பான் தெளியாதவன் வீண்தாணே !
ஆவியில் தோன்றியது அகம், அகத்தில் தோன்றியது ஆவி.
மனதை ஓட செய்வார் ஐவரும்,
மனதை அடக்கினால் ஐவரும் அடங்கினாரே !
ஐந்தெழுத்தை ஓதினால் ஐவரும் அடங்குவாரே !
ஐவரும் தோன்றுவது, தோன்றியதும் ஐந்து எழுத்தின் உண்மை,
அறிமை அருமை உணர்ந்தவன் தெரிந்தவன்;
தெரிபவன் உண்மையான உண்மை.
அண்டத்துக்குள் பிண்டமும் ஆனது பிண்டத்துக்குள் அண்டமும் ஆனது,
இருளுக்குள் ஒளியும் ஆனது ஒளிக்குள் இருளும் ஆனது.
இருள் விலகினால் ஒளி தெரியும் இருள் மூடினால் ஒளி மறையும்
மாயை மூடினால் விதி வந்து சேரும் மாயை விலகினால் மதி வந்து சேரும்
எது விலக எது வந்தது அதுவும் நீயும் ஆனாய்.
கருமம் தெரிந்தவனுக்கு தர்மம் தெரிவதில்லை
தர்மம் தெரிந்தவனுக்கு கர்மம் தெரியும்.
மாயையில் இருப்பவனுக்கு மாயை உணரமாட்டான்.
மெய்ஞானத்தில் இருப்பவனுக்கு மாயையின் வலிமை என்னவென்று தெரியும் !
தவம் செய்பவனுக்கு மாயை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை
அப்படி மாயைப்பற்றி சிந்தித்தால் அதில் இன்பம் உள்ளது
என்று நினைத்தால் அக்கணமே இருளும் வந்து சூளும்
இதிலிருந்து மீள வேண்டும் என்றால்
அவன் கரை கண்டவனாக இருந்திருக்க வேண்டும்.
அப்படியில்லையென்றால் மற்றொருவர் கரை கண்ட வரை
அணுகினால் கரை சேரலாம் இது உண்மை.

உயிர்

உயிர் ஒன்று தான் உடல் வேறுபட்டால் மனநிலை மாறி மாறி அமைகிறது. ஆண் உயிர் சிவன் தான். மனித பிறவி வாய்க்கும் போது பல பிறவிகள் – பல இன்ப துன்பங்களை தாங்கி நிற்கும். உயிரானது – மனஅழுத்தத்தால் பல வகையான பதிப்பை அடைகிறது. உடல் எடுத்து மனதை கட்டுப்படுத்தாமல் ஆசைகளுக்கு அடிமையாகும் உடலானது பல வகையான பாவ செயலை செய்து உடலை விட்டு உயிர் பிரிந்து பேயாக அழைந்து மனம் துருப்பிடித்து அடுத்த பிறவி வாய்க்கும் போது அதே மன அழுத்தத்தில் வெறி பிடித்து அழைகிறான். மனிதனின் பாவசுமையானது மனதை ஒருநிலைப்படுத்தி தவம,; தியானம், நல்லொழுக்க நடைமுறையை பின்வாங்கி வேறு பிறவியை அடைகிறான்.

பிறப்பு

மனிதன் நினைத்தால் பிறப்பை வேண்டும் என்றால் ஓரளவு தடுக்கலாம். ஆனால் இறப்பை இறைவனை தவிர யாராலும் தடுக்க முடியாது. இறைவன் அருள் ஒரு மனித ரூபத்தில் இருந்தால் அவராலையும் இதை செய்ய முடியும். சித்தர்கள் ஓர் அளவுக்கு பாதுகாக்க முடியும். உயிர்களை பூமியில் உள்ள அனைவரையும் இறைவன் ஒருவராலே பாதுகாக்க முடியும். மனிதனுக்குள் அணைத்து வல்;லமையும் உள்ளடக்கியே இறைவன் மனிதனை படைத்தார். ஆனால் உலகை ஆராய்ச்சி செய்ய தெரிந்த மனிதனுக்கு – தம்மை படைத்தது யார் என்று தெரியவில்லை.
ஏழு பிறவிகளுக்குள் இறைவனை அடைய வேண்டும் அப்படி அடையாவிட்டால் எட்டாவது பிறவியில் இறைவன் தன்னை ஏதோ ஒரு வழியில் வரவழைப்பார் அப்போது சுதாரித்து இறைவனை அடைய வேண்டும் அப்படியும் அடையவில்லை என்றால் அடுத்த பிறவி மனிதபிறவி வாய்க்காது வேறு பிறவி தான் கிடைக்கும்.
தற்போது பிறவி எடுத்திருக்கும் மனிதா உமக்கு அடுத்தபிறவி என்னவாக பிறக்கப்போகிறாய் என்பது தெரியுமா? கடல் கடந்த முனிவர்களே – உம்மை உணர்வார்கள், உலகத்தையும் உணர்வார்கள் சரியாக ஆராய்ந்து பார்த்ததில் சிறிது நாட்களுக்குள் ஆண், பெண், ஒரு லட்சம் ஆண்மீகவாதிகள் தோன்றி இருக்கிறார்கள். இதுவே தொடர்ந்தால் இறைவன் நம்பிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அணைவரும் மனதை அடக்கி தவம் செய்தால் சித்தராக மாறலாம். சித்தராக மாறினால் சாகாமல் வாழலாம் இவை அணைத்தும் ஒரு மனிதனுக்குள்ளே அடங்கி இருக்கிறது. உணர்ந்தோருக்கு உண்மை தெரியும் உணராத மூடனுக்கு என்ன தெரியும். சரியாக இரண்டாயிரம் வருடம் வந்த உடன் உலகம் அழிய இருந்தது. இறைவன் உத்தரவுபடி நாங்கள் பனிரெண்டு வருடம் மௌன விரதத்தை தொடங்கினோம். அதனால் அழிவு தடுத்து நிறுத்தப்பட்டது இனி வரும் காலத்தில் அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இனி வருங்காலத்தில் ஆற்று நதி ஓரம், கடற்கரை ஓரம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஆபத்து.
கோடி பஞ்சம் ஏற்படும் உலகம் அழிய போகிறது அந்த அந்த நாடுகள் செய்த பாவகர்மவினையை பொருத்து பஞ்ச பூதங்களால் பதியப்பட்டிருக்கும். அதன் படி அழிவு நடக்கும். ஆனால் 108 நாடுகள் அழியாது. மீதமுள்ள நாடுகள் அழியும். நிலங்களால் விழுங்கப்படும். மனிதன் நீ சம்பாதித்த பொன் பொருள் எங்கே உமது ஆசையும் எங்கே உணர்ந்துபார்.
மனமும் குணமும்

மனிதனுடைய மனமும் குணமும் பசுவின் குணம், யானையின் குணம், குதிரையின் குணம், காளையின் குணம், எருமையின் குணம், ஆட்டின் குணம், மானின் குணம், காண்டாமிருகத்தின் குணம், முயலின் குணம், வெள்ளை எலியின் குணம், ஒட்டகத்தின் குணம், கழுதையின் குணம், செம்மறியாட்டின் குணம், மலைப்பன்றியின் குணம், நீர்யானையின் குணம், விலங்குகளின் குணம், மிகக்கொடிய பூனையின் குணம், நரியின் குணம் உடையவர்கள் இருக்கிறார்கள் மிருகங்களை பார்த்த உடன் தெரிந்து கொள்ள முடியும். மனிதர்களை பார்த்த உடன் தெரிந்து கொள்ள முடியாது.

மனத்தத்துவரீதியாக அணைத்து விலங்குகளின் குணத்தையும் திருத்தி மாற்றி அமைக்க முடியும். பூனை, நரி இந்த இரண்டு மிருகங்களின் குணத்தை மாற்றி அமைக்க முடியாது. இவைகளை புரிந்து கொள்வது கடினம் திருத்துவது முடியாத காரியம்.

மனிதப்பிறவிகள் அணைத்தும் அவர் அவர் செய்த கர்மபயன்;. மனிதன் நினைத்தால் தன்னை தானே மாற்றி அமைக்க முடியும்.

மனிதனின் ஓட்டம புத்தியின் வழி சிந்தனையின் வழி எதையும் பற்றி சிந்திக்காமல் இருப்பது மனஒற்றுமைக்கு வழிகாட்டி, யோகாசணத்தில் அமரும் போது, போவது போகட்டும்,  வருவது வரட்டும், நாம் இப்போது எதை பற்றியும் சிந்திக்காமல். யோகாசனத்தில் இருக்கிறது மனமே ஒன்றுபடு தவழும் குழந்தையை போல் மெதுவாக செல் கட்டுத்தறியைப்போல் ஓடாதே. குளிரும் பனிகட்டியாக உறைந்து நில். மழை துளியாக சிதறாதே. உண்மையான மனநிலையில் மட்டும் பொய்யான மனதை மனதூக்குதலை விரட்டமுடியும். சாக்கடையான நினைவை நினைப்பவன் மனம் சாக்கடையாக நாறிவிடும் அவன் உள்ளம் நல்லதை பற்றி சிந்திக்க சிந்திக்க நன்மை தரகூடியது. உண்மையே தூய்மையான உடலாக மாறும் இது உண்மை! தீயவைகளை பற்றி சிந்திக்க கூடியவன் தீயவனாக மாறுவான் நல்லவைகளை பற்றி சிந்திக்க கூடியவன் நல்லவனாக நன்மைதரக்கூடிய மனிதனாக வாழ்வான்.

மனம் ஒன்றுபட்டால் வரும் நன்மைகள்

மனம் யாரிடம் ஒன்றுபட்டு இருக்கிறது. அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறது எவ்வளவு நேரம் ஒன்றுபட்டு இருக்கிறது, அந்த அளவிற்கு கடவுள் அருள் இருக்கிறது என்பது தெரியும். மனம் ஒன்றுபட்டு ஓதும் மந்திரம் கடவுளிடம் நேரடியாக சென்றடையும் மனம் ஒன்றுபடாமல் ஓதும் மந்திரம் காற்றுடன் கலக்கும் அதனால் ஒரு வலிமையும் கிடையாது அதன் சத்தத்தை கேட்டு கூட்டங்கள் கூடும். தானாகவே கூட்டங்கள் அது வந்த திசை நோக்கி சென்றுவிடும். இது மாயை இது நிலைக்காது இதனால் ஒரு பலனும் கிடையாது.

எண்ணங்கள்

ஆண் பெண் இவர்கள் அன்றாடம் நினைப்பவை ஆயிரம் எண்ணங்கள் இவை அணைத்தையும் வெளியே சொன்னால் யாரும் உயிர்வாழ முடியாது. இதனால் எண்ணத்தை தூண்டாமல் உமக்கு தேவையான எண்ணங்கள் தவிர மற்ற எண்ணங்களை தூண்டாதே. மனிதனின் மனம் மாறினாலும் சிந்தித்து உமக்கு தேவையான நல்லவைகளை பேசு. நன்மைகளை செயல்படுத்து மனிதன் தவிர மற்ற உயிர்களுக்கு சிந்திக்கும் தன்மை குறைவாக உள்ளது.

ஓசை

ஓசை ஓசையை பொறுத்து அனைத்து இயக்கமும் இயங்குகிறது ஓசையின் தன்மையை பொறுத்து பொருள்கள் அதன்படி தோன்றி மறைகிறது. இந்த ஓசைகள் முறைப்படி இருக்க வேண்டும் இல்லையென்றால் அனைத்தும் குழம்பி வெடிகுண்டு போல் வெடித்து சிதறிவிடும்.

சந்தர்ப்பவாத மனிதர்கள்;;

இந்த அண்டவெளியில் எத்தனையோ உலகங்கள் அந்தரத்தில் பறந்து திரிகிறது. ஓன்றும் தெரியாத மூடர்கள் – கடவுள் இல்லை என்பார்கள். இவர்கள் அணைவரும் சாத்தான்களாலும் அசுரர்களாலும் மறுபடியும் பிறந்து வந்து இருக்கிறார்கள்.

கடவுள் இருக்கின்றாரா யார் பார்த்தது அப்படி பார்த்தால் அவரை எங்கள் முன்னிலையில் தோன்ற சொல்லுங்கள் என்று ஒரு சில கவடத்திரிகள் ஆட்டம் போடுவார்கள் அவர்களின் கர்மவினை அவர் தலையோடு தான் போகும். இத்தகைய கவடத்திரிகள் காசுபணம் இல்லையென்று கடவுளின் சிரசுகளில் கல்லை தூக்கி எறிவார்கள் நல்ல முன்னேற்றம் வந்தும் பணம் சம்பாதித்தது போதாது என்று பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பல குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் இவர்களுக்கு சோதனை வந்தவுடன் கடவுள் தான் நம்மை சோதிக்கிறார் என்று கடவுளின் காலடியில் விழுந்து அலறி துடிப்பார்கள். சோதணைகள் தீரவில்லை என்றால் கடவுளின் விரோதியாக மாறிவிடுவார்கள். இவர்கள் கையில் பணபலத்தை வைத்து இந்த மாதிரியாக பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஒரு கும்பல் உருவாகி விடும் இவர்கள் எதையாவது கையில் எடுத்து கொண்டு கம்பில் துணியை கட்டி கொண்டு போராடுவார்கள் இதுவே பெரிய இயக்கமாக உருவாகிவிடும் அந்த  கிழிந்த துணியை வைத்து ஏதாவது இரண்டை சேர்த்து ஒரு சின்னமாக உருவாக்கி விடுவார்கள் நாள் இடைவெளியில் பொது மக்களிடன் ஓட்டு சேகரிப்பார்கள் கடவுள் இல்லை என்றால் யாராவது ஓட்டு போடுவார்களா? ஓட்டு கிடைக்கவில்லை வேறு வழி இல்லை, கட்சி கூட்டம் போடுவார்கள், கடவுள் இல்லை என்று சொன்னால் ஒரு ஓட்டு கூடவிழாது என்று தெரிந்து கொண்டு எதையாவது நெற்றியில் பூசிக்கொண்டு கடவுள் இருக்கின்றார் வாய் திறமையில் கவிதை பாடி நாடி நரம்புகள் உருக கவிதை பாடி மக்களின் மத்தியில் கோடிக்கணக்கான வாக்குகளைபெற்று வெற்றி பெற்ற உடன் அவர்களின் வேலையை காட்டி விடுவார்கள் இப்படி மனம் படைத்த  சந்தர்ப்பவாதி மனிதர்கள் தவறு செய்ய கடவுள் என்ன செய்வார்?

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s