ஆருடப் பலன்கள் தொகுப்பு

ஆருடப் பலன்கள் தொகுப்பு

 dee

அகத்தியரின் ஆருடப்பலன்களை தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அகத்தியரின் பாய்ச்சிகை ஆருடப்பலன்கள் 64 பிரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் வண்ணமிட்ட பலன்கள் சுபப் பலன்களாகவும் மற்றவை சுபப்பலனற்றவைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விளக்கங்கள், தொடர்ச்சியாக எழுதப் பெறும். வெற்றியும் தோல்வியும் முன்வினைப் பயன்களாகும். ஆருடப்பலன்கள் பற்றிய முந்தைய விளக்கத்தைப் படித்து பின்னர் பலன்களைப் பார்க்கவும்.

முதல்

முறை

இரண்டாம்
முறை
மூன்றாம்
முறை
பலன்கள்
1
1
1
1
1
2
1
1
3
அதிர்ஷடம், கடவுளின் கருணை
1
1
6
விரயம், சட்ட சிக்கல்
1
2
1
கடன், உறவினர்கள் தொல்லை
1
2
2
வருமானம், உதவி தேடி வரும்
1
2
3
இழப்பு, ஆள் – பொருள் – சுகம்
1
2
6
சுகம், கவலைகள் நீங்கும்
1
3
1
யோகம், வியாபாரம் – உடல்நலம்.
1
3
2
அபகீர்த்தி, பெண் – நோய் – கவலை
1
3
3
மங்களம் – திருமணம் – நோய் நீங்கும்.
1
3
6
நஷ்டம் – பொருள் – உறவு – உடல்
1
6
1
கலக்கம் – கடன் – இழப்பு
1
6
2
சுப காரியம் – வியாபாரம் – குடும்பம்
1
6
3
கலகம் – நோய் – பொருள் சேதம்
1
6
6
பாக்கியம் – அரசு வெற்றி – குழந்தை
2
1
1
நஷ்டம் – பொருள் – விபத்து – தாமதம்
2
1
2
வரவு – திடீர் தன வரவு – உடல் நலம்
2
1
3
அவமதிப்பு – அலைச்சல் – புத்தி சலனம்
2
1
6
புது வரவு – குழந்தை – சட்ட இலாபம்
2
2
1
சுக வாழ்வு – நல் வரவு – இலாபம்
2
2
2
கர்ம விதி – இழப்பு – நஷ்டம்
2
2
3
காரிய சித்தி – நல்ல எண்ணம் – வெற்றி
2
2
6
வழக்கு – நம்பிக்கைத் துரோகம் – நோய்
2
3
1
பிரிவு – விரயம் – உறவுத் தொல்லை
2
3
2
வெற்றி – குழந்தைகள் – திருமணம்
2
3
3
அவப் பெயர் – சூழ்ச்சி – கஷ்டம்
2
3
6
தீர்வு – வெற்றி – தடைகள் நீங்கும்
2
6
1
குதூகலம் – குடும்பம் – மகிழ்ச்சி
2
6
2
வருத்தம் – முடக்கம் – கவலை
2
6
3
வாகன சுகம் – சொத்து சேரும்
2
6
6
சண்டை – சச்சரவு – தொல்லை
3
1
1
நீண்ட ஆயுள் – கடவுள் அருள் – வெற்றி
3
1
2
வெறுப்பு – தேக்கம் – தாமதம் – நோய்
3
1
3
நன்மை – எதிரி அழிவர் – ஜெயம்
3
1
6
நண்பர்களால் தொல்லை – கோபம்
3
2
1
விரயம் – நோய் – குழப்பம்
3
2
2
சுகம் – தெற்கே இலாபம் – வெற்றி
3
2
3
இழப்பு – உயிர் பயம் – பொருள்
3
2
6
செழிப்பு – விவசாயம் – பொருளாதாரம்
3
3
1
புகழ். – பொன் – பொருள் – வெற்றி
3
3
2
கவலை – விரயம் – துரோகம்
3
3
3
மதிப்பு மரியாதை- முன்னோர் சொத்து
3
3
6
இழப்பு – பொருள் – உயிர் – மதிப்பு
3
6
1
ஆபத்து – எதிரிகள் – மனத் துயர்
3
6
2
ஜெயம் – தர்மம் – நன்மை
3
6
3
புத்தி மந்தம் – பொருள் இழப்பு
3
6
6
மகிழ்ச்சி – குழந்தைகள் – திருமணம்
6
1
1
நிதானமின்மை – இழப்பு – சோகம்
6
1
2
இலாபம் – எண்ணங்கள் ஜெயம்
6
1
3
பொல்லாப்பு – பயம் – விரயம்
6
1
6
விளைச்சல் – நண்பர்கள் – சொத்து
6
2
1
போனது கிடைக்கும் – சொத்து – சுகம்
6
2
2
விரயம் – தீய எண்ணங்கள் – செயலிழப்பு
6
2
3
நன்மை – செல்வம் – உடல் நலம்
6
2
6
பதட்டம் – கலக்கம் – களங்கம்
6
3
1
வருமை – நோய் – பகைவர்கள்
6
3
2
நல்ல காலம் – அபிவிருத்தி – குடும்பம்
6
3
3
வலுச் சண்டை – நோய் – எதிரிகள்
6
3
6
வனப்பு – பொருள் – களிப்பு – ஜெயம்
6
6
1
விளைச்சல் – செழிப்பு – சேமிப்பு
6
6
2
துரோகம் – தொழிழிப்பு – நோய்
6
6
3
ஒற்றுமை – பெருமை – செல்வம் – தொழில்
6
6
6
கீழ் நிலை – பகை – அச்சம் – நட்டம்

ஒவ்வொரு பலன்களையும் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். நன்மையை எப்படி மேலும் நன்மையாக மாற்றுவது, தீமையை எப்படி குறைத்து நன்மையாக மாற்றுவது என்பது பற்றி இனி வரும் தொடர்களில் காணலாம்.

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

அகத்தியரின் பாய்ச்சிகையை மூன்று முறை உருட்டும் போதும் ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுந்தால்

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்

சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்

பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்

கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.

கடந்த காலத்தில் நாம் செய்த வினைகளுக்குத் தக்கவாறு நிகழ்காலத்தில் விளைவுகள் நடக்கின்றன. அதை குறிப்பாக உணர்த்துவது தான் ஆருடம்.

பொறுமை வேண்டும். நிகழ்காலம் சாதகமான சூழ்நிலையில் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் செய்த வினைப்பயனில் தொல்லைகளை மட்டும் அனுபவிக்கக் கூடிய காலமாக இது அமையலாம். குடும்பத்தில் அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவுக்கட்டுப்பாடு, உடல்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக் கூடிய நிலை உண்டு. நினைத்த செயலில் வெற்றி பெற செயல்முறைகளை நன்கு ஆராய வேண்டும். ஒருவருக்கு இருவரிடம் நன்கு ஆலோசனை செய்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, நிதானத்துடன் செயல்பட வேண்டும்.. வாங்கிய கடனை அடைக்க உகந்த காலமாக அமையும். கல்வியில் தேக்க நிலை ஏற்படலாம்.

நற்பெயருக்கு களங்கம் வரும் என்பதால் எதிர்பாலினரிடம் (ஆணுக்கு பெண்ணும், பெண்ணிற்கு ஆணும்) கவனமாக நடக்க வேண்டும். அமைதியுடன் சிந்தித்தால் வரும் தீவிரத் துன்பங்களைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். சாதாரண நோய்களுக்சுட சிரத்தையெடுத்து வைத்தியம் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.

பொதுப்பலன் – நிதானம்

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-மூன்று

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-மூன்று

அகத்தியரின் பாய்ச்சிகையை மூன்று முறை உருட்டும் போதும் ஒன்றும் ஒன்றும் மூன்றும் விழுந்தால்

தானாகும் ஒன்றும் வீழ்ந்து தனித்தொன்றும் மூன்றும் வீழ்ந்தால்

ஆணாக பிறக்கும் பிள்ளை அதனாலேயே யோகமுண்டாம்

வீணான கவலையெல்லாம் விலகிடும் கொண்டமும் நோயம்

தோணாது கஷ்டம் நீங்கும் துணையது முருகனுண்டாம்.

ஒன்று ஒன்று மூன்றிற்குரிய பலன்கள் மிகவும் மகிழ்ச்சிகரமானது. வீணான கவலைகள் மறையும் நேரம் கூடி வந்துள்ளது. இறைநம்பிக்கை பெருகும். நோய்கள் குணமடையும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார்.

குழந்தைச் செல்வங்கள் தான் கிடைக்கும் செல்வங்களிலே மிகச் சிறந்த செல்வம். காரணம் மற்ற செல்வங்கள் எல்லாம் வெளியிலிருந்து வருவது. குழந்தைச் செல்வம் மட்டுமே நாம் உருவாக்குவது. அப்படிப்பட்ட செல்வம் ஆளுமைத் தன்மையோடு பிறக்குமானால் மிகுந்த பாக்கியவான்களாவோம். இதைத் தான் புத்திர பாக்கியம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. கவலைகள் இரண்டு வகை உண்டு. நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பது மற்றொன்று கடந்த காலத்தில் நடந்தது (அ) எதிர்காலத்தில் நடக்க இருப்பது. நிகழ்காலக் கவலைகள் மட்டுமே கவலைகள். மற்றவைகள் நாமாக உருவாக்கிக் கொண்டவை. அவற்றை மனத்திலிருந்து நீக்கிவிட்டால் எல்லா நாளும் நல்ல நாளாக அமைந்து விடும். புதுத் தொழில்கள் புது செயல்கள் துவங்க உகந்த நேரம்.

மகிழ்ச்சியாக இருக்கும் தருணமிது. எல்லாம் நன்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு முருகப் பெருமானை வணங்கி வந்தால் நல்லது விரைவில் நடைபெறும்.

பொதுப் பலன் – விருத்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s