சிவ ஸ்தோத்திரத்தைச் சொல்லித் துதிப்பவனுக்கு வளர்பிறை சந்திரன் போல் மங்களம் வளரும்-சிவப்புராணம்

‘சேதான சேதனமாயும், லோக ரூபமாயும், தேவ தேவர்களுக்குப் பிரபுவாயும் ருக்வேத, சாமவேத, யசுர்வேத, சொரூபமாயும் சிருஷ்டி ஸ்திதி சங்கார கர்த்தாவாயும், ஸர்வாபீஷ்டங்களையும் கொடுக்க வல்லவராகவும் இருக்கும் பிரபுவே! உம்மை நமஸ்கரிக்கிறேன். ஏகாட்சர ரூபமாகி (ஓரேழுத்து வடிவமாகி )யும் நாதராகியும் அகாரரூபமாகியும், ஞான ரூபமாகியும், (அறிவுருவாகியும்) உகார ரூபமாகியும், ஆதி தேவனாகியும், வித்யாஸ்வரூபம் உடையவராகியும் இருக்கும் உமக்கு நமஸ்காரம்! மூன்றாவதான மகாரூபமாகியும் சிவமூர்த்தியாகவும் சிரேஷ்ட ரூபத்தையுடையவராகியும், ஜலத்தில் நித்திரை செய்பவராகியும், இருக்கிற உமக்கு நமஸ்காரம்! சித்ரூபமாயும் (அறிவுருவமாகியும்) பிராணி ரூபமாகியும், ஸ்மிருதி ரூபமாகியும், உள்ள உமக்கு நமஸ்காரம்! ஞானரூபமாகியும், ஞானத்தினால் அடையத் தக்கவராகியும் உயர்ந்த ரூபமான உமக்கு நமஸ்காரம்! பொன்மயமான கைகளையுடையவரும், பொன்மயமான இந்திரியத்தை உடையவருமான உமக்கு வந்தனம்! விரிசடை தரித்தவரும் யானைத்தோல் போர்த்தியவருமான உமக்கு வந்தனம்.

மங்கள ஸ்வரூபியாகவும், மங்களத்தையுண்டு பண்ணுபவராயும், பரமாகாய சரீரியாயும், மகாபத்மம் முதலான நிதிகளுக்கெல்லாம் பதியாயும், லிங்காகாரமாகியும், லிங்க ஸ்வரூபத்தையுடையவரா யுமிருக்கும் உமக்கு வந்தனம்! அனந்தரும் அனைத்திற்கும் உன்னதரும்;, நீரை உள்ளே உடையவரும், தவத்தில் ஆசக்தரும், பிரும்ம விஷ்ணுவான எங்களுக்குச் சாமவேத கீதத்தினாலே பாடம் தரத் தக்கவராயும், பரப்பிரம்ம ஸ்வரூபியாகவும், பரமாத்மாவாயும், ரிஷிஸ்வரூபியாயும், சகலத்திலும் வியாபித்தவராயும், பிரபுவாயுமிருக்கிற உமக்கு வந்தனம். அனைத்துமுணர்ந்த ஐயனே! வந்தனம், வந்தனம்!’

இவ்வாறு விஷ்ணுபகவான் பிரம்மதேவருடன் சேர்ந்து சிவபெருமானை துதித்துக் கொண்டு நின்றார். மகா புண்ணிய உருவாகவும் உன்னதமாகவும் விளங்கும் இந்தத் துதியை எவன் படிக்கிறானோ, கேட்கிறானோ, பிராமண சிரேஷ்டர்களைக் கேட்கச் செய்கிறானோ அவன் மகா பாபியாயிருந்தாலும் பிரமபதவியை அடைவான். நாராயணனாகிய விஷ்ணுபகவானால் செய்யப்பட்ட இச்சிவ ஸ்தோத்திரத்தைச் சொல்லித் துதிப்பவனுக்கு வளர்பிறை சந்திரன் போல் மங்களம் வளரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s