நோய் மற்றும் மனித உடல்

images (5)

நோய் மற்றும் அசதி வருவதற்கான காரணங்கள்

—  .  புறக் காரணிகளான பாக்டீரியா, வைரஸ், ப்ரொட்டோசொவா போன்றவை. வைரஸ் நோய் தொற்றை சரி செய்ய தடுப்பூசி போடுதல் மற்றும் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தவிர வேறு சிகிச்சை எதுவும் கிடையாது.

— .      ஒவ்வாமை

— .   பூஞ்சைக் காளான் ஆகியவற்றால் ஏற்படும் தொற்று.

— .       விபத்து, தீவிபத்து, எலும்பு உடைதல், உடற்காயம், உறுப்பு செயலிழத்தல்.

— .        நீண்ட மற்றும் குறுகிய காலத்திற்க்கு எடுத்துக் கொள்ளும் தவறான உணவு.

.       —  புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் போன்ற தீயப் பழக்கங்கள்

—.         நமது உடலைச் சுற்றியுள்ள ஒளி வியாபிப்பில் (ஆராவில்) ஏற்படும் சமன்பாடின்மை, தடைகள், குழப்பங்கள்.

— .      எண்ணங்களினால் மன அழுத்த நோய்கள்

— .      செய்வினை/ கருப்பு மந்திரம்

— .      வெண் மந்திரம்

— .      சக்தியை பிறரிடம் இழத்தல்

— .     எதிர்மறையான இடங்களில் சக்தியை இழத்தல்

முன் ஜென்ம வினைப் பயன்

—.          குறைபாட்டுடன் பிறத்தல்

 • உடலுறுப்பு வளர்ச்சியின்மை
 • குடும்ப நிலை, சகோதர-சகோதரிகள், திருமண உறவுகள்.
 • ஏழ்மை நிலை
 • முற்பிறவிப் பலன்களைச் சரிசெய்தல்

மனித உடல்

மனித உடல் 4 வேறுபட்ட உடலை கொண்டது

 1. பார்க்கக்கூடிய உள்ளுறுப்புகளுடன் கூடிய பரு உடல்
 2. எனர்ஜி உடல்
 3. அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல்
 4. மெண்டல் உடல்

மனிதனின் ஒளி வியாபிப்பு(ஆரா) 

மனிதனின் ஆரா நுட்பமான சக்தி உடலால் ஆனது

 1. எனர்ஜி உடல்
 2. அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல்
 3. 3. மெண்டல் உடல்

ஆரா / ஒளி வியாபிப்பு மனித உடலைச் சுற்றி உள்ளது. அது பரு உடலை உள்ளும் மற்றும் வெளியும் ஊடுருவிச் செல்லக்கூடியது. ஆரா பிராணனால் ஆனது.

மற்றுமொரு சூட்சும சக்தி உடல்

காரண உடல்

 • உயர்ந்த சக்தியுடன் இணைக்கிறது
 • ஸ்தூல உடலுக்கு வெளியே உள்ளது
 • முற்பிறவி பலனில் ஒரு பகுதி
 • பரு உடல் மற்றும் காரண உடல் தெய்வீக கார்டு (வெள்ளி பிணைப்பு அல்லது அந்தகரணம்) மூலம் இணைக்கப்பட்டு உள்ளது.

பிராணா நமது சக்தி உடல் வழியாக பரு உடலுக்குள் சக்கரங்களின் மூலமாக பாய்கிறது.

இந்த சக்தி ஓட்டத்தில், சக்கரத்தில் உள்ள தடைகள் காரணமாக, ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் அவ்விடத்தில் வலி, அசௌகரியம் ஏற்படும். ஒழுங்கான தடையில்லா சக்தி ஓட்டம் பரு உடலுக்கு மிகவும் அவசியம்.

ஆராவைப் பார்க்க முடியுமா?

—  ஆம், உங்களால் முடியும்

—  கிர்லியன் புகைப்படம் மூலம்

—  மனதால் காணும் சக்தி பெற்றவர் மூலம் (‘க்ளர்வாயண்ட்’) ஆனால் அவர்களின் பார்வை எல்லைக்குட்பட்டது

—  உங்களின் ஆராவை உணர்வதின் மூலம்

—  செடிக்கும் சக்தி புலம் உண்டு

சக்கரங்கள் என்றால் என்ன?

—  ஞான திருஷ்டி பெற்ற இந்திய யோகிகள் இதை கண்டு பிடித்தார்கள்.

—  சுழலும் சக்தி மையங்கள் மனித உடலின் சக்தி உடலில் இருக்கிறது

—  அவை மனித உடலுள் பிராணாவை நாடிகள் அல்லது சக்திப் பாதைகள் மூலமாக அனுப்பும் ‘சக்தி பொறி’ ஆகும்.

சக்கரங்களின் வகைகள்

—  சிறிய சக்கரங்கள்

—  மிகச் சிறிய சக்கரங்கள்

—  உறுப்புக்களின் சக்கரங்கள்

—  நாடிகள் / சக்தி பாதையின் சக்கரங்கள்

—  காகிதம் மற்றும்

சக்கரத்தை கண்டு அறிதல்

நூலைக் கொண்டு செய்த சிறிய ஊசலை உள்ளங்கை அல்லது ஏதேனும் சக்கரத்தின் மேல் நிறுத்தினால் அது சில விதமான அசைவை தோற்றுவிக்கும்.
சக்கரங்கள் சுழன்றவாறு பல வித செயல்களைச் செய்யும்

சக்கரத்தின் சுழற்சி

 1. கடிகார சுழற்சி
 2. எதிர்மறை கடிகார சுழற்சி
 3. நீளவாக்கில்
 4. பக்கவாட்டில்
 5. நீள்வட்டமாக
 6. அசைவேதும் இன்றி

சக்கரத்தின் தோற்றம்

 1. சக்கரம் எனர்ஜி உடலில் அமைந்திருக்கும்.
 2. முன் மற்றும் பின் புறத்தில் அமைந்திருக்கும்
 3. எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கும்
 4. வாழ்நாள் முழுதும் பிராணாவை கிரஹித்து மற்றும் வெளியிட்டாவாறே இருக்கும்.

கார்டு என்றால் என்ன?

—   கார்டு என்பது இரண்டு அல்லது மேற்பட்ட மக்களை இணைக்கும் கயிறு போன்ற சக்தி பாதை

—  இந்த கார்டுகள் பிராண சக்தியை தடை செய்து பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

—  கார்டுகள் சக்கரத்தில் தோன்றும் போது அவ்விடத்தின் செயலை பாதிக்கும்

—  கார்டுகள் வேண்டுமென்றோ, அறியாமலோ ஒருவரை நோக்கி செல்கிறது.

கார்டுகளின் வகை

—  கோபம்

—  ஏமாற்றம்

—  பொறாமை

—  காமம்

—  வருமானம்/ வெற்றி பெறத் தடை

—  செய்வினையால் வரும் கார்டு

—  வெண்மந்திரத்தால் வரும் கார்டு

கார்டுகள் ஏற்படும் இடம்

—  சக்கரங்களின் மீது

—  உறுப்புகளின் மீது

—  பரு உடலின் மீது

—  எனர்ஜி உடல், எமோஷனல் உடல், மெண்டல் உடலின் மீது

கார்டுகள் எங்கிருந்து வருகின்றது

—  குடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், போன்றோர்

—  திருமண உறவுகள்

—  முன்னால் காதலன், காதலி, கணவன், மனைவி

—  நண்பர்கள், அண்டைவீட்டார், வகுப்புத்தோழர்

—  உடன் பணிபுரிபவர்

—  ஆன்மீக குருமார்கள், பூசாரிகள்

—  செய்வினை செய்பவர்கள்.

—  இன்னும் பிற

சுவாசம் மூலம் நமக்கு நாமே பிராணாவை  உற்பத்திச் செய்தல்

சுவாச வகைகள்

 • எளிமையான சுவாசம்
 • பிராண சுவாசம்
 • யோகிகளின் சுவாசம்
 • சமன்படுத்தும் சுவாசம்

கேசரி முத்திரை

—   நாக்கின் நுனியை மடித்து வாயின் மேல் அண்ணத்தில் வைத்தலை ‘கேசரி முத்திரை’ என்பர்.

—  .சுவாசப் பயிற்சியின் போதும், மற்ற நேரங்களிலும் நாக்கை மடித்து மேலே வைப்பது சக்தி ஓட்டத்திற்க்கு உதவும்.

—  நாக்கை மடித்து வைத்திருப்பது பிராண சக்தியை உடலின் முன், பின் புறங்களில் பரவச் செய்கிறது. இது நாடி மூலமாக பிராணனை உடல் முழுவதும் பரவச் செய்யும்.

எளிமையான சுவாசம்

—  நமது சுவாசம் பெரும்பான்மையான நேரத்தில் தன்னிச்சையாக நிகழ்கிறது.

—  எளிய சுவாசம் என்பது மூக்கின் வழியாக சுயநினைவுடன் சுவாசிப்பது. வயிறை நன்றாக சுருக்கி மற்றும் விரித்து சுவாசிப்பது நன்று.

—  வசதியாக அமர்ந்து சுவாசிக்கவும். சுவாசிக்கும் போது மனதை ஒருநிலைப் படுத்தவும்.

பிராண சுவாசம்

—  நாடி துடிப்பின் லயத்தில்  6-3-6-3 / 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் எண்ணவும். இதுவே நம் உடலின் லயம்.

சுவாசத்தை உள்ளிழுக்கும் போது வயிற்றை விரித்து  நாடி துடிப்பின் —  லயத்தில்  6எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும், வெளிவிட்டவாறே வயிற்றை உள்ளிழுத்து 6 எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும். இது ஒரு சுழற்சி. இதைப் போல் 2-3 நிமிடம் செய்யலாம். பழகிய பின் எண்ணிக்கையை 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் கூட்டலாம்.

யோகிகளின் சுவாசம்

—  இது பிராண சுவாசத்தைப் போல் தான் ஆனால் இம்முறை எண்ணிக்கை 8-4-8-4. உள்ளிழுக்கும் போது 6 எண்ணிக்கை வயிற்றை விரித்தும் மீதி 2 எண்ணிக்கை நெஞ்சை விரித்தும் சுவாசிக்கவும். 4 வரை நிறுத்தி, 8 எண்ணிக்கை மூச்சை வெளியேற்றவும். 2-3 நிமிடம் தொடரலாம்.

—  சுவாசிக்கும் போது விரல் நுனியால் நுரையீரலுக்கு சக்தியூட்டலாம்.

சமப்படுத்தும் சுவாசம்

—  பிராண சுவாசத்தைப் போலவே ஆனால் வல, இட நாசி வழியாக மாற்றி மாற்றி சுவாசிக்கவும்.

—  வலது நாசியை கட்டைவிரலால் மூடி இடது நாசியால் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.

—  இடது நாசியை இட கட்டை விரலால் மூடி வலது நாசியால் சுவாசத்தை வெளிவிடவும். வலது நாசியால் இட நாசியை மூடியவாறே உள்ளிழுக்கவும்.

—  வலது நாசியை மூடி இடது நாசியால் வெளியேற்றவும்.

—  இது ஒரு சுழற்சி. தினமும் 2-3 நிமிடம் செய்யலாம்.

—  6-3-6-3  எண்ணிக்கையிலும் செய்யலாம்.

—  இதை தினமும் செய்தால் ஒற்றை தலைவலி வருவதை தவிர்க்கலாம்.

கர்மாவும் சிகிச்சையும்

—  நோயுறுவதும்,  அறிய நோயில் துனுபுறுவதும் உங்கள் கெட்ட கர்மா என்றால், உங்களை குணமடையச் செய்வது எங்கள் நல்ல கர்மா.

—  நாங்கள் உங்களை குணப்படுத்துகிறோம்.

—  சரியான முறையில் உங்களை சரி செய்வதின் மூலம் உங்கள் கெட்ட கர்மா எங்களிடம் வருவதில்லை.  நீங்களே கர்மாவின் பாடங்களை படித்த பின்பே சிகிச்சை நடைபெறுகிறது. கர்மாவை நீங்களே, நீங்கள் மட்டுமே சமன் செய்கிறீர்கள்.

—  நாங்கள் அதை எப்படி செய்வது என கற்றுத் தருகிறோம்

—  கர்மாவை வேறொருவருக்கு மாற்ற முடியாது. நீங்களே உங்கள் கர்மாவை சமன் செய்து நிர்வகிக்க வேண்டும்.

Copy:

http://pranaviolethealingtamil.blogspot.in/2014_01_01_archive.html

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s