உருத்திராட்சத்தின் பெருமையும் வகைகளும்.

சிவசரிதைகளை உங்களுக்கு விருப்பம் உண்டாக்குகின்றன. சிவனாரைப் பணிந்து அவரது திவ்விய சரிதங்களைக் கேட்பவர்களே பரிசுத்தர்கள். அவர்களால் அவர்களது வம்சம் முழுவதும் புனிதமாகும். எவனுடைய வாக்கில் சிவநாமங்களும் நெற்றியில் விபூதியும் கழுத்தி;ல் உருத்திராÑமும் ஆகிய இம்மூன்றும் விளங்குமோ அவனைப் பார்த்தால் திருவேணியில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். அவனை மதிக்காமல் அவமதிப்போர் அப்போதே பெரும் பாவம் அடைவார்கள்.
சிவநாமமே கங்கை, விபூதியே யமுனை, உருத்திராட்சமே சர்வ பாபங்களையும் போக்கும் ஸரஸ்வதி!
ஆயிரத்தொரு நூறு ருத்திராÑங்களைத் தரித்தவன் ருத்திர ஸ்வரூபத்தையடைவான். அவன் அடையும் பயனை அநேக ஆண்டுகள் சொன்னாலும் முடிவு பெறாது.
ஐந்நூற்றைம்பது மணிகளால் கிரீடஞ் செய்து தரித்தவன் சிவரூபியாவான்.
முந்நூற்றுபத்து மணிகளால் பூணூல் செய்து தரிக்கலாம். சிகையில் மூன்றும் இரு காதுகளிலும் ஐந்து அல்லது ஆறும் கழுத்தில் நூற்றுஒன்றும் புயத்தில் பதினொன்றும் கன்னமாலை பதினொன்றும் மணி பந்தங்களிரண்டில் பதினொன்றும் பூணூலில் மூன்றுமாக முக்திகாமி அணிய வேண்டும். ஐம்பது மணிகளை கடிசூத்திரமாக அணியத் தகும். இவ்வாறு அணிபவன் முக்தியடைவான் என்பதில் சந்தேகமே இல்லை.
ருத்திராட்ச மாலையைத் தாங்கி நூறு மந்திரஞ் ஜெபித்தால் ஆயிரம் ஜெபித்த பயன் கிடைக்கும்.
ருத்திராக்கமே சிவபெருமானைப் பெரிதும் மகிழச் செய்யும். முத்துடன் கலந்த ருத்திராÑம் விஷ்ணுவை மகிழச் செய்யும்.
ஒருமுக ருத்திராட்சம் சகல காரிய சித்தியைக் கொடுக்கும். இந்த ஒருமுக ருத்திராட்சமணி இருக்கும் இடத்தில் அணிமா முதலான அஷ்டசித்திகளும் இருக்கும். ஏகமுக ருத்திராட்சத்தை நீரோட்டத்தில் விட்டால் எதிர்த்து ஓடும்.
இருமுகமணி இருக்குமிடத்தில் லட்சுமிகடாÑம் விளங்கும். இருமுக மணியை அணிந்து நெருப்பில் இறங்கினால் உடல் வேகாது.
மும்முகமணி சகல சித்திகளையும் விளைவிக்கும். மூன்று முக மணி அணிந்தவனை ஆயுதங்கள் ஊறு செய்யாது.
நான்முகமணி அறம் பொருள், இன்பம், வீடு என்னும் புருஷார்த்தங்களையும் நல்கும். நான்கு முக மணியை வைத்திருப்பவன் வீட்டிற்கு வந்த சோரனுக்குக் கண் தெரியாது.
ஐம்முகமணி பாவத்தைப் போக்கும். ஐம்முக மணியிருந்தால் சகல துன்பங்களையும் விலக்கி விடும்.
ஸ்நானம், தானம், ஜபம், ஓமம், அத்தியயனம், பிதுர்த்தர்ப்பணம், சிவவிஷ்ணு பூஜைகள், சிரார்த்தம் முதலிய எல்லாக் காலங்களிலும் ருத்திராÑத்தை தரித்துக் கொள்ளலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s