தியானம்

              தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம் .அதுவரை அறிந்திராத ஒன்று குறித்த அனுபவம் .மனித மனம் மேற் கொள்ளும் மகத்தான அனுபவம் .தியானத்தில் அப்படியே இருக்கிறிர்கள் எதையும் செய்யாமல் செயலில்லை ,சிந்தனை இல்லை ,உணர்ச்சி இல்லை ,அது ஒரு முழுமையான உவகை நிலை .நீங்கள் எதையும் செய்யாமல் இருக்கும் போது இந்த உவகை எங்கே இருந்து வந்தது ?அது எங்கும் இன்றி வரலாம் ,எங்கு இருந்தும் வரலாம் .அது வினை முதலற்றது .மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பது .தியானத்தின் எந்த நிலையிலும் நீங்கள் உடல்சார்ந்த விதத்தில்லோ மனம் சார்ந்த விதத்தில்லோ எதையும் செய்வது இல்லை .எவ்வித நிகழ்வும் இன்றி அனைத்து செய்கையும் நின்றுவிட நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்.அது நீங்கள் செய்யக் கூடியதும் அல்ல .பயிற்சி பெறக் கூடியதும் அல்ல .அதன் இயல்பை அறிந்துக் கொள்ளுகிறிர்கள்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இருக்கிற படியே  இருங்கள் ஆழ்ந்து சிந்திப்பதும் ,ஒரு முனைப் படுத்துவதும் ,எண்ணமிடுவதும் ஒரு வேலையே !

            நீங்கள் எதையும் செய்யாமல் முற்றிலும் ஓய்வாக ஒரே ஒரு கணம் உங்கள் மையத்தில் இருக்க முடிந்தால் அது  தியானம் .அந்தத் திறமையை நீங்கள் பெற்ற பிறகு ,உங்களுக்கு விருப்பம் உள்ள வரை அதே நிலையில் தங்கி இருக்க முடியும் .நிறைவாக இருபத்தி நான்கு மணி நேரமமும் அதே நிலையில் உங்களால் இருக்க முடியும்.உங்களுடைய அமைதி குலையாமல் இருக்க முடிகிற போது, நீங்கள் நிதானமாய் செயல்படத் தொடங்கலாம் .உங்கள் இருப்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகைகள் கவனமாக இருங்கள் ,அதுவே தியானத்தின் இரண்டாவது பகுதி .முதலில் ஓய்வாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் ,அடுத்து தரையை சுத்தம் செய்வது ,நிரில் குளிப்பது போன்ற சின்ன சின்ன செயல்களை உணர்வுடன் கவனமாக செய்யுங்கள். பிறகு சிக்கலான செயல்களை உங்களால் எளிதாக செய்ய இயலும்.ஆகவே தியானம் செயலுக்கு மாறானது அல்ல .அது வாழ்வில் இருந்து விலகி செல்வதும் ஆகாது. ஒரு புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது. நீங்கள் சுழல்காற்றின் மையமாக இருக்கிறிகள்.தியானத்தின் முழுமையான ரகசியமே நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக பார்பதுதான் .செய்கை தன்னுடைய தளத்தில் தொடர்கிறது ,எவ்வித பிரச்னையும் இல்லாமல் மரத்தை வெட்டுவது ,கிணற்றில் நீர் இறைப்பது என்று தொடர்கிறது ,நீங்கள் சிறியதும் பெரியதுமாய் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் .ஆனால் மையத்தில் இருந்து மட்டும் வழி தவறிவிட வேண்டாம் . உங்கள் விழிப்புணர்வும் ,கவனித்தலும் (விருப்பு ,வெறுபற்ற) சிதைந்து விடாமல் அப்படியே இருக்க வேண்டும்.இருக்கும் இடத்தில் இருப்பது.நாம் நாமாக இருப்பது.முழுமையாக இருப்பது.மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.

        உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.மனதைச் சுத்தப்படுத்துவது.இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.ஆனால் யதார்த்தத்தில் நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.இதுவே நாம் அறியாதது.தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.தியானம் என்பது மனம் கடந்து செல்வது.மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம்,

  நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.

           நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.           

Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s