ஆல்பா தியானம்

ஆல்பா தியானம்

670px-Open-Your-Spiritual-Chakras-Step-7
மனோசக்தியின் திறவுக்கோள் ஆல்ஃபா நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது? ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே! இது எப்படி சாத்தியமாகிறது? என்று சிந்திக்கும்போது, பலரும் விடையாக கூறும் சொல் அதிர்ஷ்டம். ஆனால் அதிர்ஷ்டம் தொடர்ந்து வருமா! என்றோ, ஒருவரின் தொடர் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை குறித்தோ, யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் ஒருவரின் வெற்றியும், அதனால் ஏற்படும் விளைவு களை மட்டுமே நாம் கருத்தில் கொள்கிறோம்.

உண்மையில் எல்லா வெற்றியாளர்களும் ஒரே சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர். அது தன்னை உணர்தல். இதற்காக அவர்கள் எந்தவித விசேட பயிற்சியையும் மேற்கொள் வதில்லை. தியானத்தை மட்டுமே பின்பற்று கிறார்கள். அதிலும் ஆல்பா என்ற தியான பயிற்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்த வெற்றிகளை தொடுகிறார்கள். இதை வாசிக்கும் போதே நம்மில் பலருக்கு ஆல்பா என்றால் என்ன? அறிய ஆவலாக இருக்கும். ஆல்பா மைண்ட் பவர் என்றால் என்ன?

நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதனை அடிப்படையாக கொண்டு அறிவியலாளர் கள் ஆய்வு செய்து, மூளையின் வேகத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள். இதற்கு பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பீட்டா என்பது நாம் அனைவரும் வேகமாக பேசுவது, சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளை செய்வதை குறிக்கிறது என்றும், இந்நிலையில் மூளையின் செயல் வேகம் 14 சைக்கிள் வேகத்திற்கு மேல் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இதே சமயத்தில் நமது மூளையின் வேகம் 14 சைக்கிளிலிருந்து 7 சைக்கிள் என்ற வேகத்தில் இயங்கினால், அதற்கு ஆல்ஃபா என்றும், ஏழு முதல் நான்கு சைக்கிள் வேகத்தில் இயங்கி னால் அதற்கு தீட்டா என்றும், 4 முதல் பூஜ்ஜி யம் வரை இயங்கினால் அதற்கு டெல்டா என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நான்கு நிலைகளில் மனிதனுக்கு சக்தி தரும் நிலை எது எனில் ஆல்பா நிலை தான். ஏனெனில் இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலி ருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல.

இதை எளிமையாக சொல்ல வேண்டுமா னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கை யாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத் தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண் ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

* ஆல்பா மைண்ட் நிலைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் எவ்வகையான தொடர்பு உள்ளது? மனிதனுக்கு பயம், தயக்கம் ஏற்படும் போதும், தொடர் தோல்விகளை சந்திக்கும் போதும் தன்னம்பிக்கையும், ஊக்கமும் குறை யும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை, இந்த ஆல்பா தியானத்தை தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோ ஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சி யும் தானாகவே ஏற்படும்.

* ஒரு மனிதனின் பலம், பலவீனம் இவற்றில் நீங்கள் கூறுகின்ற ஆல்ஃபா பவர் எதை மேம்படுத்தும்? இரண்டையுமே மேம்படுத்தும். மனம் சோர்வடைந்தால் உடலும் சோர்வாகி விடும். ஆல்பா தியானத்தை பழகப் பழக, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகு வதைக் காணலாம். இதனால் இருமல், ஜுரம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமடைவதாக இப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் கூறியுள் ளனர். அதாவது இந்த தியான முறையை பின்பற்றுவதால், உடல்ரீதியாக எந்த குறை வும் ஏற்படுவதில்லை என்று ஊறுதியாக கூறமுடியும். மேலும் மன பலம் அதிக ரித்து, சிந்திக்கும் திறன், முடிவெடுக் கும் திறன் ஆகியவை சிறப்பாக அமை வதை பழகப் பழக உணரலாம். உதாரணமாக மேடைப் பேச்சு என்றாலே ஒருவித தயக்கம் கொண்டவர்கள், இந்தப் பயிற்சியை செய்தால், சரள மாகவும், சாதூரியமாக வும் பேசுவதைக் காணலாம். * ஒருவருக்கு எந்த நிலையில் இந்த ஆல்ஃபா தியானம் அவசிய மாகிறது?

தங்களது உடலில் இது போன்ற சக்தி இருக்கிறது என்பதை உணர, தினசரி 15 முதல் 20 நிமிடம் வரை இந்த பயிற்சியை பழகினாலேயே நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உணரலாம். இதன் மூலம் நாம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனோபலம் பெறுவதையும், நமது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகரிப்பதை யும், நமக்குள் ஏதோ சக்தி இருப்ப தையும், இது உணர்த்துவதால் ஒவ்வொ ருவ ருக்கும் இது அவசியமாகிறது.

* ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியவற்றிலிருந்து ஆல்பா நிலை எவ்வாறு மாறுபடுகிறது? ஆல்பா நிலை தியானம் இவை இரண்டிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெஸ்மரிசம் என்பது பிறர் மனதை தன்வசப்படுத்தி, தான் நினைப்பதை அவர் மூலம் செய்யவைப்பது. இது பெரும்பாலும் நல்லெண்ண அடிப்படையில் செயல்படுத்து வதில்லை. மேலும் இது ஒரு தவறான முறையும் கூட. ஹிப்னாடிசம் என்பது ஒரு மனோதத்துவ சிகிச்சை முறை. மனநல மருத்துவர் தனது நோயாளியின் மனதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை ஹிப்னாடிசம் முறையை அளிப்பதற்கானது. சிலர் ஆல்பா நிலையை செல்ப்ஹிப்னாடிசம் சுயஹிப்னாடிசம் என்கின் றனர். இது தவறு. ஏனெனில் அறிவியல் பூர்வமாக பார்த்தால், ஆல்பாவின் நிலை 7முதல் 14 சைக்கிள், ஹிப்னாடிசத்தின் நிலை என்பது 0 முதல் 7 சைக்கிள், அதாவது தீட்டாவின் நிலை.

ஆல்பா நிலை வெறும் பயிற்சி கிடை யாது. ஆன்மிக வளர்ச்சிக்கும், தன்னை உணர்வதற்கும், நாம் ஏன் பிறந்தோம் உள் ளிட்ட சிக்கலான கேள்விகளுக்கும் தெளி வான முறையில் விடை பெறுவதற்கு உதவு வது.

* சுய முன்னேற்றக் கட்டுரை எழுது பவர்கள், படிப்பவர்கள் சொல்வது என்ன வென்றால் இது போன்ற தியானங்களை பழகுவதால் சுய முன்னேற்றம் இருக்காது, போதும் என்ற மனதை உருவாக்கும் என் கிறார்கள். இது எந்த வகையில் உண்மை? அது உண்மை தான். போதும் என்ற மனநிலை வந்தால் நமக்கு உழைக்கப் பிடிக்காது. முயற்சியும் செய்ய மாட்டோம். ஆனால் ஆல்பா நிலை தியானத்தில், ஆழ் மனது திறந்திருக்கும் போது, மனம் அமை தியடைந்த சூழ்நிலையில், நமது பொருள் ஆசைகள், கனவுகள், பொருள் சார்ந்த இலட் சியங்கள் என்று எதை விரும்பினாலும் நிறை வேறும். இதை விட ஆழ்நிலையான தீட்டா, டெல்டா நிலைகளுக்கு நமது சித்தர்கள் சென் றார்கள். டெல்டா என்பது சமாதி நிலை, அவர்கள் ஆசை அற்றவர்கள். இந்த ஆல்ஃபா நிலையில் இருக்கும் போது, ஒரு தனி மனிதன் தனக்கு என்னென்ன தேவையோ அது குறித்து சிந்தித்தால், அது ஆழ்மனதில் தங்கி, நமக்கு அந்த இலக்கை அடைய பெருமளவில் உதவும். அதனால் இந்த தியானத்தில் போதும் என்ற மனதை உருவாக்குகிறோம் என்று கூற முடியாது. நான் என்னுடைய பயிற்சி வகுப்புகளை தொடங்கும்போது, கூட்டு தியானத்தை மேற் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். இதனால் பல நன்மைகள் விளைந்திருக்கின்றன. * ஆல்பா மைண்ட் நிலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா? எம் மாதிரியான விழிப்புணர்வு தேவை? விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துள்ளது. பல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நாம், அதற்குரிய தீர்வை நோக்கி, நமது தேடலைத் தொடருகிறோம். இதற்காக சில சாமியார் களிடமும், மந்திரவாதிகளிடமும் செல் கிறோ ம். ஆனால் இந்த முறையை விட, ஆல்பா தியானத்தை தொடர்ந்தோமானால், நாம் எங்கும் செல்லாமலே, நமக்குள் உள்ள சக்தி யை உணர்ந்து, சுயமாக சிந்திக்கத் தொடங்கி விடுவோம். இதற்குரிய சக்தி ஆல்பாவிற்கு உள்ளது. * ஆல்பா தியானம் எந்த வயதில் பின்பற்றலாம்? நாம் தியானம் செய்யும் போது, குழந் தையை அருகில் அமர வைத்து, தியானம் செய்வதைக் கவனிக்கச் செய்யலாம். பத்து வயதாகும் போது, முறைப்படி கற்றுக் கொடுக் கலாம்.

* ஆன்மிகம், மூட நம்பிக்கை, மதம் இம்மூன்றின் விளைவுகளிலிருந்து ஆல்பா எம்மாதிரியாக வேறுபடுகிறது? ஆல்பா நிலை, எந்த மதக் கோட்பாடுகளுக் குள்ளும் வராது. மதம் சாராதது. கர்ம வினைகளின்படி தான் நாம் ஒரு குறிப்பிட்ட மதபின்னணியில் பிறக்கிறோம். மதம் என்பது ஒரு டிசிப்ளின். கோட்பாடு. எல்லா மதமும் நல்லனவற்றைத் தான் வலியுறுத்துகின்றன. மதம் மனிதனுக்கு சில சடங்கு, சம்பிரதா யங் களை மட்டுமே கற்பித்திருக்கின்றது. ஆனால் இப்படி தான் சிந்திக்கவேண்டும் என்று வலியு றுத்தவில்லை. பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒரே நாள் தான். அது தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கிறது. ஒரே நாளில் பல வகுப்புகள் எடுத்து, அவர்களையே இதற்கான செயல் முறையை, நடைமுறைப் படுத்த பயிற்சி அளித்து விடுகிறோம். ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த திறமைகள் வேண்டும். ஆன் மிகம் அப்படி அல்ல. இந்தத் துறையில் ஈடுபடுவது என்பது நான் எடுத்த முடிவு அல்ல. எனக்குள் இருக்கும் சக்தி எடுத்த முடிவு. நான் பல விட யங்களையும், அனுபவங் களையும், தியானத்தால் கற்றுக் கொண்டேன், தியானத்தால் பல விடயங்கள் நடந் தன. இதையே மற்றவர்களுக்கும் சொல் லிக் கொடுத்து அவர்கள் வாழ் க்கை யிலும் மாற்றம் கொண்டு வரலாம் என்ற எண்ணம் 2005-ல் வந்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பயன்ப டுத்திக் கொண்டி ருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது ஏழுவிதமான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கின்றோம். ஆயிரக்கணக்கானோர் பயி ற்சி பெற்று பலன் அடை கின்றார்கள். இதற் காகத் தான் நான் பிறந்தேன் என்று எண் ணுகி றேன். மற்ற துறைகளில் நான் ஈடுபட்ட போது இல்லாத திருப்தி, இந்தத் துறையில் தான் ஏற்பட்டுள்ளது. எனக்குள் மாறுபாடான எண்ணம் ஏற்படவில்லை. ஆன்மா, ஆன்மிகம் இரண்டிற்கும் ஆண், பெண் பேதமில்லை, என்னால் வீட்டையும், குடும்பத் தையும் பார்த்துக் கொண்டு, இதையும் பார்த்துக் கொள்வது என்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

* வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயம் என்ன? எனது வகுப்புகள், உரைகள், எழுத்துக்கள் மூலம் கூற விரும்பும் விடயம் இது தான், “”ஒவ்வொரு எண்ணமும் ஒரு சக்தி பெறு கிறது. அதனால் எண்ணங்களை செழுமைப் படுத்த வேண்டும். தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்பது தான்.

copy..

Advertisements

2 thoughts on “ஆல்பா தியானம்

  1. when i read this i understand more about ALPHA .I feel the changes by doing
    alpha .As a facebook friend I am following you. Thanks for all your postings.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s