Archive | April 2015

வர்மத்தின் மர்மங்கள்

IMG_114753740599121

மூலாதார சக்தியானது உடலின் செயல்பாடுகளை செம்மையாக செயல் படுத்தவும், உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒருங் கிணைத்து செயல்பட வைக்கவும் முக்கிய காரணமாகிறது.

கடந்த இதழில் கூறியபடி பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார சக்தியை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்கு சிறந்த வழி ஆழ்நிலை தியானமேயாகும்.

இந்த ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போதுதான் பிராண வாயு மூலாதாரத்தையடைந்து மூலாதார சக்தியைத் தூண்டி உடலெங்கும் செயல்பட வைக்கிறது.

ஆழ்நிலை தியானம் செய்வது எப்படி?

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறை கூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம். பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது நல்லது.

இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சரசுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால் உடலானது பிரபஞ்ச சக்தியோடு இணைந்துகொள்ளும்.

பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும்.

ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்றும் அழைக்கின்றனர். இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள். இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவார்கள். இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் தவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப் படுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது.

ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப் படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள். இதிலிருந்து மாறுபட்டவர்கள் சித்தர்கள் அல்ல. உலகை ஏமாற்றும் பித்தர்கள். இவர்கள் என்றாவது ஒரு நாள் பொதுமக்கள் மத்தியில் பகல் வேஷம் கலைந்து அவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாவார்கள். இவர்கள் தங்களையும் ஏமாற்றி நம்பி வந்தவர்களையும் ஏமாற்றும் வித்தகர்கள்.

ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி.

பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும். இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும்.

இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி  எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும்,

ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள். உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள்.

இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் கிரகணங்களின் செயல் பாடுகளால் நன்மைகள் பல பெறுவார்கள். அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம். இதை விட்டு விட்டு குரு தேடி அலைந்து, ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி ஏமாறத் தேவையில்லை.

சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும். இந்நிலையை அடைந்தவர்களே ஆன்மீகவாதிகள்.

http://www.nakkheeran.in/

Advertisements

பிராண சக்தியின் தன்மைகள்

aa

உலகில் செயல்படும் சக்திகள் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பதுவே பிராணன்.

  • மனித உடலில் பிராணனின் ஸ்தூல வடிவமே சுவாசம்.
  • இது மனித உடலில் தலையில் உள்ள பிரம்மாந்திரம் என்னும் உச்சிக்குழியினூடாகவும், யோக சித்தி பெற்றவர்களுக்கு ஆறு ஆதாரங்கள் ஊடாகவும் சூஷ்ம உடலில் ஏற்கப்பட்டு, பின் ஸ்தூல உடலில் உள்ள 72000 நாடிகளூடாக உடலுறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. 
  • பிராணன் என்பது ஒருவித மின் காந்த சக்தி, அது செல்லும் இடங்களில் உள்ள தகவல்களை எடுத்து செல்லும், அதாவது நல்லது, கெட்டது என்பதில்லை. 
  • மனதின் தன்மைக்கு ஏற்றவகையில் பிராணனின் தன்மையும் மாறும். ஒருவருடைய பிராணசக்தி அவரது எண்ணம், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுடன் கலந்து அவற்றை வலுப்படுத்தும். அதேபோல் பிராணசக்தியுடன் கலந்து அன்பு, எண்ணங்கள், நம்ம்பிக்கைகள், உணர்ச்சிகளையும் செலுத்தலாம். 
  • எம்மை சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் பிராண சக்தியினை நாம் உறிஞ்சுகிறோம், அதேபோல் இழக்கிறோம். இது அந்த இரு பொருட்களுக்குமிடையிலான சக்தி அளவு விகிதத்தினைப் பொறுத்தது. கூடியதிலிருந்து குறைந்ததிற்கு சக்தி பாயும் என்பது இயற்கை விதி.
  • ஒருவன் தனது தியான சக்தி, பிராணாயாமம், ஆசனங்கள், வர்ம புள்ளிகளை அழுத்துதல் போன்றவற்றால் பிராணசக்தியினை சீர் செய்து கொள்ளலாம். 
  • இது பஞ்ச பூதங்களாலும் இடகலை, பிங்கலை நாடிகளால் சமப்படுத்தப்படுவதுடன், யோக நிலையில் சுழுமுனை வழியாக பாயும். 
  • இந்திய யோகப்பயிற்சி, கடவுள் வழிபாட்டில் உள்ள பூஜைமுறைகள், ஜெபம், தெய்வ சாதனைகள், பிராணபிரதிஷ்டை சடங்குகள், கோயில் வழிபாட்டு முறைகள் எல்லாம் இந்த பிராண சக்தியினை சேமித்து தம்மில் பெறுவதற்கான ஏற்பாடுகள் தான்.  இவை எதுவும் மூட நம்பிக்கைகள் அல்ல. 
  • இந்த பிராண இயக்கத்தின் தடையே நோயாகும். இந்த தடைகள் மனம்,உணர்ச்சிகள், வெளிப்புற பௌதீக பாதிப்புகள், எண்ணங்கள், சூழல் என்பவற்றால் வரலாம். 

 பிராண சக்தியின் தன்மைகள் – 02 ஸ்தூல பிராணனாகிய சுவாசத்தினால் சூஷ்ம பிராணனை கட்டுப்படுத்தும் செயல்முறையே பிராணாயாமம் ஆகும்.

  • சூஷ்ம பிராணனுடன் மனம் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. 
  • சூட்சும பிராணனின் இருப்பிடம் இருதயம் ஆகும்.
  • இந்த பிராணன் பின்பு ஸ்தூல சூஷ்ம உடல்களின் தொழில்களுக்கு ஏற்ப பஞ்ச பிராணன்களாகவும் உப பிராணன்களாகவும் என தச வாயுக்களாக மாறுகிறது. 
  • அவற்றின் தொழிற்பாடும், சூட்சும உடல் இருப்பிடம், ஸ்தூல உடலில் இருப்பிடம் நிறம் ஆகியன கீழ்வரும் அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.
  • உப பிராணங்கள் நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகும்.

மன சக்தியினதும் பிராணசக்தியினதும் தொடர்பினை அறிந்த சித்தர்கள் யோகிகள் அதனை தமது சித்திகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். 

மனதின் மேற்போர்வையே பிராணன், பிராணனை கட்டுப்படுத்துவதன் மூலம் மனதைக்கட்டுப்படுத்தலாம் அதேபோல் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிராணனையும் கட்டுப்படுத்தலாம். 

ஒருவர் கவர்ச்சிகரமாக இருப்பதற்கு, சிறந்து விளங்குவதற்கு பிராணசக்தியே ஆதாரம்.

மனதின் அதீத ஆற்றல்கள் ஆன்ம ஞானத்தினை அடைந்த மனது அரிய தெய்வ சக்தியின் இருப்பிடம், உணர்வு மனத்தின் ஆழத்தில் மறைமனம் எனப்படும் பகுதியில் அரிய பல சூஷ்ம தெய்வசக்திகள் உறைந்து காணப்படுகிறது. இந்த சூஷ்மசக்திகளின் இருப்பிடமாக உடலின் நாளமில்லக்கோளங்களினை அண்டி சூஷ்ம உடலில் சக்திக்கேந்திரங்கள் பல காணப்படுகின்றன. தூர திருஷ்டி, தூரசிரவணம், மற்றவர் மனமறிதல் என்பன இவ்வாற்றல்களிலில் சில. 

இந்த விடயங்களை விளங்கிக்கொள்வதற்கு அணுக்களின் ஆற்றல் பற்றி அறிந்துகொள்வது அவசியம். சிறிய கரித்துண்டு (1 கிராம்)பொதுப்பௌதீக விதிககொண்டு பார்த்தால் அதில் அடங்கியுள்ள சக்தி ஒரு லீட்டர் தண்ணீரினை கொதிக்கவைப்பதற்க்கு பாவிக்கமுடியாது. ஆனால் அதே கரித்துண்டினை அணுப்பௌதீகம் கொண்டுபார்த்தால் அதிலடங்கியுள்ள சக்தியின அளவு ஒரு நாட்டினை அழிக்கும் வல்லமை கொண்டது என்பதினை அனைவரும் அறிவர்.  இதுபோல் மனம் பற்றிய உண்மைகளும் உலகிற்கு சாதாரண பௌதிக விதிகள் ‍ விஞ்ஞானத்தினால் அறியப்பட்ட மனவியலும், அணுப்பௌதிகம் போன்றவிதிகளால் ஆக்கப்பட்ட தாந்திரீகம், யோகம் என்பனவும் காணப்படுகின்றன. அந்த விதிகளினை அறிவதன் மூலம் மனதின் அதீத ஆற்றல்களை அறிந்துகொள்ளலாம்.

http://krishnaeswaran.blogspot.in/2014/10/01.html

அற்புதமான பிரபஞ்ச சக்தி

பிரபஞ்சம் என்றால் என்ன? இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.கற்பனைக்கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம். எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்? அது தான் பிரபஞ்ச
சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.

பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம். ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்? மிக மிகக்  குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப்  பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?

தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள்  வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப்  பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?

நீரிழிவு,கேன்சர்,இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும் எளிய முறை.

a
வரும் முன் காப்பது தான் சிறந்தது , தற்போது மனிதனுக்கு அதிகமாக இருக்கும்நோய்களான நீரிழிவு,கேனசர் இரத்த அழுத்தம், இதயம் பிரச்சினை போன்ற அனைத்துநோய்களும் வராமல் தடுக்க சித்தர்கள் வழியில் ஒரு வழி உள்ளது .எல்லா மதங்களிலும் விரதம் என்று ஒன்று வைத்தி ருந்தனர் இதன் காரணம் என்னவென்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் நமக்கு புரியும்.மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே இந்த விரதங்கள் நமக்கு முன்னோர்கள்கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.எல்லா மதங்களிலேயும் விரதம் என்றுசொன்னதும் நமக்கு உடனே தோன்றுவது உண்ணா நோன்பு. முதன் முதலில் உண்ணா நோன்பு எப்படி அனுசரித்தனர் என்பதை பற்றி பார்ப்போம்.உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பலசூட்சமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம்7 நாட் க ள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும்இருக்கலாம் முதல் நாள் தோலு ள்ள பழங்களை மட்டும் தான் உண்ணவேண்டும் ( வாழைப்பழம், மாம்பழம்,சப்போட்டா பழம்).

இரண்டாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும்( ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும்தான் அருந்த வேண்டும் நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கவேண்டும். ஐந்தாம் நாள் தண்ணீரை மட்டும் தான் அருந்த வேண் டும்.ஆறாம் நாள் சாறு உள்ள பழங்களை உண்ணவேண்டும்.ஏழாம் நாள்தோலுள்ள பழங்கள். இது தான் உண்ணா நோன்பின் முறை நாளடைவில்இது விருப்பதுக்கு தகுந்தபடி மாறிவிட்டது.இதைப் பற்றி நமக்கு பலசந்தேகம் வரலாம் ஒரு வேளை பசி என்றாலே நம்மால் தாங்கமுடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப்போகிறோம்என்று தோன்றினா லும் கண்டிப்பாக நம்மால் இருக்க முடியும்.இதில் மறைந்திருக்கும் உண்மையை பற்றி பார்ப்போம் முதல் நாள்நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடலை சுத்தப்படுத்தும்கழிவுகளை நீக்கும். இரண்டாம் நாள் நாம் சாப்பிடும் சாறுள்ள பழங்கள்உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மூன்றாம் நாள் நாம்அருந்தும் தண்ணீர் நம் உடலில் எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுஇருக்கிறதோ அதை குணப்படுத்தும். (System Recovery).நான்காம் நாள்நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை வயிறு பசிப்பதில்லை. ஐந்தாம் நாள்தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள் , ஏழாம் நாள் தோலுள்ளபழங்கள். சிறு பூனையை எடுத்துக்கொள்வேம் தனக்கு நோய் வராமல்இருக்க சில நாட்கள் அது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது.நம் உடலும் பெரும் நோய் தாக்காமல் தடுக்க இதைப்போன்றமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம்.நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள்இயற்கை மருத்துவரிடம் ஆலோனை பெற்ற பின் உண்ணா நோன்புஇருப்பது நல்லது. விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும்வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும்

copy:http://krishnaeswaran.blogspot.in/2014/10/blog-post_17.html

வர்மம் & மர்மம்

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%  

வர்மம் & மர்மம்எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள்.
வாசி தட்டும் இடமெல்லாம் -வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே -வர்மம்

அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

மனித உடலில் 108 வர்மப் புள்ளிகளாக அதாவது உயிர்நிலை சுவாசமாக ஒடுங்கியுள்ளது. இந்த வர்மப் புள்ளிகளின் ஏதாவது ஒன்று பாதிக்கப் படுமானால் உடலில் நோய் உண்டாகும். இவற்றை சீர் செய்வதன் மூலம் தான் நோயைத் தீர்க்க முடியும். உதாரணமாக உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது நோயின் தாக்குதல் இருந்தாலோ அது வர்மப் புள்ளிகளை சார்ந்துதான் இருக்கும்.

தலைப்பகுதி வர்மங்கள் (37)
திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்

http://thamil.co.uk/?p=7306

வர்மம் – ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர் நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்
வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வர்மக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை).”தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே” என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
“அகஸ்தியர் வர்ம திறவுகோல்”
“அகஸ்தியர் வர்ம கண்டி”
“அகஸ்தியர் ஊசி முறை வர்மம்”
“அகஸ்தியர் வசி வர்மம்”
“அகஸ்தியர் வர்ம கண்ணாடி”
“அகஸ்தியர் வர்ம வரிசை”
“அகஸ்தியர் மெய் தீண்டா கலை”
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

” ஜடாவர்மன் பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “The fighting techniques to train the body from India ” என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபட மாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என “அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே” என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்: வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார். அவை-

தொடு வர்மம்- இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

தட்டு வர்மம்- இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்- பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

படு வர்மம் – நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார்.

எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்…

வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

http://thamil.co.uk/?p=7285

ஆதி முதல் அருள்கடவுள்-புத்தகம்

ஆன்மிக தகவல் அடங்கிய பொக்கிஷம் ..

samy-kappu

ஆன்மிக தகவல் அடங்கிய பொக்கிஷம் பின்வரும் PDF  LINK  DOWNLOAD செய்து படிக்கலாம்

http://www.mediafire.com/view/2xcpljbr099ty2w/samy_book_1.pdf  –முதல் புத்தகம் 

https://www.mediafire.com/?2pw5hxx302oxq6u                     –இரண்டாம்  புத்தகம் 

மேலும் பழைய ஆன்மீக தகவல் அழிவதை தடுப்பதற்க்காக மற்றும் மக்களிடம் பழைய தகவல் சென்று சேர்வதற்காகவும் தகவல்களை இலவச புத்தகமாக பதித்து வழங்கி வருகிறார்,இதுவரை மூன்று தொகுப்பு வெளிவந்துள்ளது.