யோகம்

யோகம் என்றால் என்ன?

ஸ்ரீ அரவிந்தர்

யோகம் மனிதப் படைப்பின் தற்காலப் புதுப் படைப்பு அன்று. அது நமது பண்டைய வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட சொத்தாகும்.

வேதமே இப்போதுள்ள நூல்களிலெல்லாம் பழமையானது. ஒரு நோக்கில் வேதம் என்பது யோகம் தொடர்பான அனுபவக் குறிப்புக்களின் பெரியதொரு தொகுப்பாகும்.

எல்லா மதங்களும் வேதமாகிய வேரிலிருந்து மலர்ந்த மலர்களே. எல்லாத் தத்துவக் கொள்கைகளும், கவிதையும், எல்லா மேதாவிலாசப் படைப்புகளும், உணர்ந்தோ உணராமலோ வேதத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன.

http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-7693223566813123&format=300×250&output=html&ad_type=image&url=http%3A%2F%2Ftamil.webdunia.com%2Farticle%2Freligious-thoughts%2F%25E0%25AE%25AF%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9-111103100036_1.htm&dt=1480985368985&correlator=2758804057005&ref=https%3A%2F%2Fwww.google.co.in%2F&ifi=1யோகத்தின் மூலேம கடவுள் உலகத்தைப் படைத்தார். யோகத்தின் மூலமே மீண்டும் அதைத் தம்முள் இழுத்துக்கொள்வார் என்று நம்புகிறோம். யோகமே எல்லாப் பொருட்களின் தோற்றமும் ஒடுக்கமும் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்குத் தன் படைப்பின் பெருமையையும், அதை எவ்வாறு முரண்பாடுடையவைகளைச் சமரசப்படுத்துவதன் மூலம் படைத்தான் என்பதையும் வெளிப்படுத்தியபோது, “இதோ எனது திவ்யமான மாயையைப் பார்”என்று கூறுகிறான்.
யோகம் எனும் சொல்லுக்கு பொதுவாக நாம் குறுகிய பொருளே சொல்லுகிறோம். அதை உபயோகிக்கும்போதும், பிறர் சொல்லக் கேட்கும்போதும் பதஞ்சலி முனிவரின் இராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம். இவை ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே.

கங்கையிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் கங்கை ஆகிவிடாது என்பதுபோல் இம்முறைகளே யோகம் ஆகிவிடாது.

சுவாசப் பயிற்சியைப் பற்றியோ, ஆசனங்களைப் பற்றியோ நினைக்காமலே யோகம் செய்யலாம். ஒருமுனைப்படுதல் (தாரணை) தேவையில்லாமல், முற்றிலும் விழித்த நிலையில், நடக்கும்போது, கடைமையாற்றும்போது, சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பிறருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலை செய்துக்கொண்டிருக்கும்போது, உறங்கும்போது, கனவு காணும்போது, உணர்வற்ற நிலையில், அரை உணர்வு நிலையில், இரட்டை உணர்வு நிலையில் எப்போதும், எந்நிலையிலும் யோகம் செய்யலாம். அது ஒரு மருந்துச் சரக்கோ, ஏதோ குறிப்பிட்ட முறையோ, பயிற்சியோ அன்ற

ு;அது நித்தியமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு காரியம்;அது பிரபஞ்சத்தின் இயல்பிலேயே அமைந்துள்ளது.

ஆனாலும், நடைமுறையில், யோகம் என்ற சொல்லை, நித்தியமாய் நடந்துகொண்டிருக்கும் இந்தப் பொது நியதியை அல்லாமல், குறிப்பிட்ட இலட்சியங்களை அடையப் பயன்படுத்தும் விசேட முறைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் பயன்படுத்துகிறோம்.

யோகம் அடிப்படையான இந்த உண்மையின் மேல் நிற்கிறது; இவ்வுலகில் நாம் எங்கும் ஒன்றாகவும், அதே சமயம் பிரிந்தும் இருக்கிறோம்;எல்லா உயிரிணங்களுடன் ஒன்றாகவும், அதே சமயம் வேறாகவும் இருக்கிறோம்;இயற்கை என்றோ, கடவுளென்றோ, பிரம்மனென்றோ நாம் அழைக்கும் அந்த அனந்தப் பொருளுடன் ஒன்றாகவும், அதே சமயம் பிரிந்தும் இருக்கிறோம்.

ஒரு உடலிலிருக்கும் ஆன்மா பிற உடல்களிலுள்ள ஆன்மாக்களுடனும், விழித்த உணர்வுக்குப் பின்னுள்ள தனது பிற பாகங்களுடனும், இயற்கைப் பொருட்களுடனும், சக்திகளுடனும், இவ்வுலகை ஆளும் பரம ஞானம், பரம சக்தி, பரம ஆனந்தத்துடனும், வேறெதற்குமின்றி அந்த ஐக்கியத்திற்காகவே அல்லது தனது உடல், உயிர், மனத்தின் ஞானம், சக்தி ஆனந்தத்தைக் கூட்டுவதற்காக ஆற்றல்மிக்க ஐக்கியம் அடையும் திறனே யோகம் ஆகும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நமது உள் ஜீவனையும், ஜீவனின் புறப்பகுதிகளாகிய மனம், உயிர், உடலையும் ஒழுங்குபடுத்தும் எந்த முறையையும் யோக முறை என்று கூறலாம்.

படித்ததில் பிடித்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s