பிராண சக்தியின் தன்மைகள்

aa

உலகில் செயல்படும் சக்திகள் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பதுவே பிராணன்.

 • மனித உடலில் பிராணனின் ஸ்தூல வடிவமே சுவாசம்.
 • இது மனித உடலில் தலையில் உள்ள பிரம்மாந்திரம் என்னும் உச்சிக்குழியினூடாகவும், யோக சித்தி பெற்றவர்களுக்கு ஆறு ஆதாரங்கள் ஊடாகவும் சூஷ்ம உடலில் ஏற்கப்பட்டு, பின் ஸ்தூல உடலில் உள்ள 72000 நாடிகளூடாக உடலுறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. 
 • பிராணன் என்பது ஒருவித மின் காந்த சக்தி, அது செல்லும் இடங்களில் உள்ள தகவல்களை எடுத்து செல்லும், அதாவது நல்லது, கெட்டது என்பதில்லை. 
 • மனதின் தன்மைக்கு ஏற்றவகையில் பிராணனின் தன்மையும் மாறும். ஒருவருடைய பிராணசக்தி அவரது எண்ணம், நம்பிக்கைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றுடன் கலந்து அவற்றை வலுப்படுத்தும். அதேபோல் பிராணசக்தியுடன் கலந்து அன்பு, எண்ணங்கள், நம்ம்பிக்கைகள், உணர்ச்சிகளையும் செலுத்தலாம். 
 • எம்மை சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் பிராண சக்தியினை நாம் உறிஞ்சுகிறோம், அதேபோல் இழக்கிறோம். இது அந்த இரு பொருட்களுக்குமிடையிலான சக்தி அளவு விகிதத்தினைப் பொறுத்தது. கூடியதிலிருந்து குறைந்ததிற்கு சக்தி பாயும் என்பது இயற்கை விதி.
 • ஒருவன் தனது தியான சக்தி, பிராணாயாமம், ஆசனங்கள், வர்ம புள்ளிகளை அழுத்துதல் போன்றவற்றால் பிராணசக்தியினை சீர் செய்து கொள்ளலாம். 
 • இது பஞ்ச பூதங்களாலும் இடகலை, பிங்கலை நாடிகளால் சமப்படுத்தப்படுவதுடன், யோக நிலையில் சுழுமுனை வழியாக பாயும். 
 • இந்திய யோகப்பயிற்சி, கடவுள் வழிபாட்டில் உள்ள பூஜைமுறைகள், ஜெபம், தெய்வ சாதனைகள், பிராணபிரதிஷ்டை சடங்குகள், கோயில் வழிபாட்டு முறைகள் எல்லாம் இந்த பிராண சக்தியினை சேமித்து தம்மில் பெறுவதற்கான ஏற்பாடுகள் தான்.  இவை எதுவும் மூட நம்பிக்கைகள் அல்ல. 
 • இந்த பிராண இயக்கத்தின் தடையே நோயாகும். இந்த தடைகள் மனம்,உணர்ச்சிகள், வெளிப்புற பௌதீக பாதிப்புகள், எண்ணங்கள், சூழல் என்பவற்றால் வரலாம். 

 பிராண சக்தியின் தன்மைகள் – 02 ஸ்தூல பிராணனாகிய சுவாசத்தினால் சூஷ்ம பிராணனை கட்டுப்படுத்தும் செயல்முறையே பிராணாயாமம் ஆகும்.

 • சூஷ்ம பிராணனுடன் மனம் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. 
 • சூட்சும பிராணனின் இருப்பிடம் இருதயம் ஆகும்.
 • இந்த பிராணன் பின்பு ஸ்தூல சூஷ்ம உடல்களின் தொழில்களுக்கு ஏற்ப பஞ்ச பிராணன்களாகவும் உப பிராணன்களாகவும் என தச வாயுக்களாக மாறுகிறது. 
 • அவற்றின் தொழிற்பாடும், சூட்சும உடல் இருப்பிடம், ஸ்தூல உடலில் இருப்பிடம் நிறம் ஆகியன கீழ்வரும் அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.
 • உப பிராணங்கள் நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகும்.

மன சக்தியினதும் பிராணசக்தியினதும் தொடர்பினை அறிந்த சித்தர்கள் யோகிகள் அதனை தமது சித்திகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். 

மனதின் மேற்போர்வையே பிராணன், பிராணனை கட்டுப்படுத்துவதன் மூலம் மனதைக்கட்டுப்படுத்தலாம் அதேபோல் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிராணனையும் கட்டுப்படுத்தலாம். 

ஒருவர் கவர்ச்சிகரமாக இருப்பதற்கு, சிறந்து விளங்குவதற்கு பிராணசக்தியே ஆதாரம்.

மனதின் அதீத ஆற்றல்கள் ஆன்ம ஞானத்தினை அடைந்த மனது அரிய தெய்வ சக்தியின் இருப்பிடம், உணர்வு மனத்தின் ஆழத்தில் மறைமனம் எனப்படும் பகுதியில் அரிய பல சூஷ்ம தெய்வசக்திகள் உறைந்து காணப்படுகிறது. இந்த சூஷ்மசக்திகளின் இருப்பிடமாக உடலின் நாளமில்லக்கோளங்களினை அண்டி சூஷ்ம உடலில் சக்திக்கேந்திரங்கள் பல காணப்படுகின்றன. தூர திருஷ்டி, தூரசிரவணம், மற்றவர் மனமறிதல் என்பன இவ்வாற்றல்களிலில் சில. 

இந்த விடயங்களை விளங்கிக்கொள்வதற்கு அணுக்களின் ஆற்றல் பற்றி அறிந்துகொள்வது அவசியம். சிறிய கரித்துண்டு (1 கிராம்)பொதுப்பௌதீக விதிககொண்டு பார்த்தால் அதில் அடங்கியுள்ள சக்தி ஒரு லீட்டர் தண்ணீரினை கொதிக்கவைப்பதற்க்கு பாவிக்கமுடியாது. ஆனால் அதே கரித்துண்டினை அணுப்பௌதீகம் கொண்டுபார்த்தால் அதிலடங்கியுள்ள சக்தியின அளவு ஒரு நாட்டினை அழிக்கும் வல்லமை கொண்டது என்பதினை அனைவரும் அறிவர்.  இதுபோல் மனம் பற்றிய உண்மைகளும் உலகிற்கு சாதாரண பௌதிக விதிகள் ‍ விஞ்ஞானத்தினால் அறியப்பட்ட மனவியலும், அணுப்பௌதிகம் போன்றவிதிகளால் ஆக்கப்பட்ட தாந்திரீகம், யோகம் என்பனவும் காணப்படுகின்றன. அந்த விதிகளினை அறிவதன் மூலம் மனதின் அதீத ஆற்றல்களை அறிந்துகொள்ளலாம்.

http://krishnaeswaran.blogspot.in/2014/10/01.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s