Archives

சுவாமி சிவானந்தரின் பொன்னுரைகள்

1.    கடவுள் உண்டு உன்னுள்ளே கடவுள் இருக்கிறார், சாந்தம், ஆத்மா, பிரம்மம், கடவுள், சுதந்தரம், அமரத்தன்மை முக்தி எல்லாம் ஒரு பொருட்சொற்கள்.
2.    எப்போதும் கடவுளையே நினைத்தால் தீமைக்கே இடமிராது.
3.    தொல்லை மோதும்போது நாத்திகன் கூடக் கடவுளை நினைக்கிறான்.
4.    தத்துவ வாதங்களும், வாய், வீச்சும் வீணே, உள்ளாழ்ந்தே கடவுளைக் காணலாம் உண்மை உள்ளே, ஆத்மானுபவம் இல்லாத வாயளப்புப் பாண்டித்தியம் காசு பெறாது.
5.    ஆத்ம சுகமே பரம சாந்தம் ஆத்ம சாந்தம் அடைந்தால் இந்திரிய விஷயங்கள் துச்சமாகத் தோன்றும் நிலையில்லாத இந்த உலகின் விஷயாதிகள் ஒருக்காலும் சுகமோ சாந்தமோ தரவா நீ உலகரசனாலும் சாந்தானந்தம் வராது மனதை அடக்கு: சித்த சுத்தி பேறு: அன்புப்பாலம் அமை. சாந்த ராஜ்பத்திற் புகு தன்னமைதியின்றி உலகமைதியில்லை.
6.    உலகம் மனோமாத்திரம் காலம் கானல் நீரோட்டம் இறந்த காலம் இன்று கனவு போலத் தோன்றுகிறது: நிகழ் காலமும் நாளை, கனவு போலத் தோன்றும் உலகரங்கில் போலிப் புலன்களின் விஷயகானத்திற்கு ஏற்றபடி. மனப்பேயே பல வேஷம் போட்டு ஆடுகிறது உலகம் மாயா விலாசம். பிரம்ம ஞானம் உதித்தால் மாயை மறையும், பிறப்பும் இறப்பும் உலக நாடகத்தின் இரண்டு காட்சிகளாகும், உலகைக் கண்டு அஞ்சாதே மயங்காதே உன் சொரூபத்தை அறி: அது சச்சிதானந்தம்.
7.    ‘சள சள’ வென்று பேசாதே: அது உன் சக்தியை வீணாக்கும் நூறாண்டுகள் பேசுவதினும் ஒரு நாள் தியானிப்பது மேல், ஊண், உறக்கம் பேச்சு, செயல் அனைத்திலும் மிதமாயிரு அளவறிந்து வாழ் சாதனம் செய்.
8.    உலகம் வேறு – நீ வேறு என்று எண்ணாதே: ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்: முறையாகப் பயில், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
9.    உடல், மனம், உள்ளம், ஒழூக்கம், ஆத்ம உணர்ச்சி எல்லாம் உறுதியாயிருக்க வேண்டும். விடாது முயல்: முறையாகப் பயில், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடையத் தீவிரமான சாதனம் செய்.
10.    ஞானத்தால் அஞ்ஞானம் ஒழிதலே. துன்பமொழிந்து இன்பம் வளரும் வழி அவித்தையாலேதான் மனிதன் துன்பவெள்ளத்தில் விழுந்து தத்தளிக்கிறான். அந்தரங்கத்தில் எல்லாரும் ஞானவான்களே! அதனாலே தான் முட்டாள் கூடத் தன்னைக் கெட்டிக்காரன் என்று நினைக்கிறான்
11.    உலகில் பல துக்க அனுபவங்களால் மனிதன் புத்தி தெளிகிறான் அனுபவம் அறிவைத்தருகிறது.  இடர்களைப் பொறுப்பதால் மனத்திட்பமும் கடவுளுறுதியும் உண்டாகும். அகம்பாவம ஒழியும். இடர் வரும் போது கலங்காதே.  ஐதரியமாகவெல் ஒவ்வொரு இடரும் மனவுறுதியைத் திண்மையாக்கும் சாதனமாகும் வைரவுறுதியுடன் இடர்களையும் அபாயங்களையும் எதிர்த்து நின்று வெற்றிகொள்.  எப்போதும் மகிழ் தொல்லைகளை நகைத்தொழி மூடக்கோழை போல முனங்காதே.  தீரனாயிரு.
12.    நூனா பாவனை செய்வது மனமே மனம் பிரம்மத தினின்றே தோன்றி சங்கற்பமாக விரிகிறது. மனம் ஸம்ஸகார மூட்டை.  சித்த விடுத்திகளின் சமுதாயம்.  மனம் நிலையற்றது அது நிமிசத்திற்கு நிமிசம் உருவும் நிறமும் மாறுகிறது.  மனம் கண்ணிமைப்பதற்குள் உலகை ஆக்கும் நீக்கும் மனம் ஜடமே சைதன்யப்பிரமத்தாலே தான் அது அறிவுள்ளதாகக்காண்கிறது.  மனத்தின் உள்ளுருவே உணர்வு புறவுருவே உலகம்.  ;
13.    உருக்;கிய தங்கம் எதில் வார்த்தாலும் அதன் உருக்கொள்கிறது அதுபோல் மனமும் எந்த விஷயத்தை நினைக்கிறதோ அதன் உருவையடைகிறது.   ஆரஞ்சை நினைத்தால் உடனே அது ஆரஞ்சு;பபழமாகிறது.  பொறாமை கொண்டால் பொறாமைத் தீயாகிறது.  யார்மேல் பொறாமையோ அவர் தீமையெல்லாம் அதற்கும் வந்து சேருகிறது.  ஒரு பெண்ணை நினைத்தால் மனமே பெண்மயமாகிறது.  எந்தக் குண-தொந்த விவகாரத்தை நினைத்தாலும் மனம் அதுவாகிறது.  கடவுளை நினைத்தால் மனம் கடவுள் தன்மை பெறுகிறது.  முதலில் தாமஸ-ராஜஸ நினைவிலிருந்து மாற்றி மனதை ஸாத்வீக மயமாக்க வேண்டும்.  ஸாத்வீக மனது சுத்தமனதாகும்.  புpராணாயாமம் தியானம் முதலிய சாதனங்களால் சித்த சுத்தியும் மன ஒருமையும் பெறலாம்.
14.    சித்த சுத்தியும் ஏகாக்ரமும் இருந்தால் மனதை நல்ல பாவனையில் திருப்பலாம் கருணை, அன்பு, பக்தி, பரோபகாரம் முதலிய நல்ல குணங்களில் மனதை;ச செலுத்தினால் அந்தந்த குணவடிவுகளைக் கொண்டு மனம் சீர்பெறும் மனம் மின்சாரத்தைவிட வலியது.  மனம நினைவின் ஆட்டம்.  நினைவு எப்பழ வாழ்வு அப்படி.  தீய நினைவால் வாழ்வே தீமையாகும்.  நல்ல நினைவால் வாழ்வெல்லாம் நலமாகும்.  ஆத்திரம், பொறாமை வஞ்சம், காமக்குரோதாதி நினைவுகளால் மனம் நரகமாகி, வாழ்வும் எமகண்டமாகும்.  சாந்தம் தெய்வ பக்தி முதலியவற்றால் மனம் சக்தி பெற்று, வாழ்வும் நிம்மதியாக நடக்கும்.  மனதைப் பண்படுத்துவதே வாழ்வைப் பண்படுத்துவதாகும.  மனம் போல் மங்கலம்.
15.    பெரும்பாலோர் மனதை வெளியே அலையவிட்டு அமைதியிழந்து வருந்துகிறார்கள்.  மனம் அடங்கினாலே அமைதி கிடைக்கும்.  பிராணனாகிய கடிவாளத்தை இழுத்துப் பிடித்து, மனக்குதிரையை அடக்க வேண்டும்.  ஊலகில் காணும் கட்சி;ப் போர்கள் ராஜஸ மனத்தின் வேலையாகும்.  ஒருகுரு ஓர் இடம், ஓரு சாதனத்தில் தீவிரமாக நின்றால் மனம் படிமானத்திற்கு வரும்.
16.    சொற்படி நினைப்பு: வினைவின்படி செயல் நிகழ வேண்டும்.  உண்மையொழுக்கத்தால் மனம் அடங்கி நடக்கும் மலையை உன்னால் தகர்க்க முடியாது.;  ஆனால் மலை நினைப்பதைத் தகர்க்கலாம்.  நினைப்பெல்லாம் ஒழிந்து நிச்சிந்தையானால் மனம் என்பதே இராது.
17.    முனதிற்கு அடிடையாகாதே சித்த விருத்திகளை அடக்கு மனதை மிஞ்சவிடாதே நிந்திப்பவன் மனம் நிந்திக்கத்தக்க தீமையுள்ளது.
18.    செருக்கை விடு;: செல்வச்செருக்கு, அதிகாரச்செருக்கு சாத்மீக அகங்காரம் ஆபத்தானது.  மனத்தொல்லை மனிதனைக் கெடுக்கும் மனம், சினம், ஆத்திரம், பொறாமையுற்றால் இரத்தம் கொதித்து விஷத்தன்மையுறும்.
19.    அச்சத்தை வென்றவன் மனதையும் வெல்வான்.  அனைத்தையும் பெறுவான்.  தைரிய உணர்ச்சி அச்சத்தை மாற்றும் மருந்தாகும்.
20.    புலனடக்கமின்றி எதுவும் நிறைவேறாது மனமின்றி புலன்களை தாமே ஒன்றும் செய்ய முடியாது. முனத்தை அடக்கினால் புறன்களும் அடங்கிப்போருன.  முனப்புலன்கள் அடங்கினாலே சுத்தாத்ம நாதம் கேட்கும் பொறிபுலன்களை அடக்கு:  மனதை நி;சசலமாக்கு:  உள்ளே ஆழ்ந்து தியானி:  அமரானந்த அமுதுண்.
21.    மனிதன் காமத்திற்கு அடிமையாகிக் கெட்டான்.  காமக்குழியில் விழ விழ நைப்பாசை அதிகரித்து அதை அடக்குவதே கடினமாய்விடும்.  வாளையும், சீறும் பாம்பையும் விடச் சினமும் காமமும் அபாயமானவை.  காம சிந்தனையே ஒழியவேண்டும்:  அப்போதுதான் சாதனம் இயலும்.
22.    பிரமசரியமே பரிசுத்தம்:  அதுவே பரம சாந்தம்  பிரமசரியத்தால் தேஜஸ் வளரும்:  யோகசக்தி மிகும்  உன்னத நிலை அடையலாம்.  வீரிய பலமே பேரின்ப திறவுகோல்.  காமத்தை முற்றிலும் வென்றவன் பிரம்மசாரியாகிறான்.  நல்ல காரியங்களில் சதா ஈடுபட்ழருந்தால் பிரம்மசாரியாவதற்கு ஒருவழியாகும.;
23.    ஆசையே விஷயப்பற்றாகும் ஆசையறுந்தால் ஆனந்தம் ஆசைமேவிய ராஜஸ மனிதன் ஒரு அத்யாய வாழ்வு பெறமாட்டான்.  ஆசை ஒரு சித்த விருத்தி:  அமைதிக்குப்பகை.  போகத்தால் ஆசை தணியாது.  ஆசா பாச முனைப்பால் பலர் யோகமிழந்தனர்.  வுhஸனாத்ரயங்களைக் கிழித்தெறிந்து உன் கூட்டை விட்டுச்சிங்கம்போல் வெளியே வருக.  நிராசையாளனே உலகில் நிறைவான செல்வன்.  ஆசையை வென்ற முனிவன் அடையும் சுகத்தை இந்திரன் கூடப் பெறமுடியாது.
24.    ஏல்லாரும் உலகில் துன்பமொழிந்த இன்பம் வேண்டுகின்றனர் பற்றினாலேதான் நோவுந்துயரும் பந்தமு;ம் உண்டாகின்றன.  தேகாத்ம புத்தியும் தற்போதமுமே துன்பத்திற்கு காரணமாகும்.  சுகதுக்கங்களைச் சமமெனக் காண்.  இசைவசைகளைப்பாராட்டாதே உலகை மகிழ்விப்பது கழனம்.  சுங்கரர் ராமகிருஷ்ணாதி மகான்களையும் உலகம் பழிக்கிறது!  உலகைத் திருப்தி செய்ய முழயாது:  ஆத்ம திருப்திபெறு.
25.    ஏகாக்ர தியானமே நித்யானந்த அமர நிலைக்கு வழியாகும்.  புரமாத்ம தியானமே துக்க நிவர்த்தி தரும்.  ஜபமாலையை விட லிகித ஜபத்தில் ஏகாக்ரம் அதிகமாகும்.  இமய நியமாதிகளைப் பயின்றாலே தியானம் கைகூடி  வரும்.  மனம் தொல்லையற்று நிலைத்தாலே தியானம் ஓடும்.  மனோலயம், தியானப்பொருளில் மனதை ஈடுபடுத்தும்.  மனோ நாசமே பிரம்ம ஞானமும் முத்தியுந்தரும்.
26.    கடவுள் அன்பருக்கு உருவாக:  அறிஞருக்கு அருவாக உணர நிற்கும் பக்தர் தியானத்திற்கே பிரம்மம்பல பெயர் வடிவ பேதங்களாகத் தோன்றுகிறது.  பெயர் வடிவங்க்ள பலவானாலும் சத்துப்பொருள் ஒன்றே.  ஒன்றையே தியானித்து அதிலேயே லயித்துக் கலப்பதே இன்பம்.
27.    ஓங்காரத் தியானம் பிரம்மஞானந் தரும்.  ஆத்மத் தியானம் ஒதித்திய அமரானந்தம் அளிக்கும் .  தீவிர வைராக்கியமான ஒமக்குழலால் தியானாக்னியை தூண்டுக சூகூஷ்மமான சுத்த புத்தி பிரம்மத் தியானத்திற்கு அவசியமாகும்.  சுpரவணமனன் – நிதித்யாசங்களும் வைராக்கியமும் சித்தித்த பிறகே.  தியானமும் சித்திக்கும.
28.    தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே.  நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி. ஆனால் ஒளிக்காட்சி பிர்மாதனமானதில்லை தீவிர தியானத்தால் மனம் முளை, நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும.  அமைதி நிலைக்கும்.
29.    தியானத்தில் ஒளிக்காட்சி நல்லதே.  நீ தூல உணர்வைத் தாண்டுவதன் அறிகுறியே ஒளி;.  ஆனால் ஒளிக்காட்சி பிர்மாதனமானதில்லை தீவிர தியானத்தால் மனம் முளை, நரம்புகளில் பெரிய மாறுதல்கள் உண்டாகும்.  அமைதி நிலைக்கும்.
30.    மனம் தியானத்தில் முழுவதும் கரைந்துபோதலே சமாதியாகும் சமாதி என்பது கல்லை போல் உட்கார்ந்திருப்பதன்று, சமாதியில் ஜுவாத்ம பரமாத்ம ஐக்கியம் உண்டாகிறது.  சுமாதியில் தற்போதம் இழந்து அருட்போகும் உதித்து அறிபொருளுடன் அறிவு கலந்து ஒன்றிப்போகின்றது.  நிர்வில்க சமாதியில் ஐனன மரணங்களை யோகி வெல்கிறான்.
31.    உலகாயதர் உறவை நீங்கு.  மகாத்மாக்களான புனிதர் உறவை நாடு.  நல்லார் உறவே பரமபாவனமாகும்.  நல்லாரைக் காண்பதுவும் நன்றே. தீயாரைக் காண்பதுவும் தீதே.
32.    ஜப சாதனத்தால் சித்த சுத்தியும் ஏகாக்ரமும் உண்டாகும் திவ்ய கானத்தால் ஆனந்தம் உண்டாகும்.  சுயநலத்தையும் அகமபாவத்தையும் உதறித்தள்ளி தெய்வத்தைச் சரண்புகு.  நிசகாம்ய கர்மமும் பரோபகாரமும் செய்.  அருள் வளரும்.

Advertisements