Archives

மாபெரும் ரகசியம்

முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த
#சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.

எப்போதும் இளமையாக வாழ இரசவாத முறை மூலம் பல மூலிகைகளை கண்டறிந்து
#காயகல்பம் என்ற மருந்துகளை தயாரித்து உண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

மேலும் #மரணத்தை_வெல்ல பல்வேறு யோக வழிமுறைகளை கண்டறிந்தனர்.

அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல. விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவகை யோகமே லம்பிகா யோகம் ஆகும்.இதனை யோக நூல்கள்
#கேசரி_முத்திரை என்று அழைக்கின்றன.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன. பாம்பு, அரணை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும். அந்த மாதிரி நிலையில் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும். அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன.
உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.

சித்தர்கள் இந்த லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்.பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.தான் நினைத்தபோது உடலை நீக்கி இறைநிலை அடைந்தார்கள்.

இனி லம்பிகா யோகம் பற்றி விரிவாக காண்போம்.

ராஜ நாகம் நல்ல பாம்பு இவ்விரண்டு வகைப் பாம்புகளும் புற்றுக்குள் நுழையும்போது தலையை வெளியே நீட்டிக்கொண்டு வால் பகுதியை முதலில் நுழைத்து
தலைகீழாக புற்றுக்குள் செல்லும்.

இவ்வாறு புற்றுக்குள் சென்றவுடன் அவைகளின் இரட்டை நாக்குகளில் ஒன்றை உள்நாக்கு வழியாக மேலண்ணத்தில் நுழைத்து உச்சந்தலையில் வைத்துவிட பசி தாகம்,குளிர்,மழை போன்றவற்றால் பாதிக்கப்படாமல் வாழும்.

ஊர்வனவற்றில் பாம்பு, அரணை, உடும்பு இவற்றுக்கு இரட்டை நாக்குகள் உள்ளன.

சாதகமான பருவநிலைகளை தோலின் உணர்வுகள் மூலம் அறிந்துகொண்டு மற்றொரு நாக்கின் மூலம் தலைக்குள் செலுத்திய நாக்கை எடுத்துக் கொண்டு உடல் உணர்வு நிலையடைந்து வெளியே வரும்.

இதேபோல சித்தர்களும் தங்கள் நாக்கின் அடிப்பாகத்தை அறுத்துக்கொண்டு நாக்கின் நீளத்தை கூட்டி மேலண்ணத்தின் வழியாக தலையின் மேல்பகுதியில் கொண்டுவந்து,இடை பிங்களை என்ற இரு நாசிகளின் மூச்சை நிறுத்தி,நடுநாடி என்று அழைக்கப்படும் சுஷும்னா நாடி வழியே நாக்கை செலுத்தி கபாலத் தேன் என்று அழைக்கப்படும் புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் திரவத்தை கட்டுப்படுத்தினால் இவ்வுடல் மரணம் அடைவதில்லை மூப்பு அடைவதில்லை,என்றும் இளமையாக வாழலாம்.ஜீவசமாதிநிலை அடையலாம்.

“ஜீவன்” என்றால் உயிர். “சமாதி” என்றால் சமன் – ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

சில யோகிகள் காடுகளுக்கு சென்று இலம்பிகா யோக நிலையில் அமர்ந்து விடுவார்கள்.அவர்களது உடலில் கரையான்,மண் புற்றுகளால் மூடப்பட்டாலும் மரணமின்றி பல ஆண்டுகள் யோக நிலையில் அமர்ந்திருப்பார்கள்.

இந்த யோகத்தை தகுந்த குருவின் மூலம் தான் படிப்படியாக கற்க வேண்டும்.காரணம் நாகங்களில் இரட்டை நாக்கு இருப்பதால் மேலே சென்ற ஒரு நாக்கை இன்னொரு நாக்கால் இழுத்து விட்டுக் கொள்ள முடியும்.

ஆனால் மனிதர்களால் உட்சென்ற நாக்கை குரு அல்லது இன்னொரு நபர் தலையில் ஓங்கி வேகமாக அடித்தால்தான் சாதாரன நிலைக்குவரமுடியு.

இந்த யோகத்துக்கு #சர்ப்ப_சாம்பவி_
மகா_உபதேசம் என்று நாகாலாந்து யோகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

லம்பிகா யோகம் பற்றிய சித்தர் பாடல்களை கீழே படித்துப்பாருங்கள்.

#இடைக்காட்டு_சித்தர் பாடல் வரிகள்…

“அண்ணாக்கை யூடே அமுதுண்ணேன்
மெய்ஞானம் ஒன்றன்றி வேறே ஒன்றை நண்ணேன்”-

இதன் பொருள்; நாக்கை நடு நாடியுள் செலுத்த கபாலத்தேன் சுரக்கும்.அதனைக் கட்டுப்படுத்தினால் மெய்ஞானம் பிறக்கும்.

சித்தர் #சிவவாக்கியர் பாடல் வரிகள்

“ஆக்கை மூப்பதில்லையே யாதிகார ணத்தினாலே
நாக்கை மூக்கை யுள் மடித்து நாத நாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையு மிக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப் பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்ம மாகுமே”

இதன் பொருள்;
நாக்கை இழுத்து வெட்டிவிட்டுக் கொண்டு
மேலண்னத்தில் மூக்கிற்கு உள் உள்ள குருநாடியுள் செலுத்தி
இடை பிங்களையாகிய வலது இடது நாசி சுவாசத்தை நிறுத்தி
நடுநாடியாகிய பிரம்ம நாடியுள் சுரக்கும் திரவ சக்தியை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டால் இவ்வுடம்பு மூப்பு அடைவதில்லை. வயோதிகம் அடைவதில்லை.எங்கும் நிறைந்த இறைவனை பார்க்கும் இடங்களில் எல்லாம் உணர்ந்தறியலாம்.

அட்டாங்க யோகத்தில் எட்டு விதமான
யோகநிலைகளைக் கூறியபிறகு மேலும் சில
யோகவகைகளைத் திருமூலர் கூறியிருக்கிறார்.

கேசரி என்பதற்கு சிங்கம் என்றும் ஆகாயம் என்றும் பொருள்.

கேசரியோகமாவது சிங்கத்தைப் போல்
பார்வையை மேல்நோக்கிச் செலுத்தியிருப்ப
தாகும். இந்த யோகத்தால் சீவன் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவதால் கேசரியோகம் என்று பெயர் பெற்றது.

கேசரியோகத்தை மூன்று விதமாகப் பயிலும்
முறையைத் திருமூலர் விளக்குகிறார். அது
அடயோகம், இலம்பிகாயோகம் மற்றும்
இராஜயோகம் என்ற மூன்று பிரிவில்
அடங்கும். உடலை வருத்திப் பிராணாயாமம்
பயிற்சி செய்து தேக சித்தி அடைந்து சமாதி
நிலையைப் பெறுதல் அடயோக முறையாகும்.

இலம்பிகா யோகப் பயிற்சியால் இலய யோக
முறையில் நாக்கை மடித்து உள்நாக்குப்
பிரதேசத்தில் உள்ள துவாரத்தை அடைத்துப்
பிராண செயம் பெற்றுச் சமாதி நிலையைப்
பெறுதல் இரண்டாவது வகையாகும்.

இனி மூன்றாவது முறை அறிவினால் அகண்டப் பொருளைத் தியானம் செய்து கண்டப் பொருளாகிய தேகத்தில் சக்தியை மாற்றி விடுவதில் சமாதி நிலை அடைதல்
இராஜயோகம் ஆகும்.

ஆக, இம் மூன்று வகையான பயிற்சியாலும் அடையும் பயன் சமாதிநிலை என்ற ஒன்றேயாகும். இந்த முறை சாதகனின் தகுதியைப் பொறுத்து அமையும்.
இலம்பிகா யோகம் தான் கேசரி முத்திரை
யோகமாகச் சொல்லப் படுகிறது.

கேசரி முத்திரை யோகம் பயிற்சி.

சாதகர் ஆசனத்தில் அமர்ந்து நாவின் நுனியைன்அண்ணாக்கின் மேல் வீசியிருக்க வேண்டும்.

இங்கு நாக்கை மடித்து அண்ணாக்கில் ஏற்றிச் செய்யும் முறையான இலம்பிகா யோகத்தைத் திருமூலர் சொல்லுகிறார்.

அவ்வாறு சாதனை செய்து வந்தால் பிராணன் அண்ணாக்கின் வழியாக பிரம்மரந்திரம் செல்லும். அதுவே சீவனும் சிவமும் உறைகின்ற இடமாகும். அங்கே
பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும்
முப்பத்து முக்கோடி தேவரும் உள்ளனர்.

இந்த நிலையை அடைந்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார்கள்.

நாவில் நுனியை நடுவே விசிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி யூனே
-திருமந்திரம் 803.

இவ்வாறு நாவை மடித்து மேலே
ஏற்றியிருக்கும் போது பிராண அபானன்களாகிய இரண்டும் அண்ணாக்கின் வழியாக மேலே செல்லச் சுழுமுனை திறக்கும் என்று திருமூலர் கூறுகிறார்.

அச்சாதகர் நரை திரையின்றிப் பாலகனாகவே வாழ்வார்.

இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு நாவினை மேலேறும் படிச்செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் சந்தித்திருப்பின் அச்சாதகர் உலகம் முழுவதும் ஆள்வார்.

அவரது பிராணன் இலயமடைந்து உடலோடு
பொருந்தியிருக்கும் அறிவு விடுபட்டு
நிற்கும். நடு நாடியின் உச்சியில் பொருந்தி
உடலறிவு நீங்கி நிற்கும் சாதகரே
உண்மையான அக்கினிக் காரியம்
செய்தவராவார்.

“நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே”
-திருமந்திரம் 806

நாவினால் சாதனை செய்து இன்பத்தைக்
கண்டவர் நடுநாடியின் கோணலை நிமிர்ந்து
நிற்கச் செய்து இந்த ஊனுடலிலேயே
அமுதத்தைக் காண்பர்.

அவ்வழியாகச் சென்று அமுதத்தைப் பருகிச்
“சிவாயநம” எனச் சிந்தித்திருப்பார்க்கு கங்காப் பிரவாகம் போன்ற ஒளி முகத்தின் முன் பெருகும். அந்த ஆகாய கங்கையில் மூழ்கித் திளைத்திருங்கள் என்கிறார் திருமூலர்.

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுச்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும் வழி வாய்ந் தறிவீரே
-திருமந்திரம் 807

இந்த நிலை எய்தியவரது உடம்பே
சிவனுறையும் கோயிலாகும்.

“ஊனுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில் ”
என்றும் திருமூலர் கூறுவதையும் தெரிந்து
மிக மகிழவும்.

எந்தையே யீசா உடலிடங் கொண்டாய்” என்ற
மாணிக்க வாசகரது வாக்காலும் இவ்வுடம்பு
சிவன் உறையும் கோயிலாகும் என்பது
புலனாகிறது.

ஆற்றலையுடைய சக்தியும்
சாதகருக்கு விளங்குவாள்.
அப்போது உண்மை ஞானம் விளங்கிச் சாதகர் சிவசக்தியோடு பொருந்தியிருக்கும் நிலை உண்டாகும்.

இச்சாதகருக்குப் பிராணன்
கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். அவரது சிரசின் மேலுள்ள சகஸ்ர தளம் விரிந்து விளங்கிப் பூமண்டலத்தில் நீடூழி வாழ்வர்.

எவன் கேசரி முத்திரையால் அண்ணாக்கின்
அடியில் உள்ள துவாரத்தை அடைத்து
விடுகிறானோ அவனுக்கு அமுத வடிவான
வீரியமானது யோனி வடிவ அக்னியில்
வீழ்வதில்லை. பிராண அபானன்களாகிய
காற்றும் அலையாது நிலை பெறுகின்றது.
மற்றும் அவனுக்குப் பசி உண்டாவதில்லை.
அவன் மரிப்பதே இல்லை என்று அறிக. இந்தக்ன்கேசரி முத்திரையை குருவிடம் கேட்டு
அதன்படி நன்றாகப் பயின்று அதன்
உண்மையைத் தெரிந்து கொண்டவனுக்கே
இவ்விதப் பயன்கூடும்.

அங் முத்திரை விளையாட்டாக செய்தால்
தானாகவே நாக்கு உள்நோக்கி செல்லும். தவம் செய்யும் போது அங் முத்திரை செய்து
பழகினால் இயல்பான நிலையில் தானாகவே நாக்கு உள் நாக்கிற்கு மேலே தொடும். அங் முத்திரை செய்வது மிகவும் எளிது . நாக்கை மடித்து மேல் தொண்டையில் நாக்கின் நுனி படுமாறு வைப்பதே அங் முத்திரை.
அந்த சமயத்தில் அமிழ்தம் சொட்டு சொட்டாக
சுரக்கும். அமிழ்தம் தேன் போல இனிக்கும்.
அந்த இனிப்பு சுவையே அமிர்தம்
என்கிறார்கள். இதையே பேரின்பம் என்று
கூறுகிறார்கள். அமிழ்தம் சுரந்துவிட்டால் பசி
எடுக்காது. 24 மணி நேரமும் அமிழ்தம்
அண்ணாக்கு மேலே சுரப்பதனால் பசியை
வெல்லும் தன்மை வரும். கேசரி யோகம் சித்தி ஆகும். பசிக்கு உணவே கிடைக்கவில்லை என்ன நிலை வரும்போது எவர் உதவியையும் தேட வேண்டியதில்லை. ஒரு மண் புழு தனக்கு தானே recycling செய்து கொள்வது போல மனிதனும் தனக்கு தானே உயர் சக்தியைன்recycling செய்து கொள்ளலாம்.

அந்த சமயத்தில் மூச்சு காற்று மூக்கின்
வழியாக செல்லாது. அதற்கு பதிலாக
சுழுமுனை நாடி திறந்து முதுகுதண்டு
மூலமாக செல்லும். சுழுமுனை நாடி
திறந்துவிட்டால் மரணம் இல்லை. மரணத்தை
வென்ற மகான்கள் இந்த உலகில் இருக்க
விரும்ப மாட்டார்கள் . அவர்கள் உடம்பில்
இருந்து உயிரை பிரித்து சிவகலத்தில் ஐக்கியம் ஆகிவிடுவார்கள். அதுவே முழுமையான வீடுபேறு.

★யோகம் என்பதை விளையாட்டாக செய்ய
வேண்டியது தான். எதையும் serious ஆக
செய்தால் ஆபத்து. முனிவர்கள் , சித்தர்கள் அட யோகம் செய்வார்கள். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்கள் கடும் தவம் செய்ய வேண்டிய தேவை இல்லை . எந்த செயலையும் தியானமாக மாற்றலாம். நடக்கும் போது,ன்உண்ணும் போதும் , உறங்கும் போதும் சிவலயத்தில் இருந்தால் அது 24 மணி நேரமும் தவம் செய்ததற்கு சமம்.

பதஞ்சலி மாமுனிவரைப்
போலவே திருமூலரும் அஷ்டாங்க
யோகத்தைப்ன்பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார்.
அவர் மேலும் நான்கு உன்னதமான
யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார்.
அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால்
இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத்
தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம்.

மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம்,
அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க
யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம்
எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள்
இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.

பொதுவாக இது இராஜயோகம்
என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல்
நான்கு கிரியாயோகம், அடுத்த நான்கும்
இராஜயோகமாகும்.முதல் நான்கும்
உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும்.
முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர்
தந்திருக்கின்ற உன்னதமான மற்ற
நான்கு யோகங்களை கைகொள்வதற்கு
முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத்
தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.
திருமந்திரம் -779.

அண்ணாக்கை ஊடே அடைத்து
அமுதுண்ணேன்
அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.

சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப் பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. – தாயுமானவர்.

கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம்
கூடிய முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் – அருணகிரிநாதர்.

மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்.

கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன்
கண்நரம்புகளை வலுப்படுத்தும்
பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும்
நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை
கொஞ்சம் கொஞ்சமாக
அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து
வரவேண்டும்.
நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல்
நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற்
கொள்ள வேண்டும்.

வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும்.
பார்வையை புருவ மத்தியில் குவிக்க
வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக
வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது
கைகளை வைத்துக்கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக்
கொண்டு சுழுமுனை தியானம்
செய்து வரவேண்டும்.

நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம்
சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம்
சித்திக்கும். தொலைவில் நடக்கும்
விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர்
சொல்கிறார்.

நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை
செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய
அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு
அண்ணாக்கின் மேல் துவாரத்தில்
நாக்கை நுழைத்தவுடன் உடல்
மறதி ஏற்பட்டுவிடும்.
மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள்
ஆனாலும் உடல் அழியாது, உயிரும் பிரியாது.
இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க
முடியாது. நகமும், முடியும்
வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப்படுகிறது. தேரை, கருநாகம்,
நல்லபாம்பு போன்ற உயிரினங்களும்
உணவு கிடைக்காத போது இந்த
பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப்
பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல்
உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு
கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக்
கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர்
உதவியோடு மெதுவாக வாயைத்
திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை
கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத்
தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான
மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.

சந்திர யோகம்.
*****************

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் கால் வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே.
திருமந்திரம்- 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர
மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம்.

மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள
சூரியனோடு இணைத்து, அந்த
சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர
வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும்.
சூரியனும், அக்கினியும் உஷணமானவை.
சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம்
குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம்
உண்டால் காலத்தை வெல்லலாம்,
சிவகதி அடையலாம். சந்திர
யோகத்தை பிழையில்லாமல் செய்தால்
ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.

சந்திர யோகி காமத்தை வெல்வார்.
அவரது விந்து விரையமாகாமல்
மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால்
எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில்
ஒளியேற்றும்.

ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும்
இருநாடி வழியாக பிராணன் இயங்குவது
போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும்.
அதுவே சந்திரயோகம்.சந்திர
யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று
திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான்.
விஸ்வாமித்திரர் சூரிய கலையையும்,
வசிஷ்டர் சந்திரகலையையும்
பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

சந்திர யோகத்தில் அமரும் விதம்.
வலது காலை அடியில் வைத்து,
இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு
நேரே இருக்கும்படியாக
அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும்
போது சுவாசம் இடது பக்கமாக ஓட
ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல்
குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால்,
வலது காலை மேலே வைத்து,
இடது காலை கீழே வைத்து பருவ
மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது.
வலது மூக்கில் சுவாசம் வரும்
வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள
வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம்
ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக்
கொள்ளலாம்.

பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல
மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில்
இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும்
எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர
கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும்
தினமும்இருவேளை அதாவது சுமார்
ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ,
ஞானியாகவோ விரும்புபவர்கள் 24
மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக்
கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம்
எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும்,
எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல்லார் இச் சசிவன்னராமே.
திருமந்திரம் -874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது.
படித்து உணர்ந்து பயனடையுங்கள்.

குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும்.
இல்வாழ்வையும், யோகவாழ்வையும்
இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க
யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர்.

ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல,
ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல்
ஐக்கியமாவதே பரியங்க யோகம்.
இதைக்குறித்து திருமந்திரம் – 825- 844
வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.

அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம்
என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.
பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும்
என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும்
சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850
வரை இதைக்குறித்த விளக்கங்களைக்
காணலாம்.

முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல
ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று
குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம்
மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

அதாவது ஒவ்வொரு மனிதனிடமும்
இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி.
குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப்
பெயர் வந்தது என்ற கருத்தும் உண்டு.
குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார்.
மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி,
வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.

★குண்டலினிச் சக்தியை மூலாதாரச்
சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர். பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும்.

ஞானவாசல் திறந்தது என்று சொல்வது
இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும். இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது
ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும்
அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன.
சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம்,
சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற
ஓசைகளைச் சாதகர்கள் கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.

★ இறுதியாக #பகவத்_கீதை ஸ்லோகம் கூறி இந்த பதிவை நிறைவு செய்வோம்.
“எவனொருவன் இறக்கும் நேரத்தில் தன் யோக சக்தியால் உயிர் மூச்சை புருவ மத்தியில் நிறுத்தி உடலை விடுகிறானோ அவன் இறைவனின் புனிதமான ஆன்மீக உலகை அடைகிறான்” -அத்தியாயம்8 ,ஸ்லோகம் 10.

– படித்தில் பிடித்தது

Advertisements

வினைப்பயன்களும் காசி, பிரயாகை, திரிவேணி யாத்;திரைப் பலன்களும்

சிவப்புராணத்திலிருந்துsivasakthi_mini

வினைப்பயன்களும் காசி, பிரயாகை, திரிவேணி யாத்;திரைப் பலன்களும்

காசி தலத்தில் மடிந்தால் அந்தக் கணமே மோட்சம் அடைவான். பாபாத்மாவாக உள்ளவன் ,ங்கே மடிந்தால், சி;ல பிறவிகளை எடுத்துத் தன் பாபங்களைக் கழித்துப் பிறகே மோட்சம் அடைவான். காசிப் பதியில் பாபஞ் செய்தவன் பைசாச ரூபத்தை அடைவான். அத்;தகையன் பைசாச ரூபத்தை அடைந்து, கால பைரவ மூர்த்தியால் பத்தாயிரம் ஆண்டுகள் தண்டிக்கப் பட்டுக் கஷ்டம் அடைந்து, அதன் பிறகே மோட்சம் அடைவான். காசிப் பதியில் பாபஞ் செய்தவனாயினும் ,தர ,டங்களிலும் உள்ள பாவிகளின் கதி ,துவேயாகும். எனவே ,தையறிந்து ,ந்த அவிமுக்தப்பதியை அடையவேண்டும். அவ்வாறு அடைந்து எம்மைச் சேவித்துக் கொண்டிருப்பவன் ,றுதியில் மோட்சமடைவான். பிராயச்சித்தங்களால் அழியாத கர்மங்களைச் செய்தவன் கற்பகோடி காலங்கழிந்தாலும் அதை அனுபவித்தேயாக வேண்டும். அசுபமான பாபகர்மங்கள் ஒருவனை நரகத்தையடையச் செய்தும் விடும். புண்ணிய கருமங்கள் சுவர்க்காதிலோகங்களை அடையச் செய்யும். புண்ணிய கர்மங்கள், பாப கர்மங்கள் ஆகியவை கலந்த மிஸ்ர கர்மங்கள் உலகில் மனிதர்கள், பசுக்கள், பறவைகள் முதலிய பிறவிகளை அடையச் செய்யும். தான் அடைந்த பிறவி உயர்ந்ததாயினும் தாழ்ந்ததாயினும் புண்ணிய பாபங்கள் நசித்தாலன்றி முக்தியையளிக்க மாட்டாது. அவை ,ரண்டும் ஒழிந்த பிறகே மோட்சம் உண்டாகும்.

நற்கருமங்கள் மூவகைப்படும். அவைகளில் பஞ்சக் குரோச சேத்திரம் (காசி) முதலிய புண்ணியபூமியில் பிரவேசம் செய்தல், தியான பூஜைகளால் வருவன ஒன்று. கர்ம நிவாரணப்படிப் பிராயச்சத்தங்களைச் செய்து கொண்டு பாபங்களை ஒழித்தல் ,ரண்டு. சர்வ கர்மங்களும் நீங்குவதற்காக என்னிடமே தன் கிரியைகளையெல்லாம் சமர்ப்பித்து, என்னைச் சேவித்துக் கொண்டு ,ந்த சேத்திரத்திலேயே வாசஞ் செய்வது என்பது மூன்றாவதாகும். ,வற்றால் பாபங்கள் நீங்கும்.

கர்மங்கள் மூவகைப்படும். அவை சஞ்சிதம், பிராரத்வம், ஆகாமியம் எனப்படும். அவற்றில் பூர்வ ஜன்மத்தில் செய்தவை சஞ்சிதம். அந்தச் சஞ்சித வினையால் வேறு பிறவியை அடைந்து அனுபவித்தப் புகும் சுபாசுப கர்மமே ஆகாமியம். அந்த ஆகாமியம் உடலால் அனுபவிக்கப்படும்போது பிராரத்துவம் என்பர். ,ந்தப் பிராரத்துவமானது அனுபவியாமல் நாசமடையாது. பாபமில்லாமலே எந்தத் தேகத்திற்கும் கஷ்டம் வராது. துக்கமயமாகக் காணப்படும் யாவுமே பாபமயந்தான் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்தத் துக்கம் ஸ்தூல துக்கம், சூக்கும துக்கம் என்ற ,ருவகையாக, அந்தப் பாபத்தாலேயே உண்டாகும். பாபமே ,ல்லாவிட்டால் எந்தக் காலத்தி;லும் ஒருவன் சுகமாகவே ,ருப்பான். ஓரிடத்தில் சுபமே விருத்தியாகும். ஓரிடத்;தில் பாபமே நசித்திருக்கும். ஓரிடத்;தில் பாபங்களே விருத்தியாகிக் கொண்டிருக்கும். ,க்கர்மங்கள் எல்லாம் நலிய வேண்டுமானால் காசி நகரத்தைவிட வேறு ஓர் ,டமும் கிடையாது. உலகத்தில் பற்பல புண்ணிய சேத்திரங்கள் ,ருந்தாலுங்கூட காசியம்பதியிலே வாசஞ் செய்ய வேண்டும் என்று நினைப்பவருக்கு அது விசேஷப் பிரயாசையோடும் கிடைப்பதற்கு அரிது. ஒருவன் காசிக்குப் போக வேண்டும் என்று நூறு பிறவிகளில் முயன்றாலுங்கூட அந்தப் புண்ணிய தலத்தை தரிசிக்க அவனுக்கும் பற்பல தடைகள் ஏற்படும்.

காசித் தலத்தை அடைந்து கங்காஸ்நானம் செய்பவன் ஆகாமிய சஞ்சிதங்களை ஒழிப்பானாயினும் உடல் உள்ளவரையில் விடாமல் அவை தொடருமாதலால் பிராரத்துவத்தை அனுபவித்தே தீரவேண்டும். அங்கே மரணமடைந்தவனுக்குப் பிராரத்துவம் ஒழியும். மரணம் அடையும் போது ஒருவனுடைய மனமானது அவனது கர்ம வசத்துக்கேற்பவே ,யங்கும். அந்தக் கர்மத்திற்கு மூன்று பாவங்கள் உண்டு. அவை மூன்றும் காசியை அடைந்தபோதே காலொடிந்து பின்தொடரக் கூடாதவையாக ஆகின்றன. அவனது மனமும் அந்தத் தீர்த்தத்திலே ஐக்கியப்பட்டு விடும் தீர்த்த ஸ்நானப் பலனும் அந்தத் தலத்தின் சிறப்பால் சிவத்தியானஞ் செய்த பயனும் ஆகிய ,ரண்டு பயன்களின் வலிமையால் மோட்சம் கிட்டும் என்று சுருதிகள் சொல்லுகின்றன.

முதலாவதாகக் காசியாத்திரை செய்து அதன் பிறகு பாபஞ் செய்தவன், முன்பு தான் செய்த காசி யாத்திரையின் புண்ணியத்தால் அந்தப் பாபம் நீங்கும் பொருட்டு மீண்டும் அவன் அந்தக் காசித் தலயாத்திரை செய்யும்படிப் பலவந்தமாகக் கொண்டு செல்லப் பெற்று சகல பாபங்களையும் தீப்பொறி சிதறி விழுந்த பஞ்சுப் பொதி போல தகிக்கச் செய்வான். ஆகையால் கர்ம நிர்மூலம் செய்யத் தக்கதான காசித்தலத்தை எவ்வாறாவது முயன்று சேவிக்க வேண்டும்.

,வ்வாறு சிவபெருமான் சொல்ல பார்வதிதேவி அவரை நோக்கி மீண்டும் வினவலானாள்.

‘நாதா! பிரயாகையில் உயிரை விட்டவன் தன் ,ஷ்ட காமியங்களை அடைவான் அல்லவா? திரிவேணி (கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகள் கலக்கின்ற பகுதியில்) திரிவேணி பூஜையும் விஸ்வேஸ்வர பூஜையும் செய்து, காசித்தலத்தில் ,றந்தவர்கள் அடையும் பயன் யாது? பிரயாகை ,ஷ்டகாமியங்களைக் கொடுப்பது, காசி முத்தியைக் கொடுப்பது, பிரயாகையில் மாதவன் ,ஷ்டகாமியங்களைக் கொடுக்க, காசியில் நீங்கள் முக்தியைக் கொடுக்கவும் ,ருக்கிறீர்கள். நீங்கள் சர்வ மங்கள ஸ்வரூபியாகையால், ,ந்தச் சந்தேகத்தைப் போக்கியருள வேண்டும்!’

பார்வதி! காசியில் ,றந்தவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. பிரயாகையில் ,றந்தவனுக்கு ,ஷ்டகாமியங்கள் கைகூடுவதும் நிச்சயம். காசிக்கு வந்து பிறகு பிரயாகைக்குப் போவதானால் காசி யாத்திரை செய்த பயன் வீணாகி விடும். பிரயாகைக்குப் போகாவிட்டால் திரிவேணி சங்கம தரிசன பயனில்லாமற் போகும். பிரயாகையி;ல் ,றந்தாலும் மோட்சகாமியாக ,ருப்பானாயின் அங்கேயே முக்தியும் கைகூடும். ,வ்வாறேயன்றி வேறல்ல என்று சிவபெருமான் கூறினார். பார்வதிதேவி மகிழ்ச்சியடைந்தாள். அது முதல் சிவபெருமான் விஸ்வநாதர் என்ற பெயருடன் பார்வதி பிரமதகண சகிதமாகக் காசித்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

மகா சிவராத்திரி

“மகா சிவராத்திரி” எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 16.02.2015 திங்கட்கிழமை அன்று வட-அமெரிக்காவிலும், 17.02.2015 அன்று இலங்கை, இந்தியாவிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும்.  இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.

தனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் – மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் – விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும்.

பசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல்,  முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.  மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

நித்ய சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.

பட்ச சிவராத்திரி:
தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.

மாத சிவராத்திரி:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:
திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி :
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க “மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய “இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்” என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

sivan
த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்

என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.  “ஓம் நவசிவாய” என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி “சிவாய நம” என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

panilingkam

மகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்

1.  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.

2.  லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

3.  உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

4.  தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

5.  எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

6.  வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் “பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் “விஷ்ணு”. சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரமா, விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.
sivalingkam

சிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்
அடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.

பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர். இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.

வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.
சிவராத்திரியில் செய்யவேண்டிய அபிடேக ஆராதனைகள்

சிவராத்திரி விரத விதிகள்
சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.

நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை ”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே! தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.
பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.

சிவராத்திரி நன்னாளின் சிறப்பு
எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.

கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:

1.அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.

2.அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.

3.கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.

4.பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்

5.மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.

கண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.

“தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம். ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்.” என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.

நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக.

“மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே”
திருமந்திரம்

மஹா சிவராத்திரி விரதப்பலன்:
அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.

அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் தூ‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம், ஸ்ரீ கோகர்ணம் மற்றும் பணிப்புலம் வயல்கரை சம்புநாதீஸ்வரர் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள்,

1.  சுயம்புலிங்கம் – தானாகவே தோன்றியது.

2.  காணலிங்கம் – விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது.

3.  தைவிகலிங்கம் – விஷ்ணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது.

4.  ஆரிடலிங்கம் – இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது .

5.  மானுடலிங்கம் – மனுடராலே தாபிக்கப்பட்டது.

மானுடலிங்கத்திலும் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனிலும் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனிலும் உயர்ந்தது காணலிங்கம்; அதனிலும் உயர்ந்தது சுயம்புலிங்கம்.

சிவனாருக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு:
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலம்:
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.

லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.

மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ”இருநிலனாய் தீயாகி” எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.

நிகழ்வுகள்:

நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்திசிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம்.

விரதங்களில் கடுமையானதும் கட்டுப்பாடு மிக்கதும், நிறைந்த பலந்தருவதும் இச் சிவராத்திரி விரதமேயாகும். எனவே மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.

Copy from:http://panippulam.com

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள் தெரியுமா

ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)  

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கடவுளை அடைய எளிய வழி :

நாம் பரமாத்வாவை அடைய பல வழிகள் உள்ளன .உதாரணமாக ராஜா யோகம், பக்தி யோகம் , ஞானயோகம் மற்றும் கர்ம யோகம் என இன்னும் பல வழிகள் உள்ளன,

அவற்றுள் முக்கியமானது கர்ம யோகம் ,எவன் ஒருவன் கர்ம யோகத்தில் ஈடுபாடு இருந்தால் தான் மற்ற யோகங்களை தொட முடியும் .

கர்ம யோகம் என்றால் என்ன ? தன்னலமற்ற சேவை (Selfless service) .நம்மால் இயன்ற சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம்  நமது கர்மக்கள் குறைக்கபட்டு அடுத்த நிலைக்கு ஆன்மீக பாதைக்கு தடை இன்றி   அடியெடுத்து வைக்க முடியும், கற்கண்டு வாங்கி ஏறும்புக்கு பொதுவுது கூட ஒருவித உதவி தான் .படிக்க முடியாத ஏழை குழந்தைகளக்கு ,திருமணம் ஆக வசதி இல்லா ஏழை பெண்களக்கு உதவி என தங்களால் ஏயன்ற உதவிகளை செய்யலாம்.உதாரணமாக இந்து மதத்தில்  அன்ன தனம் ,கோ தனம் வஸ்திதிர தனம் ,என பல தனங்களை நாம் முன்னோர்கள் செய்துள்ள்னர் .

ஸ்வாமி சிவானந்தார் கூறுகிறார்  உன் சட்டைப்பையில் எப்போதும் சில பைசாக்களை வைத்துக் கொண்டு தினந்தோறும் ஏழை எளியவர்களுக்கு வழங்கு.ம்ற்றும் ஜப சாதனத்தால் சித்த சுத்தியும் ஏகாக்ரமும் உண்டாகும் திவ்ய கானத்தால் ஆனந்தம் உண்டாகும்.  சுயநலத்தையும் அகமபாவத்தையும் உதறித்தள்ளி தெய்வத்தைச் சரண்புகு.  நிசகாம்ய கர்மமும் பரோபகாரமும் செய்.  அருள் வளரும். முயற்சித்து பாருங்கள் அருள் வளரும்.