தியான இரகசியம்

images-6

தியான பிரிவும் ரகசியங்களும் :-

1 .மனதவ தியானம்.

2 .மந்திர தவ தியானம்.

  1. யாக பூஜை தியானம்.

4 . அன்றாட ஆலய வழிபாடு தியானம்.

5 .பணிஇடை தியானம்.

6 . தர்மவழி தியானம்.

7 . நானே தியானம்.

8 . பழக்க வழக்க தியானம்.

9 . சாஸ்த்திர தியானம்

இவைகள் மனிதர்கள் கடைபிடிக்கும் தியான பூஜை முறைகளாகும், இவைகளை சுருக்கமாக தெரிந்து கொள்ளுங்கள், இவ்விடம் இதை தெரிவிக்க காரணம் வீண் குழப்பம் விலகும், சில சந்தேகங்கள் தெளிவு படவே கூறுகிறோம்,

ஆளாளுக்கு ஒரு வழியில் போகிறார்களே எந்த வழி எதற்கு என்று புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும், விளக்கம் சுருக்கமாகவே தருகிறேன், அதற்கு முன் ஒரு உண்மையை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன், போகும் பாதை வேறாக. பல பிரிவாக இருந்தாலும் சென்று சேருமிடம் ஒன்றே ,அவரவர் மனதேவை, பூர்த்தி அடைய தெரிந்த பாதையை தேர்ந்தெடுப்பது இயல்பு , ஆனால் சரியான பாதையா என்பது தான் பிரிச்சினை .

மனதவ தியானம் : மனஅமைதிக்கும். ஞாபக சக்தி பெருக்கத்திற்கும். நிம்மதி இழப்பில் இருந்து விடுதலை ஆவதற்கும். மனோதத்துவ கலை சித்திபெறவும். மன ஆரோக்கியத்திற்கும் மனதவ தியானம் கடைபிடித்தனர், யோகா பயிற்சியும் இதில் அடங்கும்,

மந்திர தவதியானம் : தேவதைகளையும். தெய்வங்களையும் வசியம் செய்யவும், தன் சக்தியை பெருக்கிக் கொள்ளவும், அதன்மூலம் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், மற்றவர்களின் செயல்களை குறுக்கு வழியிலும். நேர்வழியிலும் ஜெயித்து கொடுக்கவும். வல்லவராக வெளிப்படுத்திக்கொள்ளவும் கடைபிடித்தனர்,

யாகபூஜை தியானம் : தீய சக்திகளை விரட்டவும். அக்னியின் மூலம் தேவதைகளை திருப்தி படுத்திதேவதைகளை அடையவும். தெய்வத்திற்குரிய மரியாதை செய்து தெய்வங்கள் அவ்விடம் குடிகொள்ளவும். விரைவில் தேவதைகளை வசியபடுத்தவும் இந்த பூஜைகளை கடைபிடித்தனர்,

அன்றாட ஆலய வழிபாடுதியானம் : இறையருள் கிட்டவும். பக்கதுணையாக இருக்கவும். தன் குடும்ப சுபநிகழ்வுகள் தடையின்றி இறைவன் நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையுடனும். ஒழுக்க குணம் மேலோங்கவும். கடைபிடித்தனர்,

பணி இடை தியானம் : இவர்கள் அன்றாடம் ஆலயம் செல்வதில்லை. மந்திரம் ஜெபிப்பதில்லை, யாகம் செய்வதில்லை, வாய்ப்பு கிடைக்கும்போது ஆலயம் செல்வது. வழியில் எங்கு தெய்வ உருவம் பார்த்தாலும் வணங்குவது. ஏதோ நம் கடமை இறைவனை வணங்க வேண்டும், வணங்கவில்லை என்றால் ஏதாவது குறைவந்துவிடுமோ என்னவோ என்று வணங்குவது. சிலர் நேரம் கிடைக்கவில்லை நாம் என்ன செய்ய முடியும், நம் நிலைமை இறைவனுக்கு தெரியும், எனவே வாய்ப்பு கிடைக்கும் போது வணங்குவதையும் இறைவன் ஏற்பார் என நினைத்து தியானிப்பவர்கள் இவர்கள், இதை குறை கூற முடியாது ,

தர்மவழி தியானம் : மனமே கோயில் அதில் தர்ம சிந்தனையும். இயலாதவருக்கு உதவும் குணமே மனிதநேயம் இதையே இறைவன் விரும்புவார் என வாழ்வது . செய்யும் நற்செயலில் தான் இறைவன் ஆசீர்வதிப்பார் என வாழ்வது , தர்மமே தெய்வம் என முழு நம்பிக்கையோடு வாழ்வது , புன்னகை. பாசம். தர்மம். இவைகளே இறைவன் என தியானித்து இருப்பவர்கள் (மிக உன்னதாமான குணம் என நாயன்மார்களும். ஆழ்வார்களும் புகழ்ந்து வாழ்ந்திருக்கின்றனர்,)

நானே தியானம் : இயல்பாக . இயற்கையாக இறைசக்தி கிடைத்தவர்கள் ஆதியில்  கடவுளாக இருந்தார்கள், தன்னால் ஞானம் கிடைத்தவர்கள் கடவுள் என மற்றவரால் மதிக்கப்பட்டார்கள்,அவர்களில் முக்கியமாக கருதப்படுபவர்கள்  புத்தர். இயேசு. நபிகள் ஏனையோர் அடங்குவர்,பிற்காலத்தில் கடின முயற்சியால் மந்திர. யந்திர. யாக. மன. தியானம் செய்து சித்தி பெற்று மக்களுக்கு சித்துக்களை காண்பித்தார்கள், அவர்களும் கடவுளாக பின்னாலில் மதிக்கப்பட்டார்கள்,இவர்களும் ஒரு போதும் நானே கடவுள் என கூறிக்கொண்டதில்லை ,மக்கள் இவர்களை வணங்கியும் பலன் பெற்றார்கள்,இந்த எல்லை வரை நன்றாகவே நம்பிக்கை இருந்தது இதற்கு பின்னால் குருவாக இருந்தவர்கள் அவர்கள் சீடர்களால் தெய்வமாக மாற்றப்பட்டார்கள், இன்றைக்கு சித்திகளே இல்லாத வேஷதாரிகளும் சாமிகளாக அழைக்கப்படுகிறார்கள், இதை கண்ட ஒரு சிலர் உழைப்பே கடவுள், கடவுள் என்று எதுவும் இல்லை எல்லாம் சுத்தப்பொய். பித்தலாட்டம். இயற்கையை கடவுள் என்று கூறுவதை ஒத்துக்கொள்ள இயலாது என கூறுகிறார்கள், என் குடும்பத்தை காபந்து செய்ய என் உழைப்பும். ஆரோக்கியமும். உயிரும் ரொம்ப முக்கியம் எனவே என் குடும்பத்திற்கு நானே கடவுள் என நம்புகிறார்கள், என் சந்தோஷத்திற்கும். என் குடும்ப சந்தோஷத்திற்கும். நாட்டின் சந்தோஷத்திற்கும் பாடுவேன் என தியானிக்கிறார்கள் இதுவும் ஒரு வகை தியானமே, எனினும் நானே தியானம் என்பது உடலுக்கும் ஆத்மாவிற்க்கும் நாம் அளிக்கும் ஒருவித பயிற்ச்சியே ஆகும்

பழக்க வழக்க தியானம் : ஆலயத்தில் பூஜை செய்யும் அனைத்து பிரிவினரையும் இதில் கூறலாம், தன் கடமை அதிகாலை எழுந்து ஆச்சாரஅனுஷ்டானத்துடன் குளித்து ஆலய தெய்வங்களையும் அபிஷேகித்து மந்திரங்களை கூறி மலர்களால் அர்சித்து வழிபட வருவோருக்கும் அர்ச்சனை அபிஷேகம் செய்தும். தன் தெய்வ கடமையை நிறைவேற்றியும் தன் இறைசேவையை பூர்த்தி செய்வதோடு இப்பணி மூலம் ஜீவனம் பெற்றும் இத்தொழிலை அன்றாட பழக்கமாக தொன்று தொட்டு நடத்தி வருபவர்களும். மேலும் அழைப்பில் பேரில் கும்பாபிஷேகம். ஹோமம். பரிகார நிவர்த்தி பணிகளையும் வழக்கமாக கொண்டவர்களும் இதில் அடங்குவார்கள், பழகிபோனதால் வருமானத்திற்காக மட்டும் செய்பவர்களும் உண்டு , மனப்பூர்வமாக இறைபணியே தன்கடமை என செய்பவர்களும் பலவேர் உண்டு, இது பழக்க வழக்க தியானம் எனலாம், பழக்க வழக்க தியானத்திற்கு தொழில் அடிப்படையில் பெரும்பாலும் அமைவதால் இவர்களுக்கு பலன் தாமதமாகவே கிடைக்கிறது ,இது அனுபவ உண்மை .

சாஸ்த்திர தியானம் : ஜோதிடம். பிரசன்னம் போன்ற சாஸ்த்திரம் கூறுபவர்கள் தொழிலுக்காகவாவது கிரஹங்கள் பெயரை கூறியே ஆக வேண்டும், இறை பரிகாரங்களையும் கூறி வேண்டிய சூழல் அமையும், தன் தொழிலில் நாவன்மை உண்டாக இறை பிராத்தனை ஒவ்வொரு தொடக்கத்தின் போதும் செய்வார்கள், இதுவும் ஒருவகையில் தியானமாகவே அமையும், தொழில் ரீதியாக தெய்வங்களை சம்மந்தப்படுத்தி பேசுவோருக்கும் தன்னை அறியாமல் தியானம் உண்டாகும், ஆன்மிகத்தை போதிக்கும் ஆசிரியர் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் மாணவர்களுக்காக மீண்டும் மீண்டும் கற்றதை கூறவேண்டிவரும், இதுவும் மீண்டும் மீண்டும் ஆன்மிகத்தை பற்றிய ஒரே சிந்தனையோடு பேசுவதால் ஒருவகை தியானமாகும், மேற்கூறிய தகவல்கள் புரிந்தும் புரியாதது போல சிறு குழப்பம் இருக்கத்தான் செய்யும், மேற்கூறிய விஷயம் ஒவ்வொன்றும் ஒருவகையில் சித்தி தரக்கூடிய தியானம் தான், தியானம் என்பதை பயிற்சி என்று வைத்துக் கொள்ளலாம்,

நானே தியானத்தை கொடுப்பவன் என நினைத்துக் கொள்ளலாம்,  தன்னை அறியாமல் பயிற்சியாவதும்.

மேற்கூறிய சில தியான முறையில் ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானாலும் தங்களை போன்ற ஆன்மிக மாந்திரீக தாந்திரீக பயிற்சியாளர்கள் மேற்கண்டவைகளை ஒருங்கிணைத்து பயிற்சியை மேற்கொண்டால் உன்னதமான நிலையை பெறலாம்,

அதாவது ஆரம்ப கட்டத்தில் மனம் அடங்குவதற்கும் உடல் சுறுசுறுப்பிற்கும் மன ஆத்ம தியானம் செய்வது சிறப்பாகும், பிறகு மந்திரங்களை உருஏற்றி ஜபிப்பது சிறந்ததாகும், பிறகு ஜபித்து உரு ஏற்றிய மந்திரத்தை மந்திரத்திற் குரிய தெய்வத்திற்கே யாகத்தில் சமர்பணம் செய்ய வேண்டும், அத்தோடு மட்டுமில்லாமல் இறைஒழுக்கம் மேலும் மேலும் பெருகி சிதறாமல் இருக்க அன்றாட ஆலய வழிபாடும் செய்ய வேண்டும், மேலும் தாங்கள் எப்பணி செய்தாலும் எந்நேரமும் உங்கள் உள்மனம் இறைவனை தியானித்தவண்ணம் இருப்பது நலம், அது ஆலயத்தில் தான் நிகழவேண்டும் என்ற அவசியமில்லை,வேலை செய்து கொண்டே கூட தியானிக்கலாம், மேலும் பூஜை புனஸ்காரம் மட்டும் முறையாக ஒழுங்காக செய்தால் மட்டும் போதாது நல்ல தர்மதயாள குணமும். பலருக்கும் முடிந்தளவு அன்னம். நீர். வஸ்த்திரம். அவசர உதவி. போன்ற தர்மங்களை செய்யும் பக்குவம் நிறைந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்,உங்களிடம் உள்ள சித்துக்களை கண்டு மக்கள் உங்களை தாங்களே கடவுள் என்று கூறினாலும் வெளி மனம் ஏற்றுக் கொண்டாலும் உள் மன அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடாது , லோகத்தை ஆளும் ஈசனே யோகநிலையில் யாரையோ நினைத்து தவம் இருப்பதாக ஒரு சாரர் கூறுவர், இயேசுபிரானும் தனக்கும் மேலான பிதாவை  , வணங்கியிருக்கிறார் .

புத்த பிரானுக்கும் அவருக்கும் மேலான இடத்தில் இருந்து ஞானம் கிடைத்திருக்கிறது , இப்படி இறைவனாக விளங்கக் கூடியவர்களே தான் மட்டுமே உயர்ந்தவன் என ஏற்றுக் கொள்ளாத போது . நாமும் தன்னடக்கத்தை கடைபிடிக்க வேண்டும், மேலும் தாங்களும் வாக்குசித்தி . மந்திரசித்தி பெற்ற பின் வருமானத்திற்காக இல்லாவிட்டாலும் கற்றவித்தை அனைவருக்கும் பயன்தர மனித சேவை செய்ய வேண்டும், பிற்காலத்தில் தாங்களும் புது சாஸ்திரம் இயற்றலாம் நல்ல குருவாக இருக்கலாம், இவைகளை பரிபூரணமாக கடைபிடித்தால் முழுமனிதராக ஏற்கப்படுவீர்கள், இறைவனுக்கு அடுத்த இடத்தில் நீங்கள் இருப்பது உறுதி, மக்கள் ஆளாளுக்கு ஒரு விதத்தை கடைபிடித்தாலும் ஒரு கூட்டான முறையை கடைபிடிக்காததே அவர்கள் இறை தியானம் தோற்றதற்கு காரணமாகும், உங்களுக்கு தோல்வி என்ற சூழ்நிலை வரக்கூடாது என நினைத்தால் கூறிய வரிசைப்படி தியானத்தை கடைபிடியுங்கள் வெற்றி பெறுவீர்கள், ஒரு நல்ல குருவிடம் இருந்து கிடைக்காத ரகசியங்கள் எளிதில்  கிடைப்பதால் ஏளமாக விட்டு விடலாகாது .

உங்கள் சுயஅறிவாள் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு , இந்த நூலில் உள்ள தகவல் எல்லாம் வெறும் காது வழி செய்தி அல்ல , முற்றிலும் அனுபவசாலிகளின் காலசுவடுகளின் ஆராய்ந்து அனுபவித்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

 

படித்ததில் பிடித்ததுimages-6

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s