நமச்சிவாயத் திருப்பதிகம்

திருச்சிற்றம்பலம்
காதல்; ஆகிக் கசிந்து, கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் பொய்ப்பொருள் ஆவது நாதன் நாமம், நமச்சி வாயவே.
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் நம்பன் நாமம் நமச்சி வாயவே.
நெக்குகள் ஆர்வம் மிகப்பெருகிந் நினைத்து அக்கு மாலை கொடு அம்கையில் எண்ணுவார் தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொல் நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணீனால் நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்;சி வாயவே.
கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும்; நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சி வாயவே.
மந்தரம் ஆன பாவங்கள் மேவிய பந்தனை அவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சி வாயவே.
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சி வாயவே.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வன நலம்கொள் நாமம் நமச்சிவாயவே.
போதன் போது அன கண்ணனும் அண்ணல்தன் பாதம் தான் முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிது ஆகி அலந்தவர் ஓதம் நாமம் நமச்சி வாயவே.
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சு உண் கண்டன் நமச்சி வாயவே.
நந்தி நாமம் நமச்சிவாய எனும் சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்த பாசம் அறுக்கவல் லார்களே.
திருச்சிற்றம்பலம்
நாள்தோறும் உணவும் உறக்கமும் சீராகப் பெறுவதற்கும், வீண்செலவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மறுபிறப்பைப் தவிர்ப்பதற்கும், இறை வழிபாட்டில் ஈடுபாடு மிகுவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்டமில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
விண்ணுற வடுக்கிய விறகின் வௌ;வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
சலமின் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச் சென்றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்ச pவாயவே.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்;லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து ஏத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே
திருச்சிற்றம்பலம்
மேலே உள்ள பதிகத்தை பாராயணம் செய்தால் எதிரிகளை உதிரிகலாக்கும், விலங்குகளால் நேரும் துன்பம் விலகும், சகல துன்பங்களையும் போக்கும் வல்லமையுடையது.

Leave a comment

Leave a comment