வர்மம் & மர்மம்

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%  

வர்மம் & மர்மம்எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள்.
வாசி தட்டும் இடமெல்லாம் -வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே -வர்மம்

அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

மனித உடலில் 108 வர்மப் புள்ளிகளாக அதாவது உயிர்நிலை சுவாசமாக ஒடுங்கியுள்ளது. இந்த வர்மப் புள்ளிகளின் ஏதாவது ஒன்று பாதிக்கப் படுமானால் உடலில் நோய் உண்டாகும். இவற்றை சீர் செய்வதன் மூலம் தான் நோயைத் தீர்க்க முடியும். உதாரணமாக உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது நோயின் தாக்குதல் இருந்தாலோ அது வர்மப் புள்ளிகளை சார்ந்துதான் இருக்கும்.

தலைப்பகுதி வர்மங்கள் (37)
திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதி வர்மங்கள் (13)
தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதி வர்மங்கள் (15)
உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுகுப் பகுதி வர்மங்கள் (18)
மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

கைப்பகுதி வர்மங்கள் (17)
வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால் பகுதி வர்மங்கள் (32)
முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்

http://thamil.co.uk/?p=7306

வர்மம் – ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர் நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்
வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வர்மக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை).”தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே” என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
“அகஸ்தியர் வர்ம திறவுகோல்”
“அகஸ்தியர் வர்ம கண்டி”
“அகஸ்தியர் ஊசி முறை வர்மம்”
“அகஸ்தியர் வசி வர்மம்”
“அகஸ்தியர் வர்ம கண்ணாடி”
“அகஸ்தியர் வர்ம வரிசை”
“அகஸ்தியர் மெய் தீண்டா கலை”
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

” ஜடாவர்மன் பாண்டியன்” என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “The fighting techniques to train the body from India ” என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபட மாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என “அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே” என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்: வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார். அவை-

தொடு வர்மம்- இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

தட்டு வர்மம்- இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்- பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

படு வர்மம் – நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார்.

எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்…

வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

http://thamil.co.uk/?p=7285

Advertisements

One thought on “வர்மம் & மர்மம்

  1. என் குழந்தை பருவத்தில் இருந்து நான் இந்த கலை கற்று மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், ஆனால் நான் ஆசிரியர் சந்திக்க முடியவில்லை, உங்களுக்கு நிஜமாகவே யாராவது கலை பயிற்சி ஆசிரியர் தெரியும் என்றால் தயவு செய்து எனக்கு சொல்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s