பிரானிக் எனும் சிகிச்சை முறை

பிரானிக் எனும் சிகிச்சை முறை

images1

உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ரிஷிகள் பிராண சக்தியை நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தினார்கள். பண்டைய முறையின் அடிப்படை, இன்றைய மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றி வடிவமைக்கப்பட்டது பிரானிக் ஹீலிங் (Pranic Healing) என்ற இந்தப் புதிய சிகிச்சை முறை.

டாக்டர்கள் கைவிட்ட நோயாளிகளையும் பிரானிக் ஹீலிங் முறையில் எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

பக்கவாத நோயாளிகள் வாரம் இரண்டு நபர் பிரானிக் ஹீலிங் சிகிச்சை எடுத்துக் கொண்டால்கூட விரைந்து குணமாகிவிடுவார்களாம்.

நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்கிரட்டீஸ் கூட நம்முடைய உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி படைத்தது என்று கூறியுள்ளார். உடலில் நோயால் பாதிப்படைந்துள்ள பகுதிக்குப் பிராண சக்தியை அளித்தால் போதும். விரைந்து குணமாகிவிடலாம்.

எப்படி சிகிச்சை அளிக்கின்றனர்?

நம் உடலைச் சுற்றி ஐந்து அங்குலம் வரை ஆரா (Aura) எனப்படும் ஒளி வட்டம் காணப்படுகிறது. இது ஆரோக்கியக் கவசமாக இருந்து நம் உடலில் நோய் தோன்றுவதற்கு மூன்று மாதம் முன்பே இந்த ஒளி வட்டக்கவசம் பாதிக்கப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானி கிரிலான் என்பவர் இந்த ஒளி வட்டத்தைப் படமாகக்கூட எடுத்துக்காட்டியுள்ளார்.

எனவே, நோயாளியைத் தொடாமலேயே பிரானிக் ஹீலர் இந்த ஒளி வட்டத்திற்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவார்.

மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், புற்று நோய், மனக்கோளாறு, மூச்சுக் கோளாறுகள் முதலியவற்றைச் சிரமமின்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். நாட்பட்ட நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொள்பவர் பிரானிக் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஐந்து மடங்கு வேகத்தில் விரைந்து குணமாவார். பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை இது.

தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளப் பத்து நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து வெளிவரும் மூச்சு வழியாக தன் நோயை வெளியே தள்ளுவது போல் மனக்கண்ணால் பார்த்தால் போதும். எந்த அளவு நல்லெண்ணத்துடன் நோய்ப்பட்ட சக்தியை விடா முயற்சியுடன் கழிவுகளாக வெளியே தள்ளுவதுபோல காட்சியாகப் பார்கிறோமோ அந்த அளவுக்கு விரைந்து குணமாகிவிடுவோம்.

நம் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் உடலைத் தொடாமலேயே நம் உள்ளங்கைகளை நோயுள்ள பகுதியில் காட்ட வேண்டும். நம் கையிலிருந்து செல்லும் சக்தி அவர்கள் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அவர்கள் மூச்சை வெளியே தள்ளுவது போலக் கற்பனை செய்தால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.

இதில் பயிற்சி பெறப்பெற நோயாளியைப் பார்த்தவுடனேயே உடலைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தில் எங்கே கோளாறு என்பதை நோயாளியின் உடலைத் தொடாமலேயே வெறும் கைகளால் ஸ்கேன் செய்து எளிதில் சிகிச்சை அளித்துவிடலாம்.

தியானம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் தங்கள் உடலில் உள்ள கெடுதலான பொருட்கள் உருண்டு திரண்டு சாம்பல் நிறத்தில் தங்கள் மூச்சு வழியாக வெளியேறுவதாக கற்பனை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலைச் சுற்றியுள்ள ஆரோக்கிய கவசம் பாதுகாப்பாக இருக்கும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s