உடற்கட்டு

images-1

உடற்கட்டு என்பது நாம் தவதியானத்தில் ஈடுபட்டிருக்கும் போது மனம் ஒரு நிலையில் இருக்கும். அப்போது வேறொரு அழையாத தீய ஆத்மா நம் உடலை பயன்படுத்தி உட்புகுந்து நம்மை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆட்டுவிக்க பார்க்கும். அல்லது மந்திர சக்தியை சுய நினைவின்றி இருக்கும் அவ்வேளையில் களவாடிவிடும். எனவே உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து பயன்படுத்த வேண்டும்.

சித்தி செய்து வைத்துள்ள உடற்கட்டு மந்திரத்தை கூறி (கையில் விபூதி வைத்துக்கொண்டு கூறவும்) முடிந்தவுடன் உடலை சுற்றி விபூதி தூவிவிட்டு பிறகு தவத்தில் ஈடுபடவேண்டும். தீய சக்தி அண்டாது. நீங்கள் பாம்பு, பூச்சிகள் நிறைந்த வனத்தில் தியானிக்கும்போதும் விபூதி இல்லாதபோதும் உடலை சுற்றி கல் உப்பை போட்டு விட்டாலும் சிறந்ததாகும். பூச்சிகள், பாம்புகள் உங்களை ஒன்றும் செய்யாது. திடீரென ஒரு இடத்தில் தியானிக்க நினைக்கிறீர்கள் அல்லது ஒரு சுடுகாடு போன்ற இடம் எனில் அவசியம் உடற்கட்டு மந்திரம் போட்டு விபூதி தூவியே ஆக வேண்டும். கையில் விபூதியோ, உப்போ இல்லையென்றால் மந்திரம் கூறி உங்கள் சிறுநீரகத்தை சுற்றி விட்டாலும் தீயசக்தியோ, விஷ பூச்சிகளோ எதுவும் உள்ளே வராது. ஆபத்து நேரத்தில் மட்டும் சிறுநீரகத்தை பயன்படுத்தவும். ( சாதாரனமாகவே பேய் பிசாசு என தீய சக்திக்கு பயப்படுபவர்கள் உணவு உப்பை சிறிது கையில் வைத்திருந்தாலே போதும் எதுவும் கிட்டே அனுகாது )

ஆலயத்தின் உள் தியானிக்கும்போது உடற்கட்டு அவசியம் இல்லை என இருந்து விடாதீர்கள். எங்கும் பயன்படுத்தவும். தண்ணீரை உள்ளங்கையில் வைத்து உடற்கட்டு மந்திரம் கூறி உடலை சுற்றி விட்டுக்கொண்டாலும் உடற்கட்டு வேளை செய்யும் ஒரு தர்பை புல்லை எடுத்து உடற்கட்டு மந்திரம் கூறி உடலை சுற்றி வட்டம் போட்டாலும் உடற்கட்டு வேளை செய்யும். நீங்கள் வட்டத்தைவிட்டு எழுந்து வெளியே வந்தால் உடற்கட்டு மீண்டும் வேலை செய்யாது. ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும் உடற்கட்டு செபிப்பது உடலை சுற்றி காப்பு செய்துகொள்வது அவசியமாகும். உங்கள் உடற்கட்டு மந்திரம் வேறொருவருக்கு தெரியகூடாது. கவனம் .

படித்ததில் பிடித்தது

 

 

 

 

Advertisements

One thought on “உடற்கட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s