Archive | July 2013

what Is the Difference between YOGA & THIYANAM. (யோகத்தின் உச்சம் சித்தர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை)

 

Picture

                                                               யோகா (சமசுக்கிருதம், பாலி:योग yóga ) என்பது இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவ்ழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறி. இது உடல்உடையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றம் ஒழுக்கங்களைப் பற்ரிய நெறி. இந்தச் சொல் இந்துமதம், புத்தமதம், சமண மதம் ஆகியவற்றில் உள்குதல் அல்லது தியானம் செய்தல் என்னும் பயிற்சி முறைகளோடு தொடர்புடையது இந்துமதத்தின் ஒரு சாராரின் கூற்றுப்படி இது இந்து தத்துவத்தின் (ஆறு வைதீகமான) ஆச்சாரங்கள் நிறைந்த பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது; அதன் பயிற்சிகளை அதன் குறிக்கோளை நோக்கி இயக்குகிறது. யோகா என்ற சமசுக்கிருத சொல்லுக்கு பொருள்கள் பல உள்ளன.மற்றும் இது சமசுக்கிருதத்தின் வேரான யுஜ் -பொருள்- கட்டுப்படுத்துதல், ஒன்று படுத்துதல்/ஒருங்கிணைத்தல் என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது.மொழிபெயர்த்தலில், பொருத்துதல், ஒருங்கிணைத்தல்’இணைந்த,மற்றும் “பொருள்கள்” ஆகியவை அடங்கும். இந்தியாவிற்கு வெளியே, யோகா என்ற தனிப்பட்ட சொல் ஹத யோகாவுடன் சம்பந்தப்பட்டது மற்றும் இதன் ஆசனங்கள் (அமரும் முறைகள்) அல்லது ஒரு வகை உடற்பயிற்சி எனப்படும்.யோகாவை பயிற்சிசெய்பவர்கள் அல்லது யோகா கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் யோகி அல்லதுயோகினி என்று அழைக்கப்படுகின்றனர்.தூக்கத்தின் பொழுது நம்மை அறியாமல நாம்தியானத்தில் ஈடுபடுகிறோம்.

                    நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க துவங்கவேன்டும்.கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணி செய்யக்கூடாது.காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்கு தெரிந்து நடந்திடக்கூடாது.மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியேனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கொள்ளும்.இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாக செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பெறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்.இதை தெய்வீக வடிவம் என்றும் கூறலாம். 

                 தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.நம்முடைய “ஆறாவது அறிவின்” கதவை திறக்கவும் விரிவடையவும் இது  உதவுகிறது.தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தொஷப்டுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவோம். மேலும் பல சிகரங்களை தொடசெய்யும்.தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும் தாண்டி “தியானம்” பெற்றுகொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்பது பொன்ற செயல்களையும்.  “தியானம்”செய்யும் முறை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமர செய்வது.எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில்.அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.தரையில் அமர்ந்துகொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டோ தியானம் மேற்கோளள்லாம் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் செய்யலாம்.வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.கால்களை சப்பணமிட்டுக் கொள்ளுங்கள்.இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.அமைதியான நிலையில் சகஜ நிலைக்கு வாருங்கள்.உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம்.மந்திரங்களை ஓதும்பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.நம்முடைய உடல் முற்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.மனம் மற்றும் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.

                         யோகம் என்ற சொல் ‘யுஜ்’ என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு “ஒருங்கிணைத்தல்” அல்லது “எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்” என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும் சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில் தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம் ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார். யோக தீட்சை என்பது குரு யோக மார்க்கத்தால் சீடனது உடலுள் பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்து சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை வகையாகும்.
சிவமன்றி வேறே வேண்டாதே – யார்க்குந்
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே – நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே.
பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
இந்த உயிருள்ள சவமானது சிவத்தை தவிர வேறொன்றையும் வேண்டகூடாது, யவருக்கும் இடையில் சண்டை மூட்டக்கூடாது, தவ நிலையான யோகத்தை விட்டு செல்ல (தாண்ட) கூடாது, நல்ல சன்மார்க்க நூல்களை வேண்டி விரும்பி கொள்ள வேண்டும், அவ்வாறு அல்லாதவைகளை வேண்ட கூடாது. யோகாசனம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பெருவதுமட்டும் இல்லாமல் ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு, மனஅமைதி பெறுகிறோம். யோகாசனம் செய்வதற்கு சரியான நேரம் காலைநேரம், காரணம் காலை நேரத்தில் உடல் சுறுசுறுப்புடன் மனம் தெளிவாக இருக்கும். காலைகடன்களை முடித்துவிட்டு பின் பச்சை தண்ணீரில் குளிக்கவும் அல்லது மிதமான நீரில் குளித்தபின்பு நாம் யோகாசனம் செய்யலாம். ( பச்சை தண்ணீரில்  குளித்தால் மிகவும் நல்லது ) உணவு உண்ணகூடாது வெறும் ( காலி வயிறாக ) வயிறாக இருக்கவேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் மட்டுமே குடித்தால் போதுமானது மலை நேரத்திலும் யோகாசனம் செய்யலாம் கண்டிப்பாக உணவு உண்ணகூடாது வெறும் ( காலி வயிறாக ) வயிறாக இருக்கவேண்டும் . . . யோகாசனங்கள் செய்வதற்கு முன்பு சில முன் பயிற்சிகள் உள்ளன.  அதை  முடித்த பிறகு, கீழே உள்ள ஆசனங்களை தினமும் செய்து வர, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் பெறலாம்.    

 
 படித்ததில் பிடித்தது  நன்றி -http://angelinmery.weebly.com/yoga.html