Archives

சித்தர்களின் சாகாக்கலை

cropped-1003931_584721531594049_30580805_n.jpg 

சாகாக்கால் ;  வேகாத்தலை; போகாப்புனல்

பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே. பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில் இட்டார்களோ என்னமோ? சித்தர்களின் பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்துப் பாருங்கள்

சாவே போ

மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் புரிந்தால் சாவே போ என்றால் சாவு என்ற இறப்பு போய்விடும்.இவ்வளவு எளிமையாக இறப்பை போக வைக்க முடியுமா?
அப்படியானால் ஏன் யாரும் இதற்கு முயற்சிக்கவில்லை என்ற கேள்வி
உங்களுக்கு எழும் இல்லயா?

முயற்சிக்காமலா இத்தனை சித்தர்கள் நம் நாட்டில் தோன்றியுள்ளார்கள்!
அவர்கள் காட்டிய வழிகளை ரகசியமாக வாய்மொழியாக பல தலை முறையாக காப்பாற்றி வருகிறார்கள்.

திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்   சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டிமறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி    மதனகலி யாணதிரு வல்லி மாதுவரையெழுந்த பதினெட்டாங் கோட்டின்மேலு    மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றிகரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த  கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே

சாகாக்கால் செத்துப்போக வேண்டும்?
வேகாக்கால் வெந்து போக வேண்டும்?
போகாப்புனல் வற்றி போக வேண்டும்?
(புனல் என்றால் தண்ணீர் என்று பொருள்)

மேலே கண்ட இரண்டாவது படம் லிங்கோத்பவர் என்பது ஒவ்வொரு சிவன் கோவிலிலும் கருவறைக்குப் பின்னால் இருக்கும்.இது மிக ரகசியப் பொருள் விளக்கம் என்பதால் கருவறைக்குப் பின் வைக்கப்பட்டுள்ளது. அது சிவனின் திருமால் பன்றி வடிவமாக(வராக அவதாரம்)அடியையும் (கால்),பிரம்மா அன்னப் பட்சி வடிவில் முடியையும் (தலையையும்) தேடியதையும் விவரிக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.(அடி முடி தேடிய படலமாக புராணங்களில் வருணிக்கப்படுகிறது). அதில் ஜோதி வடிவமாகவும் பொருள் வடிவமாகவும் இறைவனான சிவன் (ஜீவன்) இருப்பதைக் காணலாம்.

கால் என்பதை காற்று என்றும் ;மூக்கில் மேலும் கீழும் வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ,சிந்தைதனில் ஒத்து ஆடாது,ஓடாது நின்று போய்விட்டால் மரணமிலாப் பெருவாழ்வு’ என்று பொருள் கூறுவார்கள். அதையே அவ்வையார் ‘வாசி வாசி என்று வாசித்த சிவம் இன்று சிவா சிவா என சிந்தைதனில் நின்று’ என்று பாடினார் . சரிதான்.ஆனால் ‘வாசிக்குதிரையேறி (மூச்சு) ஞான வேட்டையாட வேண்டுமே தவிர குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது’.அதாவது குதிரையின் கடிவாளத்தைப் பற்றி குதிரையோட்ட வேண்டுமேயல்லாது குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது. குதிரையின் கடிவாளம் எது ?

‘காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்திட்டால் கூற்றை உதைத்துக் குதித்தாட மாட்டேனோ? ‘ என்றொரு சித்தர் கூத்தாடுகின்றார்.

ஒரு கடினமான காரியம் இல்லை. சித்தர்கள் எல்லா (4448 வகையென வகுத்திருக்கிறார்கள்) நோய்களுக்கும் மருந்திருப்பது போல் இறப்பும் ஒரு வியாதியென்றும்.சாவு என்பதை மீறியவர்கள் சித்தர்கள்.எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் சாமீ(சாவை மீறியவர்) என அழைத்துக் கொண்டார்கள்.எங்கள் சித்த ஞான சபை உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் இவ்வாறே அழைத்துக் கொள்ளுவோம்.
அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்களும் இவ்வாறே சும்மா அர்த்தம் புரியாமல் அழைத்துக் கொள்ளுகிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளுக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன.இப்படி மூச்சு ஒரு கதியில் ஓடி விதியை உருவாக்கி வைத்து இருக்கிறது.ஒரு நாழிகையான 24 நிமிடங்களில்
360 மூச்சுக்கள் ஓடும்,அந்த 360 மூச்சுக்களும் வட்டத்தின் 360 டிகிரிகளையே குறிக்கும்.அதற்குள் நவகிரகங்களின் கதிரியக்கப் பாய்ச்சல் ஒருசுற்று முடிந்துவிடும்.அதனாலேயே ஒரு நாழிகைக்கு 24 நிமிடக்கணக்கு ஏற்படுத்தப்பட்டது.

216 உயிர் மெய்யெழுத்துக்களும் இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கின்றன.12 உயிரெழுத்துக்களும் வலது நாசியில் ஓடும் சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதைக் குறிக்கும்.ஒரு மாதத்தில் காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை சூரிய கலை 12 நாட்கள் மட்டுமே ஓடும்.அந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

உயிரெழுத்துக்களில்குறில் எழுத்து ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஐந்தை குறிக்கும்.நெடில் ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.வள்ளுவர் தமது குறட்பாக்களில் முதலடியில் 4 சீர்களையும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களையும் (3+4=7)ஏழும் ,அதிகாரங்கள் 133(1+3+3=7) ஏழும் நமது உடலில் உள்ள சக்கரங்கள் ஏழைக்குறிக்கும்.

18 மெய்யெழுத்துக்களும் இடது நாசியில் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திர கலையையும்,மனம்,உயிரையும் சேர்த்து 18 டை குறிக்கும்.இந்த 18 டையே,பதிணென் சித்தர்கள் என்றும் ,(பதி எண்ணும் சித்தர்கள் என்றும் குறிப்பிடுவர்),பதினெட்டுப் புராணங்கள் என்றும், யோக சாதன முறைகளி ஏற்படும் தடைகள்(நிலைகளும்) பதினெட்டு,அய்யப்பன் கோவில் படிகள் பதினெட்டு,பகவத் கீதையில் பதினெட்டுஅதிகாரங்களைக் குறிக்கும்,

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு வருடங்கள்,ராம ராவண யுத்தம் பதினெட்டு மாதங்கள்,மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாள்,சேரன் செங்குட்டுவன் இமவானுடன் யுத்தம் புரிந்தது பதினெட்டு நாழிகை, பதினெட்டாம் படிக்கருப்பசாமி என்றழைப்பதும் இதனால்தான், ஏன் பைபிளில் ஆகமங்கள் பதினெட்டு,அதே போல இடது நாசியில் மூச்சு காலையில் 6 மணியிலிருந்து 7 மணிவரை ஓடும் நாட்களும் ஒரு மாதத்திற்கு பதினெட்டு நாட்கள்.

copy from:http://www.machamuni.com/

Advertisements

குதம்பை சித்தர் !!!

kutham

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர்.

குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது.

இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார்.

ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி…இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார்.

அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை.

அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை.

அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்… தவம்… தவம்… எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான்.

குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!

தியானச் செய்யுள்:

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே

காலம்: குதம்பை முனிவர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும்.

படித்ததில் பிடித்தது

http://temple.dinamalar.com/

18 சித்தர்களின் வரலாறு

அகத்தியர்
குரு:சிவபெருமான்

காலம்:4 யுகம் 48 நாட்கள்

சீடர்கள்:போகர், மச்சமுனி

சமாதி:திருவனந்தபுரம்

18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.

போகர்
குரு:அகத்தியர்

காலம்:300 ஆண்டுகள், 18 நாட்கள்

சீடர்கள்:கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர்

சமாதி:பழனி

இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார். நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.

திருமூலர்
குரு:நந்தி

காலம்:3000 ஆண்டுகள், 13 நாட்கள்

சமாதி:சிதம்பரம்

63 நாயன்மார்களில் ஒருவர். மூலன் என்ற இடையனின் உடலில் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதமாக 3000 பாடல்களை கொண்டு திருமந்திரம் என்ற நூலை வழங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி அடைந்தார்.

வான்மீகர்
குரு:நாரதர்

காலம்:700 ஆண்டுகள், 32 நாட்கள்

சமாதி:எட்டிக்குடி, திருவையாறு

இவர் நாரத முனிவரின் சீடர். இராமாயண இதிகாசத்தை அளித்தவர். எட்டிக்குடு எனும் ஊரில் சமாதி அடைந்தார்.

தன்வந்த்ரி
காலம்:800 ஆண்டுகள், 32 நாட்கள்

சமாதி:வைத்தீஸ்வரன் கோவில்

இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார். இவர் ஆயுர்வேத மருத்துவ முறையை மக்களுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்தார்

இடைக்காடர்
குரு:போகர், கருவூரார்

காலம்:600 ஆண்டுகள், 18 நாட்கள்

சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

சமாதி:திருவண்ணாமலை

இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது பாடல்கள் உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையனதாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார்.

கமலமுனி
குரு:போகர், கருவூரார்

காலம்:4000 ஆண்டுகள், 48 நாட்கள்

சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்

சமாதி:ஆரூர்

இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.

கருவூரார்
குரு:போகர்

காலம்:300 ஆண்டுகள், 42 நாட்கள்

சீடர்கள்:இடைக்காடர்

சமாதி:கரூர்

இவர் போகரின் சீடர். தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் உறுதுணையாக இருந்தார். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர்.

கொங்கணர்
குரு:போகர்

காலம்:800 ஆண்டுகள், 16 நாட்கள்

சீடர்கள்:557 சீடர்கள்

சமாதி:திருப்பதி

இவர் போகரின் சீடர். அத்தோடு, இவர் பல மகான்களை சந்தித்து ஞானம் அடைந்தார். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்ட என பல நூல்களை இயற்றியுள்ளார்.

கோரக்கர்
குரு:தத்தாத்ரேயர், மச்ச முனி, அல்லமா பிரபு

காலம்:880 ஆண்டுகள், 32 நாட்கள்

சீடர்கள்:நாகர்ஜூனா

சமாதி:போயூர்

மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.

குதம்பை சித்தர்
குரு:அழுகுணி சித்தர்

காலம்:

சீடர்கள்:

சமாதி:மாயவரம்

இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைத்து பாடல்கள் பாடியுள்ளார்.இவரது பாடல்களில் இவர் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு மிக்கவை.

மச்சமுனி
குரு:அகத்தியர்,பிண்ணாக்கீசர், பசுண்டர்

காலம்:300 ஆண்டுகள், 62 நாட்கள்

சீடர்கள்:கோரக்கர்

சமாதி:திருபரங்குன்றம்

பிண்ணாக்கீசரிடம் மாணாக்கராக இருந்து உபதேசம் பெற்றார். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை இயற்றியுள்ளார்.

பாம்பாட்டி சித்தர்
குரு:சட்டைமுனி

காலம்:123 ஆண்டுகள், 32 நாட்கள்

சீடர்கள்:

சமாதி:மருதமலை

“ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

பதஞ்சலி
குரு:நந்தி

காலம்:5 யுகம், 7 நாட்கள்

சீடர்கள்:

சமாதி:ராமேஸ்வரம்

இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார்.

இராமத்தேவர்
குரு:புலஸ்தியர், கருவூரார்

காலம்:

சீடர்கள்:சட்டைமுனி, கொங்கணவர்

சமாதி:அழகர் மலை

இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கலானார். அங்கு இவர், யாக்கோபு என அழைக்கப்பட்டார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார்.

சட்டைமுனி
குரு:போகர்

காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

சீடர்கள்:சுந்தரானந்தர், பாம்பாட்டி

சமாதி:ஸ்ரீரங்கம்

சட்டைமுனி சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்.

சிவவாக்கியர்
குரு:

காலம்:

சீடர்கள்:

சமாதி:கும்பகோணம்

சிவ சிவ என்று கூறியபடியே பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்பட்டார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது.

சுந்தரானந்தர்
Copy  from குரு:சட்டைமுனி, கொங்கணவர்

காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

சீடர்கள்:

சமாதி:மதுரை

இவர் சட்டைமுனியின் சீடர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர். ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார்.

Copy from :http://www.adiyaar.com

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்யPamban Swamigal பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றினை இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோமாக.

பிறப்பு

பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

தமிழ் ஞானம்

அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி “கங்கையை சடையிற் பரித்து” என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.

திருமணம்

சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் திருமணஞ் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.

பொய் பகரல்

சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. “எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?” எனக்கூறி அச்சுறுத்தியது. சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, “தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு” வேண்டினார். அதற்கு, இறைவன், “இனி பழனிக்கு வரக்கூடாது” என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.

சண்முக கவசம்

அடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார். 1891ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு அ முதல் ன முடிய (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார். இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர். சிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்த பாடல் முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.

வழக்குகளில் வெற்றி

அடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.

குமர கோட்ட தரிசனம்

சுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார். மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்து விட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள பல திருக்கோயில்களை தரிசித்து விட்டு ஊர் திரும்ப எண்ணினார். அப்போது, ஒரு சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, “இங்கு வந்த காரியம் யாது” என வினவினார். அதற்கு சுவாமிகள், “ஆலய தரிசனத்துக்காக” என்றார். “குமரகோட்டம் தரிசித்ததுண்டா?” என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், “அது எங்குள்ளது” என்றார். அதற்கு இளைஞர் “என் பின்னே வருக” என கூறி அழைத்து சென்றார். குமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு மறைந்து போனார். இது ஆறுமுகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர் பெருக்குடன் குமரகோட்ட முருகப்பெருமானை வழிபட்டார். பின் பாம்பன் வந்தடைந்தார்.

தவம் புரிதல்

அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார். அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார். முதல் ஐந்து நாள், பேய்கள் அவரை சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன. பின்னர் ஒரு ஆவி, அவரை தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடக்ஷர மந்திரத்தை ஓங்கி கூறினார். அந்த பேய்கள் அவரை விட்டு நீங்கி மறைந்து போனது. அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து வந்தார். எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார். அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், “தவத்திலிருந்து எழுக” என்ற ஒலி கேட்டது. “முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்” என சுவாமிகள் கூறினார். “முருகன் கட்டளை! எழுக” என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி அணியலானார்.

துறவு பூணுதல்

1895ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு பூண்டு செல்லும் முடிவை கூறினார். பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார். அங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார். அந்த இல்லத்தின் உரிமையாளரான ஒரு அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து உபசரித்தனர். சுவாமிகள் முருகப்பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து இருந்தார். சென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர். பின்னர், சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல திருப்பாக்களை பாடி அருளினார்.

காவியுடை தரித்தல்

சுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி யாத்திரை மேற்கொண்டார். பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார். பின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார் ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார். அன்று முதல், சுவாமிகள் காவியுடையை மட்டுமே அணியலானார். பின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார் எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப்பரமனை போற்றி பாடல்கள் பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து வந்தார்.

பின்னத்தூர் அடைதல்

சென்னையை சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார். அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர். அங்கு சிவ நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். வழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர். ஆனால், சுவாமிகளின் அருள்த் தன்மையினால், அத்தேவதை சுவாமிகளை கண்டு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை தாக்கி கொன்றது. சுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முருகன் அருளால் அடிகளார்க்கு எந்த தீங்கும் நேரவில்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1914ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.

குமாரஸ்தவம் இயற்றல்

1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.

மயூர வாகன சேவனம்

1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த சுவாமிகளின் சீடர்கள் ஓடி வந்து பரிவுற்று வருந்தி அழுதனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். “முருகா” என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.
Mayura Vagana Sevanam

குமாரசுவாமியம்

சுவாமிகள் 1192 செய்யுள்கள் கொண்ட குமாரசுவாமியம் என்னும் நூலை இயற்றினார். ஆறுமுருகப்பெருமானை போற்றும் பாடல்களின் தொகை ஆறு என்ற எண்ணுடையாதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அடிகளார் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6666.

 1. குமரகுருதாச சுவாமிகள் பாடல் – 1266
 2. ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) – 1192
 3. திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135
 4. திருப்பா (திட்ப உரை) – 1101
 5. காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) – 608
 6. சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) – 258
 7. சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் – புலால் மறுப்பு) – 235
 8. பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) – 230
 9. செக்கர் வேள் செம்மாப்பு – 198
 10. செக்கர் வேள் இறுமாப்பு – 64
 11. தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை) – 117
 12. குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி – 100
 13. சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்) – 50
 14. குமாரஸ்தவம் – 44
 15. தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) – 35
 16. பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) – 30
 17. ஆனந்தக்களிப்பு – 30
 18. சமாதான சங்கீதம் – 1
 19. சண்முக சகச்சிர நாமார்ச்சனை – 2

ஆகப் பாடல்கள் 6666

உரைநடை நூல்கள்

சுவாமிகள் பாடல்கள் இயற்றுவதோடு மட்டுமல்லாமல், பல உரை நடை நூல்களையும் இயற்றினார். வேத வியாசம், சுப்ரமண்ய வியாசம், குரு சீட சம்பவ வரலாற்று வியாசம், செவியறிவுறூவு போன்ற நூல்களை எழுதினார்.

முக்தியடைதல்

தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், Pamban Samadhi

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர்

பிறப்பு

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையில் 15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவரது தந்தையார் பெயர் Arunagirinatharதிருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் அறியப்படுகிறது. இளமையிலேயே தாய் தந்தையாரை இழந்த அருணகிரிநாதரை, அவரது மூத்த சகோதரி ஆதியம்மை அவர்கள் தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். அருணகிரிநாதர் இளமையில் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். இருப்பினும், மாயா நெறியில் அகப்பட்டு, பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இவரது தமக்கையார் அருணகிரிநாதர் நாளடைவில் திருந்துவார் என்று எண்ணி இவருக்கு மணமுடித்து வைத்தார். இருந்தும், அருணகிரிநாதர் பெண்ணாசை கொண்டு பரத்தையரின் பால் மனதை பறிகொடுத்து, தாசிகள் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால் சிறிது சிறிதாக தமது சொத்துக்களை இழந்து வந்தார். காமத்திலேயே மூழ்கி திளைத்ததன் பயனாக, அருணகிரிநாதருக்கு பெருநோய் ஏற்பட்டது. இவரது நடத்தையினால் அவரது மனைவியும் அவரை வெறுத்து நீங்கினார்.

ஞானம் பெறுதல்

தமது சொத்துக்கள் அனைத்தும் அழிந்த போதும், உடல் குஷ்ட நோயால் பெரும்பிணியுற்று வருந்திய போதும், அருணகிரிநாதரால் பெண்ணாசையை கட்டுப்படுத்த இயலவில்லை. பரத்தையின் பால் செல்ல தமது தமக்கையாரிடம் பொருள் கேட்டார். தமக்கையார் தன்னிடம் ஏதும் இல்லாத நிலையில், “உனது இச்சையை தீர்க்க ஒரு பெண் தானே வேண்டும். நானும் ஒரு பெண் தான், உனது இச்சையை என்னிடம் தீர்த்துக் கொள்” என வருத்தத்துடனும், கோபத்துடனும் கூறினார். தமக்கையார் கூறிய வார்த்தைகள், அவரது இதயத்தை தைத்தன. பெண்ணாசையால் தமது வாழ்க்கையை வீணடித்ததோடு, தமது குடும்ப மானமே பறிபோனதை எண்ணி பதைபதைத்தார். அக்கணமே வீட்டை விட்டு வெளியேறி, கால் போன போக்கில் சென்றார். அவரை வழியில் கண்ட முதியவர் ஒருவர், அவரது நிலையை அறிந்து, முருகப்பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, ஆறேழுத்து மந்திரத்தை உபதேசித்து, முருகனை வழிபடுமாறு கூறிச் சென்றார். அவரது உபதேசத்தின்பேரில் முருகப்பெருமானை வழிபட்டு வந்தார். ஆயினும், முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்த போது, தியானம் கை கூடவில்லை. உடல் பிணி ஒரு புறம், தமக்கை கூறிய கொடுஞ்சொல் மறுபுறம் என அவரது உள்ளம் குழப்பமடைகிறது. வாழ்கையே வெறுத்த நிலையில், தம் உயிரை விடுவதே ஒரே வழி என்று எண்ணி, திருவண்ணாமலை கோபுர உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். முருகப்பெருமான் அடியவர் கோலத்தில் வந்து அவரை கீழே விழாமல் தாங்கி பிடித்தார். அவருக்கு மந்திர உபதேசம் அளித்து மறைந்தார். மந்திர உபதேசம் பெற்ற அருணகிரிநாதர், தியானத்தில் அமர்ந்தார். தியான நிலையிலேயே 12 ஆண்டுகள் கழித்தார். இறை அருளால், அவரது பிணி நீங்கி வஜ்ர தேகம் பெற்றிருந்தார். முருகப்பெருமான் அவர் முன் காட்சி அளிக்க, தியான நிலையில் இருந்து விடுபட்டு மெய்சிலிர்க்க ஆறுமுகக்கடவுளை வணங்கி நின்றார். முருகப்பெருமான் தன்னுடைய வேலால் அருணகிரிநாதர் நாவில் எழுதி, திருப்புகழை பாடுமாறு பணித்தார். அருணகிரிநாதர் தயங்கி நிற்க, முருகக்கடவுளே “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்று அடியை எடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் மடை திறந்த வெள்ளம் போல், திருப்புகழை பாடினார். பின்னர், வயலூர் வருமாறு பணித்து மறைந்தருளினார்.

வயலூரை அடைந்த அருணகிரிநாதர், பொய்யாக் கணபதி சன்னதி முன், “கைத்தல நிறைகனி” என்ற திருப்புகழை பாடித் துதித்தார். பின்னர், அறுபடை வீடுகளையும் தரிசித்து, தலந்தோறும், திருப்புகழ் பாடினார். அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் யாவும் கருத்தாழமும், சொல்லாழமும், இனிய சந்தமும் நிறைந்தது. இவ்வாறு, தலந்தோறும் சென்று வரும் வேளையில், திருச்செந்தூரில், முருகப்பெருமானின் நடனத்தை கண்டு களிப்புற்றார். சுவாமி மலையில், அவருடைய தமக்கை ஆதியம்மையாரை சந்திக்க நேர்ந்தது. ஆதியம்மையார் அருணகிரிநாதரை வணங்கி, தம்மை முருகனடி சேர்க்குமாறு வேண்டினார். அருணகிரிநாதரும், முருகனை துதித்து பாடினார். முருகப்பெருமான் காட்சி அளித்து, ஆதியம்மையாரை தமக்குள் ஐக்கியமாக்கி மறைந்தார். பின்னர், விராலி மலையில் காட்சி அளித்த முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அட்டமாசித்திகளை அளித்து அருள் புரிந்தார்.

கருணைக்கு அருணகிரி

வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமை போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்கு புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்த போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். இதை அறிந்த அருணகிரிநாதர், இந்த கொடுமையை தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினை பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதற்கு பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமை போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார். வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், “கருணைக்கு அருணகிரி” என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூரார் தமது தவறிற்கு பரிகாரமாக மகாபாரதத்தை, “வில்லிபாரதம்” என்ற பெயரில் தமிழில் எழுதினார்.

இந்த பாடலின் பொருளை திருமுருக கிருபானந்த வாரியார் பின்வருமாறு விளக்குகிறார்.

திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

முருகன் தரிசனம்

பின்னர், பல திருத்தலங்களை தரிசித்து, தெவிட்டாத திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் திருவண்ணாமலை திரும்பினார். அருணகிரிநாதரின் புகழை அறிந்த திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர குறுநில மன்னன் பிரபுடதேவராயன், அருணகிரிநாதரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றான். தேவி உபாசகர் சம்பந்தாண்டான் என்பவன் அருணகிரிநாதரின்பால் பொறாமை கொண்டான். இவன் மன்னன் பிரபுடதேவராயனின் ஆஸ்தான பண்டிதனாவான். அருணகிரிநாதரை கொல்ல காளி பூஜை செய்து, அருணகிரிநாதரின் பால் காளியை ஏவினான். காளிதேவி அன்றிரவே அருணகிரிநாதர் உறங்கும் வேளையில் அவரை கொல்ல நெருங்கினாள். அப்போது, பால முருகனாக தோன்றிய முருகப்பெருமான் காளி தேவியை “அம்மா” என்றழைக்க, காளி தேவி தன்னை மறந்து குழந்தையான முருகப்பெருமானை அழைத்துக் கொண்டு, கயிலை சென்றாள். இதனை அறிந்து ஆத்திரமுற்ற சம்பந்தாண்டான், அருணகிரிநாதரை சபைக்கு அழைத்து, அங்கிருந்தோரின் முன், தாம் வழிபடும் காளி தேவியை அனைவரின் முன் வரவழைத்துக் காட்டுவதாகவும், அவ்வாறே அருணகிரிநாதர் முருகப்பெருமானை வரவழைத்துக் காட்ட வேண்டுமெனவும், தவறினால், அவ்வூரை விட்டு நீங்க வேண்டும் எனவும் சபதமிட்டான். அருணகிரிநாதரும் அதற்கு ஒப்புக்கொண்டார். மறுநாள், அந்நிகழ்ச்சி நடக்க இருப்பதாக ஊர் மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. அன்றிரவே, காளி பூஜை செய்த சம்பந்தாண்டான் முன் காளிதேவி தோன்றினாள். சம்பந்தாண்டான், நாளை அனைவரின் முன் காட்சி அளிக்க வேண்டும் என வேண்டி கேட்டுக் கொண்டான். ஆனால், காளி தேவி அதற்கு இணங்கவில்லை. எனினும், சம்பந்தாண்டான் முருகப்பெருமானை நாளை அருணகிரி அழைக்கும் போது, வரவிடாமல் தடுத்து நிறுத்துமாறு பணிந்து கேட்டு கொண்டான். இதற்கு, ஒப்புக் கொண்ட காளி தேவி மறைந்தார். மறுநாள், மன்னன் உட்பட மக்கள் அனைவரும் திருவண்ணாமலை திருக்கோவிலில் திரண்டனர். அருணகிரிநாதர் இனிய தமிழில் திருப்புகழ் பாடி முருகனை அழைத்தார். ஆனால், காளி தேவி, பால முருகனை தன் மடியில் இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள். இதனால், முருகப்பெருமான் அருணகிரிநாதர் அழைத்தும் அவர் முன் தோன்ற இயலவில்லை. இதனை ஞானத்தால் உணர்ந்த அருணகிரிநாதர், தேவியை போற்றி பாட ஆரம்பித்தார். இவரது பாடலை கேட்டு தேவி முன் இருந்த மயில் நடனமாடியது. திருப்புகழின் இனிமையில் தன்னை மறந்த தேவி, முருகப்பெருமானை தன் பிடியிலிருந்து விட்டு விட்டாள். முருகப்பெருமானும், தேவியின் மடியிலிருந்து இறங்கி, மயிலேறி அங்கிருந்து நீங்கி, பதினாறு கால் மண்டபத்தில் அனைவரின் முன் தரிசனம் அளித்தார். அதனை கண்ட மன்னனும், மக்களும் மெய்மறந்து முருகப்பெருமானை வீழ்ந்து வணங்கினர். அருணகிரிநாதரும் “முருகனது கருணையை எண்ணி அவரை வீழ்ந்து வணங்கினார். இதன் மூலம், அருணகிரிநாதரின் புகழ் மேலும் பரவியது. அவமானம் அடைந்த சம்பந்தாண்டான் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

முக்தி அடைதல்

சில காலம் கழித்து, அரசன் பிரபுடதேவனின் கண்பார்வை பாதிப்படைந்தது. அருணகிரிநாதரை வஞ்சம் தீர்க்க சமயம் பார்த்திருந்த சம்பந்தாண்டான், மன்னனிடம், சொர்க்க லோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் இழந்த பார்வையை மீண்டும் பெறலாம் என்றும், பாரிஜாத மலரை இறையருள் பெற்ற அருணகிரிநாதரை அன்றி வேறு எவராலும் கொண்டு வர இயலாது எனவும் கூறினான். மன்னனும், அருணகிரிநாதரிடம் சென்று, தமக்கு மீண்டும் பார்வை கிடைக்க சொர்க்க லோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வர வேண்டும் என வேண்டினான். Kili Gopuramஅருணகிரிநாதரும் அவ்வாறே செய்வதாக மன்னனிடம் உறுதி கூறினார். சம்பந்தாண்டான் தன்னுடைய சகாக்களை அழைத்து, மானிட உருவில் சொர்க்க லோகம் செல்ல இயலாது என்றும், அட்டமா சித்திகளை பெற்ற அருணகிரிநாதர், கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உருவில் சொர்க்க லோகம் செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் வேளையில், அவரது உயிரற்ற உடலை தம்மிடம் கொண்டு வருமாரும் கூறினான். அருணகிரிநாதர் சொர்க்க லோகம் செல்ல, திருவண்ணாமலை திருக்கோவிலில் உள்ள பேய்க்கோபுரத்தின் மேல்நிலைக்கு சென்று, தம்முடைய உடலிலிருந்து உயிரை பிரித்து, அங்கு இறந்திருந்த கிளியின் உடலில் தம்முடைய உயிரை செலுத்தி அங்கிருந்து சொர்க்க லோகம் நோக்கி சென்றார். அருணகிரிநாதரை பின் தொடர்ந்து வந்திருந்த சம்பந்தாண்டானின் சகாக்கள், அருணகிரிநாதரின் உடலை எடுத்துக் கொண்டு சம்பந்தாண்டானிடம் கொண்டு சேர்த்தனர். சம்பந்தாண்டான், மன்னனிடம் அருணகிரிநாதர் சொர்க்கம் செல்லும் முயற்சியில் இறந்து விட்டார் என்று நம்ப வைத்து, அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். கிளி வடிவில் சொர்க்கம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து பூலோகம் திரும்பிய அருணகிரிநாதர், தமது உடலை காணாது திகைத்தார். தமது உடல் அழிக்கப்பட்டு விட்டதை அறிந்து அருணகிரிநாதர், கிளி உருவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலரை சேர்பித்தார். முருகனை நினைத்து துதித்தார். முருகப்பெருமான், அருணகிரிநாதரிடம் “கவலை வேண்டாம். இந்த கிளி உருவிலேயே கவி பாடுமாறு” அருளினார். பாரிஜாத மலரால் பார்வை பெற்ற மன்னன், கிளி உருவில் வந்தது அருணகிரிநாதரே என்பதை உணர்ந்து போற்றினான். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கிளி உருவில் அருணகிரிநாதர் பாடிய பாடலே கந்தர் அனுபூதியாகும். கிளி வடிவிலேயே இருந்த அவரை அவ்வடிவிலேயே முருகன் ஆட்கொண்டான். அவர் கிளி உருவில் வந்து அமர்ந்த கோபுரம் தற்போதும் கிளிக்கோபுரம் என்ற அழைக்கப்படுகிறது.

பல்வேறு தரப்பினர் அருணகிரிநாதர் மேற்கூறிய நிலையில் முக்தி அடைந்தார் என்று கூறப்பட்டாலும், அருணகிரிநாதரின் அம்சமாக கருதப்படும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கூறுவதை நோக்க வேண்டும்.

இம்மண்ணுல்கினின்றும் விண்ணுலகிற்கு இம்மானுட உடலோடு செல்லல் கூடாதென்பதை முன்னிட்டுத் தாமேயொரு கிளியுருவத்தைக் கொண்டு விசும்பிற்றாவிப் பறந்து அவ்வுலகையடைந்து ஒரு கல்லையிற் சில கற்பக மலர்களையிட்டு வாயிற் கவ்விக் கொணர்ந்து மலர் மணம் நகர் முழுவதுங் கமழ அரசர்க்களித்து அவ்வுருவத்தை மாற்றித் தமது பழைய உருவத்தைக் காட்டி நின்றனர். இஃதவருக்கொரு விளையாட்டாயிருந்தது. இச்செய்திக்கு மாறாக, அவர் தம்முடலைக் கோபுரத்தின் மீது விழுந்துக் கிளியுடலுட் புகுந்து சென்றாரென்பதும் அவ்வாறு விடுத்த உடலும் சம்பந்தாண்டானுடைய தூண்டுதலான் எரிக்கப்பட்ட தென்பதுஞ், சுவாமிகளுடைய அருட்டகமைக்கும், ஆற்றலுக்கும் முரண்படுவனவாகவுள, அந்நாதர் குகப்பிரமத்தினதருளாற் சருவஞ்ஞத்துவம் சுவப்பிகாசத்துவம் முதலிய கலியாண குணங்களையடைந்த பெருந்தகையினரென்னு முண்மையாலும் இழிதகையுடை வாயு கும்பகயோகத்தைக் கண்டித்தொதுக்கிய அவர் அந்த யோகத்தாற் செய்ய வல்ல பரகாயப் பிரவேசஞ் செய்யத் துணியாரென்னு நிச்சயித்தாலும் ஸ்ரீமத் ஸ்கந்த மஹாபுராணமென்னும் முதல்வன் புராணத்துச் சம்பவகாண்டத்து 41ம் அத்தியாயத்தில், “உலகில் எம்மைச் சரணமடைந்தோர்க்கு அச்சம் யாது? இச்சகத்தே எம்மடியார்க்கு பகைஞர் யாவர்? பிணியுமுண்டோ? மனிதக் பதடியாயுள்ளவொருவன் அறிவீனத்தால் எம்மடியாரை பகைப்பானாயின் அவன் எம்மையே பகைத்தவனாவான். எமக்கபராதஞ் செய்தானது செய்கையை யாம் மன்னிப்போம். அந்தத் துராத்மாவின் செய்கையை ஒருபோதும் மன்னியோம். இந்திரனாலாதரிக்கப்படினும் அவனைக் கண்டனஞ் செய்து விடுவோம்.” எனவரு கட்டுரைகள் கந்தபிரானுடைய திருவாக்காயிருத்தலின் அப்பிரான் தம் மெய்யடியவனுடம்பிற்குப் பகைஞனழிவு புரியப் பார்த்திரானென்பதனால் முரண்படுவனவாகவுளவென்றும் இம்முடிவு பெரிதுங்கொளக் கிடக்கின்றது

ஆக அருணகிரிநாதர் உடல் சம்பந்தாண்டானால் அடக்கம் செய்யப்பட்டது என்பது தவறான வாதமாகும்.

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் பதினாறாயிரம் என அறியப்படுகிறது. ஆனால் இவ்வுலகிற்கு கிடைத்த பாடல்கள் 1307 ஆகும்.

பிராம்லிக்குக் கிடைத்த அருள்

சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்றோர் வாழ்ந்த பெருமை மிக்க  இந்து ஞான மரபில் சதா பிரம்ம நிலையிலேயே இருந்து, அந்த இறைநிலையோடு ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்ம ஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப் பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி போன்ற அந்த அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.

சுவாமிகள் ஒரு மாபெரும் அவதார புருடர். ஆனால் ஒன்றுமே அறியாத பித்தர் போன்று காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என அழைத்தனர்.

இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பர்.  லாஹரி மஹா சாயர் (1828-1895), ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886), விவேகானந்தர் (1863-1902) என மூவரும் பல காலகட்டங்களைச் சேர்ந்தவர்கள். பரமஹம்ச யோகானந்தர் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

trilinga

காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக அவர் மனைவி மீது விழுந்து அவர் வலி தாளாமல் அலறினார். அதனால் சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டிலும் உறவினர்கள் அனைவரது உடலில் இருந்தும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை ‘இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்’ என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார்.

சற்று நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் அவர் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போது தான் மகானின் மகிமை பற்றி அவருக்குத் தெரிய வந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். ஆசிர்வதித்தார்.

தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினத்தன்று வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அகக் கண் திறந்த பிராம்லிக்கு அருள் கிடைத்தது. ஆனால் இங்கே பலர் புறக்கண்ணைக் கூட மூடி, ”வெற்றுப் பகுத்தறிவு வாதம்” பேசிக் கொண்டிருக்கின்றனர்.

****

மகான் பூஜ்ய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்

மகான் பூஜ்ய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்

சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்றோர் வாழ்ந்த பெருமை மிக்க  இந்து ஞான மரபில் சதா பிரம்ம நிலையிலேயே இருந்து, அந்த இறைநிலையோடு ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்ம ஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப் பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி போன்ற அந்த அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.

sri trilingar photo

சுவாமிகள் ஒரு மாபெரும் அவதார புருடர். ஆனால் ஒன்றுமே அறியாத பித்தர் போன்று காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என அழைத்தனர். குள்ளமான உருவம். நீண்ட கைகள். உருண்டையான முகம். பெரிய வயிறு என்று சுவாமிகளின் தோற்றம் மிக வித்தியாசமானதாக இருக்கும். சுவாமிகள் யாருடனும் எதுவும் பேச மாட்டார். உணவு உண்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான். பல நாட்கள் பட்டினியாக இருப்பார். சமயங்களில் அன்பர்கள் கொண்டு வரும் தயிர்ப்பானைகளை சளைக்காமல் குடம் குடமாகக் குடிப்பார். மணிகர்ணிகா படித்துறையில் உச்சி வெயிலில் சுடும் பாறை மீது அமர்ந்திருப்பார். அவதூதர் என்பதால் உடலில் ஒட்டுத் துணி இருக்காது. அதைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி கடும் வெயிலில் அமர்ந்திருப்பார். தான், தனது, தன்னுடைய உடல்  என்ற உணர்வுகள் அற்றவராக அவர் இருந்தார். சமயங்களில் கடும் குளிரில் தண்ணீருக்குள் இறங்குவார். உள்ளேயே மூச்சடக்கி அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் தண்ணீரின் மீது சப்பணமிட்டு அமர்ந்து கொண்டோ அல்லது தண்ணீரில் படுத்த வாக்கில் மிதந்து கொண்டோ இருப்பார். சில சமயம் உச்சி வெயிலில் அவதூதராய் காசி மாநகரத்துத் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். காலத்தை, இயற்கை விதிகளை வென்ற மகாபுருடராக இம்மகான் விளங்கி வந்தார்.

இறையனுபூதி பெற்ற இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். காசி, பிருந்தாவனம் போன்ற பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்ட ராமகிருஷ்ணர், காசியில் ஒரு மடத்தில் தங்கியிருந்த த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். காசியில் ராமகிருஷ்ணர் தரிசித்த ஞானிகளில் மகான் த்ரைலிங்க சுவாமிகள் ஒருவரே பிரம்ம ஞானியாக விளங்கியவர். இதனை சுவாமி விவேகானந்தரிடம், ’ஒரு மிகப் பெரிய மகானைச் சந்தித்தேன்’ என்று சொல்லி விளக்கிக் கூறியிருக்கிறார் பரமஹம்சர். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் மகான் த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவராவார்.

லாஹரி மஹா சாயர் (1828-1895), ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886), விவேகானந்தர் (1863-1902) என பல காலகட்டத்தைச் சேர்ந்தவர்களும் சுவாமிகளை தரிசித்துச் சென்றிருக்கின்றனர். பரமஹம்ச யோகானந்தர் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

மிகச் சிறந்த தவயோகியாகத் திகழ்ந்த இம்மகான் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

trailang

அவதூதர் என்பதால் எப்போதும் சுவாமிகள் நிர்வாணமாகவே இருப்பார். ஆனால் சுவாமிகள் இவ்வாறு நிர்வாணமாகச் சுற்றி வருவது காவல்துறையினருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் சுவாமிகளைப் பிடித்து சிறையில் அடைத்துப் பூட்டி விட்டனர். ஆனால் சற்று நேரத்தில் சுவாமிகள் வழக்கம் போல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்.

பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க, சுவாமிகள் எவ்வாறு வெளியேறினார் என்பது தெரியாமல் காவலர்கள் திகைத்தனர். அதனால் சீற்றமுற்ற அவர்கள், மீண்டும் சுவாமிகளைப் பிடித்து வந்து கதவை பலமாகப் பூட்டி, காவலுக்கு என்று தனி ஆளையும் நியமித்தனர். ஆனால் சுவாமிகளோ சற்று நேரத்தில் சிறையிலிருந்து மாயமாய் மறைந்து, அதன் மாடிப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால் சலிப்புற்ற காவலர்கள் சுவாமிகளைச் சிறையில் அடைப்பதை நிறுத்தினர். சுவாமிகளும் காசி மாநகரத்தின் தெருக்களில் வழக்கம் போலச் சுற்றி வர ஆரம்பித்தார்.

******

காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக அவர் மனைவி மீது விழுந்து அவர் வலி தாளாமல் அலறினார். அதனால் சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டிலும் உறவினர்கள் அனைவரது உடலில் இருந்தும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை ‘இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்’ என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார்.

சற்று நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் அவர் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போது தான் மகானின் மகிமை பற்றி அவருக்குத் தெரிய வந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினத்தன்று வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வெகுகாலம் வாழ்ந்து காசியில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இம்மகான் பின் நேபாளத்தில் பசுபதிநாத் அருகில் ஜீவசமாதி அடைந்தார்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!