பிராணா என்றால் என்ன?

images (4)

பிராணா என்பது நம்மை சூழ்ந்துள்ள உயிர்ச் சக்தி, இது நம்மைச் சுற்றி உள்ளது.

பூமியைச் சூழ்ந்துள்ளது

சூரிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ளது

பிரபஞ்சத்தைச் சூழ்ந்துள்ளது

அது தான்  “ தெய்வீக சக்தி”.

தொன்றுதொட்டே பிராணா எல்லா இடத்திலும் உள்ளது.

 • சமஸ்கிருதத்தில் ‘பிராணா’
 • சீனத்தில் ‘ச்சீ’
 • ஜப்பானில் ‘கீ’
 • பாலினேசியனில் ‘மன்னா’
 • மேற்கத்திய நாடுகளில் ‘லைப் ஃபோர்ஸ்’
 • நாம் அதையே தமிழில் இப்பொழுது ‘உயிர்ச் சக்தி’ என்கிறோம்.

பிராணா உடற்பயிற்சி வகைகள்

—  யோகா

—  டாய்ச்சி

—  சீ குங்க்

—  அகிடோ போன்றவை

பிராணா எங்கிருந்து வருகிறது

 • சூரிய பிராணா
 • பூமி பிராணா
 • அண்டவெளி பிராணா

சூரிய பிராணா

 • கண்களால் காணக்கூடிய மற்றும் காண முடியாத ஒளிக்கதிர்கள் சேர்ந்தது தான் சூரியனின் வெள்ளை ஒளி.
 • சூரியனில் உள்ள ஏழு வண்ணங்களுக்கு சாட்சியாக வானவில் உள்ளது.
 • சூரியனின் காந்த சக்தி கிரகங்களை அதனதன் இடத்தில் இருக்க செய்கிறது.
 • நாம் எப்போதும் பல கிரகங்கத்தின் சக்திக்கு ஆட்பட்டு உள்ளோம்.
 • சூரிய சக்தி (வெப்பமாக மாறி) அனைத்து உயிர்களையும் சென்றடைகிறது.
 • சூரியகாந்திப் பூ எப்பொழுதும் சூரியனின் பக்கமாகத் திரும்பி அதன் முழு சக்தியையும் பெறுகிறது.
 • சூரிய சக்தி அல்லது பிராணாவுடன் கரியமில வாயு உபயோகித்து ஒளித்தொகுப்பின் மூலமாக செடிகள் தானே தனது உணவை தயாரித்துக் கொள்கிறேன்.
 • நிலத்தில் இருந்து கிடைக்கும் பிற கூட்டுப் பொருட்களான தண்ணீர் மற்றும் தாதுக்களைக் கொண்டு வேண்டியன தயாரிக்கலாம்.
 • ஒருவர் சூரிய வழிபாட்டின் மூலம் சூரிய பிராணாவைப் பெறுகிறார்.

சூரிய சக்தியை பெற சூரியனை நோக்கி நின்று இவ்வாறு கூறி வணங்கலாம்:

ஓ தெய்வீகச் சூரியனே! எங்களுக்காக ஒளி வீசுவதற்க்கு நன்றி. என்னை குணப்படுத்தி, புதுப்பித்துக் கொள்ள சக்தியை தாரும். நன்றி. நன்றி. நன்றி.

பூமியின் பிராணா

—  பூமியின் பிராணன் புவியீர்ப்பு சக்தியாக வெளிப்படுகிறது.

—  பூமி சந்திரனை அதன் பாதையில் நிறுத்தி பூமியை வட்டமிட வைக்கிறது. சந்திரனுக்கும் அதன் சொந்த காந்த சக்தி உள்ளது.

—  சந்திரனின் காந்த சக்தி பூமியின் கடல்நீரை ஈர்த்து பெரிய மற்றும் சிறிய அலைகளை ஏற்படுத்துகிறது. கடல் அலை சில நேரம் 2-3 மீட்டர் உயரம் வரும்.

—  நாம் எப்பொழுதும் பூமி மற்றும் சந்திரனின் காந்த சக்திக்கு உட்பட்டே இருக்கிறோம்.

பூமித்தாயிடமிருந்து சக்தியை இந்த எளியப் பிரார்த்தனை மூலம் பெறலாம்.    

இனிய பூமித் தாயே, எனது இருப்பிடமாக இருப்பதற்கு நன்றி. தயவுசெய்து என்னை குணப்படுத்தி புதுப்பித்துக் கொள்ள சக்தியை தாருங்கள். நன்றி. நன்றி. நன்றி.

 

அண்டவெளிப் பிராணா

அண்டவெளிப் பிராணாவை தலை உச்சியில் சகஸ்ராரச் சக்கரத்தின் வழியாகப் பெறுதல்

சில மந்திரங்களும் அண்டவெளிப் பிராணாவை பெற உதவும்.

எடுத்துக்காட்டாக

 • அல்லா ஹு அக்பர்
 • ஓம் பரப்பிரம்மா
 • ஓ! டிவைன் ஹெவன்லி ஃபாதர்

பிராணாவின் பிற வடிவங்கள்

 1. மூச்சுக் காற்றில் கிடைக்கும் பிராணா
 2. உணவில் கிடைக்கும் பிராணா
 3. நீரில் கிடைக்கும் பிராணா
 4. மரங்களில் இருந்து கிடைக்கும் பிராணா
 5. ஸ்படிகம்/பளிங்கு கற்களில் கிடைக்கும் பிராணா
 6. புனித இடங்களில் கிடைக்கும் பிராணா
 7. புனிதமான மனிதர்களிடம் கிடைக்கும் பிராணா
 8. புனிதமான பொருட்களில் கிடைக்கும் பிராணா

காற்றின் பிராணா

 1. இந்திய பிரணாயாம கலையின் மூலம் நமது பருவுடல் மற்றும் சக்தி உடல் காற்றின் பிராணனை தாராளமாகப் பெறுகிறது.
 2. நீல வானத்தை உற்று நோக்கினால் மிதக்கும் சிறிய வெள்ளைத் துகள்களே காற்றின் பிராணா.
 3. யோகிகள் காற்றை மட்டுமே உட்கொண்டு நீண்ட நாட்கள் உணவின்றி வாழ்வார்கள்.

நீல வானத்தை உற்று நோக்கினால் காற்றின் பிராணவைக் காணலாம்.

உணவின் பிராணா

 1. செடிகள் பிராணாவைப் பெற்று தனது இலைகள், தண்டுகள், வேர்கள் மற்றும் பழங்களில் சேமிக்கும்.
 2. ஒவ்வொரு செடியும் ஒரு குறிப்பிட்ட ஆராவை சூரியனிடமிருந்து பெறும்.
 3. யோகிகள்/தீர்க்கதரிசிகள் செடிகளின் பல வகையான பிராணாவைக் க்ண்டு பருவுடலின் நோய்களைத் தீர்க்க பயன்படுத்தினர். இதுவே, இந்திய ஆயுர்வேதம், இந்தோனேசிய ஜாமூ, சீன மூலிகை மருத்துவ முறைகளை தோற்றுவித்தது.

அம்மா சமைத்த உணவு ருசிப்பதற்க்கும், சமைத்த உணவில் உள்ள உணர்வுபூர்வமான பிராணாவே காரணம். உணவு விடுதியில் சமைக்கப்படும்  உணவில் எதிர்மறை உணர்ச்சி நிறைய இருக்கலாம்.

பூக்கள் நிரம்பிய நீரில் குளிப்பதின் மூலம் நமது ஆராவை தூய்மையாக்கலாம்.

நீரிலிருந்து கிடைக்கும் பிராணா

—  நீரால் நிறைய பிராணாவை சேமித்து வைக்க இயலும் .

—  புனித இடங்களில் கிடைக்கும் நீரில் பிராணா அதிகமாக இருப்பதால் அவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம்.

—  நல் வார்த்தைகளினால் ஆசிர்வதிப்பதின் மூலம் நீரின் பிராணாவை அதிகரிக்க செய்து, குணப்படுத்த உபயோகிக்கலாம். முஸ்லிம் மதகுருமார்கள் இவ்வாறு செய்வார்கள்.

—  நம்மில் பலர் நாம் குடிக்கும் மற்றும் குளிக்கும் நீருக்கு நன்றி சொல்வதே இல்லை.

—  கடல் நீர் அல்லது உப்பு நீர் நமது ஆராவைத் தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

—  நாம் அனைவரும் நீரை அனுபவிக்கின்றோம். நீங்கள் குளிக்கும் போது நீருக்கு நன்றி சொல்லுங்கள்.

—  கடல் நீரும், குடிநீரும் உயிரினங்கள் அழியாமல் இருக்கச் செய்கிறது.

நீர் ஸ்படிகங்கள்

 1. டாக்டர் எமட்டோ என்பவர் நீரை உறைய செய்து பளிங்கு கற்களைப் போல மாற்றலாம் என நிருபித்துள்ளார்.

 

 1. நீர் ஸ்படிகங்கள் பலவித உணர்ச்சிகளால் பாதிக்கப்படுகிறது.
 2. சாதாரண சொற்களும் எண்ணங்களும் நீர் ஸ்ப்டிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
 3. நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் 72%-75% நீர் உள்ளது
 4. நமக்கு எதிர்மறை எண்ணம் வரும் போது உடலில் உள்ள் ஒவ்வொரு உயிரணுவும் எப்படி மாறி நடந்து கொள்ளும் என கற்பனை செய்து பார்க்கவும்.
 5. நாம் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே சிந்திக்க வேண்டும்.

மரங்களின் பிராணா

—  நம்மை குணப்படுத்தும் பிராணா மரங்களிடம் தாராளமாக இருக்கிறது.

—  அவற்றின் பிராணா இளஞ்சிவப்பு/ கருநீல வண்ணத்தில் இருக்கும்.

—  கோவில்களில் இருக்கும் மரங்கள் அவ்விடம் முழுமைக்கும் சக்தி அளிக்கிறது. சில கோவில்கள் ஏற்கனவே வளர்ந்த சக்தி நிறைந்த மரத்தடியில் கட்டப்பட்டு இருக்கும்.

மரங்களிடமிருந்து பிராணாவை இவ்வாறு கேட்டுப் பெறலாம்

“ ஓ தெய்வீக மரமே! நாமிருவருமே தெய்வீகப் படைப்பு. தயவுசெய்து, உனது உபரி சக்தியை கொண்டு என்னை குணப்படுத்தவும், புதுப்பிக்கவும் செய். நன்றி. நன்றி. நன்றி.

ஸ்படிகத்தின் பிராணா

—  ஸ்படிகத்தால் தேவையான சக்தியை சேமித்து வைக்கவும், தேவைப்படும் போது திருப்பித் தரவும் முடியும்.

—  சில ஸ்படிகங்கள் குறிப்பிட்ட சக்கரங்களை செயல்பட வைக்கும் மற்றும் நமது ஆராவை சக்தி வாய்ந்ததாக மாற்றவும் செய்யும்.

—  சக்தியுட்டப்பட்ட ஸ்படிகங்களைக் கொண்டு மனிதர்கள், வீடுகள் மற்றும் அலுவலகங்களை எதிர்மறையான அல்லது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கச் செய்யலாம்.

—  ஸ்படிகம் அதன் சக்திக்கு ஏற்ற விதவிதமான நிறம் மற்றும் வடிவங்களில் கிடைக்கும்.

—  ஸ்படிக கற்கள் மோதிரம், காதணி மற்றும் அட்டிகை ஆகியவற்றில் இருக்கிறது.

—  ஸ்படிகம் அசுத்தமடைந்து போகலாம்.

—  எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம்.

—  தேவைக்கேற்ப அதனை வடிவமைக்க வேண்டும்.

—  சில வகை ஸ்படிகம் சில சக்கரத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.

புனித இடங்களில் கிடைக்கும் பிராணா

—  நிறைய கோவில்கள் பிரபஞ்ச சக்தியை கிரஹிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால், அவற்றில் எப்போதும் பிராணா நிறைந்துள்ளது. பிரமிட், கோவில் மண்டபம், மசூதி கோபுரம் ஆகியவை பிராணாவை கிரஹிக்கும் படி கட்டப்பட்டுள்ளது.

—   இத்தகைய புனித இடத்திலிருந்து பிராணாவை அங்கே செல்பவர்கள் பெறலாம்.

—  தெய்வச் சிலை வடிவங்களும் கோவில்களுக்கு சக்தி அளிப்பவையாக உள்ளன.

—  சிலைகள் சில நின்ற அல்லது உட்காரும் நிலையில் காட்சி அளிக்கின்றன.

—  அவை சக்தியை அண்டவெளியில் இருந்து பெற்று புனித இடங்களிற்கு அனுப்புகின்றன.

—  அனைத்து சிலைகளும் ஒரு காரணத்திற்காக வடிவமைக்கப் பெற்றுள்ளன.

தெய்வத்தினால் அனுப்பப்படும் சக்தியின் வகைகள்

 • வீடு,நபர், குடும்ப பாதுகாப்பு.
 • செல்வ செழிப்பு
 • குணப்படுத்துதல்
 • அன்பு, கருணை, நல்லெண்ணம்.
 • தடைகளை விலக்குதல்.
 • அறிவு
 • போன்றவை.

புனிதமான மனிதரிடமிருந்து கிடைக்கும் பிராணா

—  யோகி மற்றும் தெய்வீக மனிதர்கள் தங்களின் சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏராளமான பிராணாவை வழங்க முடியும்.

—  புனிதமானவரின் ஆரா பல மைல்கள் நீண்டிருக்கும்.

—  புனிதர்களால் தங்களின் பிராணாவை உள்ளங்கைகள், கண்கள், புருவ மத்தி மற்றும் முழு உடல் வழியாக செலுத்த முடியும்.

பொருட்களின் பிராணா

—  குறிப்பிட்ட சில பொருட்கள் நிறைய சக்தியை கொண்டிருக்கும். புனித நூல்கள், ரட்சைகள், படங்கள் மற்றும் விசேஷ குறியிடுகள் போன்றவை நிறைய பிராணாவைக் கொண்டிருக்கும்.

—  பைபிள், குரான் மற்றும் பகவத்கீதை போன்றவை தெய்வீக சக்தியை வெளியிடும்.
புனித/தெய்வீக சின்னங்களின் மற்றும் புனித நூல்களில் இருந்தும் சக்தி கிடைக்கிறது.

copy:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s