பிரணவ உச்சாரண பலன்

பிரணவ உச்சாரண பலன்
உருத்திரமூர்த்தியின் வலதுபுறத்தில் பிரமதேவரும் இடப்புறத்தில் விஷ்ணுமூர்தியும் விளங்குவர். இவர்கள் மூவரும் ஒரே சுரூபம் உள்ளவர்கள். பரமசிவத்தை காலை வேளையில் பிரமனாகவும் பகலில் விஷ்ணுவாகவும் மாலையில் உருத்திரனாகவும் தியானிக்க வேண்டும். ஒரு மூர்த்தியே முத்தொழில் காரணமாக மும்மூர்த்திகளாக நின்று நடத்துவர். அகாரம் விஷ்ணுவும், உகாரம் பிரமனும், மகாரம் உருத்திரனும் ஆவார் என்று தியான யோகிகள் அறிய வேண்டும். அகாரத்தை இதயத்தில் இருத்தி உகாரத்துடன் கூட்டி மிருதுவாக மகாரத்தையும் சேர்த்து பிந்துநாதங்களைப் பொருத்த பிரணவமாகின்றது. ஏகாÑரம் பிஹமா என்று சுருதிகள் கூறும்.
அதை உணர்ந்தவனுக்கு பிறவிகள் இல்லாமல் ஒழியும், ஓங்கார ஸ்வரூபத்தை அறிந்தவன் மும்மூர்த்திகளை அறிந்தவன். மாயையின் சிரசிலிருந்து உண்டான ஓங்காரத்தையே அப்யசிக்க வேண்டும். அப்படி அப்யசித்தவனுக்கு மனோதிடம் உண்டாகும். அங்குஷ்ட மாத்திரையாகவுள்ள சிவபெருமானை இதயத்தில் தியானித்து புருவமத்தியில் சாங்கியயோக முறைப்படி சந்திரசமான காந்தியும் அழிவின்மையும் அவ்வயயமும் சூட்சமமும் அநாதியுமாக விளங்கும் தேஜஸைத் தரிசிக்க வேண்டும். ஓம் என பிரணவத்தை உச்சரிக்காமல் மனதினாலேயே தியானிக்க வேண்டும். அரை மாத்திரை, ஒரு மாத்திரை, இரு மாத்திரை, மும்மாத்திரை காலங்களாக விருத்தி செய்து அதை தியானிக்க உணர்ந்தவன் தத்துவத்தை அறிந்தவனாவான்.
அதை உச்சரிக்கும்போது, மனம் விஷய வாதனைகளில் செல்லாதபடி அடக்கிப் பிராணாயாமத்தினின்று மானசீகமாக உச்சரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு நிமிஷமேனும் செய்வதே யோகமாகும். அவ்வாறு யோகஞ் செய்பவன். ஐந்து அவயவங்களடக்கிய ஆமையைப் போலும் காற்றில்லாத இடத்தில் எரியும் தீபத்தைப் போலும் மகிழ்ச்சியாக விளங்குவான். தைலதாரை யொழுகும்போது, பின்னம் இல்லாது ஒழுகுவது போலவும் நித்திரை செய்யும்போது, சுவாசம் விடுவதும் தெரியாதது போலவும்ளூ இடைவிடாது யோகத்திலேயே லயமுற்று இருக்க வேண்டும். அசைவற்று இருந்து பிராணாயாமஞ் செய்பவனுக்கு மனம் நிலைத்து நிற்கும். மனம் நிலைப்படுவதால் வஸ்து பிரதிபலிக்கும். அதுவே அÑர ஸ்வரூபி. அதுவே பிரம விஷ்ணு ருத்திராதிக்யம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s