Archives

பாபங்களுக்கான பிறவிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா

தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு என்ற ஐந்து பிறவிகளில் பிறருக்கு உபகாரமாயிருந்தால் தான் மானிடப்பிறவி ஆறாவதாக வாய்கிறது.
1    உத்தமனாய் இருப்பவர்    தேவனாகிறார்
2    உத்தமனாய் இல்லையெனில்    முட்செடி, எருக்கு, ஊமத்தை போன்ற செடிகளாகிறார்
3    தருமவான்    தாவரமானால் கனி கொடுக்கும் மரமாவன்.  மூலிகைச் செடியாவான்  முப்பத்து முக்கோடி தேவர்களும் வாழும் அரசமரமாவான்.
4    வலையில் சிக்கிய மீன்    எவர் பசிக்காவது உணவாகி அடுத்த பிறவியை அடைகிறது ;
5    கோயில் புற்றுக்குள் இருக்கும் நாகம்    பலராலும் வணங்கும் பேறு பெறுகிறது
6    மற்றவரைச் சொல்லால் கொட்டுபவன்    விருச்சிகப் பிறவி அடைகிறான்
7    தன் குடும்பத்தை மட்டுமே பேணுபவன்    நண்டாக பிறக்கிறான்
8    குடும்பம், நாடு இரண்டுக்கும் பிரயோஜனப்படாதவர்    வெளவாலாக தொங்குகின்றான்
9    தன்னை அழகாக அலங்கரிப்பவர்கள்    மயிலாக, கிளியாக, புறாவாக ஜெனனமெடுப்பர்
10    கூர்மையான நோக்குள்ளவர்    வல்லூராக பிறப்பார்
11    பசியென்று வந்தவர்க்கு வசதியிருந்தும் அன்னமிடாதவர்    பருந்துப் பிறவி வாய்க்கும்
12    மற்றவரை எதற்காவது காக்க வைத்தவர்    கொக்காக பிறக்கிறார்
13    குருவை, சாஸ்திரம் படித்தவரை நையாண்டி செய்பவர்    புலியாக பிறக்கிறார்
14    நண்பனுக்கு துரோகம் செய்தவர்    நரியாக, கழுதையாக பிறக்கிறார்
15    காது கேளாதவரை இகழ்பவர்    அங்கஹீனனாக பிறக்கிறார்
16    தாகத்துக்கு தண்ணீர் தராதவர்    காக்கையாக பிறக்கிறார்
17    பிறரால் எற்பட்ட லாபங்களை தான் மட்டுமே அனுபவிப்பவர்    புழுவாகப் பிறக்கிறார்
18    விருந்தினருக்கு கொடாமல் ஒளித்து வைத்து அறுசுவை உண்பவர்    புpசாசாக அலைய நேரிடும்
19    பெற்றோர், இல்லாள், சந்ததிகளைக் கைவிட்டவர்    ஆவியாக அல்லாடுவர்
20    கொலை, கொள்ளை, செய்பவர்    100 ஆண்டுகள் ஆவியாக அல்லாடுகிறார்
21    தானம் கொடுத்ததைப் பறித்து கொள்பவருக்கு    ஓணான் பிறவி வாய்க்கிறது, அவர் மானிடப் பிறவி எடுக்கும் போதும் அற்பாயுளே வழங்கப்படும்
22    மற்றவர் பிழைப்பைக் கெடுத்து சுகம் அனுபவிப்பவர்    திமிங்கலமாக பிறக்கிறார், அடுத்தடுத்து முயல், மான் முதலான ஜென்மங்களில் உழல்கிறார்
23    தன் புத்திரியை தவறான செயலில ஈடுபடுத்துபவர்    மலத்தில் ஊறும் புழுவாகவும், அடுத்தடுத்து வேட்டைக்காரராகவும், காட்டுவாசியாகவும் பிறக்கிறார்
24    விரதம், சிரார்த்தம் முதலான புண்ணிய தினங்களில் சம்போகத்தில் ஈடுபடுபவர்    பன்றியாக, கோழியாக பிறக்கிறார்
25    கோள் சொல்பவர்    பல்லியாக, தவளையாக பிறக்கிறார்
26    உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காதவர்    அட்டைகளாகப் பிறந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றனர்
27    மாமிசம் புசிக்கின்றவருக்கு    சிங்கம், சிறுத்தை, ஓநாய் பிறவிகள் வாய்க்கின்றன
28    அநியாயமாக லஞ்சத்துக்கு வசப்பட்டு தீர்ப்பளிப்பவர்    கொசுவாக, ஈயாக, மூட்டைப்பூச்சியாக பிறக்கிறார்
29    தீய சொல்லும், பிறர் நிந்தனையும் பேசுகிறவர்    ஊமையாக பிறக்கிறார்
30    தெய்வ நம்பிக்கை இல்லாதவர்    பன்றியாக பிறக்கிறார் அடுத்தடுத்து பணியாட்களாக வாழ்க்கை நடத்தும் தலைவிதி வாய்க்கிறது

ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.

Advertisements

பாபங்களுக்கான வியாதிகள்-கருட புராணம்-ஸ்வாமி சிவானந்தா

1    ;யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்
2    எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.
3    வுpஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்
4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார்
5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்    தொழு நோயால் துன்பப்படுவார்
6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்
7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்
8    மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர்    உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்
9    பொருள்களில் கலப்படம் செய்தவர்கள்    வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்
10    மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர்    சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்
11    ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு    காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை
நோய்க்கு ஆட்படுபவர்
12    பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர்    பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால்
துன்புறுவர்.
13    வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால்    நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்

14    இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள்    பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.
15    வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர்    பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.
16    சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர்    மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்
17    சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர்    அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண்
உடையவராகவும் பிறப்பார்
18    சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர்    வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்
19    தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர்    ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய்
உள்ளவராகிறார்
20    ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர்    சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்
21    புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர்    வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.
22    உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர்    மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்
23    வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர்    ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்
24    காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள்    பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.
25    கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர்    உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்
26    பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர்    வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்
27    தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான  வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர்    தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்
28    பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள்    தொற்று நோய்க்குள்ளாவார்கள்
29    காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர்    நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்
30    ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர்    சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவர்

நல்வினைக்கான நன்மைகள்-கருடபுராணம் -ஸ்வாமி சிவானந்தா

1    அன்னதானம் செய்தல்    விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2    கோ தானம் செய்தல்    கோலோகத்தில் வாழ்வர்
3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு    கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு
4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்
5    தாமிரம,; நெய், கட்டில,; மெத்தை, ஜமுக்காளம், பாய,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும்    சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்
6    வஸ்திர தானம் கொடுத்தவருக்கு    10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்
7    இரத்தம,; கண,; உடல் தானம் கொடுத்தவருக்கு    அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்
8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு    இந்திரனுக்கு சமமான ஆசனத்;தில் அமர்ந்திருப்பார்
9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு    14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்
10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்
11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு    மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்
12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்    உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை
13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்
14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர்    சத்தியலோக வாசம் கிட்டுகிறது
15    ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவருக்கு    14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்
16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவருக்கு    குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்
17    பண உதவி செய்பவர்கள்    ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்
18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும்    ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19    பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர்    தபோ லோகத்தை அடைகிறார்
20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்
21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்    10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர்    இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்
23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவருக்கு    நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்
24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவருக்கு    ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்
25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்
26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர்    60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்
27    வுpரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்    14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்
28    சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர்    ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்
29    ஷோடச மகாலெட்சுமி பூiஐயை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30    இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் மிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஓழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.