Archives

ஞானமடைதல்-படித்ததில் பிடித்தது

naan

நான் யார் -ஸ்ரீ பகவத் ஐயா நூலிலிருந்து

   நாம் அடைவதற்க்கு எதுவும் இல்லை என்று கண்டுபிடித்த நிலையிலயே நமது அனுபவங்கள் எல்லாம் பலம் இழந்து விடுகின்றன, நமது அனுபவங்கள் எல்லம் பலம் இழந்த நிலையில் ,நான் என்னும் அனுபவிப்பவனும் பலம் இழந்து விடுகின்றான் ,இங்கு தன்னை இழந்த நலம் செயலுக்கு வருகிறது ,மெய்பொருள் இயக்கத்தின் பகுதியாக நமது இயக்கமும் கலந்து விடுகின்றது .

ஒவ்வொரு கணத்தையையும் இதுவே கடைசிக்கணம் என்பதைப்போல வாழுங்கள் ,யாருக்கும் தெரியாது இதுவே கடைசியாகவும் இருக்கலாம்-ஓஷோ

Advertisements

“நான் யார்?”-உள்ளத்தே உள்ளதே உண்மை

bhagavan-ramana-and-childrenபகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான். அது ஏன் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்கும் முன், நாம் என்ன நிலையில் இருந்துகொண்டு கேட்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் தினசரி அனுபவங்களை மட்டும் கருத்தில் கொண்டு வேறு எந்த விதமான யூகங்களும் இல்லாது நம் நிலையை அலசிப் பார்ப்போம். நாம் உலகில் உள்ள எதையுமே நமது ஐம்புலன்களின் உதவியால்தான் அறிகிறோம். அதன்பின் நமது ஆறாவது அறிவையும் கொண்டு அவைகளை அலசிப் பார்த்து சில பல எண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்த்துக் கொள்கிறோம்; அவைகளை மனதளவிலும் நிறுத்திக் கொள்கிறோம். இப்படியாகச் செய்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுகிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும், அவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறதல்லவா? அப்படி இல்லையென்றால் மனது ஒரு பக்கமும் பார்வை ஒரு பக்கமும் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி மனது குவிந்திருந்தாலும் சிதறியிருந்தாலும் அது நம் விழிப்பு நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இது நமக்கு உணர்த்துவது என்ன? நாம் விழித்திருக்கும்போதும் நினைவிருக்கும்போதும், உலகத்தைக் காண்கிறோம்; உலகத்தில் உள்ளவைகளுடன் விதவிதமான அனுபவங்கள் அடைகிறோம். அப்படியாக நமது வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் தம் தம் உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காணும் தன்னை விட்டு உலகம் என்று தனியாக எதுவும் கிடையாது. தனது எண்ணங்களுக்கும், ஆசை அபிலாஷைகளுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உலகத்தில் நடந்து கொள்கின்றனர். பொதுவாக மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முடியாத போது மற்றவர்களிடம் அனுசரித்துப் போகின்றனர். ஆக இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது நடக்கின்றது என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் ஒற்றுமை கிடையாது. நம் விழிப்பு நிலை (ஜாக்ரத்) தவிர வேறு நிலைகளும் நம் அனுபவத்தில் உண்டு. அவை என்ன?

விழிப்பு நிலையிலேயே நம்மால் எப்போதும் இருக்க முடிகிறது என்றால், நம் அனுபவங்கள் அனைத்தையும் உண்மை என்று கொள்ளலாம். அப்படி இல்லையே! நம்மால் ஒரு நாளோ இரண்டு நாளோ விழித்திருக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் கண்ணயர்ந்து தூங்கப் போய்விடுவோம் அல்லவா? அப்போது நமக்கு எங்கே உலகம் தெரிகிறது? ஏன் நம்மைப் பற்றியே அப்போது நமக்கு உணர்வு இல்லையே. தூக்க நிலையிலிருந்து விழித்தபின் தன்னை உணர்கிறோம், அப்புறம்தானே உலகத்தையும் உணர்கிறோம்? அதாவது தானும் உலகும் ஒன்றாகத் தான் உதிக்கிறது; விழித்திருக்கும்போது தான் உலகம் தெரிகிறது, ஆனாலும் அந்த நிலையில் நம்மால் தொடர்ந்து இருக்க முடியாது. உலகமே தெரியாத ஆழ்தூக்க நிலைக்கு (ஸுஷுப்தி) நாம் தினம் தினம் சென்றால் தான் உலகம் பற்றிய அனுபவங்களைப் பெறமுடிகிறது. அப்படி இருந்தும் நமது விழிப்பு நிலை அனுபவங்களுக்கே நாம் மிகுந்த முக்கியம் கொடுக்கிறோம். இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது தனித்தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம் ; அது மட்டுமன்றி அவ்வுலகம் எப்போதும் உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்றால் அது எப்போதும் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? ‘இப்போது உள்ளது, அப்புறம் இல்லாதது’ என்ற தன்மை கொண்ட உலகத்தையும் அதன் அனுபவங்களையும் உண்மை என்று எப்படிக் கொள்ள முடியும்?

சிலர் ‘இல்லையே நீ தூங்கும்போதும் உலகம் இருக்கிறதே’ என்று சொல்வார்கள். உண்மையில் அது தூங்கும் எனக்கு இல்லை, வேறு யார் விழித்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கிறது. ஆனாலும் தூக்கத்தில் நாம் இல்லாது போய்விட்டோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு தூக்கத்திலும் ஒரு அனுபவம் இருப்பதால் தான், விழித்ததும் ‘நன்கு தூங்கினோம்’ என்று சொல்கிறோம். அப்போது நம்மை நாம் உணர்வதில்லை, உலகம் இருப்பதையும் அறிவதில்லை, ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவம் உண்டு என்றால் நாம் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமல்ல; அப்படி நன்கு தூங்கிய பின் நமக்கு ஒரு ஆனந்த மயமான உணர்ச்சி வருகிறதல்லவா? அந்த உணர்ச்சியை நாம் விழித்திருக்கும் போதும் அனுபவிக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை நாம் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை (ஸ்வப்னம்) மூலம் மேலும் அறிந்து கொள்ளலாம்.

lady-dreamsவிழிப்பு, ஆழ்நிலைத் தூக்கம் தவிர மூன்றாவதாக நமக்கு கனவு நிலையும் ஒரு அனுபவமே. ஆனால் அப்போது நடப்பதை நாம் மட்டுமே அறிவோம். இது மற்ற இரு நிலைகளின் கதம்பம் என்று கூடச் சொல்லலாம். விழிப்பு நிலை போன்ற அனுபவங்களும் இங்கு உண்டு; தூக்க நிலை போன்று அதன் இறுதியில் ஒன்றும் நிலையாத தன்மையும் இங்கு உண்டு. கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் கனவு முடிந்தபின் விழிப்பு நிலையில் தான் அதன் விவரங்களைக் கூற முடியும். அனுபவம் ஒரு நிலையிலும், அதைப் பற்றிய விளக்கம் வேறு நிலையிலும் என்பது தான் கனவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை. விழிப்பு நிலையில் நாம் இருப்பது போலவே கனவு நிலையில் நம்மைப் போன்று ஒருவரையும், உலகம் ஒன்றையும் உருவகப்படுத்தி நாம் கனவை அனுபவிக்கிறோம். கனவு காணும் போது அது நாம் உருவகப்படுத்தியது தான் என்பதை நாம் விழிக்கும் வரை உணரமுடியாது. ஆனாலும் அனுபவங்கள் உண்டு. இல்லையென்றால் விழித்தபின் அவைகளைச் சொல்லமுடியாதே. ஆக இவைகள் அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்ன?

1. கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது.
2. தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது.
3. விழிப்பு நிலையில் உள்ளது போலவே வரும் கனவு நிலை அனுபவங்கள் நிரந்தரமற்றவை; உண்மையல்ல.
4. நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.

நாம் தினம் தினம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளுக்கும் மேலே நாலாவது நிலை (துரீயம்) ஒன்று உள்ளது என்றும், அதுதான் இம்மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் முற்றும் உணர்ந்த ஞானிகள் கூறுகின்றனர். அதை உணர்ந்தால் நாம் பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.

இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும். அப்போது என்றும் ஆனந்தமாய் உள்ள பரமார்த்திக பெருநிலையை அடைவோம். இப்போது நாம் அமைதியாக இருக்கும்போதும், ஆழ்ந்த தூக்கத்திலும் அடையும் அந்த இன்பமே அது என்றும், அது நிரந்தரமாக நம்மில் உள்ளது என்றும் உணர்வோம். அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம். அதை உணர்ந்து நாம் உலகத்தில் செயல்பட, அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக, என்றும் உள்ளது தவிர வேறு உண்மை எதுவும் இல்லை என்பது நமது அனுபவத்தில் இப்பிறவியிலேயே வரும். அதற்கு என்றும் எங்கும் உள்ள அந்த உண்மைப் பொருளே அருள் கொடுக்கும்.

அதை இப்போதே ஏன் கொடுக்கவில்லை என்கிறீர்களா? அப்படிக் “கேட்பது யார்?” என்ற கேள்வியுடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்!

-படித்ததில் பிடித்தது

எண்ணங்கள்

மனிதன் சூழ்நிலையின் கைதி” என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள். இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.
1. உணர்வு மனம் (அல்லது புற மனம்) 2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்) மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை. இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களினதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம். மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.
1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).
2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.
3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று. இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு ‘இயக்கவியல் மனோவியல்’ அல்லது ‘இயக்க உளவியல்’ ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது. பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம்.
1. உணர்வு உந்தும் இயல்பு
2. நான் என்னும் முனைப்பு (Ego)
3. அதியுயர் மனக் கூறு (Super Ego)
1. உணர்வு உந்தும் இயல்பு (ID) இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும். பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன. ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் ‘உணவினையும்’) வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான ‘நான் என்னும் முனைப்புடன்’ (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.
2. நான் என்னும் முனைப்பு (Ego) உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான ‘நான் என்னும் முனைப்பு’ (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் ‘உணர்வு உந்தும் இயல்போ’ இதற்கு மாறாக ‘இன்பத்தை அடைதல்’ பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த ‘நான் என்னும் முனைப்பே’ ‘உணர்வு உந்தும் இயல்பினால்’ உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் ‘இந்த நான் என்னும் முனைப்பு’ வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான ‘அதியுயர் மனக் கூறு’ (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.
3. ‘அதியுயர் மனக் கூறு’ (Super Ego) உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது ‘நான் என்னும் முனைப்’பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் ‘அதியுயர் மனக்கூற்றின்’ (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்’வதியுயர் மனக்கூறான’து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது. மனித ஆளுமை…. ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம். இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை ‘மனச் சக்தி ‘ என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார். அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும். ம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும் .
ஓஷோ

ஓசோவின் சிந்தனைத்துளிகள்

osho
1.பொருட்கள் இடங்களை மனிதர்கள் பற்றிக்கொள்வதால் தான் துயரம் வருகிறது பற்றுதல் அகலும் போது துயரம் விலகுகிறது.
2.கபடமற்றவராக இருப்பது அடுத்த நபரும் இதே குணநலன்களைத்தூண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
3.வீண் சிந்தனையில் வீணாக்கும் சக்தியை விழிப்புணர்வாக உருமாற்றம் செய்யுங்கள்.
4.எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்கள் எஜமானனாய் இருங்கள்.
5.உண்மையைத்தேடாதே உண்மையாக மாறு.
6.எல்லாக்கணங்களும் பாக்கியமானவையே நீங்கள் ஆழமான நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் போது எதுவும் எப்போதும் தவறாக நடக்காது.
7.வாழ்வதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள்
8.ஆணவம் மறைகின்ற கணத்தில் எல்லா இரகசியங்களும் திறந்து விடுகின்றன.
9.விழிப்புணர்வு ஒன்றே எனது மதிப்பிற்கு உரியது.மற்றவை எல்லாம் அர்த்தம் அற்றவை
10.ஒவ்வொரு கணத்தையையும் இதுவே கடைசிக்கணம் என்பதைப்போல வாழுங்கள் ,யாருக்கும் தெரியாது இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.

தியானம் என்பது என்ன?

தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது. நாம் நாமாக இருப்பது. முழுமையாக இருப்பது. மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது. உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது. மனதைச் சுத்தப்படுத்துவது. இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது. ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது. இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும். ஆனால் யதார்த்தத்தில் நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை. இதுவே நாம் அறியாதது.
தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration) சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல. ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது. தியானம் என்பது மனம் கடந்து செல்லவது. மனதுக்கு அப்பால் செல்வது ஆகும். தியானம்! நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது. கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது. உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம். இந்த உலகத்திலையே இருப்போம். ஆனால் நடைபெறும் அனைத்தையும் ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு அழாகான விளையாட்டாக … மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு ஆடிப்பாடி மகிழ்வோம். விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம். நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன.
குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம் , நம் கடந்த காலத்தை நாம் அடக்கிய உணர்ச்சிகளை நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது. நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம். நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர். முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர. மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது. ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை. எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்;. ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில் இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது. ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின், பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார். இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும். சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. தியான முறைகள் படகுகள் போல ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே தியான நிலையை அடைவதற்கான பேரின்பத்தை அனுபவிப்பதற்கான ஒரு ஊடகம். ஒரு பாதை. மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும் இவர் வழிகாட்டும் பாதை இது.
-ஓஷோ

Copy and WIN : http://bit.ly/copy_win

ஞானமடைதல் என்ற புதிர்

untitled

இருபதாம் நூற்றாண்டில்,   இந்தியாவிலிருந்து தோன்றிய மகத்தான தத்துவ ஞானிகளுள் ஜே கிருஷ்ணமூர்த்தியும் (ஜேகே),   யு ஜி கிருஷ்ணமூர்த்தியும் (யுஜி)  அடக்கம்.   ஜேகே  உலகப்பிரசத்தியானவர்;    யுஜியை அறிந்தவர்கள் சிலரே.    பெயரை மீறி, இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.   இருவரும் சமகாலத்தவர்கள். தங்கள் தத்துவ விளக்கங்களில் மரபை உடைத்தெறிந்தவர்கள். ‘உலகை மீட்க வந்த மீட்பர்’   எனத் தத்துவ உலகம் ஜேகே-யை கொண்டாடிய போது,   ‘முதலில் இந்த உலகை மீட்பர்களிடமிருந்து (ஜேகே உள்பட) மீட்க வேண்டும்’  என்று சொன்னவர் யுஜி.

இவ்விருவரும் வாழ்க்கை பற்றி அளித்த தரிசனங்கள் முக்கியமானவை – புறக்கணிக்கமுடியாதவை.  யுஜி சொல்ல வருவதை தெரிந்துகொள்ளுமுன் ஜேகே சொன்னதைப் புரிந்து கொள்வது சிறப்பு.
நமக்கு எட்டாத விஷயமாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள்.  தொடர்ந்து படிக்க எந்தத் தத்துவ பரிச்சயமும் தேவையில்லை.

ஜே கிருஷ்ணமூர்த்தியின்   வாழ்க்கைத்   தரிசனம்:

ஜே கிருஷ்ணமூர்த்தி

ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை ஒருவர் முதன்முதலில் அறியும்பொழுது (அதுவும் இளம் வயதில்),    ஆர்க்கிமெடிஸ் ஓர் அறிவியல் உண்மையைக் அறிந்த போது கொண்ட பெரும் மன எழுச்சியைப் போல,   வாழ்வின் ரகசியத்தையே தெரிந்து கொண்டது போல் உணரக்கூடும். ஜேகேவின் வாழ்க்கையைப் பற்றிய விளக்கங்களில், உதாரணப்புருஷர்கள் இல்லை, புனிதநூல்கள் இல்லை,   மேற்கோள்கள் இல்லை. சூத்திரங்கள்,   மந்திரங்கள் தேவையில்லை,  குண்டலினி தெரிந்திருக்கத் தேவையில்லை. எளிய சொற்களைக் கொண்டு ஜே கே நமக்குச் சொல்வது: ‘முன்முடிவுகள் இல்லாது விழிப்புணர்வுடன் வாழ்க்கையை நோக்குங்கள்.  அதுவே நமக்குத் தெளிவையும், வழியையும் நல்கும்’,   என்பதே.

உண்மையை தரிசிக்க விழையும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது – வெளியுதவி எதையும் நாடாது இருப்பதே.   என் மதம் இவ்வாறு கட்டளையிடுகிறது,  என் குரு இப்படி போதித்திருக்கிறார்,   யோக சாஸ்திரம் இப்படி அறிவுரைக்கிறது – என அத்தனையும்  உதறி எறிவது அவசியம்.   மிஞ்சியிருப்பது நமது புலனறிவும், பிரக்ஞையும்  மாத்திரமே.   விருப்பமோ வெறுப்போ இன்றி, விழிப்புணர்வோடு, நடப்பதை உள்ளது உள்ளபடி காண்பது அடுத்த படியாகும். சொல்லப்போனால், இதுவே கடைசியுமாகும்.   நாம் செய்யக்கூடியது ஒன்றே: முன்முடிவுகள் இல்லாது, விருப்பு வெறுப்பு இல்லாது, விழிப்புணர்வோடு வாழ்க்கையை அணுகுவதேயாகும்.  ஜேகே, வாழ்க்கையை அறிவியல் பூர்வமாக அணுகினார் என்று சொல்லலாம்.  நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ள விழிப்புணர்வு ஒன்றே பாதை என்றார்.  (ஒரே பாதை தான் இருக்கிறது என்றால் அங்கே தேர்வு செய்ய வேறு பாதை இல்லை.) அதனால்  இந்த விழிப்புணர்வை  ‘தேர்வற்ற விழிப்புணர்வு’  (Choiceless Awareness) என்கிறார்.

ஆக,   எந்த ஒரு பிரச்சனைக்கும் விடை,   அப்பிரச்சனையை நாம் எவ்வளவு கவனமாக,   உக்கிரமாக,   சார்புநிலையற்று விழிப்புணர்வுடன் காண்கின்றோமோ,   அந்த அவதானிப்பிலே,   அநத உணர்வு நிலையிலே, அந்த தரிசனத்திலேயே உள்ளது. பிரச்சனையின் தீர்வு சுமுகமாக முடியும் என்பதல்ல இதன் அர்த்தம்.  முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு,   உணர்வுநிலை அமைவதே தீர்வாகும்.

உதாரணத்திற்கு,  ஜேகே,   ‘பிறரிடம் அன்பாய் இரு’   போன்ற் பொன்மொழிகளை உதிர்த்தவரில்லை.   விழிப்புணர்வுடன் ஒருவர் இருந்தால்,  அன்பாய் இருக்க வேண்டிய அவசியத்தை அவரே உணர்ந்து இயல்பாய் அன்பாக இருக்கக்கூடும். உங்கள் குருமார்கள்,  பெற்றோர்கள்,  மதங்கள் இட்ட வரையறைகளின் பேரில்  நீங்கள் அன்பு செலுத்துவதற்கும்,   எந்தத் துணையுமின்றி,  உள்ளார்ந்து உணர்ந்து அன்பாக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு முக்கியமானதாகும்.

இன்னொரு உதாரணம்.   நீங்கள் பொறாமைப்படும் இயல்பு கொண்டவர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.   சிறுவயதுமுதல், பொறாமைப்படுதல் நல்லதல்ல என்று பல வழிகளில்  போதிக்கப்பட்டிருப்பதால்,  ‘நாம் பொறாமைப் படுகிறோம்’ என்ற பிரக்ஞை எழுந்த மறுகணமே, “பொறாமை கொள்வது தவறு” என்று எதிர்மறைக் கருத்தும் நம் மனதில் உடனே தோன்றுகிறது.  “இனிமேல் பொறாமை கொள்வதில்லை”, என நமக்கு நாமே உறுதி பூணுகிறோம், குருமார்களின் பேச்சைக் கேட்கிறோம், கோயிலுக்குப் போகிறோம். (இம்மாதிரி நாம் செய்வதை, ஜேகே,  மனம் செய்யும் சித்து விளையாட்டுக்கள் என்பார்).  நாம் செய்வது தற்காலிகமாக அவ்வுணர்விலிருந்து தப்பித்துக் கொள்ளுதலே.  பொறாமையுணர்வு நம்மில் உண்டாக்கும் மன சஞ்சலத்தை, அவஸ்தையைத் தவிர்க்க,  அவ்வுணர்வை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் திராணியில்லாமல்,  நம்மை மேம்படுத்துவதற்கு வெளியிலிருந்து உதவி கோருவதாக நம்மையே ஏமாற்றித் தப்பித்துக் கொள்ளுவதையே செய்கிறோம்.  ஆனால், இத்தகைய வெளியுதவிகள்  பொறாமையுணர்வை  போக்குவதில்லை.  அது நம்முள்ளே கங்கு போல கனன்று கொண்டுதானிருக்கிறது.  (பகல் கனவு காண்பது,  அதீத காம உணர்வுடன் இருப்பது,  தாழ்மையுணர்வுடன் இருப்பது போன்றவற்றிகும் மேலே சொன்னது பொருந்தும்.)
சரி,  பொறாமைகொள்ளுதல் என்பது சரியல்ல தானே ?   இதைத்தான் மறைநூல்கள், புத்தர், ஏசு என்று ஆரம்பித்து எல்லாரும் நமது நலனுக்காக சொல்லியிருக்கிறார்கள் ? நாம் ஏன் ஜேகே சொல்வதைப் போல,   இவ்வளவு பிரயத்தனப்பட்டு, விழிப்புணர்வுடன் நாமே உள்ளார்ந்து உணர வேண்டும் ?
பொறாமை தீது என்று நமக்கு முன்னர் ஆயிரம் பேர் அதை சொல்லியிருக்கலாம். சொன்னவர்கள் அதை  உண்மையாய் உணர்ந்தும் இருக்கலாம். உணர்ந்ததை நல்லெண்ணத்துடன் மற்றவர்களுக்காக போதித்தும் இருக்கலாம்.  ஆனால்,   நாம் அதைக் கேட்கும் போது,   அது ஒரு விஷய அறிவு மாத்திரமே.  அந்த விஷய ஞானத்தால்,   நமக்கு ஒரு பயனும் கிடையாது.   விஷய அறிவு என்றைக்கும் அது சுட்டும் ஞானத்திற்கு அழைத்துச் செல்லாது.   சொல்லபோனால், உண்மையை உணர்வதற்கு பெரும்பாலும் தடையாகவே அமையும்.
மாங்கனியின் சுவையையே அறியாத ஒருவன்,  அதன் சுவை பற்றி ஏராளமாய்ப் படித்திருந்தாலும்,   அச்சுவையை அவன் உணர்வது,   மாங்கனி அவன் கையில் கிடைக்கும் போதுதான்.  அக்கனியை சுவைக்கும்போது,  அச்சுவை பற்றி அவன் அறிந்திருந்த அனைத்தையும் இயல்பாகப் புறந்தள்ளுகிறான்;   சுவையைப் பிளவின்றி உணர்கிறான்.
மாங்கனியின் சுவையை உணர,   அதை நேரடியாக அனுபவிப்பது எவ்வளவு முக்கியமோ,   அது போல,   நம் வாழ்க்கையை சரியாக வாழ,   அதன் ஒவ்வொரு தருணத்தையும்,   நம்முள் எழும் எண்ணங்களையும்,   உணர்வுகளையும்,   நாமே உள்ளார்ந்து,   உள்ளது உள்ளபடி உணர்வது அவசியமாகும்.    பிறர் வாழ்ந்து துப்பிய எச்சங்களைக் கொண்டு,   நமது வாழ்க்கையை அணுகலாகாது.
நமக்கு விருப்பமானது (உதாரணமாக காமம்)  நடக்கும் பொழுதுமட்டும் நாம் அதை உள்ளார்ந்து அனுபவித்து உணர்கிறோம்.   ஆனால்,  நமக்குப் பிடிக்காதது நடக்குமெனில்,  மற்றவர்கள் அதற்கு என்ன தீர்வு சொல்லியிருக்கிறார்கள் என்று சடுதியில் குறுக்குவழியையே தேடுகிறோம். இங்கு தான் ஜேகே,   நம் எண்ண ஓட்டங்கள் அனைத்தையும்,  அது இன்பமானதோ,   துன்பமானதோ,   உள்ளது உள்ளபடி நேரிடையாக எதிர்கொள்ளும் துணிவு வேண்டும் என சலிக்காது வலியுறுத்தினார்.
சரி,  உள்ளது உள்ளபடி காண்பது என்றால் எவ்வாறு ?    ஒரு விஷயத்தை உள்ளது உள்ளபடி காண,   ஜே கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைக்கும் முறை பொய்மை களைதல்.   அதாவது, நம்முள் எழும் பொய்களை,   இதுவல்ல காரணம்,  இதுவல்ல காரணம் என்று தொடர்ந்து களைந்து வரும் போது,    எஞ்சுவதே உண்மை.
அடுத்த கேள்வி:   நம் எண்ணங்களை,   உணர்வுகளை இப்படி நேரிடையாக, விழிப்புணர்வுடன் எதிர்கொள்வதால் என்ன நடந்து விடப்போகிறது ? அது எப்படி நமக்கு சரியான பாதையைக் காட்டவல்லது ?    இதற்கான பதிலைச் சொல்வதை ஜே கிருஷ்ணமூர்த்தி தவிர்த்தார்.  ஆனால் அதன் சூட்சுமம்,  எப்படி பௌத்தத்தில் ‘மகாதர்மம்’   என்பது எங்கும் விரவி,   தர்மத்தை நிலைநாட்டுகிறதோ,  அது போல, நாம் விழிப்புணர்வுடன் செய்ய வேண்டியதைச் செய்தால்,  ஜேகே அடிக்கடி சுட்டும் ‘காலவரையற்றது’  அல்லது ‘அது’   என்பதானது நமக்கு சரியான பாதையைச் சுட்டும் எனக் கொள்ளலாம்.   ‘அது’ வானது பாதையைக் காட்டுகிறதோ இல்லையோ,   நாம் செய்ய வேண்டியது ஒன்றே:   விழிப்புணர்வுடன் இருப்பது என்பதில் ஜேகே மிகவும் கராறாய் இருந்தார்.
எளிய சொற்களால்,   எளிய வழிமுறை போலத் தோன்றினாலும், இவ்வணுகுமுறையைப் பின்பற்றி வாழ முற்படும்போதுதான் அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.


ஜே கிருஷ்ணமூர்த்தியின்  தத்துவம்  –   நடைமுறைச்  சிக்கல்கள்

தொடக்கத்தில்,  இவ்வணுகுமுறையைப் பின்பற்றி,   நாம் நம் மனம் செயலாற்றும் விதங்கள் பற்றி நிறையவே அறிந்துகொள்கிறோம்.  ஆனால், நம்மில் மிகுதியோரை வதைபடுத்தும் நமது கோபங்கள்,  பொறாமை,  சபலங்கள் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்வதால் இவ்வுணர்வுகளை வென்றோமா என்றால் தயக்கத்துடன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.   இவ்வுணர்வுகளை விழிப்புணர்வுடன் கவனிக்கையில் அவை வடிந்து அடங்கியது போலத் தோன்றினாலும் அவை மீண்டும் எழவே செய்கின்றன.  மீண்டும் விழிப்புணர்வுடன் எதிர்கொண்டாலும், அடங்கியது போல் இருந்து,  அவை திரும்பியும் வீறுகொண்ட நாகமென படமெடுக்கின்றன. எண்ணத்தின் தொடர்ச்சியான செயல்பாடு – நம்மை மிகுந்த சோர்வுக்கும்,  ஏமாற்றத்திற்கும் உள்ளாககுகின்றன.   சில சமயம், நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோமா என சஞ்சலம் கொள்ளவும் நேரிடலாம்.  ஜேகே சொன்னதைச் சரியாகத் தான் புரிந்து கொண்டோமா அல்லது ஏதாவது தவற விட்டோமா என்ற சந்தேகம்  அவரது புத்தகங்களையும், சொற்பொழிவுகளையும் மீண்டும் நாடத் தூண்டும்.    இந்தச் சுழற்சி நிற்காதது.
மேலும் வாழ்க்கையில் எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருப்பது ஒரு பாராங்கல்லை எப்பொழுதும் சுமந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வாக ஒருவருக்குத் தோன்றலாம்.

ஜேகே, தான் கூறும் வாழ்க்கைத் தரிசனத்தை ஒருவர் உண்மையாகப் புரிந்து கொண்டாரெனில்,   அவரது எழுத்தையோ சொற்பொழிவையோ மீண்டும் கேட்க வேண்டிய தேவையே இராது என அடிக்கடி சொல்வார்.. ஆனால்,  அவரது வழிமுறையைப் பின்பற்றியவர்கள்,  மீண்டும்  மீண்டும் அவரிடமே தஞ்சம் புகுந்தனர்.

பிற்காலத்தில்,  ஜேகே,   தான் சொன்னதைப் புரிந்து அதன்படி வாழும் ஐந்து பேராவது இருப்பார்களேயானால்,   அதுவே எனக்குப் போதுமானது என்றார்.    எண்ணிக்கை முக்கியமல்ல என்று ஜேகே கூறுவதை நாம் ஆமோதித்தாலும்,   நம்மை அயரவைக்கும் கேள்வி:   ஐந்து பேராவது தேறினார்களா ?
ஆன்மிக உலகில் ஜேகே ஆற்றிய பங்களிப்பை கேள்விக்குரியதாய் உட்படுத்துவது இப்பதிவின் நோக்கமல்ல.  ஜே கிருஷ்ணமூர்த்தி காட்டிய பாதையைப் பின்பற்றியவர்கள், அவர் சுட்டிய தூரத்திற்கு செல்லவில்லை என்று கொண்டாலும்,  நிச்சயம் ஒரு மேம்பட்ட நிலையையே அடைந்திருப்பர்.  உலகெங்கும் ஜேகே-வழி நடக்கும் கல்வி மற்றும் அறச்சாலைகள் சிறப்பாகவே செயல்படுகின்றன.  ஏராளமான படித்த, உறுதியான, நல்ல உள்ளங்கள் அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நடைமுறை உண்மை.

படித்ததில் பிடித்தது