மரணத்தை வெல்லும் யோக நிலைகள்-சிவப்புராணம்

பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி, ‘நாதா! நீங்கள் கூறிய மரண காலக்குறிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். உலகினர் உயிரை எமன், வஞ்சித்துக் கவர்ந்து கொண்டு போகிறான் என்று சொல்கிறார்களே, அவன் அப்பிராணனை எவ்வாறு வஞ்சித்துப் பிடித்துக் கொண்டு போகிறான்? அதையும் விபரமாகச் சொல்ல வேண்டுகிறேன்!’ என்றாள். அதற்குச் சிவபெருமான் கூறினார்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களும் சேர்ந்தே மனித உடலாகும். அவற்றில் ஆகாயம் சர்வ வியாபியாக இருக்கிறது. மற்ற பூதங்கள் எல்லாம் ஆகாயத்திலேயே ஒடுங்கி, மீண்டும் அதிலிருந்தே தோன்றுகின்றன. இந்தப் பஞ்சபூத உடல் காரணத்துடன் கூடியதாகையால், ஞானிகளாக இருந்தாலும் அவர்களுடைய உடலுக்கும் ஓர் அழிவு உண்டாகும். அது ஒருபோதும் நிலையானதல்ல! என்றார்.

பஞ்சபூதாத்மகமான தேகமானது பூதகுணம் உள்ளது. பஞ்சபூதங்களில் ஆகாயத்திலிருந்து வாயுவும் (காற்றும்) வாயுவிலிருந்து தேயுவும் (நெருப்பும்) தேயுவிலிருந்து அப்புவும் (நீரும்) அப்புவிலிருந்து பிருதிவியும் (நிலமும்) தோன்றும். இவ்வைந்தும் சேருவதால் உடலாக மாறுகிறது. பிருதிவிக்கு ஐந்து குணங்களும் தண்ணீருக்கு நான்கு குணங்களும் தேயுவுக்கு மூன்று குணங்களும் வாயுவுக்கு இரண்டு குணங்களும் ஆகாயத்துக்குச் சப்தம் என்னும் ஒரே குணமும் உண்டு. பூதங்கள் தத்தமது குணங்களை நீங்கிய காலத்தில் உடல் அழிவு அடைகிறது. ஞானி ஓர் உடலை அடைய விரும்பியபோது அந்தப் பஞ்சபூத குணங்கள் அவ்வற்றினின்று உண்டாகின்றன. யுமனை வெல்லவேண்டும் என்று விரும்பியவன் அவனது பூததேகத்தில் விளங்கும் ஆகாயத்தைத் தன் உள்ளே கண்டு அதனிடத்திலேயே எல்லாக் குணங்களும் இருப்பதாகத் தெரிந்து கொண்டு மனத்தைப் புறஞ்செல்லாமல் ஒடுக்கி யோகத்தி;ல் இருக்கவேண்டும் என்றார் சிவபெருமான்.

சுகமான ஆசனத்தில் அமர்ந்து கொண்டு யோகத்தைப் பயில வேண்டும். நாள்தோறும் ஏகாந்தமான ஓர் இடத்தில் இருந்து தர்ஜனியால் இரண்டு நாழிகைக் காலம் காதுகளை மூடிக்கொண்டு பரமசிவத்தைத் தியானித்தால் வயிற்றிலுள்ள ஜடாராக்கினியிலிருந்து ஒரு சப்தம் உண்டாகி அவனுக்குக் கேட்கும். அன்றியும் அந்த ஆகாரத்தையெல்லாம் பசனம் செய்துவிடும். ஜ்வராதி ரோகங்களைப் போக்கி உபத்திரவங்களை நாழிகைவரையில் பயின்று வந்தவன். மரணத்தை வென்று சுயேச்சையாகத் தரிசித்து. எல்லாவற்றையும் கண்டு சர்வசித்தியை அடைகிறான். மழைக்காலத்தில் மேக கர்ஜனையைப் போன்ற சப்தத்தைக் கேட்டு அப்யசித்தவன், யோகியாயர் ஜனன மரணங்களை நீக்கிச் சூக்ஷமத்திலும் சூக்ஷமமாகவுள்ள பிரமத்தைத் தரி;சித்து, பதரை நீக்கி அணியைக் கொள்பவன் போல, சம்சாரம் முதலான துக்கங்களை ஒழித்து பிரமஞானத்தை அடைகிறான். இது சப்த பிரம்மயோகம் எனப்படும். இந்த யோகாப்பியாசம் உடையவர்கள் பசி தாகங்களைப் போக்கித் தாம் விரும்பியவற்றை அடைவார்கள் இதுவே முக்திக்குக் காரணம். சப்தப் பிரமத்தை அறிந்தவர்கள் ஜன்மபந்தத்தில் இருந்து நீங்குவார்கள். தன் உடம்பில் உண்டான உறக்கம் சோம்பல் தாமசம் காமக்குரோதாதிகள் முதலியவற்றை நீக்கிச் சுகமான ஆசனத்திலிருந்து நூறு வயது சென்ற கிழவனாக இருந்தாலும் இந்த யோகத்தைப் பயில்வானேயாகில் மிருத்யுஞ்சய சரீரத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்க்காயுளையும் அடைகிறான்.

இந்த யோகத்;திற்கு ஓங்கார மந்திர பீஜாக்ஷரங்கள்; வேண்டுவதில்லை. பயிற்சியினாலேயே அதை அடையலாம். இந்தச் சப்தத்தில் ஒன்பது வகைப் பேதங்கள் உள்ளன. அவற்றையும் சொல்லுகிறேன், அவை கோஷம், காம்ஸ்யம், ஸ்ருங்கம,; கண்டா, வீணை, புல்லாங்குழல், துந்துபி, சங்கம,; மோகம் போன்ற ஒன்பது சப்தங்களாகும். விவேகி அத்தகைய ஒலிகளைக் கேளாது விடுத்தால் ஓங்காரத்தின் ஓசை உண்;டாகும். அதையே அவன் கேட்கவேண்டும். ஆறு மாதத்திற்கு அந்தச் சப்தத்தை அப்யாசித்தவன் மகாயோகியாய் எல்லா உலகங்களிலும் சஞ்சரிப்பான்.
கோஷம்: என்ற சப்தத்தை பயின்றவன் ஆத்மசுத்தி எல்லா நோய் நீக்கம் வசீகரம் முதலான சித்திகளையும் அடைவான்.
காம்ஸ்யம்: என்பதைப் பயில்பவன் எல்லாப் பிராணிகளின் கமனத்தையுமு; தடுக்கக் கூடியவனாவான். மேலும் விஷயங்களைத் தடுக்கவும் பூதம், பேய் முதலியவற்றை அடக்கவும் வல்லவனாவான்.
ஸ்ருங்கம்: என்ற சப்தத்தைப் பயின்றவன் பகைவரை ஒழிக்கவும், தன் இஷ்டப்படி அவர்களை நடக்கச் செய்யவும் வல்லவனாவான்.
கண்டா: என்னும் சப்தத்ததைப் பயின்றவன் எல்லாத் தேவர்களையும் தன்னிடம் வரவழைக்கும் திறனுடையவனாவான்.அல்லாமல் யக்ஷர், கின்னரர், கிம்புருடர், மானுடர் முதலானவர்களையும் வசப்படுத்த வல்லவனாவான்.
வீணை: என்னும் சப்தத்தை அப்யாசஞ் செய்பவன் தூரதிருஷ்டியை அடைவான்.
புல்லாங்குழல்: என்னும் சப்தத்தைப் பயின்றவன் எல்லாமறிந்தவனாவான்.
துந்துப:p என்பதைப் பயின்றவன் நினைத்த உருவம் எடுக்க வல்லவனாவான்.
மேகநாதத்தை: பயில்வோன் ஆகாயத்தில் சஞ்கரிக்க வல்லவனாவான்.
சர்வத்தையும் பார்க்கவும் வல்லமையும் பெற்று, சர்வ சித்திமானுமாவான். இவ்வாறாகச் சப்தத்தின் விஷயத்தை விவரித்தேன்.

வாயுமயமான உடல் அழிந்து போகும் என்று காலஞானத்தால் அறிந்து கொண்டு சரீரீயானவன் பிராணாயாமம் என்னும் யோகத்தை பயில்வானேயாகில் தனக்கு உண்டாகும் மரணத்தைப் பதினைந்து நாட்களில் விலக்க வல்லவனாவான். அவனது இதயத்திலிருக்கும் வாயுவானது சதா ஜடராக்கினியோடு கூடி உள்ளும் புறமும் சஞ்சரிக்கிறது. அந்த வாயு எங்கும் பரவியுள்ளது.

அத்தகைய வாயுவைப் புறஞ்செல்லாது தன்னுள் அடக்கும் யோகி உலகத்தை ஜெயிக்கிறான். வாயுவானது ஒருவனின் உள்ளடங்கியிருந்தால் அவனை யோகியாக்கும், ரேசக, பூரக, கும்பங்களால் பிராண வாயுவைத் தன் வசப்படுத்திக் கொள்பவன், மகத்தாகிறான். அவன் பல்லாயிரம் கால்களும் அமைந்த வி;ராட்டின் சொரூபமாகிறான். இந்த வகைப் பிராணாயாமமோ காயத்திரி மந்திரத்தை சிரசோடு கூட்டி வியாஹுதி பூர்வமாய் பிராணவாயுவை அடக்கி ரேசகாதி நிலையிலிருந்து மும்முறை சாவதானமாய் ஜபிப்பதே பிராணாயாமமாகும். அதை விடச் சிறந்த யோகமில்லை.

அதுவே சித்திகள் அனைத்தையும் கொடுக்கக் கூடியது. சந்திரன் சூரியன் முதலான கிரகங்கள் அழிவும் என்றாலும் பிராணாயாமம் செய்வோர் ஒரு காலத்திலும் அழியமாட்டாhர்கள். அவர்கள் மீண்டும் பிறப்பெய்தார். நூறு ஆண்டுக் காலம் வரையில் புண்ணிய தீரத்திலிருந்து தருப்பை நுனியின் ஜலத்தை அருந்தி, உயிர் காத்துக் கடுந்தவஞ் செய்தவன் பெறும் பயனை மேற்சொல்லியபடி ஒரு பிராணாயாமஞ் செய்தவன் பெறுவான் என்றால் அதன் பயனை என்னவென்று சொல்லுவது? காலையில் எழுந்து விதிப்படி பிராணாயாமஞ் செய்த அந்தணர்கள் பிரமலோகத்தை அடைவார்கள். தனிமையாய்த் திவ்விய ஆசனத்திலிருந்து இந்தப் பிராணாயாமத்தை அப்யாசித்தால் ஜராமரணங்களை நீக்கி, வாயுவைப் போல ஆகாயத்தில் சஞ்சரிக்கும் வல்லபமும் சித்தனைப் போன்ற உருவமும் மின்னலைப் போன்ற தேகாந்தியும், அறிவின் விசேஷமாகிய ஆற்றலும் பராக்கிரமமும் வாயு வேகமும், ஆரோக்கியமும் தேவர்களுக்கும் கிட்டாத பதவியும் அடையச் செய்யும் இதுவே பிராணாயாமத்தின் பயன்.

இனி தேயுவினால் (நெருப்பினால்) அடையுஞ் சித்தியைச் சொல்;லுகிறேன் புனித ஆசனத்தில் சுத்தனாக இருந்து, மனித நடமாட்டம், பனி குளிர், முதலிய இடையூறுகள் இல்லாத தன்னந்தனிமையான இடத்தில் ஒரே மனதாய் மேல் நோக்குடன் அரை முகூர்த்த காலம் இரு புருவங்களின் மத்தியில் ஈஸ்வர சம்பந்தமான வெண்மை, செம்மை, கருமை, பசுமை வானவில் போன்ற சித்திரம் என்ற நிறங்கள் அமைந்த ஜோதியை இளஞ்சூரியனைப் போல விளங்கத் தரிசித்தவன் புலனடக்கம் பிறஉடலில் புகுதல் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்) அணிமாதி அஷ்ட சித்திகள், ஞானநோக்கம், தொலைவிலுள்ள ஒலியையும் உற்றுக் கேட்கும் ஆற்றல், பார்ப்பதற்கு அருமையானவற்றைப் பார்க்கும் வல்லமை  முதலானவற்றை அடைவான்.

இதை எப்பொழுதும் பழகுபவன் ஆகாய சஞ்சாரம் செய்பவனாவான். வேதாத்திய யனஞ் செய்தவர்களாயினும் ஞானிகளாயினும் முன்கர்மவசத்தால் என்னுடைய உருவத்தைப் பார்க்க வல்லபமிருப்பினும் பார்க்கமாட்டார்கள். என் பிரபாவத்தைக் கேட்கச் சக்தியிருந்தாலும் செவிடர் போலக் கேட்கமாட்டார்கள்;. மூடத்தன்மையால் குருடர்களைப் போல என்னை அறிய மாட்டார்கள். அத்தகைய வஸ்துவை யானே அறிந்தவன். அணுவுக்கு அணுவாயும் மகத்துக்கு மகத்தாயும் அஞ்ஞான இருளுக்கு அதிகரித்த ஜோதிமயமான தேஜஸைத் தரிசித்தவன் மரணத்தை வெல்கிறான். இதைவிட ஆன்மாக்களைக் கடைத்தேற்றும் வழி பிரிதொன்றில்லை. தேஜஸினால் உண்டாகும் சித்;தியை நான் உனக்குச் சொன்னேன்.

இனி அப்புவால் (நீரால்) உண்டாகும் சித்தியைச் சொல்லுகிறேன். நீராடல் முதலானவற்றை முடித்துக் கொண்டு பரிசுத்தனாய் நிர்மலமான ஸ்தானத்தில் ஏகாந்தமாக இருந்து, சுகமான ஆசனத்தில் உட்கார்ந்து மனத்தைப் புலன் வழி செலுத்தாமல் தன் உடலை நிமிர்த்திக் கைகளைக் கூப்பி வாயைப் பறவையின் மூக்குப் போலக் குவித்து வாய் வழியாக வாயுவை உட்கொள்ளுவானே ஆகில் தாடையின் உட் பிரதேசத்திலிருந்து ஒருவகையான நீர் உண்டாகும். பிராணனை விருத்தி செய்யும் அந்த நீரை உட்கொள்ள வேண்டும். அது குளுமையான அமிர்த நீர், அதை அருந்தியவன், திவ்விய உடலை அடையப்பெற்று மாபெரும் தேஜஸ் வாய்ந்தவனாய்ப் பசிதாகங்களைப் போக்கி, வலிமையில் யானையையும் வேகத்தில் குதிரையையும் போன்று விளங்கி வெகுத் தொலைப் பார்வையும், வெகு தொலை ஒலிக் கேட்கும் ஆற்றலும் பெற்று கந்தர்வ வித்தியாதரர் முதலான கணங்களைப் போன்ற தேஜஸும் புத்தியில் பிரஹஸ்பதியையும் தேவ வருஷங்கள் நூறுவரையில் வாழ்வையும் அடைவான். இன்னும் ஓர் இரகசியத்தையும் சொல்;லுகிறேன்.

அது தேவர்களுக்கும் அடைவதற்கு அசாத்தியமானது அதாவது நாவை வளைத்து அதன் முனையை உள் நாக்கில் வளைத்து உள் நாக்குடன் சேர்க்க அதினின்றும் அமிர்தமயமயாகக் குளுமையான நீர் உண்டாகும் அந்த அமிர்தத்தை அருந்தியவன் அமரத்துவத்தை அடைகிறான். நூவினை ரேபம் போலவும் மணிநாக்கின் வளைவைப் போலவும் வளைத்து, மூலாதார ஸ்தானத்தைப் பந்தித்தால் புனிதமான இதயதாமரையிலிருந்து ஓர் பிந்து உண்டாகி நாவின் நுனியை அடையும். ஆனந்தகரமும் ஜகத்காரமும் சம்சார துன்பநீக்கமும் நிர்மலமான பிரமஸ்வரூப உணர்ச்சியும் இயமனை வெல்லுதலும் அமரத்துவமும் பசிதாக நீக்கமும் செய்யவல்லது இந்த அமிர்தமேயாகும் இதை லம்பிகாயோகம் என்பார்கள். மேற்;கூறியவைகளில் ஒன்றைப் பயில்வானேயாகில் அவனுடைய தைரியத்தினாலே காலதேவனான யமனையும் வென்று பிரம்;மானந்தத்தை அடைகிறான். உலக இன்பம் முழுவதும் சொப்பனம் போலும் என்று உணர்ந்து, அவற்றில் வெறுப்புற்று சுவர்க்காதி போகங்களைக் கருதாமல் நிலையான என் திருவடியில் மனதை நிலைநிறுத்தியவர்கள் என் சாயுஜ்யத்தை அடைந்து கற்ப கோடிகாலம் வாழ்ந்திருப்பார்கள்.

இவ்வாறு சிவபெருமான் பார்வதி தேவியாருக்குக் கூறியதை ஸனத்குமார முனிவர் வியாச முனிவருக்கு எடுத்துரைத்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s