எளிய தியான பயிற்சி

சில எளிய தியானப் பயிற்சிகள்

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பய

ணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.

முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு……..

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற
விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள்.

மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.
இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

Copy

திருமூலரும் திருமந்திரமும் – உபதேசம் 14 தியான வழி – ஞான வழி

 

தியான வழி – ஞான வழிimages-4

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம்

“தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே”

தூங்கும் போது என்ன நிகழ்கின்றன என்று அறியாது இருப்பது போலத் தியான நிலையில் உலக விடயங்களை உணராது இருத்தலின் , அந்நிலையில் ஈடுபட்டிருந்த நிலையை தூங்கும் நிலையாகும், தூங்காமல் தூங்கி சுகம்பெறும் அமைதியான நிலையை தியானம் என்கிறார் திருமூலர், அந்நிலையில் இருப்பவர் இறைவனது இருப்பிடமான சிவலோகத்தையும், சிவனோடு ஒன்றியிருக்கும் யோகநிலையையும் அடைவர், இதனால் அவருக்கு அழியா இன்பத்தையும் பெறுவர் என்கிறார்,

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம், மகான்கள் இடைவிடாது ஆற்றொழுக்காய் தியானித்து கொண்டிருக்கிறார்கள், தியானத்தில் கிடைக்கிறது ஆத்ம ஞானம், அதுவே மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாலமாகிறது, அது பொய்யில் இருந்து உண்மைக்கும் இருளில் இருந்து ஒளிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், நிம்மதியற்ற நிலையில் இருந்து நிலையான அமைதிக்கும், தீயஒழுக்கத்தில் இருந்து நல்லொழுக்கத்திற்கும் நம்மை நிலைமாற்றம் செய்கிறது, தியானத்தில் ஈடுபடுகிறவர் அமைதியும், ஒருமுகப்படத்திய அறிவும், கவனமும் கொண்டிருக்கவேண்டும்,

நுட்பமான பிரம்மத்தை நுட்பமனத்துடன் அணுகுங்கள், தியாகத்திற்கேற்ற சாத்வீக சூழ்நிலையை தோற்றுவித்துக் கொள்ளுங்கள், தியானத்ததிற்கு உகந்த நேரம் பிரம்ம முகூர்த்த காலை நேரமே உகந்தது, ஏனெனில் அந்நேரம் உங்கள் மனம் தெளிவாகவும், அமைதியாகவும, இருக்கும், பற்றுகளைப போலவே கவலைகளையும் ஒதுக்கியவர்க்கே தியானம் உண்டாகும், மனதை வழிக்கு கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்கள் வேண்டாம், எண்ணங்களை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க முடியாது, எண்ணஙகள் தானாக வந்து, தானாகவே போய்விடும், என்று இயல்பாக இருந்து விடுங்கள், தியானப் பயிற்சி பழக்கத்தில் சரியாக அமையும்.
தியானத்தில் பொறுமை அவசியம், அதன் பலனை உடனே எதிர் பார்க்க முடியாது, சிலருக்கு பல ஆண்டுகள் வரைகூட ஆகலாம், பொறுமையுடன் பயிற்சி அவசியம், தியானப்பாதையில் தடைகள் நீங்கும், ஐயங்கள் தீர்வதும் படிப்படியாகவே நிகழும், தியானம் ஒரு யோகம், மோட்ச சாதனம், எண்ணங்களின் ஆற்றல் பெருகவும், நோக்கம் நிறைவேறவும் தியானம் உதவும், தியானம் என்கிற பெருநெருப்பில் தீய சக்திகள் அழிந்துவிடும்,

கீதையில் ” தியான யோகத்தில் முன்னேற விரும்புகிறவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தி அடைந்தவனுக்கு செயலற்று இருப்பது உபாயமாகிறது,”என்கிறது,

மனம், புலன்கள் இவற்றை அடக்கி எதிலும் ஆசையில்லாமல் தனியொருவனாய் தன்னிடத்தில் இருந்து இடைவிடாது மனதை ஒடுக்க வேண்டும்,உள்ளதை உள்ளபடி அறிய ஏகாந்தம் அவசியம், தியானிப்பவர் நாசி முனையில் பார்வையை ஒருமுனைப்படுத்தினால் தடுமாற்றம் தூக்கம் ஏற்படாது, தியானத்தின் போது விருப்பு வெறுப்பு மகிழ்ச்சி துயரம், தீய நினைவுகள் இருக்கக் கூடாது, மனதில் வைராக்கியம் இருக்க வேண்டும்,

தியானத்தின் மூலம் யோகி தன்னுடைய ஆத்மாவை இறைவனுடன் இணைத்துக் கொண்டு அமைதி அடைகிறான், மிதமாய் உண்டு, மிதமாய உறங்கி, அளவோடு கர்மங்கள் செய்து, விழிப்போடு இருப்பவனுக்கு தியான யோகம் துக்க்ததைப் போக்கும்,
மனதை வசப்படுத்துவது கடினந்தான் ஆனாலல் பயிற்சினாலும், வைராக்கியத்தினாலும், அதை வசப்படுத்த முடியும், என்றார் பரமாத்மா,

தியானம் பற்றி திருமந்திரம்

இறைவனை இடைவிடாது சிந்தித்திருப்பது தியானம்,
சரீரத்தில் அக்கறை காட்டுகிறவர்கள் தங்கள் ஆன்மா குறித்து அக்கறை கொள்வதில்லை, அவர்கள் இறைவனை நினைப்பதில்லை, இறைவன் விளக்கமுறும் சிந்தையிலும், கவனம் வைப்பதில்லை, தியானம் என்பது இறைவனை சிநதித்தருப்பதன்றி வேறேயென்ன என்று கேட்கிறது திருமந்திரம், இதன் பாடல்: ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை…………
சுழிமுனை தியானம் குறித்து கீழ்கண்ட பாடல்

மனத்து விளக்கினை மான்பட ஏற்றி
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்கும் திரயொக்கத்தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே,

மனத்தில் விளஙகும் ஒளியை மேலே செலுத்தி சினத்து நெருப்பை நீக்குதல் வேண்டும், கருவி கரணங்களை வழிப்படுத்தி தூண்டவும் மனத்துள் விளங்கும் சிவம் மங்காத விளக்காகும்,
ஆயிரமான்ணட யோகத்திருந்தும் காணமுடியாத இறைவன் கண்ணிலும், இதயத்திலும், நிறைந்திருக்கிறான், கண்ணாடியில் உருவத்தை காண்பது போல் உங்கள் தியானத்தில் அவனை எளிதாய் நீங்கள் காணமுடியும் என்கிறார் ததிருமூலர், பாடல்: எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்…………

இறைவன் ஒளிவடித்ததிலும், ஒலிவடிவிலும் தன்னை வெளிப்படுத்துவதை தியானிப்பவர் அறியமுடியும், தியானத்தை மேற்கொண்டவர் பத்துவித ஒலிகளை கேட்கிறார் , மணி கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு தும்பி, சங்கு, பேரிகை, யாழ் இவற்றின் ஒலிகள், நுட்ப ஒலிகளை அறியும், திறன் தியானத்தில உண்டாகிறது. பாடல் ; மணிகடல் யானை வார்குழல் மேகம்……………..
தியானம் செய்யும சாதகர் தனது கண் பார்வையை புருவ மத்தியில் செலுத்திருக்க வேண்டும் என்கிறார் திருமூலர்,

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளிது அறியில் ஓர்ஓசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

சகஸ்கரதளத்தில் விளங்குகறாள் அன்னை, அங்கே பேரோளி தீபம் எப்போதும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது, ஞானியரும், யோகியரும் அவ்வொளியை காண்பர் பேரின்பத்தை வழங்கும் பேரோளி அனுபவம் தியானத்தில் கிடைக்கும், ஆணவ இருட்டு அதிகரிப்பில் நெஞ்சம் இளைப்புறும், தியானத்தில் ஒளி மண்டலம் மூன்றிலும் பொருந்தி மேற்ெச்ல்ல அந்த இளைப்பு நீங்கும், தாமதம், இராசதம், சாத்துவிகம், என்கிற முக்குண தோசத்தில் உண்டாகும் இருள் தியானத்தில் நீங்கும், உச்சியில் ஒளி காணும்,
திருச்சிற்றம்பலம் – ஓம் நமச்சிவாய ஓம்

யோகம்

யோகம் என்றால் என்ன?

ஸ்ரீ அரவிந்தர்

யோகம் மனிதப் படைப்பின் தற்காலப் புதுப் படைப்பு அன்று. அது நமது பண்டைய வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட சொத்தாகும்.

வேதமே இப்போதுள்ள நூல்களிலெல்லாம் பழமையானது. ஒரு நோக்கில் வேதம் என்பது யோகம் தொடர்பான அனுபவக் குறிப்புக்களின் பெரியதொரு தொகுப்பாகும்.

எல்லா மதங்களும் வேதமாகிய வேரிலிருந்து மலர்ந்த மலர்களே. எல்லாத் தத்துவக் கொள்கைகளும், கவிதையும், எல்லா மேதாவிலாசப் படைப்புகளும், உணர்ந்தோ உணராமலோ வேதத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றன.

http://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-7693223566813123&format=300×250&output=html&ad_type=image&url=http%3A%2F%2Ftamil.webdunia.com%2Farticle%2Freligious-thoughts%2F%25E0%25AE%25AF%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%258E%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9-111103100036_1.htm&dt=1480985368985&correlator=2758804057005&ref=https%3A%2F%2Fwww.google.co.in%2F&ifi=1யோகத்தின் மூலேம கடவுள் உலகத்தைப் படைத்தார். யோகத்தின் மூலமே மீண்டும் அதைத் தம்முள் இழுத்துக்கொள்வார் என்று நம்புகிறோம். யோகமே எல்லாப் பொருட்களின் தோற்றமும் ஒடுக்கமும் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்குத் தன் படைப்பின் பெருமையையும், அதை எவ்வாறு முரண்பாடுடையவைகளைச் சமரசப்படுத்துவதன் மூலம் படைத்தான் என்பதையும் வெளிப்படுத்தியபோது, “இதோ எனது திவ்யமான மாயையைப் பார்”என்று கூறுகிறான்.
யோகம் எனும் சொல்லுக்கு பொதுவாக நாம் குறுகிய பொருளே சொல்லுகிறோம். அதை உபயோகிக்கும்போதும், பிறர் சொல்லக் கேட்கும்போதும் பதஞ்சலி முனிவரின் இராஜ யோகத்தையே, அதன் ஆசனம், பிராணாயாமம், தியானம், தாரணம், சமாதி ஆகியவற்றையே மனத்தில் கொண்டிருக்கிறோம். இவை ஒரு யோக முறையின் உட்கூறுகள் மட்டுமே.

கங்கையிலிருந்து வெட்டப்பட்ட கால்வாய்கள் கங்கை ஆகிவிடாது என்பதுபோல் இம்முறைகளே யோகம் ஆகிவிடாது.

சுவாசப் பயிற்சியைப் பற்றியோ, ஆசனங்களைப் பற்றியோ நினைக்காமலே யோகம் செய்யலாம். ஒருமுனைப்படுதல் (தாரணை) தேவையில்லாமல், முற்றிலும் விழித்த நிலையில், நடக்கும்போது, கடைமையாற்றும்போது, சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, பிறருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலை செய்துக்கொண்டிருக்கும்போது, உறங்கும்போது, கனவு காணும்போது, உணர்வற்ற நிலையில், அரை உணர்வு நிலையில், இரட்டை உணர்வு நிலையில் எப்போதும், எந்நிலையிலும் யோகம் செய்யலாம். அது ஒரு மருந்துச் சரக்கோ, ஏதோ குறிப்பிட்ட முறையோ, பயிற்சியோ அன்ற

ு;அது நித்தியமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு காரியம்;அது பிரபஞ்சத்தின் இயல்பிலேயே அமைந்துள்ளது.

ஆனாலும், நடைமுறையில், யோகம் என்ற சொல்லை, நித்தியமாய் நடந்துகொண்டிருக்கும் இந்தப் பொது நியதியை அல்லாமல், குறிப்பிட்ட இலட்சியங்களை அடையப் பயன்படுத்தும் விசேட முறைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் பயன்படுத்துகிறோம்.

யோகம் அடிப்படையான இந்த உண்மையின் மேல் நிற்கிறது; இவ்வுலகில் நாம் எங்கும் ஒன்றாகவும், அதே சமயம் பிரிந்தும் இருக்கிறோம்;எல்லா உயிரிணங்களுடன் ஒன்றாகவும், அதே சமயம் வேறாகவும் இருக்கிறோம்;இயற்கை என்றோ, கடவுளென்றோ, பிரம்மனென்றோ நாம் அழைக்கும் அந்த அனந்தப் பொருளுடன் ஒன்றாகவும், அதே சமயம் பிரிந்தும் இருக்கிறோம்.

ஒரு உடலிலிருக்கும் ஆன்மா பிற உடல்களிலுள்ள ஆன்மாக்களுடனும், விழித்த உணர்வுக்குப் பின்னுள்ள தனது பிற பாகங்களுடனும், இயற்கைப் பொருட்களுடனும், சக்திகளுடனும், இவ்வுலகை ஆளும் பரம ஞானம், பரம சக்தி, பரம ஆனந்தத்துடனும், வேறெதற்குமின்றி அந்த ஐக்கியத்திற்காகவே அல்லது தனது உடல், உயிர், மனத்தின் ஞானம், சக்தி ஆனந்தத்தைக் கூட்டுவதற்காக ஆற்றல்மிக்க ஐக்கியம் அடையும் திறனே யோகம் ஆகும்.
இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நமது உள் ஜீவனையும், ஜீவனின் புறப்பகுதிகளாகிய மனம், உயிர், உடலையும் ஒழுங்குபடுத்தும் எந்த முறையையும் யோக முறை என்று கூறலாம்.

படித்ததில் பிடித்தது

தியான இரகசியம்

images-6

தியான பிரிவும் ரகசியங்களும் :-

1 .மனதவ தியானம்.

2 .மந்திர தவ தியானம்.

  1. யாக பூஜை தியானம்.

4 . அன்றாட ஆலய வழிபாடு தியானம்.

5 .பணிஇடை தியானம்.

6 . தர்மவழி தியானம்.

7 . நானே தியானம்.

8 . பழக்க வழக்க தியானம்.

9 . சாஸ்த்திர தியானம்

இவைகள் மனிதர்கள் கடைபிடிக்கும் தியான பூஜை முறைகளாகும், இவைகளை சுருக்கமாக தெரிந்து கொள்ளுங்கள், இவ்விடம் இதை தெரிவிக்க காரணம் வீண் குழப்பம் விலகும், சில சந்தேகங்கள் தெளிவு படவே கூறுகிறோம்,

ஆளாளுக்கு ஒரு வழியில் போகிறார்களே எந்த வழி எதற்கு என்று புரிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும், விளக்கம் சுருக்கமாகவே தருகிறேன், அதற்கு முன் ஒரு உண்மையை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன், போகும் பாதை வேறாக. பல பிரிவாக இருந்தாலும் சென்று சேருமிடம் ஒன்றே ,அவரவர் மனதேவை, பூர்த்தி அடைய தெரிந்த பாதையை தேர்ந்தெடுப்பது இயல்பு , ஆனால் சரியான பாதையா என்பது தான் பிரிச்சினை .

மனதவ தியானம் : மனஅமைதிக்கும். ஞாபக சக்தி பெருக்கத்திற்கும். நிம்மதி இழப்பில் இருந்து விடுதலை ஆவதற்கும். மனோதத்துவ கலை சித்திபெறவும். மன ஆரோக்கியத்திற்கும் மனதவ தியானம் கடைபிடித்தனர், யோகா பயிற்சியும் இதில் அடங்கும்,

மந்திர தவதியானம் : தேவதைகளையும். தெய்வங்களையும் வசியம் செய்யவும், தன் சக்தியை பெருக்கிக் கொள்ளவும், அதன்மூலம் தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், மற்றவர்களின் செயல்களை குறுக்கு வழியிலும். நேர்வழியிலும் ஜெயித்து கொடுக்கவும். வல்லவராக வெளிப்படுத்திக்கொள்ளவும் கடைபிடித்தனர்,

யாகபூஜை தியானம் : தீய சக்திகளை விரட்டவும். அக்னியின் மூலம் தேவதைகளை திருப்தி படுத்திதேவதைகளை அடையவும். தெய்வத்திற்குரிய மரியாதை செய்து தெய்வங்கள் அவ்விடம் குடிகொள்ளவும். விரைவில் தேவதைகளை வசியபடுத்தவும் இந்த பூஜைகளை கடைபிடித்தனர்,

அன்றாட ஆலய வழிபாடுதியானம் : இறையருள் கிட்டவும். பக்கதுணையாக இருக்கவும். தன் குடும்ப சுபநிகழ்வுகள் தடையின்றி இறைவன் நடத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையுடனும். ஒழுக்க குணம் மேலோங்கவும். கடைபிடித்தனர்,

பணி இடை தியானம் : இவர்கள் அன்றாடம் ஆலயம் செல்வதில்லை. மந்திரம் ஜெபிப்பதில்லை, யாகம் செய்வதில்லை, வாய்ப்பு கிடைக்கும்போது ஆலயம் செல்வது. வழியில் எங்கு தெய்வ உருவம் பார்த்தாலும் வணங்குவது. ஏதோ நம் கடமை இறைவனை வணங்க வேண்டும், வணங்கவில்லை என்றால் ஏதாவது குறைவந்துவிடுமோ என்னவோ என்று வணங்குவது. சிலர் நேரம் கிடைக்கவில்லை நாம் என்ன செய்ய முடியும், நம் நிலைமை இறைவனுக்கு தெரியும், எனவே வாய்ப்பு கிடைக்கும் போது வணங்குவதையும் இறைவன் ஏற்பார் என நினைத்து தியானிப்பவர்கள் இவர்கள், இதை குறை கூற முடியாது ,

தர்மவழி தியானம் : மனமே கோயில் அதில் தர்ம சிந்தனையும். இயலாதவருக்கு உதவும் குணமே மனிதநேயம் இதையே இறைவன் விரும்புவார் என வாழ்வது . செய்யும் நற்செயலில் தான் இறைவன் ஆசீர்வதிப்பார் என வாழ்வது , தர்மமே தெய்வம் என முழு நம்பிக்கையோடு வாழ்வது , புன்னகை. பாசம். தர்மம். இவைகளே இறைவன் என தியானித்து இருப்பவர்கள் (மிக உன்னதாமான குணம் என நாயன்மார்களும். ஆழ்வார்களும் புகழ்ந்து வாழ்ந்திருக்கின்றனர்,)

நானே தியானம் : இயல்பாக . இயற்கையாக இறைசக்தி கிடைத்தவர்கள் ஆதியில்  கடவுளாக இருந்தார்கள், தன்னால் ஞானம் கிடைத்தவர்கள் கடவுள் என மற்றவரால் மதிக்கப்பட்டார்கள்,அவர்களில் முக்கியமாக கருதப்படுபவர்கள்  புத்தர். இயேசு. நபிகள் ஏனையோர் அடங்குவர்,பிற்காலத்தில் கடின முயற்சியால் மந்திர. யந்திர. யாக. மன. தியானம் செய்து சித்தி பெற்று மக்களுக்கு சித்துக்களை காண்பித்தார்கள், அவர்களும் கடவுளாக பின்னாலில் மதிக்கப்பட்டார்கள்,இவர்களும் ஒரு போதும் நானே கடவுள் என கூறிக்கொண்டதில்லை ,மக்கள் இவர்களை வணங்கியும் பலன் பெற்றார்கள்,இந்த எல்லை வரை நன்றாகவே நம்பிக்கை இருந்தது இதற்கு பின்னால் குருவாக இருந்தவர்கள் அவர்கள் சீடர்களால் தெய்வமாக மாற்றப்பட்டார்கள், இன்றைக்கு சித்திகளே இல்லாத வேஷதாரிகளும் சாமிகளாக அழைக்கப்படுகிறார்கள், இதை கண்ட ஒரு சிலர் உழைப்பே கடவுள், கடவுள் என்று எதுவும் இல்லை எல்லாம் சுத்தப்பொய். பித்தலாட்டம். இயற்கையை கடவுள் என்று கூறுவதை ஒத்துக்கொள்ள இயலாது என கூறுகிறார்கள், என் குடும்பத்தை காபந்து செய்ய என் உழைப்பும். ஆரோக்கியமும். உயிரும் ரொம்ப முக்கியம் எனவே என் குடும்பத்திற்கு நானே கடவுள் என நம்புகிறார்கள், என் சந்தோஷத்திற்கும். என் குடும்ப சந்தோஷத்திற்கும். நாட்டின் சந்தோஷத்திற்கும் பாடுவேன் என தியானிக்கிறார்கள் இதுவும் ஒரு வகை தியானமே, எனினும் நானே தியானம் என்பது உடலுக்கும் ஆத்மாவிற்க்கும் நாம் அளிக்கும் ஒருவித பயிற்ச்சியே ஆகும்

பழக்க வழக்க தியானம் : ஆலயத்தில் பூஜை செய்யும் அனைத்து பிரிவினரையும் இதில் கூறலாம், தன் கடமை அதிகாலை எழுந்து ஆச்சாரஅனுஷ்டானத்துடன் குளித்து ஆலய தெய்வங்களையும் அபிஷேகித்து மந்திரங்களை கூறி மலர்களால் அர்சித்து வழிபட வருவோருக்கும் அர்ச்சனை அபிஷேகம் செய்தும். தன் தெய்வ கடமையை நிறைவேற்றியும் தன் இறைசேவையை பூர்த்தி செய்வதோடு இப்பணி மூலம் ஜீவனம் பெற்றும் இத்தொழிலை அன்றாட பழக்கமாக தொன்று தொட்டு நடத்தி வருபவர்களும். மேலும் அழைப்பில் பேரில் கும்பாபிஷேகம். ஹோமம். பரிகார நிவர்த்தி பணிகளையும் வழக்கமாக கொண்டவர்களும் இதில் அடங்குவார்கள், பழகிபோனதால் வருமானத்திற்காக மட்டும் செய்பவர்களும் உண்டு , மனப்பூர்வமாக இறைபணியே தன்கடமை என செய்பவர்களும் பலவேர் உண்டு, இது பழக்க வழக்க தியானம் எனலாம், பழக்க வழக்க தியானத்திற்கு தொழில் அடிப்படையில் பெரும்பாலும் அமைவதால் இவர்களுக்கு பலன் தாமதமாகவே கிடைக்கிறது ,இது அனுபவ உண்மை .

சாஸ்த்திர தியானம் : ஜோதிடம். பிரசன்னம் போன்ற சாஸ்த்திரம் கூறுபவர்கள் தொழிலுக்காகவாவது கிரஹங்கள் பெயரை கூறியே ஆக வேண்டும், இறை பரிகாரங்களையும் கூறி வேண்டிய சூழல் அமையும், தன் தொழிலில் நாவன்மை உண்டாக இறை பிராத்தனை ஒவ்வொரு தொடக்கத்தின் போதும் செய்வார்கள், இதுவும் ஒருவகையில் தியானமாகவே அமையும், தொழில் ரீதியாக தெய்வங்களை சம்மந்தப்படுத்தி பேசுவோருக்கும் தன்னை அறியாமல் தியானம் உண்டாகும், ஆன்மிகத்தை போதிக்கும் ஆசிரியர் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் மாணவர்களுக்காக மீண்டும் மீண்டும் கற்றதை கூறவேண்டிவரும், இதுவும் மீண்டும் மீண்டும் ஆன்மிகத்தை பற்றிய ஒரே சிந்தனையோடு பேசுவதால் ஒருவகை தியானமாகும், மேற்கூறிய தகவல்கள் புரிந்தும் புரியாதது போல சிறு குழப்பம் இருக்கத்தான் செய்யும், மேற்கூறிய விஷயம் ஒவ்வொன்றும் ஒருவகையில் சித்தி தரக்கூடிய தியானம் தான், தியானம் என்பதை பயிற்சி என்று வைத்துக் கொள்ளலாம்,

நானே தியானத்தை கொடுப்பவன் என நினைத்துக் கொள்ளலாம்,  தன்னை அறியாமல் பயிற்சியாவதும்.

மேற்கூறிய சில தியான முறையில் ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானாலும் தங்களை போன்ற ஆன்மிக மாந்திரீக தாந்திரீக பயிற்சியாளர்கள் மேற்கண்டவைகளை ஒருங்கிணைத்து பயிற்சியை மேற்கொண்டால் உன்னதமான நிலையை பெறலாம்,

அதாவது ஆரம்ப கட்டத்தில் மனம் அடங்குவதற்கும் உடல் சுறுசுறுப்பிற்கும் மன ஆத்ம தியானம் செய்வது சிறப்பாகும், பிறகு மந்திரங்களை உருஏற்றி ஜபிப்பது சிறந்ததாகும், பிறகு ஜபித்து உரு ஏற்றிய மந்திரத்தை மந்திரத்திற் குரிய தெய்வத்திற்கே யாகத்தில் சமர்பணம் செய்ய வேண்டும், அத்தோடு மட்டுமில்லாமல் இறைஒழுக்கம் மேலும் மேலும் பெருகி சிதறாமல் இருக்க அன்றாட ஆலய வழிபாடும் செய்ய வேண்டும், மேலும் தாங்கள் எப்பணி செய்தாலும் எந்நேரமும் உங்கள் உள்மனம் இறைவனை தியானித்தவண்ணம் இருப்பது நலம், அது ஆலயத்தில் தான் நிகழவேண்டும் என்ற அவசியமில்லை,வேலை செய்து கொண்டே கூட தியானிக்கலாம், மேலும் பூஜை புனஸ்காரம் மட்டும் முறையாக ஒழுங்காக செய்தால் மட்டும் போதாது நல்ல தர்மதயாள குணமும். பலருக்கும் முடிந்தளவு அன்னம். நீர். வஸ்த்திரம். அவசர உதவி. போன்ற தர்மங்களை செய்யும் பக்குவம் நிறைந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்,உங்களிடம் உள்ள சித்துக்களை கண்டு மக்கள் உங்களை தாங்களே கடவுள் என்று கூறினாலும் வெளி மனம் ஏற்றுக் கொண்டாலும் உள் மன அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடாது , லோகத்தை ஆளும் ஈசனே யோகநிலையில் யாரையோ நினைத்து தவம் இருப்பதாக ஒரு சாரர் கூறுவர், இயேசுபிரானும் தனக்கும் மேலான பிதாவை  , வணங்கியிருக்கிறார் .

புத்த பிரானுக்கும் அவருக்கும் மேலான இடத்தில் இருந்து ஞானம் கிடைத்திருக்கிறது , இப்படி இறைவனாக விளங்கக் கூடியவர்களே தான் மட்டுமே உயர்ந்தவன் என ஏற்றுக் கொள்ளாத போது . நாமும் தன்னடக்கத்தை கடைபிடிக்க வேண்டும், மேலும் தாங்களும் வாக்குசித்தி . மந்திரசித்தி பெற்ற பின் வருமானத்திற்காக இல்லாவிட்டாலும் கற்றவித்தை அனைவருக்கும் பயன்தர மனித சேவை செய்ய வேண்டும், பிற்காலத்தில் தாங்களும் புது சாஸ்திரம் இயற்றலாம் நல்ல குருவாக இருக்கலாம், இவைகளை பரிபூரணமாக கடைபிடித்தால் முழுமனிதராக ஏற்கப்படுவீர்கள், இறைவனுக்கு அடுத்த இடத்தில் நீங்கள் இருப்பது உறுதி, மக்கள் ஆளாளுக்கு ஒரு விதத்தை கடைபிடித்தாலும் ஒரு கூட்டான முறையை கடைபிடிக்காததே அவர்கள் இறை தியானம் தோற்றதற்கு காரணமாகும், உங்களுக்கு தோல்வி என்ற சூழ்நிலை வரக்கூடாது என நினைத்தால் கூறிய வரிசைப்படி தியானத்தை கடைபிடியுங்கள் வெற்றி பெறுவீர்கள், ஒரு நல்ல குருவிடம் இருந்து கிடைக்காத ரகசியங்கள் எளிதில்  கிடைப்பதால் ஏளமாக விட்டு விடலாகாது .

உங்கள் சுயஅறிவாள் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு , இந்த நூலில் உள்ள தகவல் எல்லாம் வெறும் காது வழி செய்தி அல்ல , முற்றிலும் அனுபவசாலிகளின் காலசுவடுகளின் ஆராய்ந்து அனுபவித்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

 

படித்ததில் பிடித்ததுimages-6

 

உடற்கட்டு

images-1

உடற்கட்டு என்பது நாம் தவதியானத்தில் ஈடுபட்டிருக்கும் போது மனம் ஒரு நிலையில் இருக்கும். அப்போது வேறொரு அழையாத தீய ஆத்மா நம் உடலை பயன்படுத்தி உட்புகுந்து நம்மை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆட்டுவிக்க பார்க்கும். அல்லது மந்திர சக்தியை சுய நினைவின்றி இருக்கும் அவ்வேளையில் களவாடிவிடும். எனவே உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து பயன்படுத்த வேண்டும்.

சித்தி செய்து வைத்துள்ள உடற்கட்டு மந்திரத்தை கூறி (கையில் விபூதி வைத்துக்கொண்டு கூறவும்) முடிந்தவுடன் உடலை சுற்றி விபூதி தூவிவிட்டு பிறகு தவத்தில் ஈடுபடவேண்டும். தீய சக்தி அண்டாது. நீங்கள் பாம்பு, பூச்சிகள் நிறைந்த வனத்தில் தியானிக்கும்போதும் விபூதி இல்லாதபோதும் உடலை சுற்றி கல் உப்பை போட்டு விட்டாலும் சிறந்ததாகும். பூச்சிகள், பாம்புகள் உங்களை ஒன்றும் செய்யாது. திடீரென ஒரு இடத்தில் தியானிக்க நினைக்கிறீர்கள் அல்லது ஒரு சுடுகாடு போன்ற இடம் எனில் அவசியம் உடற்கட்டு மந்திரம் போட்டு விபூதி தூவியே ஆக வேண்டும். கையில் விபூதியோ, உப்போ இல்லையென்றால் மந்திரம் கூறி உங்கள் சிறுநீரகத்தை சுற்றி விட்டாலும் தீயசக்தியோ, விஷ பூச்சிகளோ எதுவும் உள்ளே வராது. ஆபத்து நேரத்தில் மட்டும் சிறுநீரகத்தை பயன்படுத்தவும். ( சாதாரனமாகவே பேய் பிசாசு என தீய சக்திக்கு பயப்படுபவர்கள் உணவு உப்பை சிறிது கையில் வைத்திருந்தாலே போதும் எதுவும் கிட்டே அனுகாது )

ஆலயத்தின் உள் தியானிக்கும்போது உடற்கட்டு அவசியம் இல்லை என இருந்து விடாதீர்கள். எங்கும் பயன்படுத்தவும். தண்ணீரை உள்ளங்கையில் வைத்து உடற்கட்டு மந்திரம் கூறி உடலை சுற்றி விட்டுக்கொண்டாலும் உடற்கட்டு வேளை செய்யும் ஒரு தர்பை புல்லை எடுத்து உடற்கட்டு மந்திரம் கூறி உடலை சுற்றி வட்டம் போட்டாலும் உடற்கட்டு வேளை செய்யும். நீங்கள் வட்டத்தைவிட்டு எழுந்து வெளியே வந்தால் உடற்கட்டு மீண்டும் வேலை செய்யாது. ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும் உடற்கட்டு செபிப்பது உடலை சுற்றி காப்பு செய்துகொள்வது அவசியமாகும். உங்கள் உடற்கட்டு மந்திரம் வேறொருவருக்கு தெரியகூடாது. கவனம் .

படித்ததில் பிடித்தது

 

 

 

 

கர்மா

கர்மா

download.jpg

ஒரு மனிதன் முற்பிறவியின் கர்ம பலனை எப்படி தீர்க்க முடியும் ?
அமைதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு தியானம் மேற்கொண்டால் போதுமா ?

வேலைகளை செய்ய வேண்டாமா ?

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்யக உபநிடதம் 4.4.5

முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. அந்த பிறவியில் தனது நிலையில் இருந்து கொண்டு தனக்கு கொடுக்க பட்ட கடமைகளை அனைவரும் செய்தால் மட்டுமே கர்ம பலன் தீரும். கர்ம பலன் தீர்ந்தால் மட்டுமே ஒரு ஜீவன் இறைவனை அடைய முடியும். ஆத்மா இறைவனை அடைந்தால் மட்டுமே மீண்டும் பிறக்காது. மீண்டும் பிறக்காமல் இருந்தால் மட்டுமே ஒருவன் நிரந்தர சுகத்தை அடைய முடியும். இந்த நிலையை எட்டும் வரை ஒருவன் தனக்கு கொடுக்க பட்ட கடமையை செய்ய வேண்டும். இந்த உலகத்தில் இரண்டு வகை ஜீவன்கள் பிறக்கின்றன. தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் ‘ஊழ்’ (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ ‘ஊழ்வினை’ என்ற சொல்லை கையாள்கிறார்.

ஒன்று கர்ம யோகி. மற்றொன்று ஞான யோகி.

கர்ம யோகி என்றால் செயல்கள் செய்ய வேண்டியவன். அதாவது கடமைகள் இருக்கின்ற ஒருவன் கடமைகளை விட்டு விட கூடாது. அவனுக்கு விதிக்க பட்ட கடமையை செய்ய வேண்டும். ஒருவன் காவல் துறையில் பணி செய்கின்றான் என்று எடுத்து கொள்வோம். வாழ்க்கை என்பது எப்போதும் காரணம் மற்றும் விளைவு என்பதால் நடக்கிறது. இப்போது நீங்கள் அந்த விளைவை அனுபவிக்கிறீர்கள் அல்லது அவதிப்படுகிறீர்கள். ஆனால் காரணம் இல்லாமல் விளைவுகள் இருக்குமா? ஒரு வேளை நீங்கள் மிகவும் குறுகிய பார்வையுடன் பார்ப்பதால், காரணத்தை உங்களால் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு காரணம் இல்லாமல் ஒரு விளைவு இருக்கமுடியாது. இந்தக் காரணத்தைத்தான் கர்மா என்று கூறுகிறோம்.

அவனுக்கு நிறைய பிரச்சனைகள் வரலாம். பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடி , நான் சாமியாரை போல் தியானம் செய்வேன் இறைவனை அடைவேன் என்று கூறினால் அது சரி இல்லை. அவன் அவனது கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். அவன் இறைவனை அடைய முடியாது.

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.

கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும். கர்மங்கள் அணைத்து முடிக்க பட்ட உடன் அந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்காத இறை நிலையை அடைய முடியும்.

ஞான யோகி. ஞான யோகி என்பவன் யார் ? எவன் ஒருவன் செய்வதற்கு கர்மங்கள் இல்லையோ அவனால் யாரும் பாதிக்க பட வில்லையோ, அவனை நம்பி யாரும் இல்லையோ, அப்படி பட்ட ஒருவன் பக்குவ பட்ட மனத்துடன் இறை பக்தியுடன் எப்போது தியான நிலையில் இருந்து கொண்டு பிரம்ம நிலையில் இருந்து தன் உள்ளே இருக்கின்ற ஆன்மா வை அனுபவித்து மகிழலாம் . இறுதியாக இறைவனை அடையலாம்.

இந்து சமயத்தில் கர்மம் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு ‘கர்மா’ சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

தொழில் ஸ்தாபனத்தில் இறைநிலையின் பங்கு என்ன என்பதை விளக்கும் வேளையில், பலரின் புரிதல் வேறுவிதமாக உள்ளதை உணர்கிறேன். கர்மாவை அறியாமல் வேறு உயர் கருத்துகளை உள்வாங்கி நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் உள்ளது. கர்மா என்றவுடன், இது ஆன்மிகம் என்று படிப்பதை நிறுத்தி விடவேண்டாம். உலக நன்மையின் பொருட்டு, அறிவியல் பூர்வ மாக உணர்த்த முயல்கிறேன்.
கர்மா என்பதை ஒரு மாயாஜாலம் போன்றோ அல்லது ஒரு மந்திர சடங்கை போன்றோ அல்லது ஜோதிடரின் ஏமாற்றும் திறமையையும் உடனே சிந்திக்கும் ஒரு மனநிலை நம்மிடம் புகுத்தப்பட்டுள்ளது. ஒரு செயலுக்கு ஒரு விளைவு. இவ்வளவு தான் கர்மா. கர் என்றால் வட மொழியில் செய் அல்லது செய்தல் என்று பொருள். கர்மா என்றால் செயல் என்ற பொருள். கர்மா என்றவுடன் பெரிதாக கொலை கொள்ளை போன்ற பாவங்களை பற்றி சிந்திக்க வேண்டாம்.
நடைமுறை உதாரணத்திற்கு, தங்கள் மனைவி ஒரு கப் தேநீர் கொடுக்கிறார்கள், கவனக்குறைவால் ஒரு சொட்டு கீழே சொட்டிவிட்டது. டைல்ஸ் தரை அழுக்காகி விட்ட கோபத்தில் தாங்கள் “அறிவில்லையா கீழே சிந்திவிட்டதே” என்று தாங்கள் சற்று கோபத்துடன் சொல்ல அதற்கு அவர்கள் ஏதோ சொல்ல, கையில் இருக்கும் கப்பை தேநீருடன் தூக்கி எறிகிறீர்கள். முன்பு ஒரே ஒரு சொட்டு. அதற்கு திட்டின நாமோ கப்பையும் உடைத்து, மேலும் தேநீர் முழுவதையும் கொட்டிவிட்டோம்.
யோசித்து பாருங்கள் இந்த உணர்ச்சிவயப்பட்ட செயலுக்கு, கடவுளோ, கர்மாவொ காரணம் என்று கூறமுடியுமா? இந்த கோபத்துடன் மனைவியோடு கோவிலுக்கு சென்று என்ன வேண்டுவீர்கள்? தெய்வத்திற்கும் இந்த கஷ்டத்திற்கும் என்ன சம்மந்தம். அடிப்படையை உணராமல் மீண்டும் மீண்டும் வேண்டினால்……காலம் அதிலேயே சென்றுவிடாதா?
நன்றாக உற்றுப் பார்த்தல் நம்முடைய கோபம், நம் நலம் விரும்பிகளிடம் மட்டும் சற்று அதிகமாக வருகிறதே? காலை முதல் மாலை வரை நம்மையே நினைத்து நம் நலத்திற்காகவே உழைக்கும் மனைவி, கணவன், அம்மா மற்றும் அப்பா இவர்களிடம் தான் பெரிய காரணமின்றி பெரிய கோபம்
🙂
நம் செய்கையை பற்றிய உற்றுநோக்குதல் நம்மிடம் இல்லாமல், தெய்வத்தை உணர்வதால், பெரிய பயன் ஒன்றும் கிட்டிவிடாது என்பதை உறுதியாகக் கூறலாம். இந்த செயலுக்கு வருந்திய நீங்கள் மன்னிப்பு கேட்கவேண்டியது கடவுளிடமா? உணர்ச்சி வயப்பட்ட நிலையில், தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவித்தால் அதுவே பாவம் எனப்படும்.
மிகுந்த இன்பமோ, துன்பமோ இல்லாமல் அமைதியான மனநிலையுடன், தற்காலத்திலும், பிற்காலத்திலும், பிறருக்கும், நமக்கும், உடலுக்கும் மனதிற்கும் இன்பம் பயக்கும் செயலே புண்ணியம் எனப்படும்.
இந்த புண்ணியமும், பாவமும் சேர்ந்ததுதான் கர்மா எனப்படும்.
இன்பமும் துன்பமும் தனித்தனி இல்லை என்றறிக. இன்பத்தின் அளவுமுறை மாறும் போது இன்பத்தின் மறுபெயராம் துன்பம் விளையும்..

கர்மாவை பற்றிய சில கேள்விகள்:
கர்மா எங்கே பதிகிறது?
மனித மூளையில் என்று கூற முடியாது. ஏனெனில் அது இறந்தவுடன் அழிந்துவிடும்.
பதிந்த கர்மாவிற்கு ஏற்ப நல்ல பலனையோ தீய பலனையோ தரும் அந்த நீதிபதி யார்?
வெறும் இறைவன் என்று சொல்லி மழுப்ப முடியாது. ஏனெனில் நாம் இறைவனையே பார்த்தது கிடையாது.
இது ஒரு இயக்கமா ? இல்லை இயக்கப்படும் நிகழ்ச்சியா?
இன்று செய்த பாவத்திற்கு என்று தண்டனை?
ஒருவன் இறக்கப்போகும் ஒரு நிமிடம் முன்பு ஒரு பெரிய பாவம் செய்தால், அவன் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும்?
பெற்றோர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்கு என்றால் அதை பெற்றோர்கள் advantage ஆக எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகள் தானே துன்பப்பட போகிறார்கள் நாம் இல்லையே என்று…
கர்மாவின் படி தான் எல்லாமே நடக்கும் என்றால், எல்லோரும் வியக்கும் ஆழ்ந்த சிந்தனையாளர் திருவள்ளுவர், ஏன் முயற்சி தன மெய் வருத்தக் கூலி தரும் என்கிறார்.
ஒருவன் செய்யும் கர்மா, வேறு யாரையெல்லாம் பாதிக்கும்.
கர்மா தான் விதியா ?
விதியை மாற்ற முடியுமா?
கர்மா என்கிற விஷயத்தில் இறைவனின் பங்கு எங்கு உள்ளது.
கர்மாவை மாற்றும் பூஜை ஏதாவது உண்டா? இருந்தால் ஏன் பணம் படைத்தவர்கள்
துன்புறவெண்டும். இல்லை அந்த பூஜையை செய்யக் கற்றவர்கள் ஏன் துன்பமோ இன்பமோ படவேண்டும்.
கர்மாவில் நவக்ரஹங்களின் பங்கு என்ன?
கர்மா எத்தனை வகைப்படும்:?
சஞ்சித கர்மா – தாய் தந்தையரிடம் இருந்து அவர்களின் முன்னோர்களின் கர்மாவும் சேர்ந்து, பிறக்கும் பொழுதே பதிவுகளாக (DNA) வருவது.
ப்ராரத்தக் கர்மா – நாம் நமது 12 வயது முதல் செய்யும் செயல்களின் பதிவுகள்.
ஆகாம்ய கர்மா – மேற்கூறிய இரண்டு கர்மாக்களும், நமது ஆன்மாவிற்கு இச்சை ஊட்டி அதாவது தூண்டப்பட்டு செய்யும் செயல்களின் பதிவு. நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு தீவிரவாதத்தில் இச்சைதூண்டி அதை நோக்கி சிந்திக்க வைப்பது. ஒரு பெண்/ஆண் மீது மிகுந்த பற்று காலத்தால் ஏற்ப்பட்டு அதனால் அவன்/அவள் வாழ்கையே தடம் புரள்வது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு ஒரு அறிவியலாளரின் நட்பின் மேல் இச்சையைத் தூண்டி அவனை உயந்த நிலைக்கு இட்டுச் செல்வது. எல்லாமே இப்பதிவின் விளைவே.

கர்மாவை எப்படி கற்பது?
==========================
கர்மாவை புரிந்து கொள்ள புராணங்களை படிக்க வேண்டிய அவசியமே இல்லை. உண்மையை சொன்னால், புராணங்களை வைத்து கர்மாவை புரியவைப்பது கடினம். அறிவியல் கொண்டு உணர்த்துவது தான் எளிது. கர்மாவை புடிந்துகொல்ல நாம் அவசியம் அலை இயக்கத்தை (Radiation) புரிந்துகொள்ள வேண்டும். உயிர், மனம் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். காந்த இயக்கம் (Magnetism) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காந்தப் புலத்தில் ஒலி அல்லது ஓளி எப்படி பதிகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். காந்தமாக பதிந்த ஒளியை மீண்டும் ஒளியாக மாற்றும் மூளை போன்ற கருவி CD Player or Tape Recorder பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். காந்த ஆற்றலை மின் ஆற்றலாக மற்றும் Dynamo வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது போதும். தெளிவாக அறிந்துகொள்ளலாம் கர்மாவை.

படித்ததில் பிடித்தது

தந்திரயோகம்

images

  மனிதனின் உழைப்பு, உணவு, உறக்கம், இன்பம், பாசம், பந்தம் இவற்றிற்கு அப்பாற்பட்ட ஆசைகள் பல உள்ளன. அதில் ஆன்மிகத்தை நாடுவோர் முக்தி நிலை பெற வேண்டும் என்ற தனியாத ஆசையும் ஒன்றாகும்.

இந்த முக்தியை மரணமில்லா பெருவாழ்வு, தன்னை அறியும் ஞானநிலை, தன்னுள் உறைந்து இருக்கும் இறைவனை உணர்ந்த ஆனந்தநிலை, இப்பிறவியை விலக்கிய நிலை என வேறு பெயர்களாலும் உணரப்பட்டது.

ஆக முக்தி பெற வேண்டி முயற்சி தேவை என்பதை உணர்ந்த மனிதன் அதைப்பெற என்னென்ன வழி என கண்டுணர்ந்தனர். அவையில் வழிகள் யாதெனில் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம்,யோக மார்க்கம், தந்திர யோக மார்க்கம் என ஐந்து பிரிவுகளில் எதையாவது ஒன்றை பற்றி முயற்சித்தால் முக்தியை அடையலாம் என கண்டுபிடித்தனர்.

பக்திமார்க்கம்:-

பக்திமார்க்கம் என்னும் வழியாகப்பட்டது அனைத்தும் அவன் செயல் . என் தலைவன் இறைவனே அவனே கதி என்று நீங்கா பக்தியோடு இறைவனின் பாத கமலமே கதி என்று இருந்து இறையருளை பெற்று முக்தி நிலை அடையும் மார்க்கம் பக்தி மார்க்கமாகும். அடுத்து

ஞானமார்க்கம் :-

அறிவு, புத்தி, சித்தி ஆகியவற்றின் துணைகொண்டு முக்திநிலையை அடைய முயல்வதே ஞானமார்க்கமாகும். அடுத்து

கர்ம மார்க்கம் :-

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத் கீதையில் பகவான் அர்ஜøனனுக்கு அறிவுரை கூறியிருப்பார். இது சாதாரண மனிதர்களுக்காக கூறப்பட்டதாகும். கர்ம மார்க்கத்திற்கு விசேஷ பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் முழுமையாகச் செய்துவிடும் மனிதனின் ஆத்மா படிப்படியாக பண்பட்டு உயர்நிலையை அடையும் முக்தி பெற கடைபிடிக்கப்படும் கர்ம மார்க்கமாகும். அடுத்து

யோக மார்க்கம் அறிக :-

அஷ்டாங்க யோகத்தில் தீவிரமாக ஈடுபடக்கூடிய ஒருவரால் சில பிறவிகளிலேயே முக்திநிலையை அடைந்துவிட முடியும். ஆனால் இதற்கு கடுமையான பயிற்சிகள் அவசியமாகும். இந்த பயிற்சிகளால் உச்சநிலை பெறும்போது முக்திநிலையை அடைய முடியும். அடுத்து

தந்திர மார்க்கம் சுருக்கமாக அறிக :-

தந்திரம் என்பது கடினமான ஒரு செயலை மதி நுட்பத்தால் எளிமையாக விரைவாக செய்து முடிப்பதைத் தான் தந்திரம் எனப் பொருள்படும். முன்பு பார்த்த முக்தி அடைய பயன்படுத்தும் மார்க்கங்களில் முக்தி அடைய சில பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் தந்திர மார்க்கத்தை அணுகுவதால் இதே பிறவியிலேயே முக்தி அடைய முடியும்.

புறத்தேடலில் உழன்றுகொண்டிருக்கும் மனிதனை அகத்தேடலுக்கு திருப்பிவிடும் மார்க்கமே தந்திர மார்க்கமாகும். மிக எளிய தந்திர வழிகளை கையாள்வதன் மூலம் குறுகிய காலத்திலேயே முக்திநிலையை பெற முடியும். மேற்கண்ட எதாவது ஒரு மார்க்கத்தில்தான் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ கடைபிடித்து வாழ்கிறான். இதில் எந்த மார்க்கம் சிறந்தது என்றால் தந்திர மார்க்கமேயாகும்.

ஒரு குளத்தை புதிதாக வெட்ட 500 பேர் ஒன்றுகூடி குளம் வெட்டி ஒரு வருடத்தில் முடிக்கும் பணியை ஒரு பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு ஒரு மாதத்திலேயே முடிக்கலாம். இது தந்திரத்தின் பயனால் கிடைத்த சுமூக வெற்றியாகும். அதேபோல்தான் மனித பிறவியின் முக்தியின் வெற்றி ரகசியத்தையும் தந்திரயோகத்தை கையாள்வதன் மூலம் விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு யுகங்களை மனிதன் கடந்து வரும்போது அவன் அனுபவத்தில் படிப்படியாக வளர்ச்சியடைந்து கண்டுணரப்பட்டதே இந்த மார்க்கங்களாகும். இதில் மனிதன் இறுதியாக கையாண்டு கொண்டிருப்பது தந்திரயோக மார்க்கமேயாகும்.

மனிதனின் ஆயுள் நிர்ணயமில்லாதது . இருக்கும்போதே வெற்றியை நெருங்க வேண்டுமானால் தந்திர மார்க்கமே அதற்கு உதவுகிறது. தந்திரயோகம் என்பது மற்ற மார்க்கங்களின் கூட்டு கலவையும் இருக்கும் . மற்ற மார்க்கங்களின் வெற்றி முறைகளின் எளிதை எடுத்து பயன்கொள்ள வேண்டும்.

இன்னும் கூடுதலாக தந்திர மார்க்கத்தில் சில யோகங்களை கடைபிடித்தனர். அவை மந்திரயோகம், ஹட யோகம், ராஜயோகம், லய யோகம், குண்டலினி யோகம் ஆகும். இந்த ஐந்து யோக வழிமுறைகளில் சில சக்தி வாய்ந்த வழிமுறைகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை மேலும் எளிமையாக்கி அவற்றிற்கு மேலும் வலுவூட்டி உருவாக்கப்பட்ட ஒருநிறைவான மார்க்கமே தந்திர யோக மார்க்கமாகும்.

இதில் பெரும்பங்கு குண்டலினி யோக வித்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது . இதனுடன் பிற்காலத்தில சேர்க்கப்பட்டதே சக்கர யோகமாகும். இதனுடன் மந்திர யோகத்தையும் இணைந்து பயன்படுத்தினர். எனினும் ஒவ்வொரு நிலையிலும் தந்திரத்தை கையாளும் போதுதான் வெற்றியை உறுதிசெய்ய முடிகிறது..

யோகம் என்றால் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருங்கிணைத்தல் என்பதாகும். உதாரணமாக ஒன்றை அறியுங்கள். மனிதன் என்பவன் பல கூறுகளால் ஒருங்கிணைக்கப்பட்டவன் எனவே மனிதனும் யோகம்தான். ஆன்மா, உயிர்சக்தி, புலன்கள், பிராணன், புத்தி, சித்தம், மனம், பருஉடல் இவை அனைத்தும் சேர்ந்த கலவையே மனிதன். இவை உதாரணத்திற்கு சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையிலும் பல நுணுக்கங்கள் உள்ளன. அவைகளை மதி நுட்பத்தால் கண்டு வகை பிரித்து பயன்கொள்ள வேண்டும். இதற்கும் யோகம் என்றுதான் சுருங்க சொல்ல வேண்டும்.

ஒரு வழிபாடு முறையால் வெற்றி காண சில தடங்களை முறையாக நுட்பமாக கையாள வேண்டும். வழிமுறை, செயல்பாடு, குவிந்த கவனம், தியானம், ஆற்றல், துறவு, சமாதி, பலன், நன்மை என பிரித்து பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள் வகைகள், தன்மைகள் யாவும் உண்டு என்றாலும் இவைகளை ஒருங்கிணைத்து வழிபாடுயோகம் என்று சுருங்கக் கூறலாம். இந்த நுணுக்கங்களை அறிந்து கையாண்ட விதத்திற்கு தந்திர மார்க்கம் என்று சுருங்க பெயர் வைத்தனர்.

பின்னால் வந்தவர்கள் அவரவர் அனுபவத்தில் கண்ட சக்திகளை கொண்டு பிரிவுடன் தெய்வ மார்க்கத்தை கையாண்டனர். ஆனால் அடிப்படையில் தந்திரத்தை கையாண்ட வெற்றிபெறும் விதம் மட்டும் பொதுவாக இருந்தது . அனைத்து பிரிவிலும் கையாண்டவிதம் தந்திர மார்க்கம் தான்.

குறிப்பாக சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், இஸ்லாமியம் என மதக்கோட்பாடுகள் பிரிந்தன என்றாலும் இவைகளிலும் காலப்போக்கில் பல பிரிவுகளை பின்னால் வந்தவர்கள் உருவாக்கிவிட்டாலும் எல்லாவற்றிலுமே தந்திர கையாடலே தலைசிறந்த முறையாக அவரவர் மதிநுட்பப்படி கடைபிடித்தனர்.

இவைகள் காலப்போக்கில் மறைந்துவிடக்கூடாது என்பதற்காக குரு பரம்பரை உருவானது. இந்த குருமார்களின் வழிமுறையை ஏற்ற சீடர்களின் வட்டம் விரிவடைந்து பல மார்க்கங்களை குழுகுழுவாக உருவாக்கி அதில் பல பிரிவுகள் பேதங்கள் குழப்பங்கள் உண்டாகிவிட்டன. இதனால் சரியான நுட்ப முறைகள் அங்கொன்றும் இங்கொன்றும் சிதறி போயின. குழம்பி கலந்தும் போய்விட்டன.

இதன்பின்னால் வந்தவர்கள் பிரிவை கட்டாயமாக்க வேண்டிய சூழலில் வாழ்ந்தனர். ஒருவர் சைவம் இன்னொருவர் அசைவ முறை பின்பற்றும்போது பிரிவு கட்டாயமானது . இதன்பின்பு அவரவர் வெற்றி முறைகளுக்கு ஒரு பெயரை சூட்டி, பெயரை மட்டும் வெளியிட்டு மூலத்தை ரகசியமென குரு சிஷ்ய பரம்பரைக்கு மட்டும் தெரியும் வண்ணம் உருவாக்கி கலைகள் பின்னப்பட்டுவிட்டன.

இதன்பின்னர்தான் மனிதனை வகைப்படுத்தினர். அடுத்தார் போல் சாதி பேதம் உருவாக அதுவே வழி செய்தது . பின்பு ஒரு சாரருக்கு மட்டுமே இந்த கலை வரும் என தவறான செய்தியை பரப்பி தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டனர். இதனால் பலமுறைகள் மாறின.

தட்சிணமுறை, வாமாசார முறை, வேதாந்தம் சித்தாந்தம், சடங்குககள், ஆகமங்கள், நியமங்கள் அதிலும் பல பரிவுகள் என அந்தந்த பிரிவினரின் ஏட்டிக்குப்போட்டியான கண்டுபிடிப்புகள் சிலதும், சில உண்மையான வழிமுறைகளும் சேர்த்து இன்று குழப்பமான ஆன்மீகம் உலாவ காரணமாகிவிட்டது .

மெய்யன்பர்களே மனித வளர்ச்சி எப்படி பரிணாம வளர்ச்சி கண்டதோ படிப்படியாக அதைப்போல ஆன்மீகமும் வளர்ந்ததுதான் என்பதை அறிக.

ஒரு காலத்தில் நல்லவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இன்றைக்கு நல்லவர்கள் சிலபேர்தான் இருக்கிறார்கள். அதைப்போல கலைகளும் நல்லது சரியானது என சில கலைகள் தான் உள்ளது .எல்லாவற்றிற்கும் மனமும் ஒழுக்கமும் தர்மமும் கடமையும் ஆதார சக்திகளாலும் ஆன்மீக உலகம் எவ்வளவு குழம்பிப்போய் இருந்தாலும் மேற்சொன்னதை சரியாக பயன்படுத்தினால் வெற்றி எளிது,அதுவே தந்திரமாகும்.

தந்திர யோக மார்க்கத்தை கடைபிடிக்க பல வழிமுறைகள் உண்டு. அதை தந்திர யோக குறியீடுகள் என்று கூறுவர். யந்திரம், மந்திரம், தர்மநெறி, ஒழுக்கம், விரதம், தீர்த்த தலங்கள், புனிதம், கடவுள், வர்ணபேதம்,சூத்திரங்கள், வளர்ச்சி, சடங்குகள், படைப்பு, தியானம், வழிபாடு, கர்மங்கள், சாதனை, புனஸ்கரணம்,அழிவு, ஆக்கல், ஞானதெளிவு, தர்மநெறி கடைபிடித்தல் என்று பல்வேறு வகையான வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முக்தி நிலை அல்லது இப்பிறவியின் வெற்றி நிலையை பெறலாம். இதை வகைப்படுத்தி நுட்பமான முறைகளை இதில் பின்னமில்லாமல் கையாண்டு வெற்றி காண்பதே தந்திர யோகமாகும்.

இந்த நூலில் பல விஷயங்கள் கொடுத்திருக்கிறேன். யாவும் தந்திர யோகத்தின் நுட்ப வழிமுறைகளேயாகும். தந்திர யோகத்தின் வெற்றி மனஈடுபாட்டில்தான் உள்ளது என்பதை மறவாதீர்கள்.

இயற்க்கையை எதிர்க்காமலும், தர்மத்தை மீறாமலும் , எதிரியின் பலகீனத்தை பயன்படுத்தி நம் புத்தியை மேம்படுத்தி வெல்வதோ அல்லது பயன் பெருவதோ தந்திரக்கலையாகும் .

அறிவை அறிவால் வெல்ல முடியாத போது சூழ்நிலையை சாதகமாக்கி வெல்ல முயல வேண்டும். இதுவும் தந்திரகலையாகும் .

நம்மால் முடிக்கமுடியாத செயலை அதை முடிக்கும் தகுதியானவரை தேர்ந்தெடுத்து ஏவி செயல் படுத்த வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

மெய்யால் முடியாததை தெய்வத்தாலும் தெய்வத்தால் முடியாததை மெய்யாலும் முடிக்க முயல வேண்டும் இதுவும் தந்திர கலையாகும் .

தந்திரம் என்பது ஏமாற்றுவது அல்ல அது ஒரு ரகசிய பிரயோகம் .ரகசியமாக இருந்தால் தான் எதிரியை எதிர்க்காமல் வெல்ல முடியும் .எதிர்ப்பை பகையாகாமல் பலனை நம் வசமாக்க முயல்வதும் தந்திரக்கலையாகும் .

எதிரியை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகொள்வது வீரம் .எதிரியை நன்பனாக்கி அன்பால் வெற்றிகொள்வது தந்திரமாகும் .

உழைத்து பணம் சேர்ப்பது விவேகம் . உழைத்த பணத்தையும் உழைக்க வைத்து சம்பாதிப்பது தந்திர அறிவாகும் .

நீங்கள் உங்களுடைய உழைப்பையும் பலத்தையும் நம்புவது அறிவு, இதன்கூடவே வெற்றி பெற்றவனின் வழித்தடத்தை அறிந்து முன்னுக்கு வர முயல்வது தந்திரம் .

முன்னோர்கள் நமக்கு கொடுத்துச்சென்றுள்ள புரானங்கள் , இதிகாசங்கள் யாவும் சாமான்யருக்கு கதையாக தோன்றுகிறது இதில் பல திருத்தங்களை கவிஞர்களும் தன் பங்கிற்க்கு செய்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள் . ஒருவிஷயத்தை நன்றாக கவனம் வையுங்கள் சாதாரனமாக பார்க்கும் கேட்கும் படிக்கும் நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே பார்ப்பது சராசரி அறிவாகும் . ஆனால் அதன் உள்நுழைந்து காரணங்களை தேடுவது பகுத்தறிவாகும் .ஆனால் இதையும் கடந்து நடந்த நிகழ்வுகள் யாவும் வாழ்க்கை சூத்திரங்கள் என்றும் நம் வழிகாட்டி மரங்கள் என்றும் யார் எடுத்து கையால்கிறாறோ அவரே ஞான அறிவு பெற்றவராவர் .

மகாபாரதத்தை கேட்கும் போது சூது வாதம் வீரம் வேதனை வெற்றி பாசம் பிரிவு என்ற சம்பவங்களையே உணர்வோடு பார்த்து சளிப்பும்,ஆர்வமும் கொள்கிறோம் . நம்மவர்களுக்கு  உணர்வுகளின் தாக்கம் உணர்ச்சிகளின் தாக்கம் அதிகம் உள்ளதால் எல்லாவற்றையுமே தன் வாழ்க்கை சம்பவங்களோடு ஒற்றுமை படுத்தி உணர்ச்சி வசப்படுவதே பழகிவிட்டது .ஆனால் அதை கடந்து மகாபாரதத்தை ஆய்வு செய்தால் அதுவும் உணர்ச்சிவசப்படாமல் ஆய்வு செய்தால் பல அறிய தந்திர ரகசியங்கள் கிடைக்கும் .

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக ஸ்ரீகிருஷ்னரும் , கௌரவர்களுக்காக சகுனியும் வெற்றிக்கு கையான்டது முழுக்க தந்திரம் தான் . தந்திரத்தை கையாள்பவன் உணர்ச்சிவசப்படுதலோ,கோபப்படுதலோ கூடாது . எதையும் எளிதில் நம்புதலும் கூடாது .இதை கடைசி நேரத்தில் சகுனியால் கடைபிடிக்க முடியாமல் போனாது .இதுதான் கௌரவர்கள் வீழ்ச்சிக்கு அடித்தளம் போட்டது . ஸ்ரீகிருஷ்னன் எதையும் மறக்கவில்லை கூடவே புன்னகையும் ஒரு தந்திரம் தான் என்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெற்றியை பாண்டவருக்கு பெற்றுத்தந்தார் . தர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் ஸ்ரீகிருஷ்னர் . அதர்மமும் வெற்றியின் தந்திரம் தான் என்பதை உலகிற்க்கு காட்டியவர் சகுனி . ஆக தந்திரம் நல்லவனுக்கும் பலன் கொடுக்கும் கெட்டவனுக்கும் பலன் கொடுக்கும் . தந்திரத்திற்க்கு எந்த பாகுபாடும் இல்லை . ஆனால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அருவடை செய்வோம் .இதை மனதில் வைத்து தந்திரத்தை கையாள வேண்டும் .கெட்டவருக்கு சகுனி போன்ற ஒருவர்தான் துனைக்கு தந்திரமாக வந்து இருதியில் தோல்வியை பெற்று தருவர் . ஆனால் நல்லவனுக்கு ஸ்ரீகிருஷ்னரை போல தெய்வமே துனையாக வந்து இருதி வரை உடனிருந்து வெற்றியை பெற்றுத்தரும் . இதை மறவாதீர்கள் .

மூலிகையை பயன்படுத்துவது, யந்திரம் , முத்திரை , ஆசனம் , ஆசனவிரிப்பு , ஆடையின்வண்ணங்கள், விருட்சங்கள் , மந்திரம் , தீட்சை , முகூர்த்தம் , பட்சி .ஓரை பார்த்தல் , அஞ்சனம் இடுதல் , எதிரியின் உடமையை கையாலுதல் , அஷ்டகர்ம முறைகள் , பலவித மலர்கள் , யாகங்கள் செய்தல் , மனதை அடக்குதல் ,உலோகம் , நவரத்னம் , பரிகாரமுறைகள் , சமர்பணம் செய்தல் , வணக்கம் செய்தல் ,முயற்ச்சித்தல் இன்னும் பல்வேறு செயல்களிலும் தந்திரங்கள் மறைந்துள்ளது . காரணகாரியம் இல்லாமல் முன்னோர்கள் எதையும் சொல்லிச்செல்லவில்லை எல்லாம் தந்திரமே .

தந்திரம் என்பது புத்தி யோசனை செயல் விவேகம் இவைகளோடு பின்னிபினைந்தது ஆகும் . தந்திரம் என்பது எதிரியின் வளையில் இருந்து தப்பிப்பது மட்டுமன்று , எதிரியை தன் வலையில் விழவைப்பதும் தந்திரமாகும் .ஆயிரம் பேரை எதிர்த்து சண்டை இடுவதை விட எதிரி கூட்டத்தின் தலைவன் ஒருவனை பிடித்து விட்டால் மற்றவரை போரிடாமலேயே வென்று விடலாம் . இதுதான் தந்திரம் .

வலிமையும் வலிமையும் மோதிக்கொள்வதை விட விட்டுக்கொடுத்து போவதே தந்திரமாகும் .எதிரியோடு மோதுவதை விட எதிரியை தன்வசப்படுத்த முயல்வதே தந்திரமாகும் .

நமக்கு தந்திரத்தை பற்றி எதுவுமே தெறிந்திருக்கவேண்டிய அவசியமில்லை அன்பு, உண்மை ,தன்னம்பிக்கை . தர்மம் , விடாமுயற்ச்சி ,புரிந்து செயல்படுதல் , ஊக்கம் இவைகளை மட்டுமாவது பின்பற்றுங்கள் கூடவே ரகசியத்தை கடைபிடியுங்கள் , மற்றவர் நம் மேல் அன்பாய் இருக்க என்னஅனுகுமுறை அவசியமோ அதை கடைபிடியுங்கள் போதும் . இறை சக்தி உங்களை நாடிவர இதுவே போதும் . இந்த அனுகுமுறையும் தந்திரக்கலைதான் .

 

படித்ததில் பிடித்தது

நன்றி