ஸ்ரீ வித்யா என்பது மந்திரம்

ஸ்ரீ வித்யா என்பது மந்திரம், ஸ்ரீ சக்கரம் என்பது யந்திரம், ஸ்ரீ கல்பம் என்பது தந்திரம், இந்த வழி போகம் எனப்படும் உலக இன்பங்களையும் பிரபஞ்சத்தினை தான் எனும் உணரும் முக்தி எனும் நிலையினையும் தரும் வழியாகும்.
ஸ்ரீ வித்யா சாதனை செய்பவர் உலக இன்பங்களையும், ஆன்ம முன்னேற்றத்தினையும் ஒரே பொருளின் இரு துருவங்களாக அனுபவத்தில் உணர்வர். உலக வாழ்க்கை என்பது ஆன்ம வாழ்க்கையின் தொடர்ச்சியே! இறைவனும் இறைவியும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாத இணைகள்! ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது பிரபஞ்ச வாழ்க்கையின் ஒரு பகுதி. அதாவது Hologram ஒன்றில் பதியப்பட்ட தகவல் முப்பரிமான உருவமாக வெளிப்படுத்தப்படுவது போல் பிரபஞ்சத்தில் ஆழத்தில் உள்ள ஆன்மீக பாகம் உலகியல் வாழ்க்கையால் வெளிப்படுத்தப் படுகிறது.
ஸ்ரீ சக்கரம் என்பது இடத்தினதும் காலத்தினதும் குறியீடு. (Sri Chakra is the symbol of the space-time,) இது உயிர் சக்தி இணைந்த நிலையில் இருப்பதை குறிக்கும் குறியீடு.இந்த குறியீடே சரஸ்வதி பிரம்மா, லக்ஷ்மி – விஷ்ணு, சக்தி சிவம், ராதா கிருஷ்ணா, பெண் ஆண்  எனக்குறிப் பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதனது உடலும் ஒரு ஆலயமாகும். இது பராசக்தி எனப்படும் உயிர் சக்தியால் நிறைந்தது. ஸ்ரீ சக்கர வழிபாடு என்பது இந்த இருமை சக்திகளாக இருக்கும் சக்திகளை ஒன்றாக்கும் சாதனையாகும்.
நாம் உயிர் சக்தியை அதனை கொண்டிருப்பவரை தவிர அதுவாகவே அனுபவத்தில் பார்ப்பதில்லை. மனிதனில் இருக்கு உயிர் எனும் உணர்வு சக்தியே நாம் வழிபாடும் வழிபாடுகளை ஏற்கும் நபராகும். ஆகவே மிகச்சிறந்த ஸ்ரீ யந்திரம் உயிருள்ள மனித உடல்களாகும். பெண்களுக்கு பராசக்தியின் அமிசம் காணப்படுகிறது, ஆண்களிற்கு சிவத்தின் அமிசமுமாகும். உடலை உற்பத்தி செய்யும் கருவிகளான யோனியும் குறியும் சக்தியும் சிவத்தினதும் குறியீடுகளாக கருதப்படுகிறது.
மந்திர ஜெபங்கள் இறைவனின் எண்ணற்ற குணங்களை எம்மில் விழிப்பித்து இருளில் இருந்து ஒளியிற்கு இட்டுச்செல்லும்
குரு என்பது பிரபஞ்ச சக்தியினை அடைவதற்குரிய திறவுகோலாகும் குருவும் சீடனும் இரண்டு என்ற நிலை கடந்து ஒன்றாகும் போது இறைவன் என்பதனை அனுபவிக்கிறான். குருவும் சீடனும் ஆன்மாவில் ஒன்றாக இருக்கும் போதும் உலக நாடகத்தில் தமது பாத்திரத்தினை செவ்வன செய்வற்காக நடிக்கின்றனர். இதில் குருவும் சீடனுள் இருக்கும் இறைவனை வணங்குவதால் இருவரும் உயர்கின்றனர்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s