தந்திர யோகம்

தந்திர யோகம் என்பது ஒரு மிகப் பெரிய கடல்! அதை முழுமையாகக் கற்றுக்கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. தந்திர யோகத்தின் அடிப்படையான சில உண்மைகளை மட்டுமே இந்தத் தொடரில் எழுதிவருகிறேன்.

முதல் பாகத்தில் தந்திர யோகம் என்றால் என்ன? அதன் பிரிவுகள், வழிமுறைகள், தொன்மையான தந்திர யோக  நூல்கள் ஆகியன குறித்த விவரங்களைக் கண்டோம்.

இரண்டாம் பாகத்தில் நமது பருவுடலைச் சுற்றி நிற்கும் சக்தி உடல்கள் குறித்த செய்திகளைக் கண்டோம். சக்தி உடல்களை வலுப்படுத்தும் சில எளிய முத்திரைகள், பயிற்சிகள் ஆகியவற்றைக் குறித்தும் எழுதினேன்.

அடுத்ததாக, இந்த மூன்றாம் பாகத்தில் நமது உடலிலுள்ள “சக்கரங்கள்’ குறித்து தந்திர யோகம் கூறியுள்ள சில கருத்துகளைக் காணவிருக்கிறோம்.

hills

“சக்கரங்கள்’ என்றால் என்ன?

நமது உடல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசம், இதயத் துடிப்பு, செரிமானம், இயக்க நீர்களின் சுரப்பு, புதிய திசுக்கள் உருவாகுதல், கழிவுப் பொருட்களைப் பிரித்து வெளியேற்றுதல் போன்ற பல செயல்பாடுகள் நாம் தூங்கும்போதுகூட தொடர்ந்து நடைபெறுகின்றன நமது உடலினுள் ஒரு நிமிடத்தில் 1,62,000 வேதியியல் மாற்றங்கள் நடைபெறுவதாக நவீன விஞ்ஞானம் கணக்கிட்டுள்ளது.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், வேதியியல் மாற்றமாக இருந்தாலும், அது நடைபெற சக்தி அவசியம். உடலின் உள்ளேயிருந்து அதை இயக்கும் சக்தியையே “உயிர் சக்தி’ என்கிறோம்.

இந்த உயிர் சக்தியை தந்திர யோகம் “பிராணா’ என்று அழைக்கிறது. பிராணன் உடலில் இருக்கும்வரைதான் இயக்கங்கள் நடைபெறும். பிராணன் உடலைவிட்டுப் பிரிந்துபோனால் மரணம் நிகழுகிறது.

பிராணனை (உயிர் சக்தியை) உருவாக்கும் சக்தி மையங்களே நமது சக்கரங்களாகும். மின்சாரம் எனும் சக்தி மின் நிலையங்களில் உருவாக்கப்படுவது போன்று, நமது உடலுக்குத் தேவையான, உடலை இயக்கும் உயிர்சக்தியானது

நமது சக்கரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

சக்கரங்களும் பிராணனும்

சக்கரங்கள் இருவழிகளில் பிராணனை உருவாக்குகின்றன.

1. உணவு, காற்று ஆகியவற்றிலிருந்து…

நாம் உண்ணும் உணவு உடலில் செரிமானமாகி, பல வேதியியல் மாற்றங் களுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக குளுகோசாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது.

குளுகோஸ் உருவாகவும், பின்னர் அது செல்களின் உள்ளே சக்தியாக மாற்றப்படவும் ஆக்சிஜன் என்ற பிராணவாயு தேவைப்படுகிறது. இதை நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.

ஆக, நாம் உண்ணும் உணவிலிருந்தும், சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராண வாயுவிலிருந்தும் உடலுக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகிறது. இந்த உண்மையை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்தது.

ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது தந்திர யோகிகளுக்கு இது தெரிந்திருந்தது. இந்த வகையில் நடைபெறும் உயிர்சக்தி உருவாக்கம் சரிவர நடைபெற, நாம் உண்ணும் உணவு சத்தானதாக இருக்கவேண்டும். சுவாசம் சீராக நடைபெற வேண்டும்.

இவற்றை சரிசெய்யவே நமது தந்திர யோகிகள் பல உணவு முறைகளை, கட்டுப்பாடுகளை வகுத்தனர். எந்த வேளையில் எதை உண்பது என்பதை வரையறுத்து வைத்துள்ளனர்.

சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிராண வாயுவின் அளவை அதிகரிக்கவே பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சிகளைக் கண்டுபிடித்தனர்.

இந்த முதல்வகை சக்தி உருவாக்கத்தில் நுரையீரல்கள், வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற பல உறுப்புகள் இணைந்து செயல்படுகின்றன. இதுவரையில் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.

ஆனால், இந்த சக்தியை ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான உயிர்சக்தியாக மாற்றும் பணி சக்கரங்களில் நடைபெறுகிறது.

இது, இதுவரையில் நவீன மருத்துவத்தால் கண்டறியப்படாத ஒன்றாகும். எனவேதான் நவீன மருத்துவத்தால் நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து முழுமையான குணத்தைத் தரமுடிவதில்லை!

2. பிரபஞ்ச சக்தியிலிருந்து…

இந்த பிரபஞ்சம் முழுவதுமே சக்தியால் நிரம்பியுள்ளது. “எங்கெங்கு காணினும் சக்தியின் வடிவம்’ என்பது பாரதியின் வரி. இந்த எல்லையற்ற சக்தியை விஞ்ஞானிகள் காஸ்மிக்எனர்ஜி (Cosmic Energy)  என்கிறார்கள்.

நாம் சுவாசிக்கும்போது சக்கரங்களும் சுவாசிக்கின்றன. ஒவ்வொரு உள்மூச்சின் போதும் சக்கரங்கள் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுத்துக்கொள்கின்றன.

இந்த சக்தியை நமது உடல் உறுப்புகளால் அப்படியே உபயோகிக்க முடியாது.

அதை உருமாற்றம் செய்து (அதன் அதிர்வு நிலையை மாற்றி) உறுப்புகளுக்குத் தேவையான சக்திகளாக மாற்றும் பணி சக்கரங்களில் நடைபெறுகிறது. இதை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்கலாம்.

ஒரு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அப்படியே நமது வீட்டில் உபயோகிக்க முடியாது. மின்னழுத்தம் (யர்ப்ற்ஹஞ்ங்) மிகமிக அதிகமாக இருக்கும்.

✶ கனரக இயந்திரங்களை இயக்க மிகு மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் தேவை.

✶ சிறு மின்சாதனங்கள் இயங்க குறை மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் அவசியம்.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான மிகு மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தை வீட்டில் உபயோகித்தால் நமது டிவி, ஃபிரிட்ஜ், மின்விசிறி போன்றவை எரிந்து போகும்.

வீட்டுக்குத் தேவையான அழுத்தத்தில் மின்சாரத்தை  உருமாற்றவே “டிரான்ஸ்ஃபார்மர்கள்’ உபயோகப்படுத்தப்படுகின்றன. மிகு அழுத்தம் கொண்ட மின்சாரத்தை இந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் (உருமாற்றிகள்) குறை அழுத்த மின்சாரமாக மாற்றுகின்றன.

நமது சக்கரங்களும் இந்த டிரான்ஸ்ஃபார் மர்களைப் போன்று செயல்பட்டு, பிரபஞ்ச சக்தியை உடல் உறுப்புகளுக்குத் தேவையான சக்திகளாக மாற்றுகின்றன.

சக்கரங்களின் அடிப்படை இயல்புகள்

வாகனங்களில் பொருத்தப்பட்டிருப்பனவற்றையும் சக்கரங்கள் என்கிறோம். மகாவிஷ்ணுவின் கையில் இருப்பதும் சக்கரம்தான். (சுதர்சன சக்கரம்).

எந்த ஒரு சக்கரமாக இருந்தாலும் அதன் அடிப்படை இயல்புகளாக இரண்டைக் கூறலாம்.

✶ வட்ட வடிவம்

✶ சுழற்சி

ஒரு சக்கரம் என்பது வட்டவடிவமாக மட்டுமே இருக்கமுடியும். சதுர வடிவமாகவோ, முக்கோண வடிவமாகவோ ஒரு சக்கரம் இருக்கமுடியாது. ஆக, ஒரு பொருளை சக்கரம் என்று அழைக்க வேண்டுமானால் அது வட்டவடிவமாக இருக்க வேண்டும். நமது உடலிலுள்ள அனைத்து சக்கரங்களுமே வட்ட வடிவமானவை.

சக்கரங்களின் அடுத்த அடிப்படை இயல்பு- சுழற்சி. சக்கரங்களின் இயக்கமே அதன் சுழற்சிதான். நமது உடலிலுள்ள சக்கரங்களும் இடைவிடாமல் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

பணத்தைக்கூட “சக்கரம்’ என்று தமிழில் அழைப்பதுண்டு. பணம் ஓரிடத்தில் தங்காமல் கைமாறி கைமாறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான் பணத்தை “சக்கரம்’ என்று அழைத்தார்கள்!

நமது சக்கரங்கள் சுழலும் திசை இட வலமாக அல்லது வல இடமாக இருக்கும். இது சக்கரத்திற்கு சக்கரம் மாறுபடும்.

இட வலமாகச் சுற்றவேண்டிய ஒரு சக்கரம் வல இடமாக மாறிச் சுற்றினால் அது உடலிலும், உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை உருவாக்கும்.

வல இடமாகச் சுற்ற வேண்டிய சக்கரம் இட வலமாகச் சுற்றினாலும் இதே பிரச்சினைதான். இவ்வாறு சக்கரங்கள் தங்கள் இயல்புக்கு மாறான திசையில் சுற்றுவது பல நோய்கள் உருவாகவும் அடிப்படைக் காரணமாகிவிடுகிறது.

எந்த சக்கரம் எந்த திசையில் சுழலவேண்டும்-. இயல்புக்கு மாறான திசையில் சுற்றினால் என்ன நிகழும்   என்பன குறித்து பின்னர் விரிவாகக் காணலாம்.

சக்கரங்கள் எங்கே அமைந்துள்ளன?

சக்கரங்கள் நமது பருவுடலில் இல்லை! உடலைச் சுற்றியுள்ள சக்தி உடல்களில்தான் சக்கரங்கள் அமைந்துள்ளன.

ஒவவொரு சக்கரமும் சக்தி உடலிலிருந்து ஒரு சிறு தண்டு போன்ற பகுதி மூலமாக பருவுடலிலுள்ள தண்டுவடத்தினோடு இணைக்கப்பட்டுள்ளன.

சக்தி உடலில் உள்ள சக்கரங்களை பருவுடலில் உள்ள நரம்புக் குவியல்கள் (Nerve Plexuses) பிரதிபலிக்கின்றன.

1
டாக்டர் ஜாண் பி. நாயகம் M.B.B.S., M.D., Ph.D., D.Sc., F.C

Advertisements

One thought on “தந்திர யோகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s