கர்மா

கர்மா

download.jpg

ஒரு மனிதன் முற்பிறவியின் கர்ம பலனை எப்படி தீர்க்க முடியும் ?
அமைதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு தியானம் மேற்கொண்டால் போதுமா ?

வேலைகளை செய்ய வேண்டாமா ?

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5

முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. அந்த பிறவியில் தனது நிலையில் இருந்து கொண்டு தனக்கு கொடுக்க பட்ட கடமைகளை அனைவரும் செய்தால் மட்டுமே கர்ம பலன் தீரும். கர்ம பலன் தீர்ந்தால் மட்டுமே ஒரு ஜீவன் இறைவனை அடைய முடியும். ஆத்மா இறைவனை அடைந்தால் மட்டுமே மீண்டும் பிறக்காது. மீண்டும் பிறக்காமல் இருந்தால் மட்டுமே ஒருவன் நிரந்தர சுகத்தை அடைய முடியும். இந்த நிலையை எட்டும் வரை ஒருவன் தனக்கு கொடுக்க பட்ட கடமையை செய்ய வேண்டும். இந்த உலகத்தில் இரண்டு வகை ஜீவன்கள் பிறக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் ‘ஊழ்’ (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ ‘ஊழ்வினை’ என்ற சொல்லை கையாள்கிறார்.

ஒன்று கர்ம யோகி. மற்றொன்று ஞான யோகி.

கர்ம யோகி என்றால் செயல்கள் செய்ய வேண்டியவன். அதாவது கடமைகள் இருக்கின்ற ஒருவன் கடமைகளை விட்டு விட கூடாது. அவனுக்கு விதிக்க பட்ட கடமையை செய்ய வேண்டும். ஒருவன் காவல் துறையில் பணி செய்கின்றான் என்று எடுத்து கொள்வோம். வாழ்க்கை என்பது எப்போதும் காரணம் மற்றும் விளைவு என்பதால் நடக்கிறது. இப்போது நீங்கள் அந்த விளைவை அனுபவிக்கிறீர்கள் அல்லது அவதிப்படுகிறீர்கள். ஆனால் காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்குமா? ஒரு வேளை நீங்கள் மிகவும் குறுகிய பார்வையுடன் பார்ப்பதால், காரணத்தை உங்களால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு காரணம் இல்லாமல் ஒரு விளைவு இருக்கமுடியாது. இந்தக் காரணத்தைத்தான் கர்மா என்று கூறுகிறோம்.

அவனுக்கு நிறைய பிரச்சனைகள் வரலாம். பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி , நான் சாமியாரை போல் தியானம் செய்வேன் இறைவனை அடைவேன் என்று கூறினால் அது சரி இல்லை. அவன் அவனது கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். அவன் இறைவனை அடைய முடியாது.

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.

கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும். கர்மங்கள் அணைத்து முடிக்க பட்ட உடன் அந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்காத இறை நிலையை அடைய முடியும்.

ஞான யோகி. ஞான யோகி என்பவன் யார் ? எவன் ஒருவன் செய்வதற்கு கர்மங்கள் இல்லையோ அவனால் யாரும் பாதிக்க பட வில்லையோ, அவனை நம்பி யாரும் இல்லையோ, அப்படி பட்ட ஒருவன் பக்குவ பட்ட மனத்துடன் இறை பக்தியுடன் எப்போது தியான நிலையில் இருந்து கொண்டு பிரம்ம நிலையில் இருந்து தன் உள்ளே இருக்கின்ற ஆன்மா வை அனுபவித்து மகிழலாம் . இறுதியாக இறைவனை அடையலாம்.

இந்து சமயத்தில் கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘கர்மா’ சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

தொழில் ஸ்தாபனத்தில் இறைநிலையின் பங்கு என்ன என்பதை விளக்கும் வேளையில், பலரின் புரிதல் வேறுவிதமாக உள்ளதை உணர்கிறேன். கர்மாவை அறியாமல் வேறு உயர் கருத்துகளை உள்வாங்கி நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் உள்ளது. கர்மா என்றவுடன், இது ஆன்மிகம் என்று படிப்பதை நிறுத்தி விடவேண்டாம். உலக நன்மையின் பொருட்டு, அறிவியல் பூர்வ மாக உணர்த்த முயல்கிறேன்.
கர்மா என்பதை ஒரு மாயாஜாலம் போன்றோ அல்லது ஒரு மந்திர சடங்கை போன்றோ அல்லது ஜோதிடரின் ஏமாற்றும் திறமையையும் உடனே சிந்திக்கும் ஒரு மனநிலை நம்மிடம் புகுத்தப்பட்டுள்ளது. ஒரு செயலுக்கு ஒரு விளைவு. இவ்வளவு தான் கர்மா. கர் என்றால் வட மொழியில் செய் அல்லது செய்தல் என்று பொருள். கர்மா என்றால் செயல் என்ற பொருள். கர்மா என்றவுடன் பெரிதாக கொலை கொள்ளை போன்ற பாவங்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.
நடைமுறை உதாரணத்திற்கு, தங்கள் மனைவி ஒரு கப் தேநீர் கொடுக்கிறார்கள், கவனக்குறைவால் ஒரு சொட்டு கீழே சொட்டிவிட்டது. டைல்ஸ் தரை அழுக்காகி விட்ட கோபத்தில் தாங்கள் “அறிவில்லையா கீழே சிந்திவிட்டதே” என்று தாங்கள் சற்று கோபத்துடன் சொல்ல அதற்கு அவர்கள் ஏதோ சொல்ல, கையில் இருக்கும் கப்பை தேநீருடன் தூக்கி எறிகிறீர்கள். முன்பு ஒரே ஒரு சொட்டு. அதற்கு திட்டின நாமோ கப்பையும் உடைத்து, மேலும் தேநீர் முழுவதையும் கொட்டிவிட்டோம்.
யோசித்து பாருங்கள் இந்த உணர்ச்சிவயப்பட்ட செயலுக்கு, கடவுளோ, கர்மாவொ காரணம் என்று கூறமுடியுமா? இந்த கோபத்துடன் மனைவியோடு கோவிலுக்கு சென்று என்ன வேண்டுவீர்கள்? தெய்வத்திற்கும் இந்த கஷ்டத்திற்கும் என்ன சம்மந்தம். அடிப்படையை உணராமல் மீண்டும் மீண்டும் வேண்டினால்……காலம் அதிலேயே சென்றுவிடாதா?
நன்றாக உற்றுப் பார்த்தல் நம்முடைய கோபம், நம் நலம் விரும்பிகளிடம் மட்டும் சற்று அதிகமாக வருகிறதே? காலை முதல் மாலை வரை நம்மையே நினைத்து நம் நலத்திற்காகவே உழைக்கும் மனைவி, கணவன், அம்மா மற்றும் அப்பா இவர்களிடம் தான் பெரிய காரணமின்றி பெரிய கோபம்
🙂
நம் செய்கையை பற்றிய உற்றுநோக்குதல் நம்மிடம் இல்லாமல், தெய்வத்தை உணர்வதால், பெரிய பயன் ஒன்றும் கிட்டிவிடாது என்பதை உறுதியாகக் கூறலாம். இந்த செயலுக்கு வருந்திய நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டியது கடவுளிடமா? உணர்ச்சி வயப்பட்ட நிலையில், தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவித்தால் அதுவே பாவம் எனப்படும்.
மிகுந்த இன்பமோ, துன்பமோ இல்லாமல் அமைதியான மனநிலையுடன், தற்காலத்திலும், பிற்காலத்திலும், பிறருக்கும், நமக்கும், உடலுக்கும் மனதிற்கும் இன்பம் பயக்கும் செயலே புண்ணியம் எனப்படும்.
இந்த புண்ணியமும், பாவமும் சேர்ந்ததுதான் கர்மா எனப்படும்.
இன்பமும் துன்பமும் தனித்தனி இல்லை என்றறிக. இன்பத்தின் அளவுமுறை மாறும் போது இன்பத்தின் மறுபெயராம் துன்பம் விளையும்..

கர்மாவை பற்றிய சில கேள்விகள்:
கர்மா எங்கே பதிகிறது?
மனித மூளையில் என்று கூற முடியாது. ஏனெனில் அது இறந்தவுடன் அழிந்துவிடும்.
பதிந்த கர்மாவிற்கு ஏற்ப நல்ல பலனையோ தீய பலனையோ தரும் அந்த நீதிபதி யார்?
வெறும் இறைவன் என்று சொல்லி மழுப்ப முடியாது. ஏனெனில் நாம் இறைவனையே பார்த்தது கிடையாது.
இது ஒரு இயக்கமா ? இல்லை இயக்கப்படும் நிகழ்ச்சியா?
இன்று செய்த பாவத்திற்கு என்று தண்டனை?
ஒருவன் இறக்கப்போகும் ஒரு நிமிடம் முன்பு ஒரு பெரிய பாவம் செய்தால், அவன் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும்?
பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்றால் அதை பெற்றோர்கள் advantage ஆக எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகள் தானே துன்பப்பட போகிறார்கள் நாம் இல்லையே என்று…
கர்மாவின் படி தான் எல்லாமே நடக்கும் என்றால், எல்லோரும் வியக்கும் ஆழ்ந்த சிந்தனையாளர் திருவள்ளுவர், ஏன் முயற்சி தன மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
ஒருவன் செய்யும் கர்மா, வேறு யாரையெல்லாம் பாதிக்கும்.
கர்மா தான் விதியா ?
விதியை மாற்ற முடியுமா?
கர்மா என்கிற விஷயத்தில் இறைவனின் பங்கு எங்கு உள்ளது.
கர்மாவை மாற்றும் பூஜை ஏதாவது உண்டா? இருந்தால் ஏன் பணம் படைத்தவர்கள்
துன்புறவெண்டும். இல்லை அந்த பூஜையை செய்யக் கற்றவர்கள் ஏன் துன்பமோ இன்பமோ படவேண்டும்.
கர்மாவில் நவக்ரஹங்களின் பங்கு என்ன?
கர்மா எத்தனை வகைப்படும்:?
சஞ்சித கர்மா – தாய் தந்தையரிடம் இருந்து அவர்களின் முன்னோர்களின் கர்மாவும் சேர்ந்து, பிறக்கும் பொழுதே பதிவுகளாக (DNA) வருவது.
ப்ராரத்தக் கர்மா – நாம் நமது 12 வயது முதல் செய்யும் செயல்களின் பதிவுகள்.
ஆகாம்ய கர்மா – மேற்கூறிய இரண்டு கர்மாக்களும், நமது ஆன்மாவிற்கு இச்சை ஊட்டி அதாவது தூண்டப்பட்டு செய்யும் செயல்களின் பதிவு. நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு தீவிரவாதத்தில் இச்சைதூண்டி அதை நோக்கி சிந்திக்க வைப்பது. ஒரு பெண்/ஆண் மீது மிகுந்த பற்று காலத்தால் ஏற்ப்பட்டு அதனால் அவன்/அவள் வாழ்கையே தடம் புரள்வது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு ஒரு அறிவியலாளரின் நட்பின் மேல் இச்சையைத் தூண்டி அவனை உயந்த நிலைக்கு இட்டுச் செல்வது. எல்லாமே இப்பதிவின் விளைவே.

கர்மாவை எப்படி கற்பது?
==========================
கர்மாவை புரிந்து கொள்ள புராணங்களை படிக்க வேண்டிய அவசியமே இல்லை. உண்மையை சொன்னால், புராணங்களை வைத்து கர்மாவை புரியவைப்பது கடினம். அறிவியல் கொண்டு உணர்த்துவது தான் எளிது. கர்மாவை புடிந்துகொல்ல நாம் அவசியம் அலை இயக்கத்தை (Radiation) புரிந்துகொள்ள வேண்டும். உயிர், மனம் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். காந்த இயக்கம் (Magnetism) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காந்தப் புலத்தில் ஒலி அல்லது ஓளி எப்படி பதிகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். காந்தமாக பதிந்த ஒளியை மீண்டும் ஒளியாக மாற்றும் மூளை போன்ற கருவி CD Player or Tape Recorder பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். காந்த ஆற்றலை மின் ஆற்றலாக மற்றும் Dynamo வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது போதும். தெளிவாக அறிந்துகொள்ளலாம் கர்மாவை.

படித்ததில் பிடித்தது

Advertisements

One thought on “கர்மா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s