சௌந்தர மூனிகளின் பொன்னுரைகள்

வாசி

அகம்பிரம்மா ஆசி – ஆற்றல் உடையவனை யோசி
வாட்டும் சுடலையே வாசி ஆதிசிவனின் ஆசி
அவனை அனுதினமும் யோசி சிவனோ சன்யாசி
அவனை சிகரத்தில் ஏற்றியோசி எங்கும் நிறைந்தவன் வாசி
ஈசனை அனுதினமும் யோசி அருள் நிறைந்தவனை யோசி
அஞ்ஞான வாசலை மறந்து மெஞ்ஞான வாசலை திறந்தாலே அதுவே வாசி
அனுதினமும் யோசி சௌந்தரமுனிகளின் ஆசி சாகா கலையை யோசி.
மனம்
படருது படருது மனம் தொடருது தொடருது மனித இனம்
மயக்குது மயக்குது மாயை மாய்க்குது மாய்க்குது ஆசை
ஆசையில் துடிக்கும் மனமே உயிர் போகையில் துடிக்கும் பாரேன்
பார்வையில் தோன்றும் கன்னியின் பளபளக்கும் மேனி
பழகியே உறவாடி கொல்லும் விதியே கொடிய வினையே
அதுவே பார்வையில் கொல்லிபோடும் கன்னி
உம்மை பாடையில் ஏற்றுமே பதறி நீ விழித்திடு
உன் மனம் பாழாய் போகாமல் பார்த்திடு
அழகியமேனியின் உறவு இரத்தம் உறிஞ்சும் அட்டையின் வரவு
வம்பு செய்யும் மனமே வறண்டு போகும் பாலைவனமே
இன்பம் தேடும் மனமே உம்மை இருளும் வந்து மூடுமே
தாவித்திரியும் மனமே சதாசிவனை பாரேன்
சாகாமல் வாழ ஓடும் மனதை அடக்கி உண்மை ஞானம் ஏற்று
ஆடும் வரையில் ஆடு ஓடும் வரையில் ஓடு

காடு மலைகள் ஏறி காண்பதற்கு ஒன்றும் இல்லை
ஒரு மனதில் ஏற்று உண்மையான உண்மை
அதுவே வேறுபட்ட மனதில் நினைத்தல் வீணானது
உன் உடம்பில் பாரூலகத்தை படைத்தேன் பாரேன்
பதறாமல் சிதறாமல் பாரேன் சுற்றி எரியும் யோகம்
சோதி வந்து நிற்கும் பற்றிய வினைகள் ஓடும்
பதறாமல் சிதறாமல் சிதறாமல் பாரேன்

Leave a comment

Leave a comment