Archives

ஆதிமுதல் அருள்கடவுள் வருடாந்திர கும்பாபிசேகம்

வருடாந்தர கும்பாபிஷேகம் வைகாசி மாதம் 29ந் தேதி (12.06.2017) நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஆதி முதல் அருள் கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இடம்:
ஆதிமுதல் அருள் கடவுள் ஆலயம், பரமபதி, வீரபாஞ்சான், கருப்பாயூரணி, மதுரை – 625020.

Advertisements

பிராணசிகிச்சை

images

ஆன்மிகம் என்பது ஒன்றும் பெரிதல்ல. இது நிய மனதின் (pure consciousness) விளையாட்டை உணர்ந்து கொள்வதுதான். அதாவது எமது தவறுகள் பற்றியதை அறிந்துக் கொள்வதற்காக அதன் தோற்றநிலை அல்லது உற்பத்தியை அறிந்துக் கொள்வதேயாகும், அல்லது தேடிக் கண்டுப்பிடிப்பதேயாகும் – ஸ்ரீ நிசங்கதாத்தா மகாராஜ்.

பிராணா எல்லா உறுப்புகளிலும் (organs) உறைந்து, உடலின் எல்லாப்பாகங்களையும் ஒருமைப்படுத்துகின்றது பிராணா என்பது பிரபஞ்சத்தை படைப்பதாகவும், காப்பதாகவும், அளிப்பதாகவும், போற்றி வணங்கப்படுகின்றது. பிராணாவே சூரியனாகவும், மழையாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், உலகம் முழுவதையும், சொர்க்கத்தையும், நரகத்தையும் கட்டுபடுத்தும் விசையாக விளங்குகின்றது. பிராணாவே எல்லாவற்றையும் ஆளும் தோற்றமாகவும், எல்லா உயிர்களுக்கும் கடவுளாகவும் உள்ளது.

பிரணாவே பிரபஞ்சத்தின் வலிய சக்தியாகும். எல்லா ஜீவராசிகளும், இதனாலேயே வாழ்கின்றன. வேறுப்பட்ட மார்க்கங்கள் அல்லது நல்வழிமுறைகள் பிராணாவிற்கு வேறுபட்ட பல பெயர்களை வழங்கியுள்ளன. உயிர்ச்சக்தி, கை (Ki), ஒர்கோன் (orgone) மேலும் சக்தி (energy) என்று பல பெயர்கள். பிராணாவானது கூடுதலாக சுவாசத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது சுவாசமல்ல. பிராணாவானது சுவாசத்தில் நடைபயில்கிறது (rides on the breadth). ஆனால் அதிலிருந்தும் வேறுபட்டது. பிராணாவானது, சுவாசத்தின்போது உடலினுள்ளும் வெளியிலும் செல்கின்றது.

பிராணா என்பது ஒரு சமஸ்கிருத பெயராகும். இதன் அர்த்தம், ‘பிரா’ (pra) என்பது முன்னம் என்பதையும், ‘ணா’ (na) என்பது சுவாசத்தையும் குறிக்கின்றது. இது ஒரு தூய சக்தியாகும். இதற்கென ஒரு தனித் தன்மையுமில்லை. இது தனது தூய தனித் தன்மையை இழக்காது. எத்தகைய தன்மைகளையும் (qualities) எடுக்க வல்லது. இது நாம் எவ்வாறு ஒரு தனிமனிதனாக இருந்து கொண்டு, உடல் அணிகலன்களை அணிவதால் அதற்குரிய தோற்றத்துடன் (style) திகழ்கிறோமோ அது போன்றது.

இந்த பிராணாவானது, தியானத்தை மேற்கொள்வதற்கு உடலுறவு அல்லது பிராண சிகிச்சையை (healing) செயற்படுத்துவதற்கும் உதவுகின்றது. இது உடலிற்கு சக்தி ஊட்டுவதற்கும், சிந்தனை செய்வதற்கும் உரிய எண்ணச்சக்தியை அளிப்பதற்கும் மனிதனுக்கு உதவுகின்றது.

மனதில் உருவாகும் எண்ணத்தின் அசைவுகள், பிராணாவின் அசைவாலேயே உருவாகின்றன. பிராணாவின் அசைவானது, மனப்பிரதிபலிப்பின் எண்ண அசைவுளே!. இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்த சுழற்சி (வட்டம்) போன்று தோன்றுகின்றன. ஏன் முழுமையான விஞ்ஞானம் ஒன்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே, பிராணாவின் விளைவுகளைக் கொண்டு உருவாகியுள்ளது.

யோகமுறையானது, ஐந்து விதமான பிராண சக்தி எமது உடலில் இருப்பதாக கூறுகின்றது. அவையாவன பிராணா (Prana), அபண (Apana), சமண (Samana), உதன (Udana), அத்துடன் வயனா (Vyana) ஆகும். இது ஐந்து பிராணாக்களிலும், பிராணாவும் அபனாவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. பிராணாவானது இதயத்திலும், சிரசிலும் இருக்கையில், அபனாவானது முதுகு எலும்பின் (spine) அடிப்பாகத்தில் அமர்ந்துள்ளது. பொதுவாக பிராணாவும், அபனாவும் சுவாசத்தின் இரு துருவங்களாகும். பிராணாவானது சூரிய குடும்ப (solar) இயல்பையும் (அதாவது ஆண் தன்மையையும்), அபனாவானது சந்திரனின் (moon) இயல்பையும் (பெண்மைத்தன்மை) கொண்டுள்ளது.

பிராண சிகிச்சை முறையென்பது ஓர் ஆயுர்வேத அணுகுமுறையாகும். இது மீள்சக்தியூட்டதை மனிதனின் முழு உடலுக்கும் வழங்குகின்றது. அதாவது உடல், மனம், உணர்வு இதனால் பயனடைகின்றன.

உண்மையில் இச்சிகிச்சை முறை உருவாக்கப்பட்ட நோய்களுக்கு மட்டும் தீர்வாக உதவுவது அல்ல. அதன் மூலப்பிரச்சனைக்கு (fundamental issue) ஒரு நிரந்தரத்தீர்வாக, மிகவும் பயன்தரக்கூடியதாக அமைவதே பிராணசக்தி சிகிச்சையின் சிறப்புத்தன்மையாகும்.

 

மூன்றாம்கண்ஓசோ

download-1


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டுபிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன்முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம்மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானதுதான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக்கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

~~ஓஷோ~~
“பரவெளியின் பரவசங்களும் பாடல்களும்”

நாசி துவாரங்களில் வாசி யோகம் பழகுதல்

download-1

 

 

நாசி துவாரங்களில் வாசி யோகம் பழகுதல்கேள்வி
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் , ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல் ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?

நாடி சுத்தி , பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில்
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள். நமது உடலில் 72000 நாடிகள் செயல் படுகிண்றன.

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன . அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் .
இடகலை , பிங்கலை ஆகிய நாடிகள் நமது இடது நாசி மற்றும் வலது நாசி துவாரம் வழி இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும் இடகலை என்ற சந்ரகலை 16 நாத கலை சக்தி கொண்டது . பிங்கலை என்ற சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy ) சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற 4 கலை சக்தி (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன் அழியாமல் இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை பெறப்படுகிறது . இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும் சித்திகளுக்கும் அடிப்படை ..
.
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம்
அப்பொழுது நாத கலை !6 விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4 கலை வீணாகிறது இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசி உருவாக்குகிறோம். இவ்விதம் .வாசிபழகுதல் துயர் தராது
.
அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு
முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
அதன் பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும்
அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும் .
இவை நாடிசுத்தி எனப்படும் .
அதன் பின் வலது நாசியில் உள்வாங்கி கும்பித்து இடது வெளியிடல்
அதன் பின் இடது நாசியில் உள்வாங்கி கும்பித்து வலது வெளியிடல் என வாசி பழகவேண்டும் .

இது பிராணயாமம்

இப்படி படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம் பழக வேண்டும் .
அதன் பின் ஆதாரதளங்களில் பிராணாயாமம் செய்வது வாசியோகம் பழக வேண்டும் .

இதனால் பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம் படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும்
.
இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால் சக்தி சமநிலை கெடும் .
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .
இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால் உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .

படித்ததில் பிடித்தது

திபெத்திய தியானமுறை

images-9
இந்திய யோகிகளைப் போலவே திபெத்திய லாமாக்களும் தியான முறைகளில் நல்ல
தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை தியானம் என்பது மனிதன் தன் உண்மையான தன்மையைக் கண்டுணர்வது தான். அப்படிக் கண்டுணர்ந்த பின் மகத்தான அற்புதங்களை மனிதன் நிகழ்த்திக் காட்ட முடியும் என்றாலும் அதெல்லாம் உண்மையில் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தது.
புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவைப் பின்பற்றி வந்த அவர்கள் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய அமைதியையும், தெளிந்த அறிவையும் பெற்றிருத்தல் அவசியம் என்று கருதினார்கள். எண்ணங்கள் பெரும்பாலும் அந்த இரண்டையும் இருட்டடிப்பு செய்து விடுவதால் தியானம் மூலம் எண்ணங்களை நீக்கி அமைதியையும், அறிவுத் தெளிவையும் பெற்று உண்மையை அறிய வலியுறுத்தினார்கள். அப்படி மனிதன் தன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டால் பின் அவன் எல்லையற்ற ஆனந்தத்தையும் நன்மையையும் தன் இயல்பென உணர்ந்து மெய்ஞானம் பெறுவான் என்று நம்பினார்கள்.

தியானத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற திபெத்திய லாமாக்கள் தோற்றத்தில் இளமையாக இருப்பதையும், சுபாவத்தில் மாறாத அமைதியுடன் இருப்பதையும், பல சக்திகளைப் பெற்றிருந்ததையும் அங்கு சென்று அவர்களைக் கண்ட வெளிநாட்டினர் பலரும் கண்டு அதிசயித்திருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. திபெத்திய தியானம் மட்டுமல்ல, எந்த தியானத்திலும் தேர்ச்சி பெற்று அதை ஒழுங்காகத் தொடர்ந்து செய்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அப்படி ஆவது இயல்பே. இனி திபெத்திய தியான முறையைப் பார்ப்போம்.

தியானம் செய்யப் பொதுவாக அதிகாலை நேரம் சிறந்ததாக திபெத்திய லாமாக்கள் கருதுகிறார்கள். அல்லது எழுச்சியூட்டும் மனநிலையுள்ள சமயங்களும், ஆர்வமுள்ள நேரங்களும் தியானத்திற்கு உகந்தது என்கிறார்கள். கவலையோ, வேறு பிரச்னைகளோ உள்ள சமயங்களில் தியானம் கைகூடாது என்பதால் அதை சரி செய்து விட்டு அல்லது அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டு தியானத்தில் அமரச் சொல்கிறார்கள்.

1) தரையில் சம்மணமிட்டோ, அல்லது நாற்காலியிலோ சௌகரியமாக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கைகளைத் திறந்த நிலையில் இடது கையின் மேலே வலது கை இருக்குமாறு அடிவயிற்றருகே (தொப்புளுக்கு இரண்டு அங்குலம் கீழே) வைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளின் கட்டைவிரல்கள் நுனிகளும் ஒன்றை ஒன்று தொட்டு ஒரு முக்கோணத்தை உண்டாக்கும்படி முத்திரையை உருவாக்குங்கள்.

2) கழுத்தை லேசாகக் கீழே சாய்க்கவும். உங்கள் நுனி நாக்கு வாயினுள் மேல் பற்களின் வேர் பாகத்தைத் தொட்டபடி இருக்கட்டும். கண்களை தாழ்த்தி உங்களுக்கு முன்னால் உள்ள தரையைப் பார்த்தபடி பார்வையை நிறுத்துங்கள். (கிட்டத்தட்ட பாதி கண்கள் மூடியது போல் இருக்கும்). இயல்பாக மூச்சு விடுங்கள். உங்கள் கவனம் மூச்சில் இருக்கட்டும்.

3) ஓரளவு மனம் அமைதியடைந்தவுடன் உங்கள் மனதைக் குவிக்க ஏதாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து மனத்திரையில் பாருங்கள். அது ஒரு புனிதப் பொருளாகவோ, உங்களுக்கு உயர்ந்ததாகத் தோன்றும் பொருளாகவோ இருப்பது நல்லது. திபெத்தியர்கள் பெரும்பாலும் புத்தர் சிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது சிலுவையாகவோ, அழகான ஒரு பூவாகவோ, உங்கள் குருவின் உருவமாகவோ, உங்கள் தெய்வச்சிலையாகவோ, ஒரு அழகான விளக்கின் தீப ஒளியாகவோ கூட இருக்கலாம்.

4) இனி உங்கள் முழுக் கவனத்தையும் மூச்சிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளிற்கு மாற்றுங்கள். அந்தப் பொருளை மனக்கண்ணில் இடைவிடாது பார்ப்பதும், மிகத் தெளிவாகப் பார்ப்பதும் தான் உங்கள் நோக்கம்.

5) மனத்திரையில் அப்படித் தெளிவாகப் பார்ப்பது கண்களைப் பாதி திறந்த நிலையில் உள்ள போது கஷ்டமாகத் தெரிந்தால் கண்களை மூடிக்கொள்ளலாம். ஆனால் மனக்கண்ணில் தெளிவாகவும், இடைவிடாதும் காண்பது முடியாமல் போய் உறங்கி விடவும் வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க வேண்டும்.

6) கண்களை மூடிய பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த பொருளையே முழுமையாகப் பார்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சிவப்போ, கருப்போ நிறங்களை நீங்கள் கண்டால் கண்களை மூடியும் கவனம் புறக்கண்ணிலேயே இன்னமும் இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் உங்கள் கவனத்தை மேலும் கூர்மையாக்கி, நூறு சதவீத கவனத்துடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பொருள் மீது கொண்டு வாருங்கள்.

7) மனம் வேறு எண்ணங்களில் சஞ்சரிக்க ஆரம்பித்தால் அதை உணர்ந்தவுடன் மீண்டும் அதை நீங்கள் தியானத்திற்காக தேர்ந்தெடுத்த பொருள் மீதே கொண்டு வாருங்கள். அதைக் கூடுமான அளவு முழுக் கவனத்துடன் பாருங்கள். அதன் சிறப்பு அம்சங்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். உதாரணத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தது புத்தர் சிலை என்றால் அந்தப் புத்தர் முகத்தில் தவழும் அந்த பேரமைதியைக் கவனியுங்கள். அவரது புன்னகையைக் கவனியுங்கள். அவர் அமர்ந்துள்ள நிலையைக் கவனியுங்கள். அவர் விரல்களின் முத்திரையைக் கவனியுங்கள். இப்படி அந்த சிலையைப் புதுப்புது கண்ணோட்டத்துடன் பாருங்கள். பார்ப்பதை சுவாரசியமாக்குங்கள். ஆனந்தமாக்குங்கள். ஒரு நிலையில் புத்தரே உங்கள் முழுக்கவனத்தையும் ஆட்கொள்வார். உங்களையே கூட நீங்கள் மறந்து புத்தரே எல்லாமாகும் போது தியானம் முழுமையாகிறது. அது சில வினாடிகளே நீடிக்கலாம். மறுபடி மனம் தியான நிலையை இழக்கலாம். ஆனால் அந்த வினாடிகள் தியானம் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்தி இருக்கும். ஒரு மிகப்பெரிய அனுபவத்தின் முதல் கணத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானத்தில் மேற்கொண்டு பயணிக்க பயணிக்க அந்த சில வினாடிகள், பல வினாடிகளாகும். நிமிடங்களாகும். உங்கள் கவனம் கூர்மையடையும். தெள்ளத் தெளிவடையும். மனம் அமைதியடையும். சக்தி அடையும். மிக உயர்ந்த சாதனையாளர்கள் அந்த தியான நிலையை தினசரி வாழ்க்கைக்கே கொண்டு வர முடியும். சாதாரண தினசரி செயல்களைக் கூட தியானம் போல் செய்ய முடியும்.

ஒரு ஜென் ஞானி சொல்வார். “நான் சாப்பிடும் போது சாப்பிடுகிறேன். நான் உறங்கும் போது உறங்கும் போது உறங்குகிறேன்”. மேற்போக்காகப் பார்க்கையில் இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் இது எவ்வளவு சிரமமான விஷயம் என்பது புரியும். சாப்பிடும் போது பல சிந்தனைகளுடன் எந்திரத்தனமாய் சாப்பிடுகிறோம். உறங்கும் போதோ பல கோடி சிந்தனைகள். இப்படி இருக்கையில் அதை அதை செய்யும் போது அதிலேயே நூறு சதவீதம் இருக்க முடியுமானால் அதை விடப் பெரிய வெற்றி உண்டோ?