காய்ச்சல் பற்றியும் ,அதன் உண்மைகள் பற்றி

மக்களுக்கு காய்ச்சல் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் விழிப்புணர்வை ஊட்டவும், ஆங்கில மருத்துவம் பற்றிய உண்மைகள் படித்தவர்கள் மத்தியில் கூட விழிப்புணர்வை இல்லாத நிலைபற்றியே இக்கட்டுரை எழுதக் காரணம்.
 
முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிடுகிறேன்.வைரஸ்களோ, பாக்டீரியாக்களையோ அழித்தொழிப்பது என்பது இயலாத காரியம்.உலகத்தில் அழுக்கை எப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு மாற்ற முடியுமோ அது போலவே கிருமிகளும் ,அவற்றை தள்ளி வைக்க முடியுமே தவிர அழிக்க முடியாது.எனெனில் இவைகளில் கெடுதல் செய்வதாக எண்ணப்படும் கிருமிகளை (கவனிக்கவும் எண்ணப்படும் கிருமிகளே) அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள் நமக்கு நன்மை செய்வதற்காக உடலில் உள்ளகிருமிகளையும் அழித்து ஒழிக்கின்றன்.இது உடலின் சம நிலையை அழிக்கிறது.
 
பயிர்களில் பூச்சிகளை அழிக்க உபயோகப்படுத்தும் மருந்துகள்,பயிர்களுக்கு நன்மை செய்வதற்காக உள்ள பூச்சிகளையும் ,கிருமிகளையும் அழித்து ,பூச்சிகளின் சமநிலையையும் கெடுத்து,பயிர்களையும் விஷமாக்கி கடைசியில் அதைச் சாப்பிடும் நம் உடலையும் நஞ்சாக்கி நம் உள்ளுறுப்புகளையும் கெடுத்து வருகின்றன.
 
இது தனியாக ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் நம் நாட்டு மருத்துவமான சித்த மருத்துவமும் ,அயூர் வேத மருத்துவமும் ஒதுக்கி வைக்கப்பட்டு( அதற்கு மாற்று மருத்துவம் எனப் பெயரிடப்பட்டு) அயல்நாட்டு மருத்துவமான ஆங்கில முறை மருத்துவம் என்ற ஒரு குப்பை மருத்துவத்தை ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றதாலேயே தலை சிறந்த மருத்துவம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலை இன்று.
 
ஆங்கில மருத்துவத்திற்கு என்று ஒரு கொள்கையோ வரைமுறையோ கிடையாது.எடுத்துக்காட்டாக கிருமி நீக்கம் என்ற பெயரில் எல்லா இடத்திலும் பெனாயில் போன்ற கிருமி நீக்கம் செய்யும் நச்சுக்களை எல்லா இடங்களிலும் தெளிக்கிறார்கள்.கிருமி நீக்கம் செய்ய கத்திகள்,ஊசிகள் போன்றவற்றை கொதிக்க வைக்கிறார்கள். ( இப்போது பெனாயில்(PHENOIL) போன்றவை சுற்றுச் சூழலைக் கெடுக்கும் என்று அதே மேற்கத்திய நாடுகளில் உபயோகிக்கப்படுவதில்லை)  
 
பின் ஏன் அந்த ஊசி போடும் போது அதன் மூலம் நோய் பரவுகிறது என்று ஒரு முறை பயன்படுத்தும் ( DISPOSABLE NEEDLES ) ஊசிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.அந்த ஊசிகளின் மூலம் போடப்படும் மருந்துகள் கேவலம் ஊசிகளின் மூலம் பரவும் கிருமிகளையே கட்டுப்படுத்தவோ கொல்லவோ முடியாதென்றால் அது எப்படி நமக்கு நல்லது செய்யும்.
 
கிருமி நீக்கம் என்ற பெயரில் ஒரு பக்கம் உடல்நலத்தையும் , சுற்றுச் சூழலையும் கெடுத்து வருவது ஒரு பக்கம் . மற்றொரு பக்கம் தடுப்பூசிகள் என்ற பெயரில் உடலில் கிருமிகளை ஊட்டி வருகின்றன.
 
முதலில் தடுப்பூசி தத்துவத்தை உங்களுக்கு விளக்குகிறேன்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உறங்கிக் கொண்டு இருக்கும் சக்தி.கிருமிகள் உடலின் உள்ளே நுழைய முயற்சி செய்யும் போதோ,உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும் இந்தச் சக்தி உடல் நுண் எதிர்மங்களை(ANTI BODIES) உற்பத்தி செய்கின்றன.இந்த உடல் நுண் எதிர்மங்கள்(ANTI BODIES) உள்ளே நுழைந்த கிருமிகளை விரட்டவும் கொல்லவும் செய்யும்.
 
உடலின் காவல்காரர்களான இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) நோய் வரக்கூடாது என்பதற்காக சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலையே தடுப்பூசிகள். அதற்காக வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகள் உடலில் ஏற்றப்படுகின்றன.போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளின் மலம்(STOOL), மூத்திரம்(URIN),எச்சில்(SALAIVAA) என்று அனைத்திலும் போலியோ கிருமிகள் மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் இருக்கும்.

நம் உடலே ஒரு பெரிய மருத்துவர்.அத்தனை அறிவுள்ள உடலுக்கு கேடு வரும்படி நாம் நடந்து கொள்ளும் போது உடல் தன் அதீத சக்தியை பிரயோகிக்கிறது.அதுவே இந்த உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES) உற்பத்தி செய்தல்.இதை சும்மா, சும்மா தட்டி எழுப்பி வைக்கும் வேலை

செய்தால் கடைசியில் ஒரு கட்டத்தில் உடல் தன் அதீத நடவடிக்கையான
உடல் நுண் எதிர்மங்களின் (ANTI BODIES) உற்பத்தியே நடக்காமல் போய்விடும்.

முதலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்கள்.பின்னர் BOOSTER DOSE என இரண்டாவது முறையும் கொடுங்கள் என்றார்கள்.பிறகு மூன்று முறை மூன்றாண்டு கால இடைவெளியில் கொடுங்கள் என்றார்கள்.பிறகு நான்கு முறை என்றார்கள்.இப்போது ஐந்து முறையில் வந்து நிற்கிறது.நமக்குதான் இலவசமாகக் கிடைக்கும் எதையும் விடமாட்டோமே!

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் குழந்தைக்கு இந்தக் வீரியம் குறைக்கப்பட்ட கிருமிகளைக் கூட,எதிர்த்து உடல் நுண் எதிர்மங்களை (ANTI BODIES)  உண்டாக்குமளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், எந்த வியாதியைத் தடுப்பதற்குப்பதற்காக இந்த மருந்து ஏற்றப்பட்டதோ, அந்த மருந்து அந்த வியாதியைத் தடுப்பதற்குப் பதில்,அதே வியாதியை உண்டாக்கிவிடும்.
 
இதை அந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களே தங்கள் மருந்துக் குறிப்புகளில் இதை வெளியிட்டிருக்கின்றன. இது சாதாரணமாக உள்ள எந்த நபர்களுக்கும் தெரியாத ஒன்று.இன்னொரு முக்கிய விஷயம் இலவசமாகத் தரப்படும் எதுவும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களில் பாதுகாப்புத் தராது( அதாவது இலவசமாய்த் தரப்படும் மருந்து சேவையின் பாற்பட்டது ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எந்த விதத்திலும் நஷ்ட ஈடோ, வேறு எந்த குறைபாட்டுக்கும்(ஏன் உயிர் போனாலும்) இலவச சேவையின் மூலம் சேவை செய்தவர் பொறுப்போ காரணம் ஆக மாட்டார்கள்( அது அரசு சேவையே ஆனாலும்)).

கீழே சில இணைப்புக்கள் கொடுத்துள்ளேன் பார்வையிடவும்.
http://naayakan.blogspot.com/2010/07/blog-post.html
http://www.yarl.com/forum3/index.php?showtopic=73504
http://www.vinavu.com/2009/09/24/vaccine-privatization/
http://healernews.blogspot.com/2010/05/blog-post_16.html

நமது நண்பர் ஒருவர் தடுப்பூசியின் தீமையை உணர்ந்து தடுப்பூசி போடாத போது அவருக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுக்க சிக்கல் இருப்பதாகக் கூற அவ்ர் தகவல் உரிமைச் சட்டத்தை நாடி கீழ்க் கண்ட விவரம் பெற்றுள்ளார்.   

Graphic1
சித்த வைத்தியத்தில்,மட்டுமல்ல ஆயுர்வேத வைத்தியத்திலும் காய்ச்சல் என்பது ஒரு வியாதியல்ல என்றே கூறுகின்றன.’ஆசன சீதம் ஜீவன் நாசம்’ என்று கூறுகிறது.அதாவது குதப் பகுதி குளிர்ந்தால் உயிர் போய்விடும்.காய்ச்சல் என்பது உயிராற்றலின் கிளர்ந்து எழுதலே!இதை எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC ) இந்த உயிராற்றலின் கிளர்ந்து எழுதலை கொன்றுவிடுதலே ஆங்கில வைத்திய முறை.(ANTI -BIOTIC ) என்ற பெயரிலேயே உயிர் சக்திக்கு எதிரானது என்ற பொருள் இருக்கிறது.அது கிருமியின் உயிராக இருந்தாலும் சரி நம் உயிராக இருந்தாலும் சரி.இதுவே பின்னர் பெரு வியாதியாக விளைந்து ஆங்கில மருந்துகளால் கட்டுப் படுத்த முடியாதபடி கிளர்ந்து எழுந்து,  உயிராற்றலை எழுப்ப முயற்சி செய்து முடியாதபோது உயிரை முடித்துக் கொள்கிறது.( பால்வினை நோய்கள் AIDS ஆக மாறுவதும்,சாதாரண சளி ஆஸ்துமாவாக மாறுவதும் இப்படியே).
 
சூப்பர் பக்( SUPER BUG ) என்ற கிருமி இந்தியாவில் இருந்து போனதாகவும்.இந்தியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளில் இருந்து பன்றிக் காய்ச்சல்{( SWAIN FLUE )(H 1- N 1 VIRUS)}  ,பறவைக் காய்ச்சல்{( Avian Flu ) ,OR, ( BIRD FLU )}Fபரவியதாகவும் கூறும் மேலை நாட்டினருக்கு இந்த உண்மை தெரியாதா?
காய்ச்சலா? தலைவலியா? உடனே பாராசிட்டமால்( PARACETAMOL ) எடுங்கள்.போடுங்கள்,குழந்தைகளுக்கும்( PEDIATRIC DROPS  ) சொட்டு மருந்தாகவும், கொடுங்கள் என்று கூறுகிறார்களே! நாமும் நமது நண்பர் தலைவலி என்றவுடன் போடு ஒரு பாராசிட்டமால் என்கிறோமே.
 
 அது என்ன என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருப்போமா?பாரா அசிட்டோ அமினோ பினைல் என்பதே பாராசிட்டமால். நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா? பெரும்பாலான ஆங்கில முறை மருத்துகள் பெட்ரோலில் இருந்து எடுக்கப்படும் ( CRUDE  OIL PETROLEUM BI PRODUCTS ) உப பொருட்களே!அதிகமான எதிர் உயிரி ரசாயனங்களைக் கொண்டு (ANTI -BIOTIC )வைத்தியம் புரிதலே இந்த சூப்பர் பக்( SUPER BUG ) கிருமி பரவலுக்கு முக்கிய காரணம் என்று இப்போது புலம்பி என்ன பயன்!
 
கீழே கொடுத்திருக்கும் இணைப்புகளைப் பார்வையிடுங்கள்.புரியும்.அதன் கடைசி இணைப்பில் கொடுத்திருக்கும் விஷயத்தையே இணைப்பாக கொடுத்திருக்கிறேன்.பாராசிட்டமாலின் கொடுமை கண்ட பின்னும் உபயோகித்தால்.
 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s