யோகி பூஜியம் ஸ்ரீ சௌந்தரா முனிசுவாமி

சௌந்தர முனிகளின் அருளமுதம்

 1. நல்லதை செய்வோம் நமசிவாயா தீயதை விலக்கும் சிவசிவாயா

ஒரு மனதால் நின்றேன் உண்மை பல புரிந்தேன் சிவசிவாயா.

 

 1. ஓம் என்ற சொல் உலகை ஆட்சி செய்யும் ஓம் ஓம் நமசிவாய என்ற சொல் உடல் ஆட்சி செய்யும்இ உயிர் ஆட்சி செய்யும்இ அருள் ஆட்சி செய்யும்இ அன்பு ஆட்சி செய்யும்இ ஆதி இறைவா போற்றி அருள் ஈஸ்வரம் போற்றி.

 

 1. நன்மையும் உண்மையும் நான்மறை வேதமும்

அண்டமும் பிண்டமும் அருளாட்சி செய்வான் நமசிவாயவே !

 

 1. சிகரத்தில் நின்று உன் சிரசைப் பார் நரகத்தில் நின்று நாறிப்போகாதே !

மனதை அடக்கி மணியைப் பார் – மாயையில் சிக்கி மாண்டுப் போகாதே !

 

 1. உயர்ந்தவன் தாழ்ந்தவனுக்குள் உயிராய் நின்றானவன்இ உலகினை தந்தானவன்இ வாலிபத்தில் அழகினை தந்தானவன்இ ஆசையை தந்தானவன் ஆசையை வென்றால் – அழிவில்லா வாழ்வினை தந்தானவன் அவனே இறைவன்.

 

 1. கடவுள் கையில் வாழ்வு உலகத்தின் வாழ்வு கண்டுகொள்வாய் மனிதர் அகிலத்தை கடந்து நிற்பவன் கடல். கடவுளுக்கு தேவை நீதி. நீதி அழிந்தால் அழிவாய் மனிதாஇ மனிதா அழிவாய். கலியுகத்தில் அதர்மம் செய்யும் மனிதா நீ அழிந்து போவாய். அதர்மம் செய்யும் மனிதா அழிந்துபோவாய் ! அது நிச்சயம் ! அது நிச்சயம் !
 1. போகம் செய்த மனிதா புழுக் குழியில் விழுந்து பொசிங்கி போவாய். ஆத்திரத்தை அறவே தள்ளி ஆதாரத்தில் மனதை நிலைநிறுத்தி சாஸ்த்திரம் பல இருந்தாலும் – உண்மை உள்ளது எண்ணி பார்.

 

 1. கரையை அடைந்தவனே உம்மையும் கரை சேர்ப்பார். கரை காண மந்திரங்கள் சித்தியாகும் தெளிந்த நீருக்குள்ளே தெளிவாக நின்பாரு கவடம் வைத்து கனலை மூட்டேஇ திரை மறைவிலே மாயை தோன்றும். நீயும் திரை மறைவில் நின்று மாயை பார்த்தாயானால் செவில் தெரிய அடிப்பேன் பாரே – உமது கடமையை ஒழுங்காக செய் – உம்மை யார் அடிப்பார்.

 

 1. குடும்ப நீதிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆண்மீக நீதியென்பது அகிலம் ஆளக்கூடியது. கலியுகத்தை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். கலியுகத்தை கடந்து செல்வது சிங்கத்தின் வாயில் இருக்கும் சதையை போன்றது கவனம் !

 

 1. விதியும் மதியும் ஆணேன் பார். காட்டு விலங்குகளாக பிறந்த உயிர்கள் அணைத்தும் மனிதபிறவி எடுத்தால் மதி வளர்ந்து விதியை வென்று கடவுளானால் கோடி நன்மை ஏற்படும் அதனால் விதியை வெல்ல மனிதபிறவிகளை படைத்தேன் பார் !

 

 1. படைத்தும் மனித உயிர் பல பிறவி எடுத்தும் மதி கெட்டு விதியின் வழியே சென்றால் அதன் வழியே உயிர்களும் சென்றது. மனிதபிறவி எடுத்தும் விதியின் வழி சென்று மாண்டுபோக – மனிதன் என்ன காட்டு விலங்கா?

 

 1. பாடான பாடுபட்டு பிழைத்தார் கோடி. பாரினிலே மாண்டவர் கோடி கோடிஇ வீடான வீட்டில் இருந்து அணலை மூட்டுஇ உமது உடல் கருகினால் மோசமில்லை உடல் கருகினால் யோகம் ஆச்சோ – யோகத்தால் கொதிக்க குண்டலினி யோகத்தை மேலே ஏற்றே யோகம் அது உடலில் தங்கினால் உமது உடல் உமக்கே சொந்தம்.

 

 1. வீர் கொண்டு எழும் வேதசுடர் ஞானச்சுடர் பலநன்மை புரியும் சிவசக்தி ஞானத்தால் இவ் உலக இயக்கம் இயங்கி வருகிறது இதை அணைவருமே ஒப்பு கொள்ள வேண்டும். அது தான் உண்மை.

 

 1. ஆண்மீக ஞானத்தை அடைவது சாதாரண விசயம் கிடையாது அதுவும் கலியுகத்தில் ஞானத்தை அடைவது என்பது கனவில் கூட பார்க்க முடியாத விசயம்.

 

 1. கட்டழகு மேனியை பார். கடல் கடந்த ஞானத்தை பார் விட்டெறியும் சூலத்தின் வேகத்தை பார் விண்வெளியில் ஞானத்தை பார் வெறும் வாய்ப்பேச்சால் ஞானம் நெருப்பில் போட்டு உருகும் உலையில் உருக்கி ஊற்றினால் பொருள் இல்லை என்றால் சாம்பல் கூட மிஞ்சாது மனதையும்இ புத்தியையும் ஒன்றாக நிலைநிறுத்;தி அடைய கூடியதே ஞானம். மனதையும் புத்தியையும் சிதறவிட்டால் உமது கூடும்இ வீடும் சிதறிவிடும் இறைவனுடைய மனதிற்க்கும் இறைவியுடைய புத்திக்கும் கட்டுப்பட்டு தான் இவ்வுலக இயக்கம் இயங்கி வருகிறது.

 

 1. ஏட்டை கொடுத்து நாட்டில் உணர்ந்த வேந்தனை அறிவேன் நாட்டை கொடுத்த நாயகனை அறியேன் கலியுகம் கண்ட மானிட வாழ்க்கை வேதனை அறிவேன் இந்த வேந்தனை உணருமோ – கலியுக மானிட வாழ்க்கை உணருமோ இல்லை மறையுமோ?

 

 1. கண்டு கொண்டேன்இ உம்மை கண்டதற்கு கோடிகண்கள் வேண்டும் இருண்ட கண்களுக்கு என்னை தெரியும் இருளுமோஇ இல்லை மறையுமோ இல்லை அறுபத்தி நான்காவது அவதாரம் உணர்த்துமோ.

 

 1. கோடி நன்மை கொட்டும் கொதிக்கும் எரிமலை சித்தன்இ கவடம் கொண்ட கலியுகமே என் மனம் கண்டுகொண்டால் நீ பிழைப்பாய் இல்லையெனில் காணாமல் மறைவாய் பார் உலகமே பரமன் வழியிலே !

 

 1. பிழை பிழையை உணருமோ பித்தம் தலைக்கு ஏறுமோ – சித்தம் ஏறினால் சிகரத்தை அடையலாம்.

 

 1. சிவத்தை உணராதவன் சித்தன் இல்லை சக்தியை உணராதவன் தவசும் இல்லை. கரை காணாதவனுக்கு காண்பதெல்லாம் இருட்டே.

 

 1. கலியுகத்து மனிதனுக்கு ஞான உபதேசம் சொன்னேன் பார் – குருடனுக்கும் செவிடனுக்கும் ஒளியை கண்டாயோ? ஓசையை கேட்டாயோ? உலகத்தை நீ திருத்த வேண்டாம் உன்னை நீ திருத்தி கொள்.

 

 1. கால காலமே கலியுக காலமே ! போதையில் மூழ்கும் கலியுகத்திற்கு புண்ணியம் ஏது.

 

 1. பார்ப்பது எல்லாம் பசுமை நீ இளமையில் முதுமையாக இரு முதுமையில் இளமையாக இருக்கலாம்.
 2. காசு கொடு;த்தா கிடைக்கும் ஞானம் – கலியுகத்து மனிதா கவடம் வைக்காதே – உமது காதில் கேட்கும் நாத ஓசை தனித்திரு பசித்திரு விழித்திரு நி;லத்தில் இருக்காதே மழை ஏறி தவம் செய்.

 

 1. கடந்தேன் பார்இ கண்டேண் பார்இ வென்றேன் பார்இ ஊனை உருக்கி உதயங்கிரியில் உதித்தேன் பார்இ காண கிடைக்காத கடவுளாக நின்றேன் பார்இ உத்தமமாக தவம் இருந்தால் காக்காத கலியுகத்தை காத்தேன் பார்இ சாமிக்கெல்லாம் சாமியாகி தலைவனுக்கெல்;லாம் தலைவனாகி கடவுளுக்கெல்லாம் கடவுளாகி அணைத்திற்க்கும் ஆதாரமாகி ஆதி முதல் அருள் கடவுளாகி நின்றேன் பார்.

 

 1. நினைத்தது நிலைக்குமடா நேர்மை அறிந்த ஞானியடா போட்டது முளைக்குமடா பொதிகை மலைச்சாரளிலே.

 

 1. காட்டை உணர்ந்தவனுக்கு நாடும் ஏதுஇ வீடும் ஏதுஇ உறவும் ஏதுஇ பகையும் ஏதுஇ ஞானபாதையை உணர்ந்தவனுக்கு பாலும் ஏதுஇ கள்ளும் ஏதுஇ சொல்லே போதுமே பார்

 

 

 1. உலகத்;தில் கொடிய மாயையை வென்றவன் கொடிய கலியுகத்தின் தீவினையின் வேர் அறுக்க வந்தேன் பாரே

 

 1. சிற்றின்பம் பேரின்பம் வேதஉபதேசம் சொன்னவன் அதன்படி நடக்க இயலாது காற்றோடும்இ நீரோடும் கலியுகத்தில் காமகடலை கடந்து ஓடுபவனே கடவுளாவான்.

 

 1. நிலத்தில் சித்தரெல்லாம் நிர்வகல்ப்ப மார்க்கத்தில் நின்றாலும் கலியுகத்தில் காமக்கடலை கடப்பார் உண்டோ? கவனம் வைத்து காமனை வென்றேன் பார் கவனம் இழந்தவன் காமனுக்கு இரையும் ஆனாணே. தூய்மையான பிரம்மச்சாரிய விரதத்தாலும் ஒரு சொல் மௌனத்தால் காக்காத கலியுகத்தை காத்தேன் பார். பூக்காத பூவெல்லாம் பூசிக்கஇ பூமிகாத்த லிங்கமாக பூ உலகத்தில் உதித்தேன் பார்.

 

 1. வேதாளம் முருங்கையில் ஏறினாலும் சிதறிய வேதத்தை – திருந்தாமல் ஒன்று சேர்த்தேன் பாரே. இன்பத்தை வென்றால் துன்பமென்னும வேரை அறுத்தேன் பார். இறக்காத மனிதனையும் இறைவன் படைத்தாலும் கோடி ஆசையால் சிதறடித்து மனிதன் இறந்தானே.

 

 1. சிற்றரிவு பேரறிவு ஆனதோ – அறிவை சிதறாமல் அள்ளினேன் பாரே அறிவுக்கு நிகர் அறிவே அன்புக்கு நிகர் – தூய அன்பு – தூய அன்பே சிவம்.

 

 

 1. சிதறிய ஞானத்தை சிதறாமல் காப்பவனே சௌந்தரன்

அதனை காப்பவனே சிதம்பரன்.

 

 1. அப்பாலுக்கு அப்பால் முப்பால் ஆனது

அப்பாலை உணர்ந்தவனோ – அவன் மேனியும் ஆனவனோ.

 

 1. காமத்தை உணர்ந்தால் உமது கறி கரிக்கும் ஆகாது. உருகி ஓடும் காமத்தால் உடலை இழந்தாயோ மோகத்தையும் தாகத்தையும் தாங்காதவனுக்கு முக்தி ஏது.

 

 1. கலியுகத்தில் இறைவன் என்பது ஒரு சந்தேக கேள்வியாகவே இருந்து வருகிறது ஏதோ மனதிருப்திக்காக இறைவனை வணங்கி வருவதாக மனிதர்கள் பேசி வருகிறார்கள் மனிதா கவனம் !

 

 1. கவடம் வைத்து கலியுகத்தை பார் கவடதாரிகள் அதிகம். இரவு பேச்சு இரவோடு போச்சு பகல் பேச்சு பாதை மாறிப்போச்சு நாஸ்திகம் அதிகம் கட்டிலில் கன்னியின் சுகம் கண்டவன் காலனுக்கு இரையாகி போவானே.

 

 1. இளமையில் தவம் செய்யாமல் முதுமை அடைந்து முடங்கி தவித்து மாண்டவர் கோடி மாண்டவர் கோடி.

 

 1. சோகக்கடலை சுட்டெறிக்கும் சூழகனலே வெளியே வா ஆதி கடலின் அருள் மழைபொழியும் அருள் கடவுள் இங்கே வா வேதம் கொடுத்த வேந்தே வா சாகாக்கலையின் தலைவா வா.

 

 1. ஆதியும் அவனே அண்டமும் அவணே அருள் மலை பொழியுது பாரு ஞானம் மனிதர் இதயத்தில் நமசிவாயத்தின் ஒளியை பாரு வீட்டில் இருக்கும் ஒளியாலே விதிவிலகும் பாரு.

 

 1. நிலமும் வனமும் வறண்டு போச்சு வையகத்தில் மனிதவாழ்வு இருண்டு போச்சு கலியுக கர்மம் மனிதன் கண்ணை மறைத்தது கடமைஇ கண்ணியம்இ கட்டுபாட்டை இழந்ததால் காமத்தின் காட்டு தீயால் உப்பு கரைந்தது போல் உடல் கரைந்து போச்சு.

 

 1. தவத்தில் அனுபவம் தான் பெரியது அனுபவத்தை தமக்கு தானே உணர்ந்து தெளிய வேண்டும். மாந்தரீகம் என்றால் தேடி ஒரு பொருளை வசப்படுத்தி அதை அழித்து அதன் மூலம் சக்தியை பெறுவது. ஊடலை விட்டு வெளியே தேடுவது பொய் என்பது விளக்கம் அடுத்தவர்கள் பொருளை திருடுவதுஇ அருளை திருடுவது.

 

 1. ஆண்மையை பாதுகாப்பவுன் ஆண்மீகவாதியாக மாறுகிறான். ஆண்மையை அழிக்கஇ அழித்துஇ அவனும் அழிந்து போவான் – காம பேய்கள்.
Advertisements
Leave a comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s